ஹ்ம்ம்.. எங்கிருந்து தொடங்குவதெனத் தெரியவில்லை.
படம் பார்த்த நேற்று மதியத்திலிருந்து மனதெங்கிலும் பற்றிப்படர்ந்து இம்சித்துக்கொண்டிருக்கிறாள் ஜோதி.
படத்தைப்பற்றி எதை எழுத உத்தேசித்தாலும் முதலில் ஜோதி
ஞாபகமே உந்தித்தள்ள நேற்றிலிருந்து தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன்
இதை எழுதுவதை. ஒரு கட்டத்தில் விமர்சன யோசனையை கைவிட்டு விடலமெனக்கூட
யோசனை. ஆனால் இதுபோன்ற படைப்புகளை பாராட்டாமலிருப்பது நல்ல சினிமாவை
ரசிக்கும் ஒரு ரசிகனாக அதற்கு செய்யும் துரோகம் எனப்பட்டது. ஆதலினால் இந்த
விமர்சனம்.
எப்போதும் சினிமாவை சினிமாவாக மட்டுமே பாருங்கள், அதைத்தாண்டி எமோஷனலாக
ரிலேட் செய்துகொள்ள வேண்டாமென நண்பர்களிடம் சித்தாந்தம் பேசுபவன்தான் நான்.
எனது இத்தகைய மனோநிலையையும் தாண்டி, ஜோதியை..வேலுவை..காவல் ஆய்வாளர்
குமரவேலை..சிறுவன் முத்துசாமியை.. வேலுக்கு உதவும் திருநங்கையை.. மேலும்
சாலையோர கையேந்திபவன் உரிமையாளர்,ஜோதியின் தயார், பார்வையற்ற பிச்சைக்கார தம்பதிகள், வேலுவின் அம்மா, அப்பா என நாம் நிஜவாழ்வில்
நித்தமும் தரிசிக்கும் கதாபாத்திரங்களை காமிராவில் படமெடுத்து திரையிட்டுக்
காட்டியிருப்பதாகவே பட்டதெனக்கு. ஒரு நல்ல படைப்பு என்பது படம் முடிந்த
பின்னரும் குறைந்தபட்சம் ஒரு ராத்திரியாவது பார்வையாளனின் தூக்கத்தை திருடவேண்டும்.
அவ்வகையில் மிக சிறப்பாகவே என் தூக்கதையும், நினைவுகளையும் திருடியிருக்கிறது இப்படைப்பு.முதலில் டாக்குமென்ட்ரி போல மிக மெதுவாக விரியும் திரைக்கதை போகப்போக வேகமெடுத்து, எந்தக்கணத்தில் நாம் கதையுடன் ஒன்றிணைந்தோம் என யூகிக்கவே முடியாவண்ணம் ஒரு புதைகுழி போல பார்வையாளனை சடாரென உள்ளிழுத்துக் கொள்கிறது. இதுபோன்ற யதார்த்தம் பேசும் கதையை நேராக சொல்லாமல் மல்டி-லேயர் ஸ்க்ரீன் ப்ளே'யில் சொல்லியிருப்பது பாலாஜி சக்திவேலின் ஆகச்சிறந்த புத்திசாலித்தனமான முடிவு.
உண்மையில் படத்தின் மையக்கதையே இரண்டாம் பாதியில்தான் ஆரம்பிக்கிறது. ஆனாலும் முதல்பாதி முழுக்க அதை ரிலேட் செய்து கொள்வதற்கான சம்பவக் கோர்வைகள். கடும் உழைப்பைத் தின்னக்கேட்கும் அட்டகாசமான திரைக்கதை உத்தி. எந்த விமர்சனமும் படிக்காமல் முதல்முறை படம் பார்ப்பவர்கள், முதல்பாதிக்கு சற்றும் சம்பந்தமிராமல் வேறுதளத்தில் விரியும் இரண்டாம்பாதி திரைக்கதையைப் பார்த்து பிரமிக்கப்போவது உறுதி. .
நான் எப்போதும், யதார்த்தம் பேசும் படங்களின் வரும் பாடல்களுக்கு மிகப்பெரும் எதிரி. இதில் பின்னணி இசையில்லாமல் ஒரே பாடல் மட்டுமே வருகிறது அதுவும் மாண்டேஜ் ஷாட்டுக்காக..அற்புதம். அதனாலேயே இப்படம் இன்னும் கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல் எனக்கு. நன்றிகள் பாலாஜி சக்திவேல்.!!
