சச்சின், ரகுமான், ரஜினிகாந்த் ஆகியோரை பத்து வருடங்களுக்கு முன்னர் எத்தகைய வியப்புடன் பார்த்தோமோ இப்போதும் அதே வியப்புடன் பார்க்கின்றோம் நாம். அதேபோல் பெரியவர்களும் (சில சிறியவர்களும்) ஒரு விசயத்தை இன்னும் வியப்புடன்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அதுதான் "இன்ஜினியரிங்". ஏனெனில் நான் பத்து வருடம் கஷ்டப்பட்டு பெறுகின்ற மாதசம்பளத்தை என் மகன்/மகள் ஒரே மாதத்தில் பெற்றுவிடுவான் என்று பல பெற்றோர்கள் நினைப்பதால்தான் இத்தகைய
வியப்பு. இப்பதிவில், பொறியியல் படிப்பிற்கான சில ஆலோசனைகளையும், ('ஆலோசனைகள்' என்பதைவிட 'நெறிமுறைகள்' என்னும் சொல் தகும்) 'பொறியியற் கவுன்சிலிங்' பங்கேற்கும்போது எதிர்நோக்கவேண்டிய சில முடிவுகளையும்
என்னால் இயன்ற அளவுக்கு பகிர்ந்து கொள்கிறேன்.
நான் இத்தகைய விசயங்களை சொல்வதற்கு எந்தவித சிறப்பு படிப்புகளையோ, பட்டறிவோ பெற்றிருக்கவில்லை. இந்த ஆண்டுடன் என் பொறியியற் படிப்பை முடித்தும், ஆங்காங்கே ‘பட்ட’ அறிவுகளை கொண்டே பின்வருபவற்றை சொல்லப்போகிறேன்.
பிளஸ் 2 முடிவுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் (மே 22) வந்துவிடும். உடனே பெற்றோர்களும் பிள்ளைகளும் எந்த
விசயத்திற்கெல்லாம் கவலைப்படுவது என்றே கவலைப்பட ஆரம்பித்துவிடுவர். கல்லூரி படிப்பு என்றாலே ஒருசிலர் மருத்துவப் படிப்பை பயில விரும்புவர். வேறுசிலர் பட்டயக்கல்வி, அறிவியல் மற்றும் கலைசார்ந்த படிப்புகளை விரும்பி ஏற்பர். பலருக்கும் மருத்துவம் பயில ஆசைதான், இருந்தும் அதிக மதிப்பெண்கள்
அல்லது அதிக பணமில்லாத காரணத்தால் அது எட்டாக்கனியாகவே பார்க்கப்படுகிறது. கலை, அறிவியல் படிப்புகள் ஒருவித தயக்கத்தோடு
பார்க்கப்படுவதால் பெரும்பான்மையானோரின் பார்வை
பொறியியற் படிப்புகளுக்கே திரும்புகிறது. ஒரு இடத்தில் பெரும்பான்மையானோர்
சேரச்சேர அவர்கள் அறிவு சிறுமைப்பட்டு போய்விடும் என்பது உண்மை.
பொறியியற்
படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்க தொடங்கின முதல்நாள் அதிகாலை நான்கு மணிக்கே கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிட்டது என்கிறது செய்தித்தாள்கள். இதிலிருந்தே புரிகிறது பெற்றோர்களின் இன்ஜினியரிங் மோகம். "கண் தெரியாத ஊரில் ஒற்றைக்கண்ணனே ராஜா" என்பது போல் எந்தெந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்? எதற்கு எதிர்காலம், வேலைவாய்ப்பு அதிகமென்று
நாளிதழ்களும், டிவி சேனல்களும் போட்டிபோட்டு
நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ஒருவிதத்தில் காசும், பப்ளிசிட்டியும் தேடிக்கொண்டு, ஏற்கனவே மாணவர்களின் குழம்பியக் குட்டையில் மீன் பிடித்து
இன்னும் குழப்பிவிட்டே செல்கின்றனர்! இதற்குதாரணமாக நான் பொறியியற்
கல்லூரியில் சேர்ந்த நேரத்தில் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் 'ஜெயப்ரகாஷ் காந்தி' என்பவர் மாணவர்கள் எடுக்கும் 'கோர்ஸ்'களின் ட்ரெண்டையே
மாற்றியமைத்தார்! அவர் சொன்னார், “சாஃப்ட்வேர் துறை வீழ்ச்சியில் சென்றுக்கொண்டிருக்கிறது! எனவே யாரும் இனிமேல் கம்ப்யூட்டர் படிப்புகளை தேர்ந்தெடுக்காதீர்கள்! அனைவரும் மெக்கானிக்கல் படிப்பை நோக்கி ஓடுங்கள்!"
