Tuesday, May 15, 2012

மூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்!



வாழ்வின் முதன் முதலாய்
நீ எனை அள்ளி அணைத்த கணம்
சுகந்திரம் விரும்பிய தியாகியாய்
உனை தூரவே உதறி எறிந்தேன்.........

கால்கள் தரை தட்டாமல்
நொண்டிக்குதிரையாடிய கணங்கள்
உன்னில் கோபம் கொண்டேன்......

உன் அருகாமை மெளனங்களில்
முத்தமிட்டு உனை நனைத்த வேளையிலே
நான் வயசுக்கு வந்த நாள் அறிந்தேன்.....

முப்பொழுதும் சொப்பனங்கள்
இண்டர்நெட்டில் அப்படங்கள்
கண் மூடி மையல் கொள்ளும்
கதிரவன் மறைந்த நேரம்
காரிருள் கரைபுரண்டோடும்
காரிகை காட்சி தெரியும்வேளை
உன் முத்தங்கள் என்னை யுத்தம் செய்யும்...........



அணைப்புகளில் திமிறினாலும்
ஆர்வங்களில் எகிறினாலும்
காமங்களில் விசிறினாலும்
கந்தர்வ காதலில் கூடுகையில்
உன்னை கன்னி கழித்திருக்கிறேன்........

நெரிசலான பேரூந்து பயணங்களில்
நீயே என கவசகுண்டலமாய்
திண்மையை திரைமறைப்பதில்
கிருஷ்ணனாகி மானம் காக்கிறாய்..........

அடங்கியிருந்த ஆர்ப்பலைகள்
ஆசைகொண்டு ஆர்ப்பரிக்கையில்
அடைமழையில் நீ நனைந்து
நீர்மட்டம் குறைக்கிறாய்..........

வெள்ளைப்பூக்கள் வெண்மை கொண்டு
நீ என்னை அலங்கரிக்கையில் 
மனதின்  கறுப்பான களங்கங்களும்
கழவிப்போய்விடுகிறாய்..........

விட்டுக்கொடுத்து வாழ்தலில் பிடிமானமும்
ஆர்வத்தை அடக்கி ஆளுதலில் நோயின்மையும்
வாழ்க்கையின் தத்துவமே நீயாகி 
மூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலே நாறடிக்கும்! 

பொருத்தம் பார்த்து பொருந்திப்போனதும்
பிடித்துப்போனதும் உன்னில் உயர்சாதி
 உன்னில் உயர் சாதி ஜாக்கி!
உந்தன் ஒரே பெயர் ஜட்டி ஜட்டி ஜட்டி!




எழுதியது,

மன்மதகுஞ்சு என்கிற கீர்த்தி ... ---  






15 comments:

  1. ஒவ்வொரு வரியையும் ... அனு அனுவாய் அனுபவித்து எழுதியிருக்கிறார் திரு.குஞ்சு...அருமை...

    ReplyDelete
  2. சார்! நீங்க எங்கயோயோயோ போய்ட்டீங்க!

    ReplyDelete
  3. அடப்பாவிகளா இதுக்கு Female Version கேட்டு DM அனுப்புறாங்கப்பா, வேணாம்யா புழைப்பு நாறீடும்

    ReplyDelete
  4. ஹ.ஹா..குஞ்சு..! இவன் என்ன சொல்ல வரான்னு புரியாமலே படிச்சு..கடைசியில தெரிஞ்சு...ஹா.ஹா..முடியலைடா..! # உள்ளாடைக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா :)) # கட்ஸ்.!

    ReplyDelete
  5. முதல்லேயே தெரிஞ்சிட்ட ஹிக் இருக்காதில்ல,கடைசி வரை படிச்சிட்டு மீண்டும் திரும்பம் போய் படிச்சு பாருங்க செமையா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆயிரத்தில் ஒருவன்May 17, 2012 at 11:59 AM

      ரொம்ப கிளுகிளுப்பா ஆரம்பிச்சு இப்படி ஜோக்கா முடிச்சிட்டே.நல்ல இருக்கு.நான் உன் பேருக்கு ஏத்த மாதிரி முடிப்பேனு நெனச்சேன் கொஞ்சம் விலகி ஜட்டினு முடிச்சிட்டே.கீப் இட் அப்

      Delete
  6. இத வாங்கி போட்டுப்பாத்தா இப்டி எல்லாம் தோணுதா

    ReplyDelete
  7. விட்டுக்கொடுத்து வாழ்தலில் பிடிமானமும்ஆர்வத்தை அடக்கி ஆளுதலில் நோயின்மையும் வாழ்க்கையின் தத்துவமே.. : @Mrkunchuஅருமை.. :))

    ReplyDelete
  8. //முப்பொழுதும் சொப்பனங்கள்
    இண்டர்நெட்டில் அப்படங்கள்// கல்க்கிட்டடா குஞ்சி மச்சி .. இதை படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவ்விடத்தின்மேல் மரியாதை கூடும்... #வாழ்த்துக்கள் மச்சி

    ReplyDelete
  9. படிக்கும் போதே தெரிந்து விட கூடாதென்பதற்காக அருமையாக தீட்டியிருக்கிரீங்க ரொம்ப அருமை @Mrkunchu

    ReplyDelete
  10. கலக்கல் :)) ஒவ்வொரு வரியும் ஒரு மாஸ்டர் பீஸ் ஜட்டி :)

    ReplyDelete
  11. கன்னி தமிழ் எடுத்து கவித்துவம் அதில் வடித்து உன்னில்
    உயர் ஜாதி மூன்றெழுத்து ஜட்டிக்கு
    பட்டி தொட்டி எல்லாம் பரணி பாட வைக்க
    உன்னால் தான் முடியும் தம்பி உண்மையில்
    நீ தங்கக்கம்பி பொன்னாளாம்
    இந்நாளில் பொலிவுடனே
    வாழ்த்துரைக்க வார்த்தைகளை தேடுகிறேன்
    அமிழ்தினும் இனிய தமிழ் அன்பரே உன் மடியில்
    ஆராரோ பாட அசத்துங்கள் இனி வரும் நாட்கள்
    கருத்திருளை போக்கும் கவிதை மழையில்

    RAVAN181

    ReplyDelete
  12. நன்றி ராவண் சார்.. உங்க ஊக்கத்துக்கும் ஆக்கத்துக்கும்...

    ReplyDelete
  13. கிளிஞ்சது.... ஜட்டி, அபாரம்.. அபாரம்.. மூன்று முறை படித்தேன்...

    ReplyDelete
  14. என்ன நையாண்டி மச்சி ரெம்ப கன்பீஸ் ஆகிட்டீங்களோ..

    ReplyDelete