Wednesday, May 2, 2012

அலிபாபா என்ற ஒரே திருடன்!!!

கொண்டிருந்தேன். 

அங்கு என்னுடைய 100 ஏக்கர் எஸ்டேட்டில் கொஞ்சம் வேலை.


ஜீன்ஸ் ட்ஷர்ட் போட்ட பெண் (இசைஅருவியில் வரும் பெண்கள் போல் அல்லாமல்
அழகாகவே இருந்தாள்) என்னிடம் லிப்ட் கேட்டாள். நான் வண்டிய நிப்பாட்டவே
இல்லை. 

ஆனால் வண்டியை நிறுத்தியது போல ஓரு தோற்றம்.காது கிழிய சத்தம்
“நாகர்கோயில் பஸ் ஸ்டான்ட் வந்தாச்சு” எல்லாரும் இறங்குங்க  "தம்பி
எந்திரி பா" நீ எந்திச்சா தான் நான் இறங்க முடியும் ஓரு பென்ஷன் வாங்கும்
தியாகி.  

நான் காணும் கனவு கூட என்னை முழுமை அடைய விடுவதில்லை. 

என் பேர்  அலிபாபா.......


 எனக்கு பிடிச்ச ரெண்டே பாடல் தான் ஒண்ணு  அண்ணாமலை படத்துல
வரும் "'வெற்றி நிச்சயம்” அப்புறம் சூர்யா வம்சம் படத்துல வரும்
"நட்சத்திர ஜன்னலில்" 5 நிமிசத்துல பணக்காரனா? ஆச்சரியாம பாப்பேன். நான்
கண்ட கனவுகள் எல்லாம் பலிகனும். சிக்கிரமே பணக்காரன் ஆகணும். இது தான்
என் கொலைவெறி. 

 பஸ்ஸ விட்டு இறங்க முன்னாடி தெளிவா முடிவு எடுத்தேன். ஓரு
ரூபா காயின்(கையில இருந்த ஓரு ருபாய் மட்டும் தான் )சுண்டி விட்டேன் பூ
விழுந்த நல்ல வழி தலை விழுந்த  கள்ள வழி. சுண்டி விட்டு கீழ பாத்தேன் தரை
தெரிஞ்சுது காயின் வரல மேல பாத்தேன் வானம் தெரிஞ்சுது, அப்புறம்
புரிஞ்சுகிட்டேன் நான் நிக்கிறது தமிழ்நாடு அரசு பேருந்துல போன காயின்
மேல விழுந்துட்டு. மனசுல முடிவு பண்ணிட்டேன் கள்ள வழி தான்னு. 

நானும்
திருடன் ஆகிட்டேன். 

கைல 5 பைசா கிடையாது. 


பஸ்ஸ விட்டு இறங்குனேன்.


 பக்கதுல ஓரு காலேஜ் பொண்ணு நின்ன. அவளுக்கு ரீசார்ஜ் பண்ணி விடுற பல
பேர்ல ஒருத்தன் கிட்ட கடலை போட்டுட்டு இருந்தா. அவ ஹென்ட் பாக் அடிக்க
முடிவு பண்ணினேன். பிகர் கொஞ்சம் சுமார் தான் அதனால பக்கத்துல யாரும்
இல்லை  நானே கண்ண மூடிட்டு தான் கிட்ட போனேன்.

 12B பஸ் எங்க வரும்ன்னு
கேட்டேன் கைய தூக்கி அங்கன்னு சொன்ன. அந்த செகண்ட் என் மனசுல தோணிச்சு
திருடின பணத்துல அவளுக்கு ஓரு ஸ்ப்ரே வாங்கி குடுக்கானும்ன்னு. மனச
தேத்திக்கிட்டு பேக்க புடுங்கிட்டு ஓடினேன். அவ போட்ட சத்தம் கேட்டது
நிக்கவே இல்லை. ஓரு கிலோ மீட்டர் ஓடி இருப்பேன். மூச்சு வாங்கிச்சு.
இருந்தாலும் ஓரு சந்தோசம். 

 பைய துறந்தேன். வழக்கம் போல கொஞ்சம் மேக் அப்
அயிடம்ஸ். எல்லாத்தயும் ஓடைல போட்டேன் ஒரே ஓரு பார்சல் பேப்பர் வச்சு
இருந்துச்சு. என் உள் மனசு சொல்லிச்சு கண்டிப்பா பணமா தான் இருக்கும்.
கைய வச்சு பார்த்தேன் என் கணக்கு படி நிச்சயம் 100 தாள் இருக்கும்.
அவ்வளவு வெயிட். மனசு புல்லா சந்தோசம். பிரிச்சு பார்த்தேன். நிச்சயம்
அந்த இடத்துல கயிறு இருந்த நான் தூக்குல தொங்கி இருப்பேன். இதுக்கா
இவ்வளவு தூரம் ஓடி வந்தேன்னு என் செவுடுல நானே ரெண்டு போட்டுகிட்டேன்.....


