Friday, May 11, 2012

நீங்களும் ஆகலாம் பிரபல டிவிட்டர்

பேரன்புமிக்க மக்கழே,




என் பாசத்திற்குரிய பாலோயர்களேபண்புமிக்க பாலோயிங்குகளேபாசக்கயிற் அவிழ்த்த ப்ளாக்கர்களே, ட்ரெண்டுமேக்கர்களே, ரகளை ரேனிகுண்டாக்களே மற்றும் டவுசர் அவிழ்க்கும் டிரோல்களே 

உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு மேட்டருக்கு வருகிறேன் (யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம்விசயத்திற்கு செல்வோமென கூறினேன்)


சற்றே கீழே உள்ள படத்தை பாருங்கள்:



(பார்த்தது போதும், இப்படத்திற்கான காரணத்தை இறுதியில் சொல்கிறேன்)

இந்த டிவிட்டர் உலகம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்திருக்கிறது,
அதில் வரும் முதற்படியே "பிரபல டிவிட்டர் ஆவது"

முதலில் உங்கள் பாலோயர்களுக்கு நீங்கள்தான் "பிரபல டிவிட்டர்" எனும் உறுதி மனப்பான்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் #அந்த நோக்கத்தை எட்டிவிட்டால் இக்கணமே நீங்கள் பிரபல டிவிட்டர் தான் #


நீங்களும் ஆகலாம் பிரபல டிவிட்டர் :


1 . தலையாய ஒன்று, உங்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம் இருத்தல் வேண்டும் # ஏனெனில், சிலர் நம் மென்சனை அலட்சிய படுத்த கூடும்#

2நம் வேலை டிவிட்டுவதே என்று கீச்சுகளில் உங்கள் வல்லமையை நிரூபிக்க வேண்டும்

3 . தாழ்வுணர்ச்சியை விட்டு அனைவரிடமும் சகஜமாய் கீச்சி பழகுதல் வேண்டும்ஒன்பது மென்சனை அலட்சிய படுத்தினால் நிச்சயம் பத்தாவது மென்சனுக்கு பதில் வரும்.

4. தன் கீச்சினை யாரும் மறுகீச்சு செய்யவில்லையேயென வருந்துதல் வேண்டாம் #உங்களுக்குள் இருக்கும் கெத்தை விட்டுக்கொடுக்காதீர்கள்.

5 . உங்களால் முடிந்தவரை #டேக்குகளில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள் #அதில் நீங்கள் விரைவில் கவனிக்கப்படலாம்#


6பாலோயர்களின் எண்ணிக்கையை ஒருபோதும் மனதில் வைத்து கீச்சாதீர்கள் #அது உங்கள் கற்பனை வறட்சி அல்லது சிந்திக்கும் திறனை அழிக்க நேரிடும்#

7டிவிட்டரில் கீச்சுக்கள் "அரசியல்சினிமாஜோக்ஸ், தத்ஸ்கவிதை " இவை சுற்றியேஆகையால் ஏதேனும் ஒன்றில் மட்டுமல்லாது அனைத்திலும் தலா இரண்டு கீச்சுக்கள் வீதம் பத்து டிவிட்டுகள் ஒரு நாளைக்கு போதுமானதுஇதனால் நீங்கள் பல்துறை வல்லவர் என்ற நம்பிக்கையை மற்ற கீச்சர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும்#


8. நம்மை பின் தொடராதவர்கள் அகம் பிடித்தவர்கள் என்னும் மனநிலையை மாற்றுங்கள்ஏனெனில் ஒருநாள் அவரும் உங்களை பின்தொடரக்கூடும் பின் உங்கள் மனம் தீயில் சுட்டதைப்போல் எண்ணி வாடும்,.