என்று சொன்னார். இறுதியில் அதற்கு முந்தைய ஆண்டுகளில் முதலில் ECE, Computer Science, IT, Mech என்று கல்லூரிகளில் நிரம்பிக்கொண்டிருந்த 'சீட்'கள், அந்தாண்டிலிருந்து ECE, Mech, Computer Science என்று நிரம்ப ஆரம்பித்தது. நான்கு வருடம் கழித்து
அதன்பலன் அனைவருக்கும் புரிந்தது வேலைவாய்ப்புகளில். மெக்கானிக்கல், சிவில் போன்ற CORE படிப்புகள் படித்தவர்கள் கூட சாப்ட்வேர் கம்பெனிகளான TCS, CTS, Wipro, Infy போன்றவற்றிலேயே பணிக்கு
அமர்ந்தனர். "வேற்றுமையில் ஒற்றுமை" என்பதை நாம் நமது நாட்டிற்கு
குறிப்பிடுவோம். ஆனால் இனிமேல் அதை இதுபோன்ற சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு
குறிப்பிடுவது சாலச்சிறந்தது. ஏனெனில், பொறியியலில் நீங்கள் எந்த
படிப்பை தேர்ந்தெடுத்தாலும் கடைசியில் இத்தகைய கம்பெனிகளில்தான் தஞ்சம் புக
வேண்டும் என்ற நிலைப்பாடே காரணம்.
இதற்கு காரணம் ஒரு தனிப்பட்ட நபர் என்று நான் குறை கூறவில்லை, அவர் கூறியது DOTE-1 கல்லூரிகளுக்கு வேண்டுமென்றால் பொருந்தலாம். ஆனால் மற்ற கல்லூரிகளின் நிலை? சில கல்லூரிகளுக்கு ஓரிரு கம்பெனிகளைத் தவிர வேறெதுவும் வராது. அத்தகைய கல்லூரிகளில் விருப்பமான துறையில் பயின்று விருப்பமான/படிப்பிற்கேற்ற வேலை என்பது 'கல்லூரி பிளேஸ்மெண்ட்'களில் இயலாத காரியம்! எனவே ' பிளேஸ்மெண்ட்' வருமா? என்று கேட்பதையும் சேர்த்து எந்தெந்த
கம்பெனிகள் ' பிளேஸ்மெண்ட்'க்கு வரும்? என்பதையும் தெளிவுறக் கேட்டுக்கொள்ளுதல் அவசியம்.
பலர் தங்களது கவுன்சிலிங்கில் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுக்கும் விதம் "Name of the College, Location, Placement, Course" அல்லது "Course,
Placement, Name of the College, Location". எனது விருப்பம் எதுவென்றால் "Name of the
College, Placement, Course, Location" இதுவே
எதிர்காலத்திற்கு சிறப்பாக அமையும்! அதன் காரணத்தை பின்வருமாறு குறிப்பிடுகிறேன்.
