உன்னைச்சுற்றி
நட்பு வட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
உனக்கும் கீச்ச வரும்
உன் கீச்சுக்கள்
அழகாகும்
RT செய்பவன்
தெய்வமாவான்
உன் கீச்சாலேயே
TL நிரம்பும்
தமிழ் கீச்சராய் வாழ்ந்துபார்.!!
.............................. .............................. .........
நிமிடத்துக்கு நான்குமுறை
பாலோவர் எண்ணிக்கை பார்ப்பாய்
மென்சன் வந்தால்
பதிலளிப்பாய்
பாலோவர் வந்தால்
குதூகலிப்பாய்
காக்கா கூட உன்னை
கவணிக்காவிட்டாலும்
முழு உலகமுமே உன் டிவிட்டை
கவணிப்பதாய் உணர்வாய்
HOME ஐயும் MENTION ஐயும்
மாறி மாறி கிளிக் செய்வாய்
இந்தவானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம் கீச்சுவதற்கான
தலைப்புக்கள் என்பாய்
தமிழ் கீச்சராய் வாழ்ந்து பார்.!!
.............................. .............................. ...............
புது புது
டேக்குகள் அடிக்கடி
வந்து போகும்
நள்ளிரவில் சந்தில்
உனது டிவிட் மட்டுமே
காணப்படும்
உன் கீச்சையே
மீள் கீச்சாய்
நீயே கீச்சுவாய்
காமத்தின் திரைச்சீலையை
ராஜன் கீச்சுக்கள்
கிழிக்கும்
சந்தில் கீச்சுக்கள்
நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
கீச்சுக்கள் தத்துவமாகும்
பின் மொக்கைக்குள்
அனைத்தும் அடங்கும்
தமிழ் கீச்சராய் வாழ்ந்து பார்.!!
.............................. .............................. ..
மொக்கைகளில்
உடைந்து போக
உன்னால் முடியுமா?
RT சுகம் அறிந்ததுண்டா?
வலை பாயவேண்டுமா?
ஐந்து பேவரிட் இருந்தும்
ஒரு RT இல்லையே என வருந்தியதுண்டா
தமிழ் கீச்சராய் வாழ்ந்து பார்.!!
.............................. ..............
சின்னச்சின்ன பல்புகளில்
சிலிர்க்க முடியுமே
அதற்காகவேனும்
கடலை போட்டு
ஃபாலொயர் சேர்க்க
முடியுமே
அதற்காகவேனும்
“கிர்ர்ர்ர்”
என்ற சொல்லுக்கும்
“மிக்ச்சர்” என்ற
சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள்
விளங்குமே
அதற்காகவேனும்
தமிழ் கீச்சராய் வாழ்ந்து பார்.!!
.............................. .............................. ...
வலைபாயுதேவில்
உன் கீச்சு
வராவிட்டாலும்
பிரபல
டிவிட்டர்கள்
உன்னை பாலோ
செய்யா விட்டாலும்
நீ பாலோ செய்யும்
அவனோ அவளோ
உன்னை பாலோ
செய்யாவிட்டாலும்
தமிழ் கீச்சராய் வாழ்ந்து பார்
நல்ல கீச்சாயின்
பாரதியின் RT
இங்கேயே நிச்சயம்
தமிழ் கீச்சராய் வாழ்ந்து பார்.!!
-உல்ட்டா கவிஞர் சுகந்தன் @suganthanp
செம..செம.. கலக்கிட்டடா காப்பி..ச்சே..மாப்பி..
ReplyDeleteநல்லாருக்குங்க தம்பி.. நல்லா வருவீங்க..
//காப்பி..ச்சே..மாப்பி// அது தான் தெளிவா போட்டிருக்கிறோம் உல்ட்டா என்று :))
Deleteநன்றி தலைவா!
This comment has been removed by the author.
ReplyDeleteசெம செம.. கருப்புக்கு போட்டியா ஒரு கவிஞரு உதயமாகிறார்!!!
ReplyDeleteபோட்டியா அப்பிடின்னா எனக்கு வயித்த கலக்குமே :))
Deleteநன்றி தல சாரி தளபதி ச்சீ தல தளபதி !! என்ன இன்னிக்கு ரொம்ப ஜாமாகுது :)
அய்யய்யோ இவனும் கவிஞனா?????? மொதல்ல இவனுங்க ஃப்ரெண்ட்ஷிப்பை எல்லாம் கட் பண்ணனும்....
ReplyDeleteஉங்க ஊர்ல இதுக்கு பேர் கவிதையா? :)))
Deleteசூப்பர் மச்சி கலக்கிட்ட ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்க போல
ReplyDeleteநன்றி மச்சி நம்மள பற்றி நாம எழுதுறது அனுபவிச்சு தானே எழுதமுடியும் :)
ReplyDeleteஆஹா... காதலித்துப்பாரின் உல்டா. ஆனாலும் அருமை. வாழ்த்துகள் சகா. :-)
ReplyDeleteநன்றிகள் கோடி கருப்பு கவிதையே :))
Deleteம்ம்ம்... நல்லா இருக்கு... எங்க இவரும் கருப்பு மாதிரி ஆகிடுவாரோனு பயமாவும் இருக்குது :-)
ReplyDeleteநன்றிங்க :) பயப்படாதீங்க நான் அவன் இல்லை :)
Deleteகலக்கல் சகோ..!!
ReplyDeleteநல்லா வருவீங்க தம்பி நல்ல எதிர்காலம் இருக்கு உங்களுக்கு
ReplyDeleteநன்றிங்க அண்ணா :))
Delete