ஒலக வரலாற்றில் முதல் முறையாக சூப்பர் மார்கெட்டுக்கு வந்து சில மாதங்களே ஆன மேகியை வாங்கிட்டு ரூமுக்கு வந்தேன்.. ஒரு வாரம் மேக்கி அப்டியே வச்சுட்டேன் .மேக்கியோட மைன்ட் வாய்ச நல்லாஆஆவே புரிஞ்சிக்கிட்டேன் கொய்யாலே நான் பாட்டு சூப்பர் மார்கெட்ல சைட் அடிச்சிகிட்டு சூப்பரா இருந்தேன் என்ன வாங்கி அப்டியே வச்சுருக்கானே நீயெல்லாம் நல்லா வருவேடா நல்லா வருவேடான்னு பொலம்பிகிட்டு இருந்துச்சு .. எனக்கு சமைக்க தெரியாதுன்னு அதுக்கு எப்டி தெரியும்.. பாவம் அது என்ன இன்ஜினியரிங் படிச்சிருக்கா இல்லை எம்பி எம்பி எம்.பி.பி.எஸ் படிச்சிருக்கா. .. சரி சம்பவத்துக்கு வரேன்
மனதை ஒரு முகம் படுத்திட்டு. டே குண்டுபல்பு நீ சாதிக்க பொறந்தவன்டா .. த்ரிஷா உனக்கு தாண்டான்னு மனசை தேத்திக்கிட்டு மேக்கி மற்றும் அவ்வோ சொந்த காரங்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கிச்சனுக்கு போனேன்.. அங்கே குக்கர் விசிலடிச்சு என்ன பார்த்து கிகிகிகிகின்னு சிரிச்சிச்சு ... மச்சி இங்கே பாரேன் இங்கே பாரேன்னு கலாய்ச்சிச்சு .... மூஞ்சியே அப்டியே வெரப்பா வச்சுக்கிட்டு சமைக்க தயாரானேன் ..
தண்ணி எவ்வளவு ஊத்தனும்ன்னு டவுட்டு வந்துடுச்சு .. நாலு கிளாஸ் ஊத்தனும்ன்னு சொன்னாரு என் ரூம்மேட் ..சரி கிச்சென்ல தேடுனேன் தேடுனேன் கிச்சென் எல்லை வரை தேடுனேன்.. கிளாஸ காணோம் கடல்ல்லயே இல்லையாம் .. வேற வழி இல்லை .. தேவையான அளவுன்னு நானா ஒரு முடிவு எடுத்து ஊத்திட்டேன் ..
மேக்கி எல்லாத்தையும் ஒடச்சி , மசாலா எல்லாத்தையும் போட்டு நிரப்பிட்டேன் பாத்திரத்தில் .. அப்புறம் தான் தெரிஞ்சுச்சு நான் அதிகமா தண்ணி ஊத்திருக்கேன்னு .. மேக்கி அண்ட் கோ எல்லாரும் தண்ணில ஸ்விம்மிங் போயிகிட்டு இருந்துச்சு .. மறுபடியும் குக்கர் விசிலடிச்சு கலாய்ச்சிச்சு ,, கரண்டி கிகிகிகி ன்னு சிரிச்சுச்சு.. மறுபடியும் மனசை ஒருமுகம் படுத்தினேன்.. நீ சாத்திக்க பொறந்தவன்டா .. உன்னால முடியாதது உலகத்துல எவனாலயும் முடியாது.. எவனாலயும் முடியாதது உன்னால முடியும்டா த்ரிஷா உனக்கு தான் டான்னு மனசை தாறுமாறா தேத்தினேன்..