கல்லூரியின் சிறப்பு (Name of the College) :
கல்லூரியின் சிறப்பு (Name of the College) :
என்னுடைய விருப்பப்
படிநிலைகளில் பிடித்த 'துறை'க்கு (Course) முக்கியத்துவம் தராமல்
கொடுத்திருப்பது போல் நீங்கள் உணரலாம். ஆனால் உண்மையில் அப்படியில்லை. என்னை பொறுத்தவரை முதலாவது சிறப்பான கல்லூரிக்கே முக்கியத்துவம்
கொடுக்கவேண்டும்! சிறப்பான கல்லூரிகளே சிறந்த பொறியாளர்களை உருவாக்குகிறது! சிறப்பான கல்லூரியை விட்டுவிட்டு பிடித்த துறைக்காக கொஞ்சம் சுமாரான கல்லூரியை
தேர்ந்தெடுப்பது சிறிது முட்டாள்தனமே. ஏனெனில் எந்த துறையாக இருந்தாலும் மூன்றாமாண்டு நான்காமாண்டே உங்களுக்கு அத்துறையைப் பற்றி முழுமையாக
அறிந்துக்கொள்ள முடியும். அப்பொழுது தெரிந்துக்கொள்வீர்கள்
ECE படித்து முடித்ததுமே
செயற்கைக்கோள் அனுப்பிவிட முடியாது, Aeronautics படித்தவுடனே
விமானத்தை இயக்கிவிடமுடியாது,
Mechatronics என்றதுமே வசீகரனை போல் "எந்திரன்" தயாரித்துவிட
முடியாது என்று விளங்கும். இதை நான்
உங்களை மட்டுப்படுத்துவதற்காக கூறவில்லை, வாழ்வின்
நிதர்சனத்தையே கூறுகிறேன். இதற்கு வருடாவருடம் படிப்பை முடித்து வருகின்ற லட்சக்கணக்கான
பொறியாளர்கள் சாட்சி! இன்னொரு முக்கியமான விசயம். எக்காரணத்தை கொண்டும் அரசு கல்லூரிகளை
விட்டுவிடாதீர்கள்! (உங்களுக்கு பிடிக்காத இடங்களைத் தவிர) ஏனெனில் அங்கே
கல்லூரி கட்டணங்கள் குறைவு மற்றும் பலதரப்பட்ட
அரசு சலுகைகள் கிடைக்கும் உதாரணமாக : ஸ்காலர்ஷிப், அரசின் இலவச திட்டங்கள்!.
வேலைவாய்ப்புகள் (Placements) :
நல்ல கல்லூரி என்றாலே தானாகவே வேலைவாய்ப்புகள் மிகுந்துதான்
இருக்கும்! அப்படி சிறந்த கல்லூரி கிடைக்காதவர்கள் கவலைப்படாமல்
எந்த கல்லூரிகளில் எந்தெந்த கம்பெனிகள் வந்துகொண்டிருக்கின்றது என்று
விசாரிக்கவேண்டும். நான் சொல்வது சாப்ட்வேர் கம்பெனிகளான TCS. CTS, Wipro, Infy போன்றவை நீங்கலாக, அதாவது துறைசார்ந்த கம்பெனிகள். இதை
விசாரிக்க அக்கல்லூரியின் Prospectus- ஐ நம்பக்கூடாது. ஏனெனில் அதில்
தனது கல்லூரி வாட்ச்மேன் கூட "பிளேஸ்ட்" என்றே போட்டிருக்கும்! எனவே தெரிந்த
சீனியர்களிடம் விசாரிப்பது நன்று.
துறைசார்ந்த கம்பெனிகள் என்றால் என்ன என்று இன்னும்
குழப்பத்திலிருப்பவர்களுக்கு உதாரணத்திற்கு,
Electronics, Electricals Engineering- Honeywell, Bosch etc.,
Mechanical Engineering- TVS, TAFE, Caterpillar, Mahindra, Ashok Leyland etc.,
Civil Engineering- Larsen & Turbo, Builders etc.,
Electronics, Electricals Engineering- Honeywell, Bosch etc.,
Mechanical Engineering- TVS, TAFE, Caterpillar, Mahindra, Ashok Leyland etc.,
Civil Engineering- Larsen & Turbo, Builders etc.,
Computer Science, IT
Engineering- Microsoft, Yahoo, Amazon etc.,
இதுபோன்று துறைசார்ந்த வேலைவாய்ப்புகள் ஏராளம் உண்டு! எனவே சாப்ட்வேர் என்னும் வட்டத்திற்குள் அடைபட்டுக்கொள்ளாமல் யோசித்து கல்லூரிகளை தேர்வுச் செய்யவேண்டும்!
துறைகள்
(Courses/Departments) :
மேற்சொன்ன
முதலிரண்டு படிநிலைகளில் தெளிவாக இருந்தால் துறைகளை
தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்படாது, மற்றும் கல்லூரி, வேலைவாய்ப்பு, துறை போன்ற பல்வேறு அளவுருக்கள்
(parameters) ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாது! எனவே தெளிந்த
மனதோடு துறைகளை தேர்ந்தெடுக்க விவேகம் வேண்டும். "எனக்கு கல்லூரி, வேலைவாய்ப்புகள் பற்றி கவலையில்லை! எனக்கு கணினியை பற்றி அக்குவேராய் ஆணிவேராய் தெரியும்! எனவே நான் கணினி துறையை தான் தேர்ந்தெடுப்பேன்!" என்று சொல்கிறவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், "யோசிக்காமல் தேர்ந்தெடுங்கள்!