பொதுவாக, திரையில் திறமை காட்டுதல் என்பது இருவகைப்படும். என்னைப் பார்..என் திறமையைப் பார் என படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் நடிப்பவர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என எல்லோரும் இரட்டை மேற்கோள் குறியிட்டு காட்டிக்கொண்டே இருப்பது. இரண்டாவது, திரையில் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் இப்படியாப்பட்ட வஸ்துக்கள் இருப்பதாகவே காட்டிக்கொள்ளாமல் தனது இருப்பை அழுத்தமாக பதிப்பது. பிந்தைய வகையின் உச்சம் இப்படம்.
இப்படத்தின் டிஜிட்டல் மேக்கிங்-ன் தரமும், நம்பகத்தன்மையும் எதிர்காலத்திய சிறு பட்ஜெட் படங்களுக்கான உற்ச்சாகபானம். முன்னமே சொன்னமாதிரி ஒளிப்பதிவும்,இசையும், எடிட்டிங்கும் படத்தில் எங்கேயுமே தனியாக தெரியவில்லை. நடிப்பும் கூட.. அதுதான் இந்த கலைஞர்களுக்கு கிடைத்திருக்கும் நிஜமான வெற்றி.!! வாழ்த்துக்கள் அனைவருக்கும்..
அப்புறம்.. படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி என்னுள் எழுப்பிய கேள்விகள் பல.. ஆர்த்தி, தினேஷின் மொபைலுக்கு கால் பண்ணும் போது அவன் மொபைல் திரையில் "ஐட்டம்" என டிஸ்ப்ளே ஆகும் போது எழுந்த அரங்கு நிறைந்த கைத்தட்டல்களும், விசில் ஒலிகளும் சொல்லவருவது என்ன.? நம் மனதில் இன்னமும் மிச்சமிருக்கும் ஆணாதிக்கத்தின் எச்சமா.?? அங்கு நடப்பவைகளுக்கு அந்த பையனும்தான் காரணம்.ஆனால் தவற்றை ஒரு பெண் செய்கிறாள் என்பதால் மட்டும் அது டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ் சைசாகி விடுகிறதா நமக்கு.???
இறுதிக்காட்சிகளில் ஜோதி, போலீசாரின் அத்துணை அடிகளையும் வாங்கிக்கொண்டு ரௌத்திரத்துடன் தீர்க்கமாக பார்க்கும் காட்சியில், ஏனோ என் மனதில் தோழர் செங்கொடியின் முகம் நிழலாடியது. படத்தில் எனக்கு மிகப்பிடித்த காட்சி இது..
குறைகள் என்று பார்க்கப்போனால்,படம் பார்க்கும் உணர்ந்தது ஒன்று.. அப்புறம் அவ்விமர்சனம் எழுத யோசிக்கும் போது தோன்றியது ஒன்றென இரண்டு மட்டுமே.
ஆர்த்திக்கு என்ன பிரச்சனை என அவளின் அம்மா கேட்கையில், அவள் "எதுவாகி இருந்தாலும் எக்ஸாம்ஸ் முடிஞ்சபின்னாடி பேசிக்கலாம்'ம்மா.." என்றுரைக்கிறாள். ஆர்த்திக்கு பிரச்சனை என கண்டிப்பாக தெரிந்த பின்னரும் அவளின் அம்மா, மேற்கொண்டு ஏதும் கேட்காமலிருப்பதும், விசாரிக்காமலிருப்பதும் நெருடல்.
அடுத்து, கிளைமாக்சில் ஜோதி எடுக்கும் முடிவுக்கான மனோதைரியம் எங்கிருந்து வந்தது என பரவலான கேள்விகள் எழுப்பப்படுகிறது.
ஜோதியின் இயல்பை சொல்ல ஒரேயொரு சிறுகாட்சி வருகிறது..அதுவும் வேலு நினைத்துப்பார்க்கும் "ஒருகுரல் கேட்குது முன்னே.."பாடலில் மாண்டேஜ் ஷாட்டாக.. ஜோதி படிக்கும் புத்தகங்களும், அவளின் தந்தை ஊருக்கு உழைத்து மறைந்த தோழர் என்பதுமான அக்காட்சியை, பாடலில் அல்லாமல் தனியாக வைத்திருந்தால் பார்வையாளன் எளிதாக கிளைமாக்சில் அதை ரிலேட் செய்துகொள்வான். அப்போது ஜோதி எடுக்கும் முடிவுக்கான நம்பகத்தன்மையானது இன்னமும் வெகுவாக அதிகரித்திருக்கும்.