கரண்டி ஒரு ப்ளேட் ரெண்டு ஆயுதத்தையும் எடுத்தேன் .. பாத்திரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா தண்ணியை எடுத்து எடுத்து ப்ளேட்ல ஊத்தினேன்.. நீச்சல் அடிச்சிக்கிட்ட இருந்த மேக்கி அண்ட கோ என் கட்டுப்பாட்டுக்கு வந்துக்கிட்டு இருந்துச்சு .. எல்லா தண்ணியையும் ப்ளேட்டுக்கு ஸ்பூன்டூத் மூலமா ட்ரேன்ஸ்பர் பண்ணிக்கிட்டு இருந்தேன் .. தண்ணி சென்டிங் சக்சஸ்ஃபுல்லி ன்னு வந்துச்சு .. மேக்கியும் ரெடி ஆயிடுச்சு .. சமைக்கும் போது போர் அடிக்கவே இல்லை ...
ஆகவே நீங்க மேக்கி சமைக்கும் போது அதிகமா தண்ணி ஊத்துங்க.. போர் அடிக்கவே செய்யாது ... சாப்டு முடிச்சிட்டு இந்த ஸ்டேடஸும் போட்டாச்சு
MORAL: எந்த சாப்பாட்டையும் குறை சொல்லக்கூடாதுன்னு நல்லாஆஆஆவே தெரிஞ்சுக்கிட்டேன் . ;))
சமையல் செய்முறை - கத்தாரிலிருந்து குண்டுபல்பு
ட்விட்டர் ஐடி: @gundubulb
அடடே மச்சி இதுக்கப்புரம் சுடுதண்ணி வைப்பது எப்படின்னு ஒரு பிலாகு எதிர்ப்பார்க்கிறேன்!::P
ReplyDeleteஹிஹ்ஹாஹ் உங்கள் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்க் கொள்ள படுகிறது ..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசீக்கிரம் முழு கோழி தின்னதை பத்தின பதிவை எதிர்பாக்குறேன்!!! தீயா வேல செய்யனும் குண்டு பல்பு!!
ReplyDeleteஅவ்வவ் கண்டிப்பா மச்சி ... முழு கோழியால் ஒரு வரலாற்று சாதனையாளன் எப்டி உருவாகிறான் .. அவன் வாழ்கையில் எப்டி முன்னேரிகிறான் .. விரைவில் வரலாம் .. எதிர்ப்பாருங்கள் மக்களே ஹிஹிஹ்ஹா
Deleteஹாஹாஹா ரணகளம் ....
ReplyDeleteநன்றி ஹை !!!!
Deleteஅப்ப.. பில்லா 2 மாதிரி Prequel வேறயா... நடத்து மச்சி..
ReplyDeleteஹிஹ்ஹாஹ் .. பார்ட்2 பார்ட்3ன்னு போயிக்கிட்டே இருக்கும் :)))))
Deleteகிழி..கிழி.. சும்மா கிண்டு கிண்டுன்னு கிண்டிட்டே..மேகியை ;-)))
ReplyDeleteகடைசி வரைக்கும் இந்த போஸ்ட்டு எப்டி இருக்குன்னு சொல்லவே இல்லையே மாபி
DeleteBTW, நீ கிண்டுன மேகியை சாப்ட்டு ஏற்ப்பட்டு உயிரிழப்புகள் எத்தனை...வயிற்றுப்போக்குகள் எத்தனை...வாந்திதிகள்..பேதிகள் எத்தனைன்னு சொல்வே இல்லியே மாப்பி ;-)))
ReplyDeleteசமைச்சு நான் மட்டும் தான் சாப்டேன் .. இப்ப வரை உயிரோடதான் இருக்கேன் .. எந்த பின் விளைவுகளும் இல்லை .. சோ மை சமையல் இஸ் ஓனே ஆப் தி பெஸ்ட் சமையல் இன் தி வேர்ல்ட். எங்களுக்கு வேற எந்த கிளைகளும் கிடையாது :))))
Deleteஅவ்வ்வ்வ்.. எதுக்கும் பதினெட்டு நாளைக்கு ஃபுல் மெடிகல் அப்சர்வேஷன்'லேயே இருக்கணும் மாப்பி.. எப்போ வேணாலும் அது உன்னை தாக்கும்..