வாழ்த்துகள்!!". இதுபோன்றல்லாது சந்தேகத்துடன் இருப்பவர்கள்
மேற்சொன்னப்படி செய்வதே சாலச்சிறந்தது.
இடம் (Location) :
இதுவும் நாம் கருத்தில் கொள்வதற்கான ஒரு முக்கியமான விசயம். வீட்டில் செல்லப்பிள்ளையாய் வளர்ந்தவர்கள், வெளியே தங்கி பழகாதவர்கள், பலவீனமானவர்கள், குறிப்பாக அதில் பெண்கள், இப்படி யாராவது இருந்தால் அவர்கள் தங்களது வீட்டின் அருகாமையிலிருக்கும் கல்லூரியையே தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் தற்போதைய காலகட்டங்களில் தற்கொலைகள் பெருகிக்கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மனஅழுத்தம். வீட்டிலிருந்தபடியே சென்றுவந்தால் மனவழுத்தத்தை வெகுவாகக் குறைக்கலாம்!
இடம் (Location) :
இதுவும் நாம் கருத்தில் கொள்வதற்கான ஒரு முக்கியமான விசயம். வீட்டில் செல்லப்பிள்ளையாய் வளர்ந்தவர்கள், வெளியே தங்கி பழகாதவர்கள், பலவீனமானவர்கள், குறிப்பாக அதில் பெண்கள், இப்படி யாராவது இருந்தால் அவர்கள் தங்களது வீட்டின் அருகாமையிலிருக்கும் கல்லூரியையே தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் தற்போதைய காலகட்டங்களில் தற்கொலைகள் பெருகிக்கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மனஅழுத்தம். வீட்டிலிருந்தபடியே சென்றுவந்தால் மனவழுத்தத்தை வெகுவாகக் குறைக்கலாம்!
உங்கள் கருத்துகளை நிச்சயம் பதிவு செய்யுங்கள். இப்பதிவு பிடித்திருப்பின்
உங்கள் நண்பர்களிடமோ அல்லது கவுன்சிலிங்
எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களிடமோ கொண்டுபோய்சேருங்கள்! குறைகளிருப்பின் கருத்திலிடவும்! அல்லது manojreuben@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்!
நன்றி,
மனோஜ் ரூபன்
மனோஜ் ரூபன்
Twitter ID : @vandavaalam
உபயோகமான உருப்படியான பதிவு. வாழ்த்துகள்!
ReplyDeleteமிக்க நன்றி பாஸ் :)) முதல் கமெண்டே உங்களோடது பார்த்து ரொம்ப மகிழ்ச்சி :)
Deleteநல்ல பதிவு மச்சி! 2 வருசத்துக்கு முன்னாடி இந்த பதிவ போட்ருக்கலாம்ல .. ஆவ்வ்.. இன்ஜினியர்டா!!
ReplyDeleteஎன்ன பண்றது மச்சி :) நம்மளுக்கு பட்டா தான புத்தி வரும் :)
Deleteஇந்தப் பதிவின் தனித்தன்மை யாதெனில்,பொறியியலை யதார்த்தனமான கண்ணோட்டத்தில் அணுகியிருப்பதுதான் .குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் Tier-1,Tier-2 கல்லூரிகள் பற்றிய விழிப்புணர்வு இன்றைய நிலையில் இன்றியமையாத ஒன்று .பயன் தரத்தக்க முயற்சி மனோஜ் அவர்களே :-)
ReplyDeleteஉங்கள் ஊக்கத்திற்கு ரொம்ப நன்றி மச்சி :)
Deleteஇன்னும் கொஞ்சம் சேர்க்க விரும்புகிறேன். உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை அவனிடமே விட்டுவிடுங்கள். நீங்கள் வழிகாட்டியாக இருந்தாலே போதுமானது, குதிரையை ஓட்டும் ஜாக்கியாக இருக்க வேண்டியதில்லை. எல்லா படிப்புகளிலும் வேலை வாய்ப்பும் , நிறைய சம்பளமும் உள்ளது. அதை விட முக்கியம் மனதிற்கு நெருக்கமான வேலை அமைவது. எனது அறிவுரை முதலில் கோர்ஸ் தேர்ந்து எடுங்கள் கல்லூரியை அதன் பின் தேர்ந்து எடுக்கலாம்.
