Sunday, May 13, 2012

என்னை தொலைத்த நான்


#TNMegaTweetUp ல் நான் (கருப்பையா) வாசித்த கவிதையெனும் கட்டுரை. உங்கள் பார்வைக்காக. 

ஒரிரு நாட்களாய் என்னை

கடந்து செல்லும் அனைவரின்
நடவடிக்கையிலும்
சிற்சில மாற்றங்கள்
காண்கிறேன் நான்

என் வீட்டின் கதவு திறந்ததும்
எதிர்வீட்டின் கதவு
தயக்கத்தோடு அடைக்கப்பட்டது

அலைபேசியில்... வராத அழைப்பிடம்
பேசுவதாக பாசாங்கு செய்தபடியே
என்னை பதட்டத்தோடு கடக்கிறார்
பக்கத்து ஃப்ளாட் "ரகு" அண்ணா

தொலைவில் இருந்தால்
முத்தத்தை பறக்கவிட்டும்
அருகிலிருப்பின்
காதோரம் "இச்" என்ற
சத்தத்தோடும்
முத்தம் தரும் "வித்யா குட்டி"
என் எதிர்வந்தும்
அவள் தாயின் இறுகப்பற்றிய
அரவணைப்போடே
ஏற்றப்படுகிறாள்
பள்ளி வண்டியில்

சமீப காலமாய்
புன்னகையும் வெட்கமும் கலந்து
காதல் பார்வை வீசிய
எதிர்வீட்டு குமரியை
காணவே முடிவதில்லை

என் முன்னே பேச்சை மறந்து
பின் சென்றதும் குசுகுசுப்போடு
பேசும் சிலரின் சத்தமும்
காதில் கேட்டது

கார்த்திக் என்ற என் பெயரை
"காத்திக் சாப்" என
மொழிமாற்றம் செய்து
விளிக்கும் கூர்க்காகூட
"நமஸ்தே"வை மறந்துவிட்டு
ஏளனப் பார்வை ஏந்தி
என்னை எளிதாய்
கடந்து சென்றான்

இப்படியாக கடந்து செல்லும் அனைவரின்
நடவடிக்கையிலும்
சிற்சில மாற்றங்கள்
காண்கிறேன் நான்

ரயில்நிலையம்போல்
எப்போதும் சலசலத்திருக்கும்
கையேந்திபவனும்
எனை கண்டதும்
சலசலப்பு அடங்கி
மயான நிசப்தத்தை
தற்காலிகமாய் கடன்
வாங்கியிருந்தது

குழப்பத்தினூடே அலுவலகம்
சென்று அலுவல் முடிந்து
மாலை மீண்டும் விரைந்தேன்
என் குடியிருப்பை நோக்கி

நான் சென்றுசேர்ந்ததும்
வந்து சேர்ந்தது
"குடியிருப்பு செயலாளரின்" அழைப்பு

என் வணக்கத்தோடும்
அவர் வரவழைத்திருந்த தேநீரோடும்
இனிதாய் ஆரம்பித்தது
எங்களின் சந்திப்பு

(பேச்சில் தேர்ந்த அவர்
சந்திப்பு ஆரம்பித்த கணம்தொட்டே
என் தலையின் மேல்
ஆணியை வைத்து அடிக்கத்
தொடங்கியிருந்தார்)

இனிதாய் ஆரம்பித்த எங்களின் சந்திப்பு
"உங்க ஃப்ளாட் ஓனர்கிட்ட பேசிட்டேன்.
எப்ப ஃப்ளாட்டை காலி செய்கிறீர்கள்?"
என்ற அவரின் கேள்வியோடு
முடிவுக்கு வந்தது

ஏன் இத்தனை மாற்றங்கள்
என்ற காரணம்
சற்று தாமதமாகவே
தெரிய வந்தது

தெரியவந்த கணம் அதிர்ந்தேவிட்டேன்

அண்மையில் பெய்த அடைமழையில்
கிராமத்து நினைவில் நான்
குதித்து நனைந்ததை
கண்ட சிலபேர்
என் மனநிலை குறித்து
எழுப்பிய சந்தேகங்களே
அனைத்தின் காரணமென்று
தெரியவந்தது

