Wednesday, March 21, 2012

கோடை டிப்ஸ்!!


கோடை நாட்கள்  நெருங்கிவிட்டன, இந்த கோடையை இனிதே  அனுபவிக்க  சில டிப்ஸ்.....



1,வேர்வை துர்நாற்றம் அதிகம் வராமல் வெந்தைய பொடியை தண்ணிரில் கலந்து
குடிக்க உடல் குளிர்ச்சி முடிவளர்ச்சி நன்கு இருக்கும்..

2,குளிர்சாதன
தண்ணீர் குடிக்காமல் பானை தண்ணீரில் நன்னாரி வேர் போட்டு குடிக்க
வாசனையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்..

3,காலையில் வேப்ப கொழுந்து சாப்பிட்டு வர வயிற்று பகுதி சுத்தமாகும்
சர்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

4.காலையில் ஒர் மூடி எலுமிச்சை
சாற்றுடன் சிறுது தேன் கலந்து சாப்பிட்டு வர முகபொழிவு வயிற்று பகுதி
சீராக வேலை செய்யும்,

5,கோடையில் காரம் உப்பு புளிப்பு குறைத்து கொண்டால்
உடல் சூடு ஆகாமல் இருக்கும்.

6மதியத்தில் தயிர் கூடுதலாக சேர்த்து அதனுடன்
சின்ன வெங்காயம் சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி மற்றும் நன்கு வலிமை
பெறும்(இரவில் கண்டிப்பாக வேண்டாம்).


7,மொந்த பழம் பூவம் பழம் கோடையில் தினமும் சாப்பிடுங்கள் உடல் குளிர்ச்சி
வயிற்றுபகுதி சுத்தமாக இருக்கும்(விலையும் மலிவே).

8,தாழம்பூ எஸ்என்ஸ்சை
தண்ணிரில் 3சொட்டு கலந்து குடிக்க அம்மை கண்டிப்பாக வராது,

9.நெல்லிக்கனி
தினமும் சாப்பிட்டு வர உடல் ஊட்டம் முடிவளர்ச்சி நன்கு
இருக்கும்,

10.குளிக்கும் போது வேப்பிலை இலையை தண்ணீரில் போட்டு
குளித்தால் சரும நோம் 75% வராது


11,வாரத்தில் 4நாட்களில் கீரை வகைகளை சேர்ப்பது அவசியம்(கீரை வகையில்
கருவேப்பிலை பொதினா கொத்தமல்லியும் அடங்கும்)

12,அசைவத்தில் சிக்கன் நண்டு
இவைகளை கோடையில் தவிர்பது நல்லது நண்டு கோடையில் சாப்பிட்டால் சிலருக்கு
அதிக மூட்டுவலியை ஏற்படுத்தும்(என் அனுபவம்)

13,காலை குளியல் உடலுக்கு
கண்களுக்கு குளிர்ச்சி மாலை குளியல் மண்ணுக்கு குளிர்ச்சி,

14,நல்லெண்ணெய்
மிதமான சூட்டில் சனிக்கிழையில் உடலில் தேய்த்து குளிக்கவும் அதிகாலை 4to6
சுடுதண்ணீரிலும் அல்லது  7to10 சுடுதண்ணீரில் குளிக்கவும் அன்று மதியம்
உறங்குதலோ அசைவ சாப்பாடோ கண்டிப்பாக கூடவே கூடாது

,15.கோடையில் வயிற்று
வலி கடுப்பு அதிக பேருக்கு வரும் விளக்கெண்ணெய்யை அடிவயிற்றில் தேய்த்து
வர வலி குறைந்து குளிர்ச்சியாக இருக்கும் வெந்தய தண்ணீரும் குடிக்கலாம்....





------எழுதியவர் "வேப்பமரம்"....

-----டிவிட்டர் ஹாண்டில் - @veppamaram ....

Saturday, March 17, 2012

கண்ணீரில் கரைந்த காதல்...



பள்ளியில் விழி பரிமாறி காதல் கொண்டு...
விடுமுறைகளின் தனிமையை வெறுக்கையில்
விமானங்களின் ஆக்கிரமிப்பு தொடங்கியது

பெண்டு என வாசல் தாண்ட
கட்டுப்பாடிட்ட குடும்பம்
குடிபெயந்தது வீதிக்கு...
பதுங்கு குழிக்கு பள்ளி இடம் மாறினாலும்,
உன் பார்வை கதகதப்பில் பாதுகாப்பாய்தான் உணர்ந்தேன்!

விண்ணில் விண்மீன்கள் எண்ணி கொண்டிருந்த - ஓர் இரவு
வீழ்ந்தன நெருப்பு பிழம்புகள்...
இருநூறு குடும்பம் வாழ்ந்த ஊரில்
இரண்டு நிமிடங்களில் இருநூறு பேர் கூட எஞ்சவில்லை...

ஊறவுகூடி பூ சொரிந்து உன் கரம் பற்ற எண்ணிய நான்
அனாதையாய் உன் கை சேர்ந்தேன் செல் (shell) தூறலில்...

உயிருக்கு உத்திரவாதம் இல்லா நிலையில்
உன் உயிரான என்னை காப்பாற்ற முனைந்தாய்,
என் உயிரான உன்னை மறந்து,
கப்பலேறி கச்ச தீவு போகச்சொன்னாய்
கணாளா உன்னை பிரிந்து...