இறுதியாக, ஜோதியின் முகம் கம்பிகளுக்குப் பின்னால் ஒளிர, "வானத்தையே எட்டிப்பிடிப்பேன்.." பாடல் பின்னணியில் ஒலிக்க டைட்டில் கார்ட் போடும்போது, ஜோதி-வேலுவுக்கான சுகமான எதிர்காலம் கண்முன்னே விரிகிறது.. என்னைப் பொறுத்தமட்டிலும், இது பாசிடிவான க்ளைமாக்ஸ்தான்.
என்னளவில் கடந்த பத்து வருட தமிழ் சினிமாவில் மேற்கொள்ளப்பட்ட மிகத்தைரியமான முயற்சிகளில் முதன்மையானதும், முக்கியமானதுமான படைப்பு இது. இதுபோன்ற படங்களை தோல்வியுறச்செய்தால் இழப்பு என்பது ரசிகர்களுக்குத்தானேயன்றி படக்குழுவினருக்கு அல்ல.
கண்டிப்பா எல்லோரும் பாருங்க.. தியேட்டர்'ல போய் பாருங்க ப்ளீஸ்..
ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))
அருமையான விமர்சனம்.வழக்கு எண் 18/9 படம் பார்த்துவிட்டு நான் வெளியே வந்துவிட்டாலும்,படம் என்னை விட்டு வெளியேறவில்லை #இயக்குனரின் வெற்றி.
ReplyDeleteநன்றிகள் சகா :-)))
Deletenaan dhaan firstu.. apm read panittu comment panraen.. he he.. vaalkaila first varanumaam aaro sonnaanga :))))))))))))
ReplyDeleteada chai rendaavathaa poyitanae ;((((( bulbu vaangurathae polappaa pochchudaa ;(((
Deleteஹ..ஹா.. விடு..விடு மாப்பி.. இதெல்லாம் நமக்கு புதுசா என்ன.??? சீக்கிரம் ஒரு பல்பு ஃபேக்டரி ஓப்பன் பண்ணிடலாம் துபாய் குறுக்கு சந்துல ;-)))
Delete// எந்தக்கணத்தில் நாம் கதையுடன் ஒன்றிணைந்தோம் என யூகிக்கவே முடியாவண்ணம் ஒரு புதைகுழி போல பார்வையாளனை சடாரென உள்ளிழுத்துக் கொள்கிறது // உண்மை. படம் பார்த்தவர்கள் அன்றைய தூக்கம் தொலைப்பார்கள் அல்லது தாமதமேனும் ஆகலாம். நல்ல விமர்சனம். வாழ்த்துகள் மாம்ஸ். :-)
ReplyDeleteநன்றீஸ் மாப்ஸ்...
Deleteபடம் பாக்கனும்யா.. நல்ல விமர்சனம் ..
ReplyDeleteகண்டிப்பா பாரு மச்சி.. #தியேட்டர்ல போயி..
Deleteசினிமா ஒரு பொழுபோக்கு ஊடகம் என நினைப்பவர்களை கூட அசைய வைக்கும் படம்.! இயல்பான கதை. அதை கையாளும் இயக்குனரின் திறமை..படத்தோடு ஒன்ற வைத்து விட்டது. படம் நல்லா இருக்குன்னு மட்டும் தான் சொல்ல தோன்றியது..எப்படி நல்லாயிருக்குன்னு எனக்கு புரியவைத்த குணாவுக்கு நன்றி # மல்டி-லேயர் ஸ்க்ரீன் ப்ளே, மாண்டெஜ் ஷாட் இது போன்ற வார்த்தை பிரோயோகங்கள்..என் போன்ற தரை டிக்கட்டு மக்களை திகைப்படைய செய்கிறது.! :))
ReplyDeleteநன்றீஸ் மாமு..
Delete///# மல்டி-லேயர் ஸ்க்ரீன் ப்ளே, மாண்டெஜ் ஷாட் இது போன்ற வார்த்தை பிரோயோகங்கள்..என் போன்ற தரை டிக்கட்டு மக்களை திகைப்படைய செய்கிறது.! :))///
Deleteயோவ்வ்வ் மாம்ஸ்.. சும்மா கலாய்க்காதே இந்த கத்துக்குட்டியை..
நீயெல்லாம் கி.மு'லேர்ந்து விமர்சனம் எழுதிட்டுருக்கே.. ஒனக்கு தெரியாததா இதெல்லாம்..
நல்ல விமர்சனம்!
ReplyDeleteநன்றிகள்ஸ் சகா :-)))
Deleteயோவ் மாம்சு! சாச்சு புட்டீர்.... அருமையா இருக்கு விமர்சனம், எங்கையா புடிக்கிரீர் வார்த்தைகளை எல்லாம், எனக்கு ஒரு எழவும் சிக்க மாட்டேங்குது. :))
ReplyDeleteஅடேய்.. சும்மா கலாய்க்காதே.. நீயெல்லாம் வார்த்தை ஃபேக்டரி வச்சி அற்புதமா எழுதற.. நான் ஏதோ குடிசைத்தொழில் ரேஞ்சிக்கு பண்ணிட்டுருக்கேன்.. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்கிற அளவில் பாராட்டாக இதை எடுத்துக்கொள்கிறேன் மச்சி..
Deleteரொம்ப உணர்ச்சிவசபட்டுட்டீங்க. இதுவும் மிக சிறப்பான படம்தான். சந்தேகமில்லை. "என்னளவில் கடந்த பத்து வருட தமிழ் சினிமாவில் மேற்கொள்ளப்பட்ட மிகத்தைரியமான முயற்சிகளில் முதன்மையானதும், முக்கியமானதுமான படைப்பு இது." - சுப்பிரமணியபுரம், நாடோடி, பசங்க,அங்காடித்தெரு. எங்கேயும் எப்போதும், வாகைசூடவா போன்ற படங்களும் வந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். எல்லாமே பாராட்டுகள் பெற்றவையே.
ReplyDeleteமற்றபடி விமர்சனம் ஓகே.
" வேலுக்கு உதவும் திருநங்கையை.. " தவறு அவள் ஒரு விலை மாது. திருநங்கை என்பது அரவாணியை குறிக்கும். அந்த பணக்கார வீட்டு பையன் மூலகர்த்தாவுக்கு என்ன ஆச்சு என்பதை நாம் தீர்ப்பின் மூலம் ஊகிக்க வேண்டியதாகத்தான் உள்ளது.அதை கொஞ்சம் விவரித்திருக்கலாம்.
நன்றிகள் சகா..
Delete.///சுப்பிரமணியபுரம், நாடோடி, பசங்க,அங்காடித்தெரு. எங்கேயும் எப்போதும், வாகைசூடவா போன்ற படங்களும் வந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். எல்லாமே பாராட்டுகள் பெற்றவையே.///
Deleteநாடோடிகளைத் தவிர இவையனைத்தும் நல்லா படங்கள் என்பதில் எனக்கு எவ்வித மாற்று கருத்துமில்லை... என் பார்வையில் இந்த படங்களுக்கு ஒரு படி முன்னேயுள்ளது இப்படம். அவ்வளவே.. பாடல்களே இல்லாமல், எந்த இடத்திலும் கமர்ஷியலாக காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் முற்றிலும் புது முகங்களை வைத்து இத்தகையதொரு படைப்பை வழங்குவதென்பது என்னைப்பொறுத்த மட்டிலும் மிக தைரியமான முயற்சியே..
///" வேலுக்கு உதவும் திருநங்கையை.. " தவறு அவள் ஒரு விலை மாது. திருநங்கை என்பது அரவாணியை குறிக்கும்.//
Deleteதிருநங்கை என்பது அரவாணியை குறிக்கும் என்பது எனக்கும் தெரியும் சகோ..
இதை எழுதும்போது அவர் திருநங்கையா..பெண்ணா என்கிற குழப்பத்துடனேயே எழுதினேன்..இன்னமும் அந்த குழப்பம் தீர்ந்தபாடில்லை..
இன்னொரு முறை பார்த்தால் தெளியுமென நினைக்கிறேன். பாலியல் தொழில் செய்யும் அரவாணிகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
///அந்த பணக்கார வீட்டு பையன் மூலகர்த்தாவுக்கு என்ன ஆச்சு என்பதை நாம் தீர்ப்பின் மூலம் ஊகிக்க வேண்டியதாகத்தான் உள்ளது.அதை கொஞ்சம் விவரித்திருக்கலாம்.///
Deleteஅந்த வழக்கை திரும்ப விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடும்போதே அந்தப்பைய்யனுக்கும், அவன் அம்மாவிற்குமான தண்டனை உறுதியாகிறது.. பின் அவன் பெற்ற தண்டனை விவரங்களையெல்லாம் காட்டிக்கொண்டிருந்தால் கிளைமாக்சின் தீவிரத்தன்மை பாதிக்கும் என இயக்குனர் கருதியிருக்கலாம்..
உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் மீண்டும்.! அளவளாவியதில் மகிழ்ச்சி..
சூப்பர் குணா
ReplyDeleteஎனக்கும் பார்க்க ஆசையாக இருக்கிறது
ஆனால் இபதானில் எந்த தியேட்டரிலும் ரிலீஸ் ஆகவில்லை
எனவே நோ அதர் சாய்ஸ் - திருட்டு சி டி தான்
ரவிசந்திரன்
நன்றீஸ் அண்ணா..
Deleteநல்லபடம்.. கண்டிப்பா பாருங்க.. உங்களுக்குப்பிடிக்கும்..
ஓகே
Deleteஅவசியம் பார்க்கிறேன்
:-)))
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்ல விமர்சனம் ..ஆர்த்தியை பற்றி இரண்டு வரிகள் வர்ணித்து சொல்லியிருக்கலாம் :)))
Deleteநன்றீஸ் சகா.. மனதெங்கும் ஜோதியே இருந்ததால இதை மறந்துட்டேன் போல..
Deleteஆனா ஆர்த்தி பத்தி இல்லேன்னாலும், கூட வர்ற நண்பிகளை பத்தியாவது கண்டிப்பா ஜொள்ளி'யிருக்கணும்..அட்டகாசம் அதுகள் ;-)))
நல்ல விமர்சனம் ..ஆர்த்தியை பற்றி இரண்டு வரிகள் வர்ணித்து சொல்லியிருக்கலாம் :)))
ReplyDeleteகேங்க் லீ வார்த்தைகளின் தேர்வு அருமை. படம் கண்டிப்பா பார்க்கணும். கலக்குங்க. வனத்த எட்டிப் பிடிப்போம்.
ReplyDeleteநன்றீஸ் மச்சி :-)))
Deleteநல்லதொரு விமர்சனத்தைப் படித்த திருப்தி ஏற்பட்டது இதைப் படித்தபோது. மற்றவை பற்றி படத்தைப் பார்த்த பிறகு சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிகள் சகா.. படம் பாத்துட்டு சொல்லுங்க..
Deletenice maams.!
ReplyDeletepaarthuttu en karuthukalai pagirikiren
snj_no1
நன்றீஸ் மச்சி..
Deleteஅருமையான விமர்சனம். இது மாதிரியான படங்கள் அதிகமாக வரனும். நீங்க அதை விமர்சனம் எழுதனும்.
ReplyDeleteநன்றிகள்ஸ்.. கண்டிப்பா நல்ல படம் வந்தா விமர்சனம் எழுதுவேன்..
Deleteஇந்த மாதிரி நல்ல படத்தை (இன்னும் பார்க்கலா ஆனாலும் புரியிது நல்ல படம்ன்னு )பெரிய இடத்துக்கு கொண்டு போறது சினிமா ரசிகர்களுடைய கடமை அந்த வகையில் உங்க வேலைய திறம்பட செஞ்சிருக்கீங்க .இப்பணி தொடர வாழ்த்துக்கள் :))
ReplyDeleteஆஹா.. என்னது பிரபல டுவிட்டர் என் போஸ்ட்டுக்கு கமெண்ட்டா.? #தன்யனானேன் தங்கச்சி.. நன்றீஸ் :-)))
Deleteஜோதி படிக்கும் புத்தகங்களும், அவளின் தந்தை ஊருக்கு உழைத்து மறைந்த தோழர் என்பதுமான அக்காட்சியை, பாடலில் அல்லாமல் தனியாக வைத்திருந்தால் பார்வையாளன் எளிதாக கிளைமாக்சில் அதை ரிலேட் செய்துகொள்வான். அப்போது ஜோதி எடுக்கும் முடிவுக்கான நம்பகத்தன்மையானது இன்னமும் வெகுவாக அதிகரித்திருக்கும்.#மேலே சொன்னதை சுட்டி கட்டியதற்கு நன்றி. நீங்கள் நல்ல விமர்சனம் எழுதுறிங்க. என்னுடைய வாழ்த்துகள் குணாயோகாசெல்வன்
ReplyDeleteநன்றிகள்ஸ் ஜி..
Deleteவீட்ல பரத்தல என்னவோ எனக்கு படம் காதல் அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை
ReplyDelete