Sunday, May 6, 2012

வரமல்ல வாழ்க்கை






என்ன எழுதலாம்ன்னு யோசித்து எப்பவும் போல பெண் தலைப்புக்கே வந்துட்டேன் வேறு வழியின்றி !!
ஒரு பெண்ணா எங்களுடைய வட்டம் சின்னது. ரொம்ப யோசிக்க எதுவுமே இல்லை.நாங்க வளர்ந்த விதம் அப்படி. வீட்டுக்குள்ளேயே தான் அதிக நேரம் இருந்தது வெளி உலகம் தெரிய வாய்ப்புகள் மிகவும் குறைவு. 
அதிக ஏற்றத்தாழ்வுகள் அதிகம் பாதித்த ஒன்று. ஒரு அண்ணன்  வேற..
அடிக்கடி அம்மாவிடம் சண்டை போடுவது அண்ணனுக்கு மட்டும் இப்படியா அப்படியான்னு தான். ஆனாலும் பெண்கள் தானே பெண்களுடைய நிலைமைய பிரதிபலிக்கனும் ?! அதனால என்னுடைய அனுபவத்தினால் விளைந்த எண்ணங்களை பகிர்ந்துக்கறேன்.

ஒரு முறை கல்லூரியில் என் தமிழ் ஆசிரியை சொன்னது, "பெண்களுக்கு அதிக வேலை கொடுக்காட்டி ஒழுக்கமா இருக்க மாட்டாங்க, அதனால் தான் விடியற்காலை முதல் இரவு படுக்கும் வரை இடைவிடாமல் வேலை கொடுக்கப் பட்டது"ன்னு மனு தர்மத்தில் இருக்குன்னு.
ஒழுக்கம்னா என்ன? அதுக்கு அளவுகோள் என்ன? யார் ஒழுக்கமா இருக்கான்னு யாருக்குத் தெரியும்? இப்படியாக அதிகம் குழப்பம் தந்தது. 
படிப்பறிவு அதிகம் ஆனாலும்  இன்னமும் பெண் பிள்ளைகள் ஆண்களுக்கு நிகராக எண்ணிக்கையில் பிறப்பதில்லை அல்லது வாழ்வதில்லை.
 கடந்த ஆண்டு  சென்சஸ் செக்ஸ் ரேஷியோ - 933/1000.
பிறக்கவோ அல்லது வாழக்கூட தகுதி இல்லாத நிலைமைதான் பெண்ணினத்திற்கு. அப்படியே பிறந்தாலும் வாழ்க்கை அவ்வளவு எளிதல்ல. ஆண்களுக்கும் அப்படித்தான் அதில் சந்தேகம் இல்லை.
இருந்தாலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் உடலையும்,மனதையும் ஒருசேர பாதிப்பது. 
தற்காப்பு என்பது மாறி சிறைபடுத்தல் என்றானது.எங்களுக்கு என்ன தேவை என்பதைக் கூட பகிர இடம் இல்லாததுதான் வேதனையானது. பெண் விடுதலை பெண்ணியம் என்பதே இன்று கேலிப்பொருளாக மாற்றி ஏளனம் செய்து பேச விடாமல் செய்கிறது சமூகம்.என் உரிமை அப்படின்னு எந்த பெண்ணாவது உரிமையுடன் அவர்கள் வீட்டில் பேச முடியுமா என்பது கூட சந்தேகமே! 
பெண்கள் விஷயத்தில் அதிகம் கடமைகள் மட்டுமே சுமத்தப் படுகிறது உரிமை என்பது என்னவென்றே தெரியாத பெண்கள் தான் அநேகம். அப்படியே மீறி உரிமை அப்படின்னு சில பெண்கள் பேசினாலும் அதற்கு வரும் எதிர்ப்பு சாதாரணமாக இருப்பதில்லை.மிகவும் கோரமான, வன்மம் மிக்க எதிர்ப்புகளையே சந்திக்க வேண்டியுள்ளது.பெரும்பாலும் பெண்கள் இவற்றை தவிர்த்து விடவே விரும்புகிறார்கள். ஏதாவது ஒரு வன்கொடுமையில் சிக்கினால் கூட வெளிகாட்டிக்கொள்வதில்லை பெண்கள். அப்படியே அடையாளப்படுத்தினாலும் அந்த பெண்ணைத்தான் முதலில் சந்தேகிக்கிறது உலகம் பெரும்பாலும்.
என்னுடைய தோழிகள் அதிகம் பேர் சொல்லக்கூடிய விஷயம் யாரையும் மாத்த முடியாது. அவர்களுடைய பெற்றோராகட்டும்,கணவனாகட்டும்,சகோதரனாகட்டும் யாரையும் மாற்ற முடியாது என்பதே இவர்களுடைய கருத்தாக இருக்கிறது.பெண் விடுதலைக்காக ஆண்கள் போராடினால் புனிதமாக மதிக்கிறோம். அதுவே ஒரு பெண் பெண்ணியம் பேசினால் அது ஒட்டு மொத்த ஆணினத்திற்க்கும் எதிரான செயல் என்றே சந்தேகிக்கிறோம் .
பெண்களுக்கு சுதந்திரம் வேணும் அப்படின்னு சொல்றதுகூட ஒரு பெண்ணாக இருக்க விரும்புவதில்லை இந்தச் சமூகம்...
தங்களுடைய சுதந்திரத்தை ஒழுங்கான முறையில் பயன்படுத்துவதில்லை தவறான வழிக்கு போறாங்கன்னு சொல்லிட்டு கிளம்பத் தான் நிறைய பேர் இருக்காங்க.
எப்படி உயர்ந்த ஜாதியில் பிறந்தவங்களுக்கு தங்களுடைய வேலைகளை தங்களுடைய வாய்ப்புகளை தாழ்த்தப் பட்டவங்களுடன் பகிர மனம் இல்லாம இன்னமும் இட ஒதுக்கீட்டை குறை சொல்றாங்களே அதே பயம் தான் இந்த ஆண் பெண் வேற்றுமையிலும் கூட.
மனதில் ஏதோ ஒரு மூலையில் எங்கே நமக்கான வாய்ப்பு, இடம் பறிக்கப்பட்டு விடுமோன்னு ஒரு பயம் இருக்கு ஆண்களுக்கு.
வரலாற்றை திருப்பி பார்த்தால் பெண்களேதான் தன்னை தற்காத்துக்கொள்ள வீட்டிலேயே தன்னை பூட்டிகொண்டாள். அதுவே காலப்போக்கில் வழக்கமாக பின்பற்றப்பட்டது ஒரு கட்டத்தில் திணிக்கப் பட்டது.
இது தான் சம காலங்களில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்துவது.
ஏனோ மேற்கத்திய நாடுகளில் இவ்வளவு குழப்பங்கள் இல்லை இந்த விஷயத்தில். கலாச்சாரம் என்ற ஒரு விஷயதிற்குள் போக விரும்பல பலர் மனம் புண் படுத்தவேண்டி இருக்கும் :)