அப்படி உள்ள என்ன இருந்துச்சு தெரியுமா ஓரு பாக்கெட் "விஸ்பர்". 
இத வச்சு
நான் என்ன பண்ண போறேன். 

என்ன வாழ்க்கை டான்னு சிம்பு வாய்ஸ் மனசுகுள்ள
கேட்சுச்சு. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தேன் ஏன்னா நம்ம ரன்னிங் அப்படி .


    
 நகை கடை வாசல் அது . நல்ல இடம் தான் ஆண்டவன் அனுப்பி இருக்கான்னு மனச
தேத்திகிட்டேன். ஓரு ஆள் கடைல இருந்து வெளிய வந்தான் வெள்ளை வேஷ்டி வெள்ளை
சட்ட. நேத்தி புல்லா சந்தனம் பாக்க கிட்டத்தட்ட நாட்டாமை படத்துல மிக்சர்
சாப்பிடுறவன் மாதிரி இருந்தான். அப்துல் காலமே பாத்தாலும் இவன்கிட்ட
ஆட்டைய போடணும்னு தோணும் அப்படி ஓரு லுக்.

 இவன்கிட்டையும் கைல ஓரு பை.
ஆனா நிச்சயம் விஸ்பர் இருக்காதுன்னு தெரியும். பஸ்ல ஏற போனான் நானும்
பின்னாடி போய் நின்னேன். பஸ் எடுக்கும் போது பைய புடுங்கிட்டு ஓட்டம் ஆனா
இந்த ஆள் சத்தம் அவளவா போடல மறுபடியும் ஓட்டம்......


 செவுறு ஏறி குதிச்சு ஓரு
தென்ன தோப்புல இறங்கினேன் யாருமே இல்லை. கொஞ்சம் நேரம் ஓய்வு. பைய துறக்க
கைய வச்சேன் அப்போ தோணிச்சு முத தடவை திறக்கும் போது நம்ம குல தெய்வம்
கும்பிடாம துறந்தனால தான் சொதபிட்டுன்னு. ரெண்டு கண்ணையும் மூடினேன் என்
குல தெய்வம் பழனி மலை முருகன வேண்டினேன். சந்தோசத்துடன் உள்ள தொரந்தேன்



   அந்த பழனி ஆண்டவன் தெரிஞ்சான் உள்ள ஆறு பாக்கெட் விபூதியும் ரெண்டு டப்பா
பஞ்சாமிர்தம் இருந்துச்சு. அதுக்கு மேல கை போகாது அந்த அளவு தேடி
பார்த்தேன் முடியல .ஓரு மயிரும் இல்லை. நல்லா அருள் புரிஞ்சாரு என் குல
தெய்வம். கிட்ட தட்ட இருடிட்டுச்சு ரெண்டு டப்பா பஞ்சாமிருதம் காலி
பண்ணினேன். பக்கத்துல ஓரு குடோன் இருந்துச்சு யாருமே இல்லை. அங்க போய்
படுக்க முடிவு பண்ணினேன். உள்ள குதிச்சு பின் வாசல் வழிய போனேன். உள்ள
போன பிண வாடை மூட்ட மூடைய கழிவுகள கட்டி வச்சுருந்தாங்க. உடம்பு வேற நல்ல
வழி அந்த பிண வாடையிலும் கண்ண சொக்கிடுச்சு. 




  மறுபடியும் ஹம்மர் காரு அதே
பொண்ணு லிப்ட் கேட்டுசுச்சு  டாம் ன்னு ஓரு சத்தம் ஓரு மூட்டை என் கால்ல
விழுந்துச்சு. கோவத்துல நான் ஒரே மீதி அது செவுறு பக்கம் போய்
விழுந்துச்சு. நான் ஓரு சின்ன மூட்டய தலைக்கு வச்சுட்டு படுத்தேன். 


  காலைல
அஞ்சு மணி யாரோ அஞ்சு பேரு சத்தம் கேட்சுச்சு அடிச்சு எழுந்துரிச்சு பின்
வாசல் பக்கம் ஓடினேன். மரத்துல ஏறி உட்காந்தேன். ஓரு அஞ்சு பேர் கதவ
திறந்தாங்க கூடவே ஓரு முதலாளி பாக்கவே நம்ம பழ.கருப்பையா மாதிரி தோற்றம்,
"ஏலே எல்லா மூட்டையும் வண்டில ஏத்துங்கல. எல்லாம் "பண மூட்டைல " இன்கம்
டெக்ஸ் ரைடாம் சிக்கிரம்ல என சத்தம் கேட்டது என் சத்தம் கொஞ்சம் நேரம்
கேட்கவே இல்லை. 