9. வலைபாயுதேவலைபேச்சு இன்னும் இதர இதழ்களில் பதியவேண்டுமென நினைத்து கீச்ச வேண்டாம் #அது உங்களின் எண்ண ஓட்டத்தை பாதிக்கும்


10. முக்கியமான ஒன்று "கடலை சாகுபடி" # அமோக விளைச்சல், அதீத ஆப்பு நீங்கள் சிறந்தவைகளை கீச்சினும் அது மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் போக வாய்ப்பிருக்கிறது # ஆகையால் அளவோடு வறுத்து, வளமோடு வாழவும் #


 இனி மேலே உள்ள படத்திற்கான காரணத்தை பார்ப்போம் :



அவர் தான் “லேடி காகா” (பெண் காக்கையா என கேட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல LADY GAGA என படிக்கவும்)


உலகிலேயே பிரபல டிவிட்டர் அவர்தானாம் . அவரை பற்றி அறிய இங்கே சொடுக்கவும் --> Lady GaGa

இவரது பாலோயர்களை எண்ணிக்கையை நினைத்து பார்த்து வந்த பெருமூச்சை விட்டு சற்று இளைப்பாருங்கள்.

// இப்படத்தை இணைத்ததன் காரணம் நம்மைவிட வலியோன் என்றும் இருக்கிறான் என வள்ளுவன் வாக்கை பறைசாற்றவே //

இப்போது புரிந்திருக்கும் டிவிட்டரில் நிலையானது ஃபாலோயிங்கோ, ஃபாலோயர்ஸோ இல்லை 140 எழுத்துக்கள் மட்டுமே என்பது.

/// அன்பால் இனைவோம் ^ அன்பாலோ துறப்போம் ///

எனவே உங்கள் கருத்தை கீச்சில் வைய்யுங்கள், இப்பதிவின் கருத்தை கமெண்ட்டில் வைய்யுங்கள்.



பாசத்துடன் 

பாச-புகழ் கொஸக்ஸி(எ)@NforNeil





39 comments:

  1. நீலு, நீயா இது ? :))

    ReplyDelete
    Replies
    1. முதல் கமண்ட்டு உன் கையால், மிக்க நன்றி,ஆமாம் ரகு மச்சி, நானேதான் ஏன்? காரணத்தை டி,எம் மவும் ப்ளீஸ்..

      Delete
  2. செம்மடா மச்சி.. எல்லாமே நச் பாயிண்ட்ஸ்.. வாழ்த்தூஸ்..
    தொடர்ந்து எழுது.. எழுத்துப்பிழைகள் நிறைய இருக்கு..அதை கொஞ்சம் கவனிச்சிக்கோ.. கலக்கலாம்.!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாப்பி #அதுக்காக்த்தான் உன்னைய ஒவர்வியு பன்ன சொன்னேன் #நீ பன்னல - இனி வரும் பிலாகுகளில் விதியை மாற்றுவோம்

      Delete
    2. ட்ராப்ட்டுல எப்புடி எடிட் பண்றது.? மெயில் அனுப்பியிருந்தா, ப்ரூப் பாத்துருக்கலாம்..
      சரி விடு அடுத்த போஸ்ட்'ல கலக்கலாம்...

      Delete
  3. நான் பிடி ட்விட்டர் ஆகணும் மச்சி. . . இன்னும் கொஞ்ச ஹிண்ட்ஸ் :))) //அளவோடு வறுத்து, வளமோடு வாழவும்// தேவயான ஒன்னு :) #பிழைகள் தவிர்க்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி இனிவரும் பிலாகுகளில் பிழைதவிர்க்க பார்க்கிறேன்

      Delete
  4. ///இப்போது புரிந்திருக்கும் டிவிட்டரில் நிலையானது ஃபாலோயிங்கோ, ஃபாலோயர்ஸோ இல்லை 140 எழுத்துக்கள் மட்டுமே என்பது.///

    அட்டகாசம்.. பதிவுல எனக்கு ரொம்ப பன்ச்..