நான் எழுதுறது எல்லோருக்கும் பிடிக்கனும்ன்னு எழுதல . 
யாரோ ஒருவராவது பெண்களுடைய கஷ்டத்தை கொஞ்சமாவது உணருவாங்களான்னு ஒரு நப்பாசை மட்டும்தான்.
எனக்குத் தோன்றிய கொஞ்சமே கொஞ்ச விஷயங்கள் மட்டும் தான் பகிர்ந்தேன். அப்புறம் எல்லாத்தையும் எழுதினா தஸ்லிமா சொல்றாமாதிரி "ஆண்களால் ஒரு பெண்ணியவாதி எப்போது வெறுக்கப் படுகிறாளோ அப்போதுதான் அவள் உண்மையான பெண்ணியவாதி" ங்கற மாதிரி நிலைமை வந்துரும். 

எனக்குத் தெரிந்து இப்போதைய சமூக நிலையில் மட்டுமில்லை எப்போதும் ஆணை வெறுத்து பெண்ணோ பெண்ணை வெறுத்து ஆணோ வாழ்வதென்பது இயலாத ஒன்று. புரிதல் பகிர்தல் சிறிதளவு இருந்தாலே போதுமானது . நிச்சயம் ஆண்களுடைய ஒத்துழைபின்றி பெண்களுக்கான இடம் என்பது கனவு மட்டுமே .பலர் புரிந்துக்கொண்டு இடம் கொடுக்குறாங்க சிலர் புரிந்துக்கொள்கிறார்கள் இன்னும் சிலர் புரிந்தும் புரியாதது போல காட்டிக்கொள்கிறார்கள் அவ்வளவுதான்.! 

அன்புடன்,
சோனியா அருண்குமார் @rajakumaari

டிஸ்கி: வேற ஒண்ணுமில்லை வெய்யில் அதிகமானதால குணா'வுக்கு மூளை ரொம்ப வேலை செய்து என்னையெல்லாம் எழுத சொல்லி கேக்குறாப்புல நிலைமை.!
நன்றி ரேணிகுண்டா பாயிஸ் கலக்குவோம்.! தோழிகள் மங்கை, வித்யா மற்றும் நண்பர்கள் கணேஷ், ரகு அவர்களுக்கும் நன்றிகள்.!!