Deleteதுபாய்'லேர்ந்து எனக்கு வாங்கிட்டு வர்றேன்னு சொன்ன சென்ட்டு பாட்டில் என் கைக்கு வர்ற வரைக்குமாவது உயிரோடு இருக்கோணும் நீ ;-)))
அடங்க்கொனியாஆஆஆஆஆஆ வாயில அடி வாயில அடி வாயில அடி வாயில அடி :)) # கொய்யால இதுக்கு டபுள் மீனிங்ல ரிப்ளை பண்ணால் கொன்னே புடுவேன் :)))
Deleteகககபோ ;-)))
Delete// எந்த சாப்பாட்டையும் குறை சொல்லக்கூடாதுன்னு நல்லாஆஆஆவே தெரிஞ்சுக்கிட்டேன் // நீ சமைச்சத தானே சொல்ற??? ஆனா நெஜமாவே ரொம்ப உபயோகமான் பதிவு, உன் மகத்தான சேவை நாட்டுக்கு தொடர்ந்து தேவை!
ReplyDelete(அதுக்குன்னு அடுத்த பேக்கட் மேகி செஞ்சிட்டு பதிவு போடத) விசில் அடிச்ச குக்கர் பத்தி ஒரு பதிவு போடு மாப்பி!
நாட் ஒன்லி மை ஃபுட் எந்த சாப்பாட்டையும் குறை சொல்லக்கூடாதுன்னு சொல்ல வந்தேன் மச்சி .. அடுத்த பதிவும் என் அனுபவுத்துல இருந்தே சொல்லுவேன் .. கதை ரெடி .. திரைக்கதை வேலை இன்னும் ஸ்டார்ட் பண்ணல ஹி ஹி :))
Deleteகதையோட மையக் கரு செம டச்சிங் .,அப்படியே மணிரத்னத்தோட உயிரே பாத்தது மாதிரி இருந்துது?! நீ மென்மேலும் எழுத என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் --@talapuli
ReplyDeleteகதையோட மையக் கரு செம டச்சிங் .,அப்படியே மணிரத்னத்தோட உயிரே பாத்தது மாதிரி இருந்துது?! நீ மென்மேலும் எழுத என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி மச்சி இது எனக்கு மிக பெரிய பாராட்டு #ஏய்ய்ய்யய் என்ன வச்சு காமடி கீமெடி பண்ணலியே
Deleteமச்சி உனக்குள்ள இப்படி ஒரு திறமை இருப்பது எனக்கு தெரியும் .. வாழ்த்துக்கள்
ReplyDeleteபேஃட்டு பேஃட்டு பேஃட்டு பேஃட்டு பேஃட்டு பேஃட்டு நண்பேன்டா :))))))
Deleteகடைசி வரைக்கும் மேகி சாப்ட எப்படி இருந்துச்சுனு சொல்லவே இல்லையே .உங்கள் நகைச்சுவை உணர்வு அருமை.சுடு தண்ணீர் வைத்த அனுபவும் பால் காய்ச்சிய அனுபவம் என்று இன்னும் நிறைய எதிர் பார்கிறேன்
ReplyDeleteமேக்கி என்ன ஒரு அருமையான சாப்பாடு .. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க .. எந்த சாப்பாடையும் குறை சொல்ல கூடாதுன்னு முன்னாடியே சொல்லிட்டேன் ஹிஹ்ஹாஹ்
Deleteஒரு மேகியை சமைச்சிட்டு இவ்வளவு அலப்பறை - இன்னுமெங்களை மாதிரி எல்லாம் சமையல் செய்தால் .... இந்த இணையம் தாங்காதுடா சாமி ... : ))) நல்ல பதிவு ... அடுத்து veg bread sandwich ட்ரை பண்ணவும் : )) @ஸ்வீட்சுதா
ReplyDeleteகுறை குடம் கூத்தாடும் என்பது மறுபடியும் நிறுபிக்கப்பட்டது என் போஸ்ட்டின் மூலம் ... நான் நல்லா சமைச்சால் இந்த போஸ்டே போட்டுரிக்க மாட்டேன் ஹிஹி ஓகே முயற்சி செய்கிறேன் .. உங்கள் கோரிக்கை பரிசீலனை செய்யப்படலாம் ஹி ஹி
Delete//நீங்க மேக்கி சமைக்கும் போது அதிகமா தண்ணி ஊத்துங்க.. போர் அடிக்கவே செய்யாது ...// கட்சில மேகிட்டையும் பல்பு வாங்கிட்டியே மாமு, தொடரட்டும் உன்சமையல் :)) அடுத்தது ராஜனிடம் கேட்டு தோசைசுடுவது எவ்வாறு என்று விபரமாக எழுதவும் @suganthanp
ReplyDeleteஅட ஆமால்ல!! விட்றா விட்றா நான் வாங்காத பல்பா .. அவ்வ இனிமே ரேணிகுண்டா ல சமையல் பொறுப்பு என் பொறுப்பு ஹி ஹி.;))
Deleteமச்சி. நீ அதை சாப்பிட்ட பிறகு நடந்ததை சொல்லவே இல்ல?