    ReplyDelete
  5. அருமை மச்சி. வாழ்த்துகள். என்னைப்போன்ற இளம் கீச்சர்களுக்கு நம்பிக்கையூட்டும் கட்டுரை தொகுப்பு. அவ்வ்... :-))

    ReplyDelete
    Replies
    1. ம்ம்கும் #இப்படி உசுப்பேத்த்தி உசுப்பேத்தியே ... ரைட்டு விடு நன்றி

      Delete
  6. அருமை அருமை.. சொன்னது போல்வே மாஸ் இன்ட்ரோ பிளாக்குக்கு... keep going!!!
    (@_SANTHU)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மச்சி. தொடர்ந்து கலக்குவோம்.

      Delete
  7. அருமையான பதிவு அறிவுள்ளவர்கள் உள்ள சபையில் நம்மை முன்நிறுத்திக்கொள்ள இந்த பதிவு நிச்சயம் உதவும்

    ReplyDelete
  8. கலக்கிட்ட மாம்ஸ்!!! ஒன்பது மென்சனை அலட்சிய படுத்தினால் நிச்சயம் பத்தாவது மென்சனுக்கு பதில் வரும்.. #உண்மை மச்சி :-))

    ReplyDelete
  9. சூப்பர் பா.! உண்மையான கருத்துக்கள் எல்லாமே ..! :))

    ReplyDelete
  10. நல்ல எழுத்து நடை அதுவும் ஒரு படத்த போட்டு கடைசி வரை வாசிக்க வைத்து விட்டாய் மச்சி :))
    பிரபல டிவிட்டர் ஆவதற்கு டிவிட்டர் ஹாண்டில் முக்கியம் இல்லையா???

    ReplyDelete
    Replies
    1. நன்றி மச்சி, //பிரபல டிவிட்டர் ஆவதற்கு டிவிட்டர் ஹாண்டில் முக்கியம் இல்லையா???// ஹா ஹா இது இருந்தால் தானே மச்சி அவ்ன் ட்விட்டரே ஹா ஹா. #உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது

      Delete
  11. அறிவுரைகளுக்கு மிக்க நன்றி. இன்றிலிருந்து இவற்றை ஃபாலோ செய்து, நானும் ரவுடி என்று நிரூபிக்கப் போகிறேன்.

    நீங்க குடுத்த லேடி காகா ட்விட்டர் பக்கம் பார்த்தேன். பிரபலமாக DPல நல்ல ஃபோட்டோ வைக்க வேண்டும் என்ற விதியை உடைக்கிறது அவரது DP. மூஞ்சியும் மொகரக்கட்டையும்! ஹும்!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஹா ஹா ஹா - உங்கள் பின்னூட்டம் காதலியிடமிருந்து “லவ் யூ ட்டூ” என்ற பதில் வந்ததைப்போல் எல்லையில்லா மகிழ்ச்சி #உங்கள் ஆசிகளுடன் என் எழுத்துகளை இனி பதிப்பேன்,# உங்கள் தட்டச்சில் என் பதிவினுக்கு பதில் பதிந்ததில் பேரானந்தம் #நன்றி . வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்

      Delete
  12. நல்ல திறமை இருந்தால் பிரபலமாகிவிடலாம். எதையும் கண்டுக்கிராம கீச்சிக்கிட்டே இருக்கணும். ஆமா, எதுக்கு நாம டிவிட்டரில் பிரபலம்மாகனும்? ஏதாவது காசு கீசு கிடைக்க போவுதா? அதனால என்ன யூஸ்? நன்றி புதிய தம்பிகளுக்கு நல்லா உசுப்பேத்தி உட்டதுக்கு.

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ், உங்க பதிலுக்கு மிக்க நன்றி தோழர்.. #நான் நடுநிலையாகத்தான் பத்திதிருக்கிறேன் என நினைக்கிறேன் # -- இது பொதுவான மன இயல்பு தானே தோழர்