ஆம் எனக்கு "சைக்கோ"
என்று பெயரும்
வைத்திருந்திருக்கிறார்கள்

நான்கு சுவற்றுக்குள் "ஷவரின்" கீழ்
குளிப்பதென்பது மழைக்குளியல் அல்ல என்பதை
எப்படி புரியவைப்பதென தெரியவில்லை
நகரத்து மக்களுக்கு

மழைநீர் சேகரிப்பு தொட்டியில்
சேகரிப்பதென்றும்
மறுநாள் காலையில்
சாலைநிரம்பி போக்குவரத்து
நெரிசலாகும் என்ற அளவுக்கே
மழையை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்
நகரத்து மக்கள்

மழை குறித்த தவறான புரிதலை
எண்ணி கொட்டித்தீர்க்கிறது
மேகமும் மழையாய்...

யாரேனும் சொல்லுங்கள்
மழையில் நனைவதென்பது
அத்தனை பெரிய
குற்றமா நகரத்தில்???

பெயர் : T. கருப்பையா
ட்விட்டர் ஐடி - @iKaruppiah

25 comments:

  1. யோவ்... மிக அருமை..
    படிக்கும் போதே அசரீரியாய் யாரோ சொல்வதுபோல் உணர்ந்தேன்.
    ஏதோ ஒரு தவிப்பு எனக்குள்..
    அது ட்வீடஅப்பை விட்டதற்கா... இல்லை..
    மழையை விட்டதற்கா எனத்தெரியவில்லை...

    நன்று..

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ். அடுத்தமுறை ட்வீட் அப் & மழை இரண்டையும் தவறவிடாதீர்கள். :-)

      Delete
  2. சூப்பர் மச்சி!!! இப்போதான் உருப்படியா ரசிக்கும்படியா எழுதியிருக்க, ட்விட்டர்ல கவுஜை என்கிற பேரில் எல்லாரையும் கழுத்தறுக்காம இந்த மாதிரி பெருசா ஏதாவது எழுது மச்சி :-))) இப்படிக்கு அன்பு நண்பன் சனியன் சகட.. #நல்லா வருவ மச்சி நல்ல்லா வருவ...

    ReplyDelete
  3. கலக்கல் கவிதை மச்சி...கிராமத்து இளைஞனின் இயல்பான எதிர்பார்ப்பை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறாய்... # வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  4. அருமை.,மென்மேலும் கிறுக்க ஆவண செய்வாயாக...

    ReplyDelete
  5. அருமை.,மென்மேலும் கிறுக்க ஆவண செய்வாயாக...

    ReplyDelete
  6. ஏற்கனவே நேர்லயும், போன்லையும் பலமுறை சொன்னதுதான்.. இப்போ சபைலையும் சொல்றேன்..
    கலக்கல்.. சீக்கிரம் போஸ்ட்பாக்ஸ் கவிதையும் தயார்பண்ணி ரிலீஸ் பண்ணு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாம்ஸ். எல்லாம் நீங்களும் செந்தில் "அண்ணன்கள்" கொடுத்த ஊக்கமும்தான் காரணம். பட்டை தீட்டி அந்த கவிதையையும் போஸ்ட் பண்ணிடறேன். :-)

      Delete
  7. அழகு, தொடர்ந்து எழுதுங்க சகா.

    ReplyDelete
  8. Perumaiyaa irukku karuppu!
    ivlo naalu unnai kindal panninatha ninaichaa sangadamaa irukku kavingare :))
    adikkadi niraiyaa eluthu :))

    by
    @snj_no1

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்... நன்றி மச்சி. உங்க கிண்டலும் உற்சாகமும்தான் என்ன எழுதவே வைக்குது. :-)

      Delete
  9. நீயெல்லாம் நல்லா வருவடா மச்சி...ஹி ஹி..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா... நன்றி மச்சி. :-)

      Delete
  10. அருமை ரசனை எனை மிகவும் கவர்ந்தது வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  11. கருப்பு உன் எழுத்து நெருப்பு.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. miga arumai...... en vaazvin iniya tharunangalai ninaivupaduthee vittergal.... mikka nandri........

    ReplyDelete
    Replies
    1. ஆஹா இதுவே என் கவிதைக்கு கிடைத்த வெற்றி. நன்றி தல. :-)

      Delete
  13. கருப்பு. . . மச்சி உன் கவுஜ நெருப்பு. நீ கலக்கு :)

    ReplyDelete