ReplyDeleteஅது இராணுவ ரகசியம் மச்சி ஹி ஹி
Deletepost is super and sema comedy, y dont u attach panjsathandhiram magie ramya krishnan foto?
ReplyDeleteநன்றி தல இதுக்கு தான் உங்கள மாறி ஒரு ஆள் வேணும்ங்கிறது .. இப்ப அந்த ஃபோட்டோ ஆட் பண்ண முடியுமா .. பண்ணா கமெண்ட்ஸ் லாம் போயிடுமோ?
Deleteநல்ல முயற்சி பல்பு, நீங்க, நல்லா வருவீங்க.!!!! ;))) அப்புறம் அது 'நீ சாத்திக்க பொறந்தவன்டா" இல்ல, சாதிக்க பொறந்தவன்.. இருந்தாலும் நீங்க சொன்னதே உங்களுக்கு பொருத்தம் தம்பி ;)) மறுபடியும் சொல்றேன், நீங்க, நல்லா வருவீங்க.! ராஸ்கல், விட்டா உச்சா போறதுக்கெல்லாம் பதிவு எழுதுவீங்கடா ;))))))) - THOATTA
ReplyDeleteஎழுத்து பிழைகள் எல்லாம் பிசினஸ் ட்ரிக் மச்சி .. ஹிஹ்ஹாஹ் .. அனுபவிக்கனும் இப்டி ஆராயப்பிடாது எப்டியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு
Deleteமச்சி "கலக்கிட்ட" பதிவுகள் தொடர்ந்து எதிர்பார்க்குறேன்... புதுப்புது டாபிக்கோட..எழுத்துப்பிழைகள் காமடிக்குனு நம்புறேன் :)
ReplyDeleteநண்பேன் டா என்ன பத்தி நல்லாவே புரிஞ்சிக்கிற .. தோட்ட அண்ணனுக்கு சொல்லு மச்சி ;))))
Deleteபல்பு மச்சி பதிவு சூப்பர் :) "சொசைட்டியா? அந்த ப்ளேட் எங்க கிடைக்கும்"னு கேக்குற அளவுக்கு உனக்கு சமையல் முன்னனுபவம் இருக்குறது புரியுது ;)) அந்த ஸ்பூன்டூத் டெக்னாலஜி சூப்பர் :) மனித இனம் அதை குறிச்சு ஆராய்ச்சியில இறங்கணும் ;)) மேலும் அடுத்த இதுபோன்று பல உபயோகமான (?!) பதிவை எழுதணும் ;)) வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஹிஹ்ஹாஹ் நன்றி நன்றி என்னடா யாருமே அந்த "ஸ்பூன்டூத்" டெக்னாலாஜி பற்றி பேசவே இல்லைன்னு மனசுல ஒரு வீடு கட்டி.. அந்த வீட்டு கூரை மேல உக்காந்து இதயத்தை பாத்துக்கிட்டே அழுதேன் .. நீ கேட்டுட்ட மச்சி .. நண்பேன் டா.. த்ரிஷா உனக்கு கண்டிப்பா கிடப்பா டா
ReplyDelete