55 comments:

  1. ஹே ஹே வாழ்த்துக்கள் ரேனிகுண்டா மகளிரணி தலைவி “சோனியா அருண்” கலக்கல் #தொடர்ந்து கலக்குவோம் - @NforNeil

    ReplyDelete
    Replies
    1. hey நன்றி நன்றி :) கொச கொச

      Delete
  2. முன்னாடியே சொன்ன டீல் தான்..
    வருங்காலத்துல பெரிய உலக ஃபேமஸ் எழுத்தாளினி ஆகறச்சே, உங்க வெற்றிக்கு அணிலாக உதவின இந்த சிறுவனின் பேரையும் மறக்காம குறிப்பிடணும் உங்க சுயசரிதைல ;-)))

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும் நெனப்புத்தான் :))போன வாரம் தான் ஒரு ஜோசியர் சொன்னாரு நீங்க எழுத்தாளரா வருவீங்கன்னு அது இவ்ளோ சீக்கிரம் நடக்கும்ன்னு நினைக்கவே இல்லை அவ்வ்வ்வ்வ் ....நன்றி

      Delete
  3. பாருங்க இந்த பதிவை எத்தனை பேர் படிச்சப்பறம் பொறுப்பாக கமென்ட் போடுவாங்கன்னு ! (கண்டிப்பா ப்ளாக்கின் மற்ற பதிவை விட அதிக ஹிட்ஸ்&கமெண்ட்ஸ் வரும் #mens are different அவ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. ஹெல்லோ ஹெல்லோல்லோ பெண்ணியம் பிடிக்காது அதனால கமென்ட் போடலைன்னு சொல்லிட்டாங்க நிறைய பேர் #பல்ப்பு :))

      Delete
  4. ஆண் பெண் என்ற பாகுபாடு பல குடும்பங்களில் தாய் இடமிருந்தே தொடங்குகின்றது என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் :-(

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் முதலில் இந்த வகை மாற்றங்கள் பெண்களிடமிருந்து தான் துவங்கனும் !!

      Delete
  5. வாழ்த்துக்கள்....மேலும் எழுதுங்கள்...காலம் மாறும்..jokin.j

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சகோதரி. தொடர்ந்து எழுங்க, தஸ்லிமாவை பின்னுக்கு தள்ளி முன்னேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அவங்க அளவுக்கு எழுதவும் முடியாது எதிர்ப்புகளை சந்திக்கவும் முடியாதுங்க ,வாழ்த்துகளுக்கு நன்றி :)

      Delete
  7. நல்லா கதை சொல்ற மாதிரி, மெல்ல சல சலப்பின்றி ஓடும் ஓடை போல எழுதி இருக்கீங்க. நல்ல கதை சொல்லியா வருவீங்க..அருந்தமிழ் கிட்ட கேட்டா தெரியும் என்று நினைக்கிறன்.... இன்னும் நிறைய எழுதனும். "நிறைய" என்பது QUANTITATIVE அல்ல QUALITATIVE-ஆ, பலதரப்பட்ட விடயங்கள் பத்தி எழுதனும்.

    -நாங்களும் பாராட்டுவோம்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதே ஆசை தான் கொஞ்சமா எழுதினாலும் மனசுக்கு பிடிக்கணும் அவ்ளோ தான் இப்போதைக்கு ......இதுக்கெல்லாம் காரணம் நண்பர்களாகிய நீங்க தான் நன்றி நன்றி ஆதரவிற்கு
      -நாங்களும் நன்றி சொல்லுவோம்

      Delete
  8. வாழ்த்துக்கள்! மிகச் சரியான தொலைநோக்கு பார்வை! தெளிவான எளுத்துக்கள்...பெண்களை தத்தை(கிளி)போல் வசம்பு தடவி வளர்க்க படும் சமூகத்தில் இருப்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்த கமென்ட் மெகா அவர்களுடையது :)

      நன்றி தோழி :))

      Delete
  9. மற்றுமோர் பெண்ணியம் சார்ந்த படைப்பு, உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  10. பெண்ணாதிக்கம் போஸ்ட் இது ஹி ஹி .. நல்ல எழுதி இருக்கீங்க.. பட் நெறைய சொல்ல வேண்டியது இருக்கு ... சொன்னால் அடிக்க வந்துருவாங்கன்னு சொல்லாமல் இருக்குறேன் ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. கோவப்பட்டுட்டாராமாம் :)) உனக்கு செட் ஆவல தம்பி

