Monday, May 28, 2012

அண்ணா நூலகத்தில் இரு அப்பாடக்கர்ஸ்


அண்ணா நூற்றாண்டு நூலகம்- ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்னரை வருட காலத்தில் போகவேண்டுமென பலமுறை திட்டமிட்டு சந்தர்ப்பம் சமையாமலேயே  இருந்தது. இந்த ஞாயிறு செல்லவேண்டுமென முடிவெடுத்தபின் முதலில் ஐந்துபேர் குழு செல்வதாக திட்டமிட்டு, முடிவில் வழக்கம்போல திட்டமிட்ட என்னையே திட்டிக்கொள்ள வேண்டியிருந்தது  -திட்டம் சொதப்பல். கட்சிப்பணிகளும், காதல் பணிகளும் பின்னால் அழைத்த காரணத்தால் மூவர் முன்கூட்டியே சொல்லிவிட்டு முன்வாங்கிவிட,  மிச்சமிருந்த இரு மனந்தளரா விக்கிரமாதித்தியர்களும் இலக்கியத் தண்ணீர் தேடி கடுந்தாகத்துடன் நூலகம் நாடிச்சென்ற கதையிது.! 

இருவரில் ஒருவர் பிரபல அப்பாடக்கர் கீச்சர் கவிதைப்போராளி கருப்பையா; மற்றவர் உப அப்பாடக்கர் கீச்சராகிய நான்.. 

முதலில் ஒன்பது தளங்களுடன் ஒய்யாரமான ஐந்து நட்சத்திர ஓட்டலையொத்த பிரம்மாண்டமானதொரு நூலாக கட்டிடத்தை பார்த்த மாத்திரத்திலேயே மனதுக்குள் வியப்பு கலந்த சிலிர்ப்போடியது உண்மை. ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாம். நாங்கள் வலதுகாலை முதலில் எடுத்துவைத்து உள்நுழைய,  மங்களகரமாய் மஞ்சள் சுடி தரித்ததொரு மங்கை உள்ளிருந்து வெளியேற, ஆகாகா.. நல்ல சகுனமென கருப்பு கன்னத்தில் போட்டுக்கொள்ள (அஃப்கோர்ஸ்..அவன் கன்னத்தில்தான்)- எந்தஒரு இந்தியசினிமா  இயக்குனரும் மறுகேள்வி கேட்காமல் அங்கொரு கனவுப்பாடலை வைப்பதற்கான அற்புதமான சிச்சுவேஷன் அது. நான்கூட வெனிஸ் + சுவிசில் விதவிதமான லொக்கேஷனில், வகைவகையான காஸ்ட்யூமில் டூயட்டெல்லாம் பாட ஆயத்தமாகிவிட்டேன். சட்டென என் மண்டைக்கும் இலக்கிய கண்டக்டர் ஒருவர் விசிலடிக்க, எங்களது வண்டியை இலக்கியம் நோக்கி யூ-டர்னினோம்.

ஒருவழியாக கொண்டுவந்திருந்த பேகி'ற்கான டோக்கனை பெற்றுக்கொண்டு,  உள்லேறியதும் ஆரம்பத்திலேர்ப்பட்ட எனது வியப்பினளவு வியக்கதகுமளவுக்கு கூடிக்கொண்டே சென்றது.!  
முழுக்கவும் குளிர்ச்சாதன வசதியிடப்பட தளங்கள்,அமர்ந்து படிப்பதற்கு நல்ல காற்றோட்டமான, விஸ்தாரமான, வெளிச்சமான இடவசதி, சுகமான குஷன் இருக்கைகள்.. -அடடா.. என் போன்ற புத்தக  ஜந்துகளுக்கு பூலோக சொர்கமய்யா...

அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எக்கச்ச்ச்ச்ச்ச்சக்கமான (தோராயமாக ஐந்து லட்சம் "ச்"-கள் போட்டுக் கொள்ளலாம்-அவ்வளவு புத்தகங்களாம்.) புத்தகங்களை பார்க்கையில் நானெல்லாம் எவ்வளவு சிறியவன் என்கிற எண்ணம் லட்சதியோராவது முறையாக வந்ததுபோனது.நெறைய்ய்ய்ய வளரனும் கொமாரு நீ.. 

