Wednesday, March 7, 2012

கட்டதொரையின் கண்ணீர் விளக்கம் - பராசக்தி பார்ட் 2


இந்த முட்டுச்சந்து விசித்திரம் நிறைந்த பல கீச்சுகளை சந்திந்து இருக்கிறது, பல வில்லங்கமான ஹேண்டில்களை சந்தித்து இருக்கிறது.
ஆகவே, இந்த ஒரு நாள் தடை ஒன்றும் விசித்திரமானதல்ல.சந்தின் போக்கினிலே சர்வ சாதரணமாக கடலை போட்டு கொண்டு போகும் கட்ட்தொரைதான் நான்.
சந்திலெ குழப்பம் விளைவித்தேன், பெண்களிடம் கடலை போட்டேன், சங்க பயமக்கள் மென்ஷனுக்கு ரிப்ளை தவிர்த்தேன், இப்படி எல்லாம் நான் குற்றம் சாட்டபட்டிருக்கிறேன்.
இதை எல்லாம் நான் ங்கொப்புரான இல்லை என்று மறுக்கப்போவது இல்லை நிச்சயமாக இல்லை.
சந்திலே குழப்பம் விளைவித்தேன்,
ஏன் சந்து நாசமாய் போகவா? இல்லை சந்தில் சாபமாய் திகழும் சில ஃபேக் ஐடிகளை கண்டுகொள்வதற்காக.
பெண்களிடம் கடலை போட்டேன், ஏன் கடலை போட்டு ஃபாலொயர் சேர்க்கவா, அல்ல பெண்களின் சைக்காலஜி புரிந்து அவர்களை சங்கத்தில் சேர்க்க.
ஆள் பிடிக்க சந்தின் பல மூலைக்கும் சென்று கடலை போட்டேன்..ஏன்.. கட்ட்தொரையின் புகழ் பரப்பவா, இல்லை சங்கத்தின் புகழ் பரப்ப..!
லண்டன் தங்கையிடம் குடும்ப பாடல் பாடினேன், ஏன் எனக்கு பாட தெரியும் என காட்டவா, இல்லை, யூகே டூர் போகும் போது அங்கு ஓசியில் தங்க..!
ஜென்னிடம் பல டவுட்டுகள் கேட்டேன், ஏன்..ஜென்னு ஒரு டீகடை பன்னு , என்பதற்காகவா..இல்லை கணிபொறி சந்தேகங்களை தீர்த்து கொள்வதற்காக.
ஷேக்கிடம் மென்ஷன் போட்டேன், ஏன்..ஆண்ட்ராய்டு அடியாளாய் மாறவா, நிச்சயம் இல்லை..28,000ரு வாங்கின ஆண்ட்ராய்டு உபயோகிக்க தெரியாமல்..!
ஐயர் மாமியிடம் ஐடியா கேட்டேன், ஏன்...சுக்லாம்பரதரம் கற்கவா, இல்லை புதினா துவையலும், பருப்பு துவையலும் செய்ய கற்பதற்க்கா.
சில காலெஜ் ஃபிகர்களிடம் கடலை போட்டேன், ஏன்..கட்ட்தொர கட்டுகுலையாமல் இருக்கிறார் என காட்டவா..நிச்சயம் இல்லை..புதிய தலைமுறை எண்ணங்களை படிக்க.
அவ்ளவு ஏன் சில காலேஜ் லெக்ட்ரகளிடமும் டாக்டர்களிடம் கடலை போட்டேன்...ஏன் கட்ட்தொர படிப்பாளி என காட்டவா, நிச்சயம் இல்லை, சந்தில் இருக்கும் சில விஷமிகளை பற்றி விழிப்புணர்வு கொண்டுவர.
கார்க்கியிடம் கடலை போட்டேன், ஏன் அவரின் ஃபாலொயரை கவரவா, நிச்சயம் இல்லை..அவரிடம் இருந்து அவர் மொக்கையை சுட்டு வபாவில் வருவதற்காக.
கிளு கிளுப்பான சில போட்டோக்களை நடு இரவில் உலவ விட்டேன்..ஏன் அதுதான் பொழப்பு என்பதற்கா, இல்லை, யாருக்கும் தூக்கம் வரகூடாது என்பதற்காக..
பல்டாக்டரிடம் பல மொக்கைகள் வாங்கினேன், போலி டாக்டரிடமும் பல என்கவுண்ட்டர் வாங்கினேன். இன்று சங்கத்து ஆட்களாலெயெ குற்றம் சாட்டபட்டு குற்றவாளி கூண்டில் நிற்கிறேன்...!
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள்.......சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்சூண்டு பேக்குல பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள தர்ம அடிகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். தட்டிகொடுக்கும் குட்டுகள் இல்லை என் பாதையில், அடிவையிற்றில் கும்மாங்குத்துக்கள் விழுந்துருக்கின்றன.
குட்டு ஃபிகர்களோடு டேட்டிங் போனதில்லை. ஆனால் அட்டு ஃபிகர்களோடு சாட்டிங் செய்திருக்கிறேன். கேளுங்கள் என் கதையை..!
கேளுங்கள் என் கதையை! சந்து பெரியோர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே தமிழின தலீவர் பிறந்த ஊரில் பிறந்தவன் நான். (காலகிரகம் அதானலே எனக்கும் படிப்பு ஏறவில்லை) , பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? அபுதாபி..! எண்னைவயல்கள் நிறைந்த நாடு..! அது வயிறை வளர்த்தது. என்னை கட்ட்தொரை ஆக்கியது.
ஃபேஸ்புக்கில் (படிக்கவும் பராசக்தி பார்ட்-1) படுகாயமுற்று..ட்விட்டருக்கு தவழ்ந்து வந்து சேர்ந்தென்..!
வாய் உடைந்து வாழ்விழந்த வந்த என்னை வா என்றது ரேணிகுண்டா கேங்..! கேங்க்லி பெயரோ..சிவா..மங்களகரமான பெயர்..ஆனால் கண்ணத்தில் குழி விழுந்த அளவுக்கு க்கூட கண்களில் கருணை இல்லை. வாயில் கர்சிப் பொத்தி தூக்கி போய் சந்தில் போட்டனர்.
சங்க குல வழக்க படி என்னை ரெண்டு நாள் வைத்து அடித்தனர். குளத்தில் துணிதுவைக்கும் படிகட்டு போல அசையாமல் அடி வாங்கியதால், மேலும் நாலு நாள் மு.சந்தில் வைத்து அடித்தனர். கைகுறையவே..வெளியில் இருந்து ஆட்கள் கொண்டு வந்து மொத்தினர். ஒரு சத்தம்..ஹிம்..ப்வர்ஸ்டார் பாடியை கொண்ட நான் அனைத்து அடியும் அமைதியாய் வாங்கினென்..ஏழாவது நாள், அது ஒரு மாலை நேர மழைக்காலம்..இவ்ளோ அடிக்கிறீங்களே..உங்களுக்க்கு கை வலிக்கலியா..பாவம்..எனகேட்டேன்....யுதத்தை கீழெ போட்டு என்னை கட்டி கொண்டார் லீடர் சிவா..எத்தனையோ ரப்பர் பாடி பாத்துருக்கேன்..உன்ன மாதிரி ப்ளாடினம் பாடிய இப்போதான் பார்க்கிறேன்..என் சூர்யா..நீ..என் தளபதிடா நீ..என்னை கேங்கில் சேர்த்தார்..! ஒரு வருஷம் அடி வாங்கி கிடைக்க கூடிய லீடருக்கு தலைமை அடியாள் பதவி எனக்கு கிடைத்த்து..!