      Delete
  11. பதிவுலகத்தில் நுழைந்த ரேணிகுண்டா மகளிரணி தலைவிக்கு வாழ்த்துக்கள்! பெண்கள் நம் கண்கள் ! :-D:-D

    ReplyDelete
  12. வாழ்த்துகள். நம் வீடுகளில் கூட நடக்கும் வேறுபாடு தான். இருந்தாலும் இவ்வளவு நாள் உணரவில்லை. தெளிவான தமிழ் நடையில் புரியும் படி எழுதி இருக்கீங்க வி வி சி @vinoth_tweets

    ReplyDelete
  13. Short, sweet and to the point! Congratulations on your good writing :-)
    amas32

    ReplyDelete
  14. //சிலர் புரிந்துக்கொள்கிறார்கள் இன்னும் சிலர் புரிந்தும் புரியாதது போல காட்டிக்கொள்கிறார்கள் அவ்வளவுதான்.! //

    எனக்கு புரியல..#அவ்வ்!!

    jokes apart!!
    தஸ்லீமா வரை தெரிந்தும் எளிய நடையில் தெளிவான படைப்பு!! நல்ல தொடக்கம்!
    (@_santhu)

    ReplyDelete
    Replies
    1. புரிந்தவர்கள் பெண்களுக்கு ஆதரவு தராங்க,புரியாதவங்க எதிர்க்குறாங்க சிலர் புரிந்தும் எதுவும் செய்யறதில்லை .இப்பவாச்சும் புரிந்ததா (இப்பவும் புரியாட்டி ஆணியே புடுங்க வேணாம்-இது புரியுமே ஹி ஹி )நன்றி நன்றி :)))

      Delete
  15. நல்ல கருத்தாளமுள்ள பதிவு. முயற்சிக்கும் மொழிநடைக்கும் வாழ்த்துக்கள்.
    "பொண்ணுங்க அடக்க ஒழுக்கமா அன்பா இருக்க வேண்டும் என்று நல்ல நோக்கில்தான் நாங்க இப்ப இருக்கிறம். அது பொண்ணுங்களுக்கு எந்த அளவுல ஏற்கப்படுகிறதென்பது அவங்களப் பொறுத்தது. அதைவிடுத்து பாதுகாப்பு என்பது பெண்களுக்கு அவசியமான ஒன்றுதானே.. " :) நன்றி. தொடருங்கள். :)

    ReplyDelete
    Replies
    1. அது சரி யாருங்க இது ?? :)))

      Delete
  16. பெண்ணியம் குறித்த ஆழ்ந்த பார்வையுடைய பதிவு. அருமை சகோ. வாழ்த்துகள். // நிச்சயம் ஆண்களுடைய ஒத்துழைபின்றி பெண்களுக்கான இடம் என்பது கனவு மட்டுமே // நிதர்சனம் பேசும் வரிகள். இதுபோன்ற பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறோம். நன்றி

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இது தான் வரும்,வருது வேற வழி இல்லை நீங்க எல்லாரும் ரெடியா இருங்க அனுபவிக்க :))நன்றி கவுஜ கருப்பு அவர்களே

      Delete
  17. சிந்தனையை தூண்டும் பதிவு.! ஒரு தொடராக எழுதும் அளவுக்கு உங்களிடம் விஷயம் உண்டு..! எதிர்பார்க்கிறோம்.! # கட்டதொர.!

    ReplyDelete
    Replies
    1. இவ்ளோ சீரியஸா கட்டதொரை கமென்ட் எதிர் பார்க்கலா #கெட் லாஸ்ட் :-))

      Delete
  18. மிக நல்ல மொழிநடை.....கருத்துக்களை மென்மையாக சொன்ன விதமும் அருமை......தங்களின் எழுத்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....
    தலைப்பை பொருத்தவரை சில கேள்விகள்
    இந்த சமூகம் நகர, கிராம பேதங்கள் நிறைந்தது...மேலும் சமூக ஏற்ற தாழ்வுகளும் உண்டு.....பெண் எல்லா இடத்திலும் ஒரே ரீதியில் இல்லை...ஆனால் நாம் குறிப்பாக ஆண்கள் குடும்ப அமைப்பும் சுற்று சூழல் தான் தீர்மனிகின்றன.....மேலும் பெண்களுக்கு உள்ளது போலவே ஆண்களுக்கும் மாஸ் ஹிஸ்டீரியா உண்டு.....பதிவர் தோட்டா கருதிடத்தை போல பெண்கள் ஆணுக்கு பயபடுவதை விட ஆண்களுக்கு தான் பயப்பட வேண்டிவுஉளது,,,,,,,
    மாற்றம் நம் குடும்ப ரீதியில் ஆரம்பம் ஆகட்டுமே
    ஒவொரு தாயும் தன் மகன்களுக்கு பெண்களை மதிக்க கற்று கொடுத்தால் இந்த பிரச்சினை கால போக்கில் மறையலாம்....
    பெண்களும் ஆண்களும் சரிசமமாக மதிக்கப்படும் சமூகமே சிறந்த சமூகம்....
    அனைவருக்கும் வலைப்பூவில் எழுத வாய்ப்பு தரும் பதிவளர்களுகும் வாழ்த்துகள்.......
    ட்விட்டரில் கருப்பையா கவிதைகள் மிக சிறப்பாக உள்ளது
    -தினேஷ் குமார்
    புது டில்லி