உள்ளே கணிசமான அளவுக்கு கூட்டத்தை பார்த்தது கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சி; அன்று ஞாயிறு + கோடை விடுமுறை என்கிற வகையில் அது மிகமிக கணிசமான கூட்டம்தான் என்பதில் நிறைய வருத்தம். குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்திருந்த பெற்றோர்களை பார்க்கையில் உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது. தரைத்தளத்திலுள்ள உணவகத்தில் வழக்கம்போல  கூட்டம் அம்மியது #தமிழேன்டா.

முதல் தளத்தில் பருவ இதழ்கள் என்கிற பிரிவைப் பார்த்ததும் ஓடோடிச்சென்று பருவம், மருதம், குயிலி முதலிய இதழ்களைத் தேடினோம். அவ்வ்வ்வ்..  வார, மாத இதழ்களுக்கான பிரிவாம்.. ச்சே..வட போச்சே-என நொந்துக்கொண்டு அடுத்த தளத்திற்குள் நுழைந்தோம்.

இரண்டாம் தளம்- தமிழ்த் தளம். அதனுள் கவிதை அடுக்கை பார்த்ததும் கருப்புவுக்கு கவுஜைவெறி அதிகமாகி கார்பெட்டை பிராண்ட ஆரம்பித்தான். உடனே பக்கத்து ரேக்கிலிருந்த ஜீரோ டிகிரியை எடுத்து முகத்துக்கு மூணு இன்ச் க்ளோஸ்-அப்பில் காட்டி, பைய்யனை நார்மல் மோடுக்கு கொண்டு வந்தேன்..அவ்வ்வ்வ்..
அங்கனதான் நம்ம விதி பகவான் என்ட்ரி.. எங்கள் பின்னாலேயே வந்தவர், நேராக ஹாலின் சனி மூலைக்கு சென்று அமர்ந்துகொண்டு எங்களைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தார். விதியாரின் திருவிளையாடலின் ஆரம்பமாக சாருவாரின் "எக்சிஸ்டென்ஷிலியசமும், ஃபேன்சி பனியனும்" நாவல் என் கண்ணில் பட்டுத்தொலைக்க- "மாப்பி.. ஒரு அரைமணி நேரம் இங்க சுத்திப் பாத்துட்டு இருக்கியா.. நான் அதுக்குள்ளே இந்த புக்கை முடிச்சிடுறேன்.?" -எங்க அப்புச்சி சத்தியமா எப்பயும்போல சாருவை கலாய்க்க, ஒரு காமெடிக்குத்தான்யா கேட்டேன். பயபுள்ள நம்ம கருப்புவுக்கு ஞாயிறன்று சனி உச்சத்துல இருந்துருப்பான் போல -"இருங்க மாம்ஸ்..நானும் வர்றேன்.. சேர்ந்து படிக்கலாம்" சனியாரும், விதியாரும் விலையில்லா வலைய விரிக்குறாய்ங்க சாருவார் ரூபத்துல..

நூத்தினாலு பக்கமே உடைய சின்ன புத்தகம், ரொம்பநேரமா நடந்த டயர்ட்நெஸ், கால்வலி, கொஞ்சநேரம் ஒக்கார்ந்தா தேவலை போன்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் உப காரணங்களும் சேர்ந்து கொள்ள, இப்போது விதியாரின் நமட்டுச்சிரிப்பு கொடூர வில்லச்சிரிப்பாக உருமாறிக்கொண்டிருந்தது. முடிவு பண்ணி ஒக்காந்துட்டோம். சேம் சனிமூலை.. விதியாருக்கு பக்கத்துபக்கத்து இருக்கை. 
"மிஸ்ட்டர் விதியார்.. யுவர் மிஷன் அக்கம்ப்ளிஷுடு..போயி வேற எவனாச்சும் அப்பாவியை புடி.. கெட் லாஸ்ட் யூ ட்ரோலு"-ன்னு அந்தாளு மூஞ்சில காறித் துப்பிட்டு ஆரம்பிச்சோம்...படிச்சோம்.. 
அப்பப்போ நீதாண்டா இதுக்கு காரணம்'ங்கற தொணில ரெண்டுபேரும் மொறச்சி பாத்துக்கிட்டோம் .. அப்புறம் திரும்ப படிச்சோம்..அப்புறம் திரும்ப மொறச்சோம்..திரும்ப படிச்சோம்.திரும்ப... சரி விடுங்க எங்க கஷ்டம் எங்களோட போகட்டும்.. இடையில பப்ளிக்கா பத்துபேர் பாத்துட்டுருக்காங்க'ங்கற பிரக்ஞை துளிகூட இல்லாமல் நித்திராதேவி என்னைத் தழுவியதால் என்னையுமறியாமல் கண்ணயர்ந்த இரண்டு நிமிடங்களையும் சேர்த்து, ரெண்டுமணி நேரத்துல படிச்சி முடிச்சேன். என்னத்தை சொல்ல..? என் வாழ்வில் வீணடித்த பலநூறு இரண்டுமணி நேரங்களில் மிகக் கொடூரமான இரண்டு மணி நேரங்கள்..ஆஆவ்வ்வ்வ்.. 

கருப்பு முடிக்கிற வரைக்கும் கவிதை செக்ஷன்'ல பராக்கு பாத்துட்டுருந்தேன். குட்டி ரேவதி புக்கெல்லாம் இருந்துச்சி. அதுல நான்  எதிர்பார்த்த(!) புக்கு இல்லாததால, திரும்ப அந்தத்தளம் முழுசும் இன்னொருமுறை பராக்கிங்.
பத்து நிமிஷத்துல கண்ணுல மரண பீதி தெரிய கருப்ஸ் வந்தான்..எனக்கும் அதே பீதிதான்..சோ,"சேம் சுவீட்டு மாப்பி"-ன்னு சொல்லி வெளீல கூட்டிட்டு வந்தேன். முள்ள முள்ளால்தான் எடுக்கணும்'ன்னு அன்னிக்கு காலைல தேதி கிழிக்கும் போது படிச்ச தத்துவம் சட்டுன்னு ஞாபகம் வர, கீழ இருக்க கேண்டீனுக்கு போனோம். சனியார்+விதியார்+ சாருவார் -இவர்களின் கூட்டுச்சதிநீர் திட்ட இலக்கியநீரை குடித்ததானலான கசப்புணர்வை போக்க டிகாஷன் தூக்கலாக, கடுங்ககசப்பான காப்பி ஆர்டர் பண்ணி குடிச்சிட்டு அடுத்த ரவுண்டுக்கு கெளம்பினோம் (அஃப்கோர்ஸ்..காசு குடுத்துட்டுத்தான்.!)  
இதற்கிடையே ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாக, உணவகத்தில் பார்த்ததொரு பெண்ணைப்பற்றி கருப்பு வர்ணிக்க ஆரம்பித்திருந்தான். சிலபல கவுஜைகள் வரலாம் என்பதை அவதானித்து "வேற ப்ளோர் போலாம்டா.." -என பேச்சை மாற்றி இழுத்து வந்தேன். பிறவிக்கவிஞனுங்க கூட சகவாசம் வெச்சிக்கிட்டா இதான்யா பெருந்தொல்லை. ஆன்னா..ஊன்னா கவுஜை சொல்ல ஆராம்பிச்சிடுறாய்ங்க.. பேடு ஃபில்லோஸ்...

அடுத்தடுத்த தளங்களில் குழந்தைகள், மருத்துவம், அரசியல், பொருளாதாரம், உளவியல், தத்துவம், பொறியியல், கணிதம்,புள்ளியியல், மொழியியல், வரலாறு, விளையாட்டு, புகைப்படக்கலை என்ன எண்ணற்ற தலைப்புகளில் எக்கச்சக்க புத்தகங்கள்  நிறைந்திருக்கின்றன.. பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்கள்.. அங்கெல்லாம் சும்மா போய் ஒரு விசிட் மட்டும் பாத்துட்டு வந்துட்டோம்.
ஏழாம் தளத்தில், ஏதோ ஒரு புத்தகத்தை கருப்பு வெறித்தனமாக புரட்டிக்கொண்டிருக்க, அந்தப் பிரிவின் தலைப்பைப் பார்த்து நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன் -"Pornography"  என்னாது..? இதுக்கெல்லாம் தனீ பிரிவான்னு குதூகலத்தோட கிட்டக்கப்போயி பாத்தா அது "Photography"-யாம். 
பசி கூட்டல் தூக்க மப்புல என் கண்ணு அந்த லட்சணத்துல தெரிஞ்சிருக்கு. திரும்ப ஒருமுறை வட போச்சேன்னு நொந்துகிட்டே கீழ எறங்கிவந்தோம்.