கேங்கின் குடிதாங்கியா, சந்தின் அடிதாங்கியாய் மாறிபோனேன்..அடுத்த மொழிக்காரனிடமும் வம்பு இழுத்து அடிவாங்கும் என் தனி திறமையினால் , சங்கத்து ஆள் பிடிக்கும் வேலை எனக்கு கிடைத்த்து. சந்து முழுக்க சுற்றினேன். நைட்டு கண்ணு முழித்து சுற்றினேன். ஸ்டைலிஷ், முர்ரவுசா, சாந்து போன்ற பர்சானலிட்டி ஆடுகளை சுற்றி வளைத்தேன்..! கேங்லி ரொமான்சா மாறி போனதால் நாலு முறை கெடா வெட்டு தள்ளி போனது..! நான் என் கடமையை செய்தேன்..ஆனால் சங்கம் தன் கடமையை செய்ய மறந்த்து..
கவுரவ தலைவர் செந்தில்லுகு டிஎம் அனுப்பி சோப்பு போட்டு தன் கேங்லி பதவியை காத்து கொண்டார் லீடர்.
சந்தில் ஆள் பிடிப்பதால் குற்றவாளி ஆக்க பட்டேன்..விரட்ட பட்டேன்..ஓடினென்..ஓடினேன்..என் அக்கவுண்டை டிஆக்டிவேட் செய்ய
ஜாக்கு வீட்டுக்கு ஓடினேன்..அவர் வீட்டு செக்யுரிட்டி அலவ பன்னாததால் திரும்பி வந்துவிட்டேன்.
கட்டழகு கட்ட்தொரயை அடியாளாய் மாற்றியது யார் குற்றம். விதியின் குற்றமா..இல்லை வில்லங்கமாய் டி எம் குடுத்து என்னை வலையில் மாட்டி விட்ட வீணர்களின் குற்றமா?
கட்ட்தொர கடலை மட்டுமே போடுவார் , அவர் பெயரை கடலை தொர என மாற்றவேண்டும் என கொடி பிடித்து என் மானத்தை வாங்கியது யார் குற்றம். இந்த கட்ட்தொரையின் குற்றமா..இல்லை சங்க கயவாளிகளின் குற்றமா.?
நடு நிசியில் வரவைத்து நநிகியாக போட்டு அதை என் தலையில் போட்டு சந்தை பரங்கி மலை ஜோதியாக மாற்றியது யார் குற்றம். இந்த கட்ட்தொரையின் குற்றமா..இல்லை..இல்லை காலெஜ் கட் அடித்து அட்டு படம் பார்க்கும் வீணர்களின் குற்றமா..!!?
சங்க பெரியொரெ..முக்கியமாக இளம் பெண் கீச்சர்களே..எனக்கு ஒரு நியாயம் பெற்று தாருங்கள். திரும்பி போனால் ஃபேஸ்புக்கிலும் ஆட்டத்திற்க்கு சேர்த்து கொள்ள மாட்டார்கள். கூகிள் ப்ளஸ் ஒரு எழவும் புரியவில்லை.
நீதி வேண்டி நடு சந்தில் சந்தி சிரிக்கும் , கட்ட்தொர..!

