Wednesday, May 16, 2012

வொய் திஸ் கொலவெறி ஜெ.???




டாக்டர் .... மாண்புமிகு.... புரட்சிதலைவி... இதயதெய்வம்... முதல்வர்... அம்மா...

இப்படி தான் அமைச்சர் பெருமக்கள் பேசவேண்டும் என சட்டம் போலும்.. 23ம் புலிகேசி படத்தில் வருவது போல ஒரு பட்டத்தையும் விடாமல் பேசிதான் தங்கள் உரையையே ஆரம்பிக்கிறார்கள்....

அதிமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் இந்த ஆட்சி சாதித்தது என்ன? பார்ப்போம் ...

கடந்த திமுக ஆட்சியில்  மின்வெட்டு, நிலமோசடி, குடும்ப ஆதிக்கம் என பல பிரச்சனைகளால் நொந்து போன மக்கள், வழக்கம் போல சுழற்சி அடிப்படையில் அதிமுகவை அமோக ஆதரவுடன் வெற்றி பெற வைத்தனர். திமுக-வை விட அதிமுக அதிக இலவசங்களை தருவதாக வாக்குறுதி கொடுத்ததும் வெற்றிக்கு பாதையாக அமைந்தது.

ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கம் போல கடந்த ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் மாற்றப்பட்டன. பல கோடி ரூபாய் செலவில் உருவான புதிய சட்டசபையை விட்டுவிட்டு பழைய சட்டசபையில் வாஸ்து பிரகாரம் குடி பெயர்ந்தார்... சமச்சீர் கல்வி ரத்து என நடந்த குளறுபடிகளை யாராலும்
மறக்க முடியாது. மாணவர்களின் கல்வியுடன் ஒரு மாதமாக விளையாடினார், கடைசியில் நீதிமன்றம் தலையிட்டு குட்டு வைத்தது.

அண்ணா நூலகத்தை மாற்றுகிறேன் என மறுபடியும் தவறான முடிவை எடுத்தார். மீண்டும் நீதிமன்றம் குறுக்கிட்டது... இந்த நூலகம் மாற்றும் விசயத்தில் அனைத்து தரப்பினரும் ஒரு சேர குரல் கொடுத்ததும் முட்டுக்கட்டை போட்டது.

எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் ஈழ ஆதரவாளர்களை கண்டாலே ஒவ்வாது ஜெ.வுக்கு. ஆனால் இந்த தடவை சிறு மாற்றம் தெரிகிறது. நல்லதும் செய்யவில்லை, கெட்டதும் செய்யவில்லை ஈழ பிரச்சனையில். அதே போல் தான் கூடங்குளம் பிரச்சனையிலும்...  மக்கள் நல பணியாளர்களை டிஸ்மிஸ்    செய்தது அனைவரையும் கோபமடைய செய்தாலும், அதனால் அரசுக்கு லாபமே... ஆனால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதை முதல்வர் கவனிக்கவில்லை போலும்...

நிலமோசடி வழக்கில் பலர் வேகமாக கைதானாலும், அதே வேகத்தில் வெளியே வருகிறார்கள். இதனால் மக்களுக்கு என்ன லாபம் ???

ஜெ.- சசிகலா பிரிவு, சொத்து குவிப்பு வழக்கிற்காக நடத்தப்பட்ட நாடகமே என பலர் சொன்னாலும், அதனால் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம்
குறைந்திருப்பது மகிழ்ச்சியே.. இவர்களால் தான் அமைச்சரவையில் அடிக்கடி பல மாற்றங்கள் செய்யபட்டன...

இதையெல்லாம் தாண்டி பெரிய இடியாய் அமைந்தது பஸ் டிக்கெட், பால் விலை உயர்வு!! முக்கியமாக நடுத்தர மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கபட்டனர்... இந்த கட்டண உயர்வு மற்ற பொருள்களின் விலை உயர்வுக்கும் காரணமாய் அமைந்தது.




நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு பிரச்சனை உடனே சரிசெய்யப்படும் என வாக்குறுதியுடன் தான் அரியணை ஏறினார் முதல்வர்...ஆனால் ??? 5 முதல் 20 மணி நேரம் வரை மின்வெட்டினால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம் ... கரண்டே இல்லாத ஊரில் மின் கட்டண உயர்வு வேறு...