ஆரம்பிக்கும் போது ஐந்து லட்சம் புத்தகங்களுடன் ஆரம்பித்த நூலகம், கூடிய விரைவிலேயே பனிரெண்டு லட்சம் புத்தகங்களை எட்ட இலக்காம்.
அதேபோல் அசத்தலான வடிவமைப்பில் ஒரு திறந்தவெளி அரங்கமும் கட்டப்பட்டு வருகிறது. இரண்டுக்குமே ஆத்தா மனசு வைக்க வேண்டும்..ஹ்ம்ம்..பார்ப்போம்..

கூட்டல்கள்:

* படிப்பதற்கான அட்டகாசமான சூழல்.
* விஸ்தாரமான இடவசதி- படிப்பதற்கும், வாகன நிறுத்தத்திற்கும்..
* வெளியிலிருந்து நமது சொந்த புத்தகங்களையும் உள்ளே எடுத்துவந்து   படித்துக்கொள்வததற்கான ஏற்ப்பாடு. சொந்த மடிக்கணினிகளை உள்ளே பயன்படுதுவதர்க்கான அனுமதி. இரண்டுமே மிகச்சிறப்பான முயற்சிகள்.
* பார்வையற்றோருக்கான தனி ப்ரேயிலி செக்ஷன்.
* நல்ல விஸ்தாரமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய குழந்தைகளுக்கான பகுதி. இதுவும் ஒரு அருமையான முன்னேற்ப்பாடு. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான சூழலின் மூலம் அவர்களை கவர்ந்து, பின்னாட்களில் அவர்கள் வளர்ந்தபின்னரும் நூலகம் தொடர்ந்து வர வைப்பதற்கான நல்ல முயற்சி.
* படிப்பறை முதல் கழிவறை எங்கேயும்..எப்போதும் தென்படும் சுத்தம். ஒரு ஸ்டார் ஹோட்டல், ஹாஸ்பிட்டல் போல எல்லா தளங்களிலும் பணியாளர்கள் நிறையப்பேர் அவ்வபோது சுத்தம் செய்துகொண்டே இருக்கின்றனர்.
* கணினி தொடுதிரை மூலம் நமக்கான புத்தகங்களை எந்த தளத்தில், எந்த வரிசையில் உள்ளது போன்ற தகவல்களை பெறுவதற்கான வசதி.
*மற்ற அரசு அலுவலகங்களை போலல்லாமல் எல்லா பணியாளர்களும் மக்களுடன் இணக்கமாக, ஏதேனும் தகவல் கேட்டால் சலித்துக்கொள்ளாமல்  புன்சிரிப்புடன் நமக்கு உதவுகிறார்கள்.
*புத்தகங்கள் கலைந்திருந்தாலோ, அல்லது மேசையில் கிடந்தாலோ உடனேயே ஒரு சிப்பந்தி வந்து அலமாரியில் சரியாக அடுக்கி வைக்கிறார். 
*ஒவ்வொரு புத்தகத்திற்கு குறைந்தபட்சம் நான்கு காப்பிகள் உள்ளன.நமக்குத் தேவையான புத்தகம் வேறொருவர் வைத்திருந்தாலும் அவர் முடிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை.

*இரண்டாவது தளம் வரை எஸ்கலேட்டர் வசதி. எல்லா தளங்களுக்கும் லிப்ட் வசதி.

கழித்தல்கள்:

*இவ்வளவு பெரிய இடத்திற்கு உணவகம் மிகச்சிறியது. சிலவகை உணவுகள் மட்டுமே உள்ளன. இன்னமும் நிறைய வகைகள் சேர்த்து பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.
*ஒவ்வொரு தளத்திலும் சில பகுதிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக பழங்கால ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் பிரிவை காண ஆவலுடன் சென்றோம். அனுமதி இல்லையாம்.
*எல்லா தளங்களிலும் உள்ள அறிவிப்பு பதாகைகள் தமிழில் மட்டுமே உள்ளன. ஆங்கிலத்திலும் இருக்கலாம். முழுக்கவே ஆங்கில புத்தகங்கள் நிரம்பிய தளங்களில் அறிவிப்புப் பதாகை தமிழில் மட்டுமே இருப்பது சற்றே அபத்தமாக பட்டது எனக்கு.
*போலவே இன்னுமொரு அபத்தம் Rest room -என்பதற்கு "ஒப்பனை அறை" என்றவாறான முழி'பெயர்ப்பு.. பார்த்த மாத்திரத்தில் சிரிப்பு தாளவில்லை.

உண்மையில் இந்த நூலகம் குறித்து இந்த தலைமுறை தமிழர்களும், வரும் தலைமுறை தமிழர்களும் இது எங்கள் பெருமையென சர்வ நிச்சயமாக கூறிக்கொள்ளலாம். இதை மாற்றியே ஆகவேண்டுமென அடம்பிடிக்கும் அம்மையாருக்கு எனது ஒரே வேண்டுகோள் இதுதான். தயவு செய்து இங்கு ஒருமுறை வந்து பார்த்து விட்டு முடிவெடுங்கள்.
அதற்கப்புறமும், மருத்துவமனையாக மாற்றித்தான் தீருவேனென சொன்னால், ஒரே வழிதானிருக்கிறது. இதனை முழுக்கவே மனநல மருத்துவமனையாக மாற்றிவிட்டு, பச்சை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த கையோடு தானே முதல் பேஷண்டாக சென்று அங்கே படுத்துக்கொள்ளலாம்.!

ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன்
:-)))


நூலகம் பற்றி மேலதிக விவரங்களுக்கு:

http://annanootrandunoolagam.blogspot.in/
http://www.annacentenarylibrary.blogspot.in/

39 comments:

  1. "பாட்டம் லைன்" சூப்பர் சீனியர்!! :) செம ஃபினிஷிங்!!!

    ReplyDelete
  2. Replies
    1. வர்ற வாரமும் போலாம்னு ப்ளான் இருக்கு மச்சி.. சேர்ந்து போலாமா.?

      Delete
  3. நானும் ரொம்ப நாலா போகணும் நெனச்சிட்டு இருக்கேன் போக முடில.விளக்கமான இந்த கட்டுரைக்கு நன்றி.கடைசி பஞ்ச் சூப்பர்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு குணா..உள்ள இவ்வளவு நல்லாருக்கும்ன்னு எனக்கு தெரியாது..

    @NattAnu

    ReplyDelete
  5. இருவரில் ஒருவர் பிரபல அப்பாடக்கர் கீச்சர் கவிதைப்போராளி கருப்பையா; #ஆரம்பமே கலக்கிட்ட மச்சி, அப்புறம் கடைசியா "அம்மா"வை பகைச்சிருக்க பாத்து சூதானமா இருந்துக்க மச்சி!!!!

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்.. ஜெயில்ல புடிச்சி போட்ருவாங்களா என்னைய.?

      Delete
  6. கடைசில அந்த பச்சைக்கலர் தான் கண்ணுல குத்துது குணா
    நல்லாயிருக்கு படித்துமுடித்ததும் நானும் கூடவே வந்தது போன்ற ஒரு உணர்வு :)

    ReplyDelete
  7. தனித்தமிழ் ஈடுபாட்டை தொடக்கத்திலிருந்தே ஊட்டியிருக்க வேண்டும். தமிழில் எழுதி இருப்பதை ஆங்கிலத்தில் படித்து பொருள் கொள்ளும் வகையில்தான் தமிழினத்தில் ஒரு பகுதி இருக்கிறது. கடைசி வரிகள் நச்! @SeSenthilkumar

    ReplyDelete
  8. அருமையான பதிவு மச்சி. படிக்கும்போதே அங்கே இருக்கிற உணர்வு வருது.ஃபினிஷிங் செம. பருவ இதழ் தளத்தில் குயிலி,மயிலி புக்கை தேடி நீயும் ஒரு பச்சை(!)தமிழன் என்பதை நிரூபித்து விட்டாய் வாழ்த்துக்கள். அடுத்த முறை அங்க போகும்போது கவிதை புக்க கருப்பு கண்ணுல படாம ஒளிச்சு வைக்க சொல்லிரு. தொடர்ந்து எழுது மச்சி உன் எழுத்து இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்... @joseph_selva

    ReplyDelete
    Replies
    1. நன்றீஸ் மச்சி..
      கருப்பு பயங்கரமா இன்வால்வ் ஆகிட்டான்.. திரும்பவும் வர்ற ஞாயித்துக்கிழமை போயி ஆகணும்'ன்னு அடம் புடிக்கிறான்..அவ்வ்வ்வ்..

      Delete
  9. கண்டிப்பா போவனும்யா.. நல்லா எழுதியிருக்க...இந்த கருப்பு பக்கிய எப்படி உள்ள விட்டாங்கே?? மனசுக்குள்ள பா.விஜய்னு நெனப்பு... அப்புறம், நீ ஆற்காடு வீராசாமி பினாமியாம் .. அதான் அம்மாவ ஓட்டுறியாம் .. வெளியில பேசிக்கிறாங்க.... :-):-)

    ReplyDelete
    Replies
    1. அவ்வவ்..நன்றீஸ் தம்பு..
      சொல்றதுதான் சொல்ற.. ஆ.ராசா பினாமின்னு சொன்னாவாச்சும் கொஞ்சம் கெத்தா இருக்கும்.. போயும் போயும் போர்க்காட்டார் பினாமி..த்தூ..

      Delete
  10. Well said, i also want to go.

    ReplyDelete
  11. maamu...
    adutha time vantha ennai anga koopitu poreenga...
    ithu kattalai solliputten aama..

    anbudan
    snj_no1

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா போலாம் மாப்பி.. நன்றீஸ் :-)))

      Delete
  12. மிக அருமையான வார்த்தைக் கோர்வைகள்.. உங்கள் எழுத்துக்களில் சரஸ்வதிதேவி வந்து ஹிப்ஹாப் ஆடியிருக்கிறாள்..!

    //எந்த ஒரு இந்தியசினிமா இயக்குனரும் மறுகேள்வி கேட்காமல் அங்கொரு கனவுப்பாடலை வைப்பதற்கான அற்புதமான சிச்சுவேஷன் அது// எங்கள ஏனையா வம்புக்கு இழுக்கிறீர்..! ஹீரோயின் என்ட்ரி அப்ப கனவுப்பாடல் இல்லைன்னு சொன்னா ஒரு அட்டு ஃபிகரு கூட நடிக்க வரமாட்டேங்குது.. அதனாலதான் -சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆசை- என்ற எழவெல்லாம்.

    //என் வாழ்வில் வீணடித்த பலநூறு இரண்டுமணி நேரங்களில் மிகக் கொடூரமான இரண்டு மணி நேரங்கள்// அதில் சாருவை அடிச்சுக்க ஆளே கிடையாது.

    //குட்டி ரேவதி புக்கெல்லாம் இருந்துச்சி. அதுல நான் எதிர்பார்த்த(!) புக்கு இல்லாததால// அதான் வாசலுலேயே பாத்தேன்னு சொன்னீங்களே... இல்லையா...... அப்ப வேற எத பாத்தீங்க.?

    //மனநல மருத்துவமனையாக மாற்றிவிட்டு, பச்சை ரிப்பன் வெட்டி// அருமை..

    நிற்க...

    நானும் பலமுறை அங்கு சென்றிருக்கிறேன்.. எதை எடுப்பது எதை விடுவது என்ற நினைப்பிலேயே 'வேறெதுவும்' என் கண்ணுக்குத்தெரிவதில்லை..! பெயர்பலகை ஆங்கிலத்தில் இல்லை என்பதை நீங்கள் சொல்லிதான் தெரிகிறது... அது மிகவும் கவனிக்கத்தக்க விஷயமும் கூட.. அங்கு புகார் பெட்டி இருக்கிறதா என்றும் தெரியவில்லை.. இருந்தால் அடுத்த முறை செல்லும் போது பெட்டியில் இந்த கருத்தை எழுதிப் போட்டுவிட்டு வருவோம்..!

    வாழ்த்துகள் குணா..!

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்.. என்னையும் மதிச்சி இம்புட்டு லெங்த்தியான கமெண்டா..? முதல்ல அதுக்கொரு பெரிய நன்றீஸ்..
      கண்ணுல ஆனந்த கண்ணீர் தாரைதாரையா கொட்டுது..

      Delete
    2. //குட்டி ரேவதி புக்கெல்லாம் இருந்துச்சி. அதுல நான் எதிர்பார்த்த(!) புக்கு இல்லாததால// அதான் வாசலுலேயே பாத்தேன்னு சொன்னீங்களே... இல்லையா...... அப்ப வேற எத பாத்தீங்க.?///

      நான் உள்ள தேடுனது அதுக்கான விளக்கவுரை.. அவ்வவ்..

      அப்புறம் புகர் பெட்டி பற்றி சொன்னது.. கண்டிப்பாக எங்காவது இருக்கும்..
      அடுத்தமுறை செல்லும்போது கேட்டு எழுதிப்போட்டுட்டு வரணும்.. நன்றீஸ் மீண்டும் சகா :-)))

      Delete
  13. மாமு இவ்வளோ சொல்லிட்டு அந்த நூலகத்துக்கு எப்படி போறதுன்னு சொல்லலையே

    ReplyDelete
    Replies
    1. சென்னை கோட்டூர்புரத்துல இருக்கு மச்சி.. நான் கொடுத்த லிங்க்'ல மேப்போட குடுத்துருக்காங்க..

      Delete
  14. ரொம்ப நல்லா இருக்கு குணா.சூப்பரா எழு த ஆரம்பிச்சிடிங்க.நான் இன்னும் போனதில்லை அங்க.இப்போ போன மாதிரி இருக்கு.வாழ்த்துக்கள்.:)
    மருத்துவமனை வருவது நல்லதுதானே.:)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிங்க..

      ///மருத்துவமனை வருவது நல்லதுதானே.:)///
      மருத்துவமனை வர்றது தப்புன்னு சொல்லலை.. லைப்ரரி எடுத்துட்டு மருத்துவமனை வர்றதுதான் தப்புன்னு சொல்றேன் ;-)))

      Delete
  15. காமெடி கலந்த உங்கள் எழுத்து நடை மிக அருமை. நூலகத்தில் கழித்த அந்நாள் நினைவை விட்டு நீங்காததாக மாறிவிட்டது. // உணவகத்தில் பார்த்ததொரு பெண்ணைப்பற்றி கருப்பு வர்ணிக்க ஆரம்பித்திருந்தான் // இந்த இடத்தில் உங்களின் தவறான புரிதல் உள்ளதை அறிகிறேன். உண்மையில் நான் வர்ணித்தது இருவராக வந்திருந்த "பெண்களைப்பற்றி". அவ்வ்...

    ReplyDelete
    Replies
    1. நன்றீஸ் மாப்பி :-)))

      ///உண்மையில் நான் வர்ணித்தது இருவராக வந்திருந்த "பெண்களைப்பற்றி". அவ்வ்...////

      த்தூ.. ட்ரோலு.. இன்னுமாடா ஒன்னையெல்லாம் உத்தமன்னு நம்புது இந்த உலகம்.?

      Delete
  16. சூப்ரப்பு ... அருமை

    ReplyDelete
  17. அருமையான பதிவு. நேரடியாக நூலகத்தை சுற்றி வந்தவொரு பிரமை. விளக்குகிறேன் பேர்வழி என ஒரேயடியாய் போரடிக்காமல் நையாண்டித்தனத்தை சேர்த்து வாசிக்க எளிமை படுத்தியிருக்கிறீர்கள். படிப்பவர்களுக்கு நேரில் ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டுமென ஆவல் வருவது நிச்சயம். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. நன்றீஸ்... நன்றீஸ் மாம்ஸ்..

      Delete
  18. செம கலக்கல். பேசாம கைட் ஆயிருங்க. ஃபைனல் டச் மம்மிட்ட வந்து முடிச்சது ஜூப்பர்.

    செயிலுக்குப் போறதப் பத்தி கவல வேண்டாம்.

    அங்க போயிதான் பெரிய ஆளுங்க எல்லாம் புக் எழுதினாங்கோ. :)
    வாழ்தூஸ் லீ.

    ReplyDelete
  19. நன்றீஸ் மச்சி...

    ///செயிலுக்குப் போறதப் பத்தி கவல வேண்டாம்.
    அங்க போயிதான் பெரிய ஆளுங்க எல்லாம் புக் எழுதினாங்கோ///
    மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை..எனை மாற்றிட நினைத்திடும் சிறைச்சாலை ;-))) #யாருகிட்டே..அதையும் பாத்துருவோம்...

    ReplyDelete
  20. அருமை அருமை. அத்தனையோ தடவை முயற்சித்தும் போய் பார்த்தறியாத நூலகம். அடுத்ததடவ நிச்சயம் போய் பார்க்கிறேன். அருமையான வார்த்தை பிரயோகம், அலுப்பூட்டாத சரளமான நடை, எடுத்துக்கொண்ட கருத்தை நகைச்சுவையோடு விவரித்தல் ஆஹா அற்புதம். நல்லதொரு எதிகாலம் இருக்கு. வாழ்த்துக்கள். கடைசில் எடுத்துக்கூறிய வரியில் கூட ஒரு வேதனை கலந்த நகைசுவை

    ReplyDelete