      Delete
  13. செம மச்சி நீயா இது .. ஆகா என்ன ஒரு எழுத்து நடை .. இப்டி தான் மச்சி இருக்கணும் .. ஒரு பதிவை நான் ஃபுல்லா படிச்சாலே அது அந்த பதிவரின் மிக பெரிய வெற்றி .. மேலும் நான் பின்னோட்டம் இட்டேன் என்றால் அது மிக மிக பெரிய வெற்றி என்றால் மிகையல்ல .. இது எல்லாமே உன் அனுபவத்துல சொன்ன மாறி இருக்கு சூப்பர் .. எனக்கு ரொம்ப பிடிச்ச பாயின்ட் ஒன்பதாவது பாயின்ட் தான் .. நான் இப்பொழுதும் கீச்சும் கீச்செல்லாம் இந்த மனநிலையில் இருந்து தான் கீச்சுரேன் .. நீங்க சொன்ன எல்லா பாயிண்ட்டையும் பின் பற்ற முயல்கிறேன் .. ஆவ்வ்வ்

    ReplyDelete
  14. பிரபல ட்விட்டர் ஆனா இப்புடியும் போஸ்ட் பண்ணனுமா? #டவுட்

    ReplyDelete
  15. என்னைப் போன்ற புதியவர்களுக்கு பயனுள்ளதாய் ஒரு பதிவையும் எழுதி, ரசிக்க நடு நடுவே ரெண்டு மூணு படங்களையும் கொடுத்து....


    நன்றி சொல்ல உனக்கு வார்த்த இல்ல எனக்கு...

    ReplyDelete
  16. நீலு..உன் பாசிடிவ் அப்ரோச் எனக்கு பிடிச்சுருக்கு. சகிப்பு தன்மை வளர்த்துக்கனும்னு நீ சொல்லவறது, சொரணை இல்லாம வாழனும் அப்டிங்குறதுதான் மெத்த படித்தவர்களுக்கு புரியும். இது சோஷியம் நெட் ஒர்க்குக்கு மட்டும் இல்ல..வாழ்க்கைக்கும் பொறுந்தும், மூனு ஃபிகர் செப்பல் கிழட்டி அடிச்சும், நாலாவது ஃபிக்ர கரெக்ட் பன்ற மன திடம் உள்ள நீ..இந்த பதிவ போட தகுதிஉள்ளவன் தான். அப்புறம்..எல்லார் மென்ஷனுக்கும் பதில் போடவோ, ரிப்ளை பன்ணவோ ஆரம்பிக்கும் போது ட்விட்டர் ஒரு சாட்ரூமா மாறுர விஷயம் நடக்கதான் செய்யுது. என்ன பன்ற்து..!? நல்லா இருக்கு..! இது மாதிரி பாசிட்டிவ் கட்டுரைகள் எழுதி உனக்குன்னு ஒரு ஸ்டைல் உருவாக்கிகோ..என்னை பாத்து கெட்டு போய்டாத.! வாழ்க வளமுடன்.!! கட்டதொர.!

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்! நன்றாக இருந்தது. இதுபோல் நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  18. machi theeyaa irukku yaa!!
    vaalthukkal, thodarnthu eluthiiyaa :)
    marakkaama enakkum mention podunga!
    vanthu padichuttu karuthu solluren


    The Comment By
    @snj_no1

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் நீல். இந்தப்பதிவு எனக்கே எழுதிய மாதிரி இருந்தது. உங்களுக்குள் இவ்வள்வு திறமை இருக்கிறதா? இன்னும் நிறைய எழுத வேண்டும். @usharanims --> நான் தான்.

    ReplyDelete
  20. நல்ல பதிவு ராஜேஷ் - புதிய கீச்சர்களுக்கு உபயோகமா இருக்கும் : )) குட் ஒன்

    ReplyDelete
  21. மச்சி நீயெல்லாம் நல்ல வரணும் ட.. நல்ல வருவா டா ... நல்ல வருவா

    ReplyDelete
  22. மச்சி நல்லா போட்டுருக்க... இன்னும் நெறயா போடு...

    ReplyDelete
  23. அட்டக்காசம்!!! அருமை

    ReplyDelete
  24. factu factu factu :) super post

    ReplyDelete
  25. ;-)) சில பாயிண்ட்ஸ் இனி நானும் ஃபாலோ பண்றேன். குறிப்பா டேக்கில் # நான் ட்வீட்சே அதிகம் போட்டதில்லை. இனி ட்ரை

    ReplyDelete