   அப்போ தான் நெனச்சேன் நம்ம இருந்தது பிண வாடைல இல்ல பண
வாடைன்னு. 


என் மனசாட்சி என்னிடம் இனிமேலும் திருட போவியா வெண்ணைன்னு?




--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


எழுதியவர் - வினோத் - 

@Vinoth_Tweets


33 comments:

  1. பாஸ் கலகிபுடிங்க ... போங்க .... அனா கிளைமாக்ஸ் கொஞ்சம் பசிடிவாஹ் இருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும்

    ReplyDelete
  2. ஹா... ஹா...
    சுத்தி பணம் இருந்தப்ப தெரியல!!

    அருமையா இருக்கு!

    ReplyDelete
  3. SUPER THALA AMAM CLIMAX INNAM KONJAM BETTER IRUNTHU IRUKALAM RE-RELEASE PANNUGA BOSS ALIBABA VA PANAKARANAI MATHUNGA...

    ReplyDelete
  4. தாறு மாறு தக்காளி சோறு! ;-)

    ReplyDelete
    Replies
    1. தல தளபதி ரெம்ப நன்றி

      Delete
    2. திங்கிறதுலே இருக்கு பாரு பக்கி. . . :P

      Delete
  5. அடங்கொன்னியா.. நல்ல காமெடி சென்சுய்யா ஒனக்கு.. தொடர்ந்து எழுது மச்சி..

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப தேங்க்ஸ் மச்சி...நம்ம பல்பு தான் எழுத சொன்னாரு சும்மா ட்ரை பண்ணினேன் அவ்ளோ தான்

      Delete
  6. விழுந்து விழுந்து சிரித்தேன் .. செவத்துல முட்டி முட்டி சிரித்தேன் .. ராசா இவ்வளவு நாளா எங்கே இருந்தே ராசா .. ஷப்பா முடியல .. சூப்பர் மச்சி .. தொடர்ந்து பதிவு எழுது மச்சி .. உன் திறமையை உலகத்துக்கு காட்டிட இந்த ரேணிகுண்டா குழுமம் தயாராகவே இருக்கிறது .. முதல் பதிவா நம்பவே முடியல.. ஆச்சிரியம்

    ReplyDelete
  7. எல்லா புகழும் உனக்கே .....

    ReplyDelete
  8. ஜாலியா இருந்துச்சு!!! எழுத்து பிழைகளை கொஞ்சம் கவனிச்சு இருக்கலாம்,, அப்பிடியே சீக்கிரம் முடிச்சுக்கிட்ட மாதிரி ஓரு ஃபீலிங்க்ஸ் :-))

    ReplyDelete
    Replies
    1. நன்றி. முதல் பதிவு என்பதால் சில தவறுகள் ஏற்பட்டது. இனிமேல் கவனத்துடன் எழுதுவேன்

      Delete
  9. சூப்பரப்பு. . . தொடர்ந்து கலக்குங்க. :))) முடிவு அருமை.

    ReplyDelete
  10. மச்சி செம கலக்கல் , எழுத்து பிழைகளை மட்டும் கொஞ்சம் கவனிக்கவும் #தொடர்ந்து எழுதுங்கள் #வாழ்த்துக்கள் - குண்டா குண்டா ரேனிகுண்டா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி....நிச்சயம் அடுத்த முறை தவறுகளை திருத்துகிறேன்...

      Delete
  11. ஹே! சூப்பர் பாஸ். நெஜமாவே ரொம்ப நல்லா இருந்திச்சி. இத தான் சொல்வாங்க அதிர்ஷ்டம் சைக்கிள்ல வந்தா துரதிர்ஷ்டம் ப்ளைட்ல வரும்னு

    ReplyDelete
  12. ஹி.ஹி.. இந்த கதை உன்னோட நிஜ வாழ்கையின் பிரதிபலிப்பு போல... பட் அந்த முதல் திருட்டுல ஸ்ப்ரே மேட்டர் தான் செம்ம காமெடி.. வாழ்த்துக்கள் ஆபிசர்..

    ReplyDelete
  13. Replies
    1. போற வழில என் கதைய படித்ததுக்கு மிக்க நன்றி வழிபோக்கன் சார்

      Delete
  14. செம பதிவு!! நல்ல தொடக்கம்!!! காமெடி கருத்து கலந்து செம விருந்து!!

    //குல தெய்வம் பழனி மலை முருகன வேண்டினேன். சந்தோசத்துடன் உள்ள தொரந்தேன்
    அந்த பழனி ஆண்டவன் தெரிஞ்சான் உள்ள ஆறு பாக்கெட் விபூதியும் ரெண்டு டப்பா
    பஞ்சாமிர்தம் இருந்துச்சு. //
    விவிசி!!

    முழுதும் பேச்சு நடையில் எழுதும் பொழுது கொஞ்சம் கவனம் தேவை!!

    (@_santhu)

    ReplyDelete