ReplyDeleteஏனெனில் இந்த கல்லூரி தான் வேண்டும் என மெக்கானில் படிக்க ஆசைப்பட்டு அது இந்த கல்லூரியில் இல்லை என எலக்ற்றிக்கல் பிரிவை எடுத்தவர்களையெல்லாம் நான் பார்த்து உள்ளேன். சுத்தமாக எலக்ற்றிக்கலின் மீது ஆர்வமில்லாமல் ஏனோ தானோ என படித்தே வெளியே வருவர். எனவே கல்லூரியை விட கோர்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.
நீங்க எல்லாம் நல்லா வருவீங்க பாஸ் @வண்டவாளம் வாழ்த்துக்கள்
முதன்முதலில் இந்த கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி பாஸ்! நானும் நீங்கள் சொல்லுவது போல தான் நினைத்தேன்! ஆனால் இந்த பதிவை கவனித்தீர்கள் என்றால் //"எனக்கு கல்லூரி, வேலைவாய்ப்புகள் பற்றி கவலையில்லை! எனக்கு கணினியை பற்றி அக்குவேராய் ஆணிவேராய் தெரியும்! எனவே நான் கணினி துறையை தான் தேர்ந்தெடுப்பேன்!" என்று சொல்கிறவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், "யோசிக்காமல் தேர்ந்தெடுங்கள்! வாழ்த்துகள்!!"// என்று சொல்லியிருப்பேன்! தான் என்ன எடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பவர்கள் அதை எடுப்பதே சிறந்தது! ஆனால் பெரும்பான்மையானோர் அப்படியில்லையே? எனவே தான் இப்போதுள்ள காலக்கட்டத்தில் நான் என் கல்லூரியிலும், வகுப்பிலும் கண்டதை வைத்தே இப்பதிவை எழுதினேன் :)
Deleteஎன்னாயா சீரியஸா எழுதிகிட்டு! உன் போஸ்ட்டுனதும் ரவுசாருக்கும்னு இல்ல வந்தேன்! ;-)) சரி இதல்லாம் நமக்கு சரிப்படாது! எவனையாச்சும் புடிச்சு கண்டாமேனிக்கு ஓட்டி பதிவு போடு பார்ப்போம்! ;-))
ReplyDeleteமுதல்முறையா எழுதுறதால ஒரு பயபக்தி தல ;) அடுத்த பதிவுலாம் கண்டிப்பா நகைச்சுவை தான் :) கமெண்டியதற்கு ரொம்ப நன்றி தல! :)
DeleteAVASIYAMAANA PATHIVU.....
ReplyDeleteTHELIVAANA VILAKANGALum.,ungal ‘பட்ட’ அறிவுUM..... COUNSELLING pasangaluku VAZHIKAATI...
நன்றி மச்சி :)
ReplyDeleteமச்சி கலக்குற போ....என்னால முடிஞ்ச வரைக்கும் மத்தவங்களுக்கு சொல்றேன்.....:)
ReplyDeleteநன்றி மச்சி :) கண்டிப்பா சொல்லுங்க!
Deleteதெளிவான சிந்தனை மற்றும் நேர்த்தியான கருத்துக்கள். வாழ்த்துக்கள் மச்சி!!!
ReplyDeleteநன்றி மச்சி :)
Deleteமச்சி,,,, செம்ம பதிவு எப்படியும் எல்லாருக்குமே யூஸ்ஃபுல்லா இருந்திருக்க்கும்...#அடுத்த பதிவு தாறு மாறா இருக்கோனும்#
ReplyDeleteநன்றி மச்சி :) கண்டிப்பா சிறப்பா பண்ணிடுவோம் :))
Deletevery good post on ryt time
ReplyDeleteரொம்ப நன்றி பாஸ் :)
Deleteseriously a good one.. it ll be definitely useful to juniors.. hats off..:)
ReplyDeletethank u :))
ReplyDeleteசரியான நேரத்தில் சரியான பதிவு. இவ்வருடம் கவுன்சிலிங் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். வாழ்த்துகள் மாப்பி. :-)
ReplyDeleteநன்றிகள் மாம்ஸ் :))
ReplyDeleteSUPER GOOD INFORMATION FRIEND
ReplyDeletethanks friend :)
Deleteதேவையானதுதான். . . பகிர்விற்கு நன்றி.
Deleteபாஸ் ஆனவைங்களுக்கு சரி. பெயிலா போனவங்களுக்கு என்ன செய்ய. . . அதுக்கும் வழிகள சொல்லுங்க தல. :)