Monday, April 2, 2012

அம்பிகாபதி

முதலாம் குலோதுங்கனின் ஆணைக்கினங்க உறையூரில் கொலைகளம் கண்ட கணம் அம்பிகாபதியின் மன ஓட்டம்:








கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடுமாம்,
கவிசக்ரவத்தியிடம் கவி படித்தாலும் நான்
கவி பாட தொடங்கியது உன்னை கண்டுதான்...

அரசவை காணும் ஆவலில்
அரண்மனை வந்த நான்
அதிரூபசுந்தரி உன்னை கண்டேன்
அமரேசன் சபையிலிருந்து இறங்கியவளோ என
அதிசயித்து நிற்கையில்
அமராவதியென உன் பெயர் கூறிய தோழனை
அமரனாவாயென வாழ்த்தினேன்!

தங்க விதானத்தில் மன்னன்
தந்தையின் கவிகளை ரசித்து கொண்டிருக்கையில்
தனயன் உன்னழகை ரசித்தேன்!

ஓரக்கண்ணால்
ஓர் பார்வை பார்த்து 
ஓடி போனாய், உன் பின்னால்
ஓடி போனது என் மனது

உறையூர்
உறங்கிய பின்னும்
உறங்காமல்
உன் நினைவில்
உறைந்தேன்...

கலைமகள்
கருணையில்
கவியில்
கரை
கண்டேன்
கண்ணே,உன்னை
கண்ட
கணமே
கரம் பிடிக்க
கங்கணம் கொண்டேன்

காவிரியை
காதல் தூது அணுப்பினேன், நின்
காயம் பட்ட காற்றையும்
காபந்து செய்தேன்

அரைநொடி பார்வையில்
அனைவரையும்
அமரராக்கும் ரதியே,
அடி அமராவதியே...
அடியேனின் காதலை
அங்கீகரியென
அணுகணமும் தவம் கிடந்தேன்

பிரம்மனே படைத்து
பிரமித்துபோன நீ,
பித்தனின், உன் பக்தனின்
பிராத்தனை ஏற்று
பிரியம் கொண்டாய் என் மீது,
பிரியை,
பிரியா வரம் தந்தாய்!!

கபடமில்லா காதல் கொண்ட
கலைமளின்
கடை மகனின் வாழ்வில்,
கலைமகளுக்கு அந்தாதி புனைந்தவரால் 
கலகம்

(தொடரும்)

எழுதியவர் : S. சந்தோஷ்
ட்விட்டர் முகவரி : @_santhu

10 comments:

  1. அட..கவிதைத்தொடரா..?சூப்பர் மாப்பி..
    எனக்கு வாலியோட ராமானுஜ காவியம், அவதார புருஷன் எல்லாம் ஞாபகம் வருது.. அவர் போலவே வளர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. பரந்த மனசுனா உங்களுக்கு :) ”அவர் போலவே வளர வாழ்த்துக்கள்..” நன்றி :)

      Delete
  2. super..romba nalla irukku... thodarattum ungal kalai/thamizh sevai... :))) (@nilavinmagal)

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்காஆஆஆஆ.. :) :P

      Delete
  3. கவிதைதொடரா ?? நல்லா இருக்கு நல்லபடியா தொடருக....உரை நடை கவிதை எழுதும்போது எத்தனை பாகம் எழுத போறோம்னு மொதல்ல முடிவு பண்ணிக்க ... அதிகமா எழுதற மாதிரி இருந்த கொஞ்சம் பொறுமையா எழுதலாம்...இது வேகமா நகர்ற மாதிரியே இருக்கு அனேகமா நாலு அஞ்சு பாகத்துல முடிச்சிடுவ போல இருக்கு....வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமம்.. இன்னும் ரெண்டுக்கு மேல போகாதுன்னு நினைக்கிறேன்.. உங்கள் ஆதரவுக்கு நன்றி :)

      Delete
  4. Romba azhaga thuvangkiyirukinga.. Seekiram uyarntha idathula ungala parka aasai :-)) @sankari_varshuu

    ReplyDelete
    Replies
    1. உயர்ந்த இடத்துலனா???
      நன்றிகா.. :) :)

      Delete
  5. கலைமகளின் அரவணைப்பில் வளர்ந்த பிள்ளை போலும்!! ஒவ்வொரு வார்த்தையிலும் வாசம் செய்கிறாள்!! வான் தன் எல்லை நீங்கி தாங்குக உன் படைப்பினை !! பாராட்டத் தகுதியின்றி வாழ்த்துகிறேன் - Guru

    ReplyDelete