42 comments:

  1. ஒரு வாரத்துக்கு சிரிச்சிட்டே இருக்க போறேன் ... நான் தான் ஐயர் மாமியா? : )) சூப்பர் ... செம ...

    ReplyDelete
  2. semma maamu... unakku neethi kandippa kedaikkum.. santhil oru puratchi uruvaagum... unakku naanga irukkom.. maamu

    ReplyDelete
  3. இத படிச்சுட்டு கண்கலங்கிருச்சு மாம்ஸ்... உன்னோட தியாகம் புரியம் இருந்துட்டோம் மாம்ஸ். உடனே பாலோ பண்றேன். கண்ணீருடன் கருப்பையா

    ReplyDelete
  4. ம்ம்ம்கும்!ரைட்டு வுடு!நம்ம வயசுல இதெல்லாம் சகஜம்!மறப்போம் மன்னிப்போம்!#என்னையும் அரசியல்வியாதி ஆக்கிப்புட்டாய்ங்களே!

    ReplyDelete
  5. கருப்பு எங்கிருந்தாலும் வந்து என்னை கட்டிபிடிக்கவும்..# ஆல் ஈஸ் வெல்..! கட்டதொர..!

    ReplyDelete
    Replies
    1. அடடே!கட்டதொர இவ்ளோ நல்லவரா தெரியாம 'அடையாள அன்பாலோ' பன்னிட்டனே!சரி மாம்ஸு வா கட்டிபுடிச்சிகுவோம்!வெற்றிகுறி போட்டுக்குவோம்!யெஸ்!யெஸ்!வெள்ளை கொடியும் ஆட்டியாச்சு..

      Delete
    2. அவ்வ். நீங்கதான் என்னோட மாம்ஸ்... :-))

      Delete
  6. கட்டதொர... எங்களையும் கண்ணிர் விட வெச்சுட்டீங்களே.. வாழ்க உங்கள் தியாகம்

    ReplyDelete
  7. யோவ்..அந்த மாதிரி ஒரு சோப்பு டி.எம் கெளரவத் தலைவருக்கு அனுப்புனதா நிரூபி..இப்ப உன்ன விடுவிச்சு தூசி அடஞ்ச லீடர் சீட்ல ஒக்கார வைக்கிறோம். இல்லாட்டி கைமாதான் மாமோய்!! அடுத்த ஒருவாரத்துக்கும் நீதான் கெடா இப்பபோட்டமஸ்!! ஓ.கே?? /பதிவு செம மாமு..:-)) சாரி ஃபார் த லேட் கமென்ட்!! -சிவா

    ReplyDelete
  8. மிக நன்றாக இருந்தது. மேலும் பல உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சந்தடி சாக்கில பல பேர கலாய்ச்சிட்டிங்கல்ல....நீர் ஒரு கில்லாடி ஓய்..:-) spontaneous ஆ இப்படி எழுதுறத பாக்க வியப்பா இருக்கு ...வாழ்த்துகள் !

    ReplyDelete
  10. மாபி உன் அருமை தெரியாமல் ஒரு நாள் அடையாள
    அன்ஃபாலோவ் பண்ணிடோம் .. மன்னிச்சு .. அண்ணா (அன் பாலோவ்) விரதம் போராட்டம் வாபஸ் வாங்கிக்குறேன் .. உடனே பாலோவ் பண்றேன்

    ReplyDelete
  11. அடடா.. சங்கத்தின் பெருமை காப்பாற்ற நிகரற்ற தியாகம் செய்த உம்மையா இந்த உலகம் கேலி பேசியது..

    அது இருக்கட்டும்.. உம்மை வைத்து ஒரு கொலை செய்தாலும் தப்பித்து வந்து விடலாம் என்பது தின்னம்.. அதுவே எனது எண்ணம்.. வாழ்க உமது கொற்றம்.. - catchvp

    ReplyDelete
  12. மாம்ஸ் இருந்தாலும் முதல் பாகம் அளவுக்கு இதுல நெம்ப ஒன்னும் அடி விழுகல !!!!

    கண்டினியூ யுவர் அடி வாங்கிங் ஆல்சோ கூட்டுசேத்திங் மீ - பை யுவர் குட்டிசாக்கு :)))

    ReplyDelete
  13. யோவ்வ்வ்வ்.... கடைசி வரைக்கும் ஏன் மென்ஷனுக்கு ரிப்ளை போடலைங்கற மேட்டர சொல்லாம ஏதேதோ சுத்தி வளைச்சாலும் சுவாரசியமா வளைக்கர பாத்தியா.. நீ டமிழின தலீவரு சொந்த ஊர்க்காரன்னு நிருபிச்சிட்டே மாம்ஸு..

    ReplyDelete
  14. இவரு எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறாரு இவரு ரொம்ப நல்லவரு..(ஏன் தல இப்பிடி அழ வுட்டீங்க)

    ReplyDelete
  15. இந்த மாதிரி அட்டகாசமான நகைச்சுவை பதிவை படித்ததே இல்லை. மிக அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. குணா சொல்லுர மாதிரி எதுக்கு நீ ரிப்ளை பண்ணரிதில்லைனு கடைசிவரை சொல்வேயில்லை...லீடரை பற்றி பல உண்மைகள் வெளி வந்திருக்கிறது.. இதற்கு லீடரின் பதில் என்ன?,?

    ReplyDelete
  17. இப்புடி வாங்கியும் எப்புடி ஒண்ணுமே நடக்காத மாதிரி மெயின் டைன் பண்றீங்க? ஹி.ஹி::))அந்த ரகசியம் ப்ளீஸ்?

    ReplyDelete
  18. மிக நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. Thaaru maaru .. haloooooooooooo maamu gunaa kelvikku enna pathil .. naanga vida maatoam

    ReplyDelete
  20. @Kattathora,

    சிரிக்க முடியல... வயித்து வலிக்கு டாக்டர்கிட்ட போகனும்.. ஒழுங்கா காசு அனுப்புங்க... ஏன்யா இப்படியெல்லாம் செய்யறீங்க...

    ReplyDelete
  21. இதுவரை நாங்கள் சங்க(ட)த்தில் இருக்கிறோம்!இதற்க்கு உமது பதிலென்ன?பதில வரலைனா அந்த பராசக்த்தியே உணக்கு கூலி கொடுப்பா!

    ReplyDelete
  22. //கட்ட்தொர கடலை மட்டுமே போடுவார் , அவர் பெயரை கடலை தொர என மாற்றவேண்டும் என கொடி பிடித்து என் மானத்தை வாங்கியது யார் குற்றம். //

    தெரியாம சொல்லிட்டேன்.. மன்னிச்சூ!

    உங்க தியாகத்த என்னைக்கும் இந்த சந்து மறக்காது! சந்தின் சந்தோசத்திற்காக (?!) கடலைய தொடரவும்!

    -@Saathaaranan

    ReplyDelete
  23. கட்டதொரை ரசிகனாக இதுவும் கலக்கல்ஸ் :))))) சிரிச்சிட்டே இருக்கேன். என்னையும் ரேணிகுண்டா பாய்ஸ் கேங்ல சேர்த்துக்குவீங்களா ? :)))

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா செலவு.. உங்களுக்கு இல்லாததா..???
      ஆனா சேர்றதுக்கு முன்னாடி ஒரு என்ட்ரன்ஸ் டெஸ்ட்'ல பாஸ் பண்ணனும்..
      நம்ம பலியாடு கட்டதொரை'ய ஒரு ஒருவாரம் ஊறப்போட்டு அடிக்கணும்.. சத்தம் வெளீல வரக்கூடாது.. ஒடம்புல காயமும் இருக்கக்கூடாது.. பூரா ஊமைக்குத்தா இருக்கோணும்.. இதான் டெஸ்ட்டு.. டீலா..நோ..டீலா.??

      Delete
  24. யோவ்வ் கட்டதொர மாமு., நான் நேத்திக்கு நைட்டே கேட்ட டீ இன்னும் வரல :-(((

    ReplyDelete
  25. // நம்ம பலியாடு கட்டதொரை'ய ஒரு ஒருவாரம் ஊறப்போட்டு அடிக்கணும்.. சத்தம் வெளீல வரக்கூடாது.. ஒடம்புல காயமும் இருக்கக்கூடாது.. //

    எனக்கு வன்முறை பிடிக்காதே ? என்ன மாதிரி நல்லவங்களுக்கு வேற டெஸ்ட் எதுவும் இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்.. வன்முறை புடிக்காதா..? அப்போ சாத்வீகத்துல ஒன்னு..
      நம்ம கட்டதொரைய ஒரு ரூமுக்குள்ளாற அடிச்சி வெச்சி நாலுமணி நேரத்துல நானூத்தம்பது #SelvuEffect சொல்லணும்..

      Delete
  26. Fantasti,.enna oru arumaiyaana padaippu, nalla humour ulla aaluyaa neenka.simply superp!!!

    ReplyDelete
  27. யோவ்..மென்சனுக்கு ரிப்ளை போடாதததுக்கு பதில சொல்லுயானா..சம்பந்த சம்பந்தமில்லாம ஒளறிருக்க?? / ஆனா செம மாமு.. 1000 வி.வி.சி ;-) - சிவா

    ReplyDelete
  28. சங்கத்துக்கு ஆள் புடிக்கிற அவசரத்துல மென்ஷன் விட்டு போய்ருக்க்கும்யா..மென்ஷன்..உடனே ரிப்ளை பன்ண.பயமக்கள் என்ன ரிச்சா பல்லூட்டா..விடுங்கய்யா..! கட்டதொர..!

    ReplyDelete
  29. கட்டதுரை மாம்ஸ் கடைசிவரைக்கு அபுதாபி அட்ரஸ் சொல்லலையே.. விடுங்க.. ஆனாலும் லீடரு இப்பல்லாம் ரொம்ப நாளா ரொமான்ஸில்யே திரியிறாப்பில முறுக்கு விட்டு போச்சு இதை விசாரியுங்க முதல்ல

    ReplyDelete
  30. தாய்மனம்March 10, 2012 at 8:43 PM

    நல்லா வருது உங்களுக்கு நகைச்சுவை # அது இதுவரை ஒரு மிமிக்கிரி லெவலுக்கு தான் இருக்கு # சொந்தமா நகைச்சுவை எழுத முடியும் உங்களால் # ஆரம்பியுங்க தானே வரும்

    ReplyDelete
  31. கலக்கிட்டப்பா.... நல்லா சிரிச்சேன்... 95 கிலோ வெயிட்டுல இருந்துகிட்டு “கட்டழகு கட்ட தொரயாமுல்ல”...! டூ மச்சுய்யா...!

    ReplyDelete
  32. 'வாய் உடைந்து வாழ்விழந்த வந்த என்னை வா என்றது ரேணிகுண்டா கேங்..! கேங்க்லி' - மச்சி செம டைமிங் ..

    ReplyDelete
  33. kittathatta en nilamaiyum ithey thaan.enakkum serthu neethi kodungappa

    ReplyDelete
  34. தெய்வமே நீ யாருன்னு தெரியாம இந்த பய மக்கா சந்துல திறிஞ்சிட்டு இருந்தேன் உன் கால குடு தெய்வமே என் பரம்பரையே உனக்கு கோவில் கட்டி கடாவெட்டி கும்புடும் உன்ன எம்புட்டு அடி அடிச்சிருக்காங்க வாசிச்ச எனக்கே கண்ல தன்னி வருதுய்யா எப்படிய்யா நீ தாங்குன என் தெய்வமே உன் தியாகத்த இந்த சந்து மறந்தாலும் வரலாறு பேசுமய்யா .. நீர் வாழ்க உன் குலம் வாழ்க வாழ்க வாழ்க இ்னிமே நடக்கப்போற வேடிக்கைய மட்டும் பாருங்க .. இப்படிக்கு சந்துல சவுண்டு

    ReplyDelete