பாராட்டு விழா, இசை வெளியீட்டு விழா, என சினிமா நிகழ்ச்சிகளில் முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை... சினிமா ஜால்ராக்களை தன் பக்கம் அனுமதிக்கவேயில்லை, கடந்த ஆட்சி போல சினிமா ஆதிக்கம் இல்லை.. வரவேற்க்கத்தக்கது.. சினேகா திருமணத்துக்கு கூட போவலைனா பார்த்துக்கோங்களேன்....

சில நல்ல விசயங்கள் செய்திருந்தாலும், அதை மேலோங்கி முதல்வரின்  தவறான முடிவுகளே தெரிகின்றன...

இந்த ஓராண்டு கால ஆட்சியை ஆனந்த விகடன் சினிமா விமர்சனம் போல மார்க் போட்டால், 27 மார்க் தரலாம்பா...

இதுல ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்துக்கு செய்த செலவு 25 கோடியாம்... ம்ம் என்னத்த சொல்ல???

-தலதளபதி

21 comments:

  1. கலக்கீட்ட பிரபு (தலதளபதி) சூப்பா்ப்;-)

    ReplyDelete
    Replies
    1. ipdiyae usupaeththi avanai cyber crimela thallanum idhudhaanae un pilaaaenu ;P

      Delete
  2. உம் சமூக அக்கறை கண்டு யாம் மெச்சினோம். இந்நேரம் உன்ன பிடிக்க தனிப் படை அமைச்சிருப்பாய்ங்க.

    நல்லது சொன்னா தப்பில்ல. கலக்கு தம்பி :)

    ReplyDelete
    Replies
    1. நீங்க தான் என்னோட தலைவர்னு சொல்லி வச்சுருக்கேன் ... ஹி ஹி..

      Delete
  3. உண்மைய எல்லாம் சொல்லிடிங்க...
    கொஞ்ச நாள் தலைமறைவா போய்டுங்க மலேசியா சிங்கபூர்னு இல்லை நில அபகரிப்பு வழக்கு ரெடியா இருக்கும்..
    போன முறை எதிரிகள் எல்லாருக்கும் கஞ்சா கடத்தல் வழக்கு, இப்போது நில அபகரிப்பு தான் டிரென்ட்

    ReplyDelete
  4. pls add paramakudi firing also

    ReplyDelete
    Replies
    1. மறதி..... தேசிய வியாதி....:))

      Delete
  5. பிரபு, கட்டுரை அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. இந்த மாதிரி சமூக பிரச்சனைய தொடர்த்து எழுதினா நல்லா இருக்கும்.எப்பவும் சும்மா காமெடி கும்மீஸாவே இருக்க வேண்டாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.அந்த வகையில் சபாஷ் !!

    ReplyDelete
    Replies
    1. நன்றி... க்ர்ர் ப்ர்ர்ர்... :)))

      Delete
  7. நல்ல பதிவு. ரேணி குண்டர்கள் டீகுடிச்சுட்டு வெட்டி கதைபேசுபவர்கள் என்ற கறையை ஏரியல் பவுடர் போட்டு கழுவிட்ட மச்சி.! இது போன்ற அனல் பறக்கும் கட்டுரைகள் எழுதி, பின்னர் எதிர்கட்சியில் சேர்ந்து விடவும். கட்ஸ்.!

    ReplyDelete
  8. சேகர் செத்தான் டோய்
    உன் தைரியத்தை கண்டு நான் வியக்கேன்.

    எல்லாம் சரி அது ஏன்டா என் ஃபோட்டோவை போட்டிருக்க.
    இந்த பாவத்துக்குலாம் நான் ஆளாகவே மாட்டேன் ..

    ReplyDelete
  9. பிரபு கலக்கிட்டே மிகவும் தைரியத்துடன் சமூக உணர்வில்,ஆனால் இதையெல்லாம் கண்டுக்கமாட்டன்ங்க என்றே நினைத்து கொண்டு தொடர்ந்து எழுதி விடாதே.. இதே போல எழுத்துக்களை தெரிந்து எடுத்து கவனமாக எழுது ,நல்லதொரு முயற்சி..

    ReplyDelete