    ReplyDelete
    Replies
    1. ////அனைவருக்கும் வலைப்பூவில் எழுத வாய்ப்பு தரும் பதிவளர்களுகும் வாழ்த்துகள்.......
      ட்விட்டரில் கருப்பையா கவிதைகள் மிக சிறப்பாக உள்ளது////
      நன்றிகள்.! உங்க ட்விட்டர் ஹேண்டில் சொல்லுங்க சகா..

      Delete
    2. ஒவ்வொரு தாயும் தன் மகன்களுக்கு பெண்களை மதிக்க கற்று கொடுத்தால் இந்த பிரச்சினை கால போக்கில் மறையலாம் // எவ்வளவு உண்மையான வரிகள் :) நன்றி நன்றி

      Delete
  19. நான் தங்கள் அனைவரையும் ட்விட்டரில் நேரம் இருக்கும்போதெல்லாம் பார்த்து வருகிறேன்.....
    எனக்கும் வலைப்பூவில் எழுத ஆசை ........

    ReplyDelete
    Replies
    1. தயங்காம எழுதி எங்க மெயில்-ஐடி'க்கு அனுப்புங்க.. சிறப்பா செஞ்சிடலாம் சகா..

      Delete
  20. ''ஆணை வெறுத்து பெண்ணோ பெண்ணை வெறுத்து ஆணோ வாழ்வதென்பது இயலாத ஒன்று. புரிதல் பகிர்தல் சிறிதளவு இருந்தாலே போதுமானது//

    மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. :))) நன்றி வாழ்த்துகளுக்கு

      Delete
  21. வாழ்த்துகள்:)) தொடர்ந்து எழுதுங்க :)) @shanthhi

    ReplyDelete
    Replies
    1. :)) (நன்றிலாம் தோழிகளுக்கு (தேவை)இல்லை )

      Delete
  22. //பெண்களுக்கு சுதந்திரம் வேணும் அப்படின்னு சொல்றதுகூட ஒரு பெண்ணாக இருக்க விரும்புவதில்லை இந்தச் சமூகம்// உண்மை..

    நல்ல பதிவு, வாழ்த்துகள் :) தொடர்ந்து எழுதுங்கள். @dhivyadn

    ReplyDelete
  23. மிகவும் அருமை சோனியா.. இது மாதிரி நிறைய உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.. முதல் பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மச்சி நீங்க டி எம் ல பாராட்டினத்தை மறக்க மாட்டேன் :)))

      Delete
  24. வாழ்த்துக்கள் அக்கா. அருமையான பதிவு

    ReplyDelete
  25. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் அக்கா.. மேலும் எழுத எனது வேண்டுகோள் :-))

    ReplyDelete
    Replies
    1. நன்றி உதய் ஆனாலும் அந்த சிலுவை சுமக்காத கமென்ட்க்கு (எவ்ளோ லைக்ஸ் வேற ) -கிர்ர்ர்ர்ர்ர் :))

      Delete
  26. வாழ்த்துக்கள் சோனியா! நன்றாக இருந்தது. இன்னும் நிறைய எழுதுங்கள். @usharanims

    ReplyDelete
    Replies
    1. சஞ்சனா குட்டி பேசுறா மாதிரி இருக்கு பா :)))

      Delete
  27. இன்றைய மருமகள் நாளைய மாமியார். இன்றைய இளைய தலைமுறை நாளைய அனுபவஸ்தர்கள். எது சரி எது தப்பு என்று உணரும்போது வயதாகிவிடுகிறது. எக்காலத்திலும் இளையவர்கள் பெரியவர்களின் அனுபவப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில்லை. எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும். ஒன்றும் சொல்வதற்கில்லை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. நல்ல ஒரு பகிர்வக்கா.. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete