கோடை நாட்கள் நெருங்கிவிட்டன, இந்த கோடையை இனிதே அனுபவிக்க சில டிப்ஸ்.....
1,வேர்வை துர்நாற்றம் அதிகம் வராமல் வெந்தைய பொடியை தண்ணிரில் கலந்து
குடிக்க உடல் குளிர்ச்சி முடிவளர்ச்சி நன்கு இருக்கும்..
2,குளிர்சாதன
தண்ணீர் குடிக்காமல் பானை தண்ணீரில் நன்னாரி வேர் போட்டு குடிக்க
வாசனையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்..
சர்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
4.காலையில் ஒர் மூடி எலுமிச்சை
சாற்றுடன் சிறுது தேன் கலந்து சாப்பிட்டு வர முகபொழிவு வயிற்று பகுதி
சீராக வேலை செய்யும்,
5,கோடையில் காரம் உப்பு புளிப்பு குறைத்து கொண்டால்
உடல் சூடு ஆகாமல் இருக்கும்.
6மதியத்தில் தயிர் கூடுதலாக சேர்த்து அதனுடன்
சின்ன வெங்காயம் சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி மற்றும் நன்கு வலிமை
பெறும்(இரவில் கண்டிப்பாக வேண்டாம்).
7,மொந்த பழம் பூவம் பழம் கோடையில் தினமும் சாப்பிடுங்கள் உடல் குளிர்ச்சி
வயிற்றுபகுதி சுத்தமாக இருக்கும்(விலையும் மலிவே).
8,தாழம்பூ எஸ்என்ஸ்சை
தண்ணிரில் 3சொட்டு கலந்து குடிக்க அம்மை கண்டிப்பாக வராது,
9.நெல்லிக்கனி
தினமும் சாப்பிட்டு வர உடல் ஊட்டம் முடிவளர்ச்சி நன்கு
இருக்கும்,
10.குளிக்கும் போது வேப்பிலை இலையை தண்ணீரில் போட்டு
குளித்தால் சரும நோம் 75% வராது
11,வாரத்தில் 4நாட்களில் கீரை வகைகளை சேர்ப்பது அவசியம்(கீரை வகையில்
கருவேப்பிலை பொதினா கொத்தமல்லியும் அடங்கும்)
12,அசைவத்தில் சிக்கன் நண்டு
இவைகளை கோடையில் தவிர்பது நல்லது நண்டு கோடையில் சாப்பிட்டால் சிலருக்கு
அதிக மூட்டுவலியை ஏற்படுத்தும்(என் அனுபவம்)
13,காலை குளியல் உடலுக்கு
கண்களுக்கு குளிர்ச்சி மாலை குளியல் மண்ணுக்கு குளிர்ச்சி,
14,நல்லெண்ணெய்
மிதமான சூட்டில் சனிக்கிழையில் உடலில் தேய்த்து குளிக்கவும் அதிகாலை 4to6
சுடுதண்ணீரிலும் அல்லது 7to10 சுடுதண்ணீரில் குளிக்கவும் அன்று மதியம்
உறங்குதலோ அசைவ சாப்பாடோ கண்டிப்பாக கூடவே கூடாது
,15.கோடையில் வயிற்று
வலி கடுப்பு அதிக பேருக்கு வரும் விளக்கெண்ணெய்யை அடிவயிற்றில் தேய்த்து
வர வலி குறைந்து குளிர்ச்சியாக இருக்கும் வெந்தய தண்ணீரும் குடிக்கலாம்....
------எழுதியவர் "வேப்பமரம்"....
-----டிவிட்டர் ஹாண்டில் - @veppamaram ....
நல்ல செய்திகள். படித்தவர் எத்தணை பேர் பின்பற்றுவார்களோ தெரியவில்லை..
ReplyDelete@veppamaram மச்சி இந்த மாறி நிறைய டிப்ஸ் போடு. சூப்பர் உன் சேவை நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவை.
ReplyDeleteஆஹா.. இதை இப்போத்தான் பாக்குறேன்..
ReplyDeleteஉண்மையிலேயே பயனுள்ள தகவல்கள் மச்சி.. தொடர்ந்து எழுதணும்...