எதிர்த்து பேசயிலலாததால் ஏறினேன்
தாய் புதைந்த தாய் நாட்டை விட்டு

கயவரின் பார்வை மேல் மேயும்பொழுதெல்லாம்
போர்த்தி கொண்டேன் உன் பார்வையை

கடைசி மூச்சாய் கடலில் கரைய எண்ணியவளை
கருணையின்றி கரை சேர்த்தாள் கடலன்னை,
சஷ்டி கவசம்போல் வாய் உன் பெயரை முனங்க
அரை மயக்கத்தில் அடைப்பட்டேன் அகதி முகாமில்...

நாட்டை காக்ககொண்ட உறுதியில்
நங்கைக்கு தந்த உறுதியை மறந்தாய்
அணுகணமும் பிரியேன்னென...



மஹாராணியாய் உன்னுடன் வாழ வேண்டியவள்
மிருகமாய் நடத்தபடுகிறேன் இங்கு,
தனிமையில் நின் நினைவுகளை புரட்டிபார்த்து புரட்டி பார்த்து
நைந்து போனது அதுவும் இங்கு அடைபட்டோர் மனம்போல்...

பகலிரவு பாராமல் என்னுள் எழும் ஒரே கேள்வி
பதுங்கு குழியில் பிணங்களுக்கிடையே
உன் அரவணைப்பில் ஒளிந்திருந்த இரவு
ஏன் பிரியவில்லை என் உயிர்?

எழுதியவர் : S. சந்தோஷ்
ட்விட்டர் முகவரி : @_santhu

Friday, March 16, 2012

இனப்படுகொலை - துரோகமும்.. அழுகையும்..

'சேனல் 4'....

உலக தமிழர்கள் ஆதரவற்று நிற்கும் தருணத்தில் , ஆதரவு கரம்
நீட்டிய ஓரே மீடியா. போர் குற்றதின் உக்கிரத்தை உலகத்திற்கு வெளிச்சம்
போட்டு காட்டுகிறது...


இந்திய சேனல்கள், பத்திரிக்கைகளின் நிலை  ??...
சிலர் சோனியாவின் சர்வாதிகாரத்துக்கு பயந்து தங்கள் கைகளை கட்டிக் கொண்டு
நிற்கின்றனர்,..
பல பத்திரிக்கைகள் வேண்டும் என்றே தமிழினத்தை அழிக்க
துடிக்கின்றனர்....


சிலர் சொல்கிறார்கள் சேனல் 4  தன் விளம்பரத்துக்காக தானே இதெல்லாம்
செய்கிறது? என்று...
 அப்படியே இருக்கட்டும்..
ஆனால் எந்த சர்வதேச
மீடியாவிற்காவது இதனை ஒளிபரப்ப தைரியம் இருக்கிறதா? இல்லை...

இந்தியாவில்
ஹெட்லைன்ஸ் டூடே, புதிய தலைமுறை போன்ற சில சேனல்களே  அக்கறை
காட்டுகின்றன..




ஒரு கோடி தருகிறோம்.. எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்.. இந்த பாட்டை யாருக்கு
டெடிகேட் பண்ணுறிங்க?... என்று கூவி கூவி விற்க்கும் தமிழ் சேனல்கள்,
இந்த பிரச்சனையில் ஏன் தொடர்ந்து மவுனம்???


இதில் 'தினமலர்' பத்திரிக்கை பற்றி சொல்லவே தேவையில்லை.. புலிகளை
எதிர்ப்பதாய் நினைத்து கொண்டு.. தமிழ் இனத்திற்க்கே துரோகம் செய்து
வருகிறது.. இந்த மாதிரி தினசரிகள் தமிழகத்தில் விற்பனையாவது நமக்கு தான்
கேவலம்.. சமூக வலைதளங்களில் மக்கள் இதனை 'தினமலம்' என்றே அழைக்கின்றனர்..


வட இந்திய ஆங்கில சேனல்கள் பல "தமிழக மீனவர்கள்" என அனைத்து
செய்திகளிலும் குறிப்பிடுகின்றன.. கேரளா மீனவர்களை "இந்திய மீனவர்கள்" என
குறிப்பிடுகின்றன.... ஏன் பிரிவினை? தமிழ்நாடு என்ன பக்கத்து நாடா?


சரி, இந்திய மீடியா தான் இப்படியென்றால்...

இந்திய அரசு?

பல இந்தியர்கள் வெட்கி தலைகுனியுமளவிற்கு ஈழ தமிழர்கள் பிரச்சனை கையாண்டு
வருகிறது..

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஆதரித்தால் என்ன?

முடியாது..

ஏனென்றால், நீயும் கூட்டுக்களவானி தானே....

சீனா!
கொஞ்சம் கொஞ்சமாக நம் அண்டை நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி
வருகிறது....சீனா இலங்கையுடன் இணைந்து தமிழகத்தை அழிக்கும் நாள் வெகு
தொலைவில் இல்லை...




தமிழக அரசியல் கட்சிகள், செய்த ஊழலுக்கெல்லாம் பயந்து, பதவிகளுக்காகவும்,
மத்திய அரசிடம் கை கட்டி, வாய் பொத்தி நிற்கின்றன..



மிச்சம் உள்ள ஈழ தமிழர்களை கூட  காப்பாத்த வக்கியில்லையா இந்த அரசுக்கு?
முள் வேலிகளில் அடைந்துள்ள நம் மக்கள் பசி, பட்டினி, சித்திரவதையால்
தினமும் பலர் இறக்கிறார்கள்... பெண்களின் நிலைமை பற்றி சொல்லவே
வேண்டாம்.. ராணுவத்தின் அறிவிக்கபடாத கேளிக்கை விடுதி தான் இந்த முள்
வேலி முகாம்..


இதெல்லாம் பார்த்துகொண்டு கையாளாகாத தழிர்களாய் நாம்..
சமூக வலைதளங்களில் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.. பேரணிகளில் கலந்து
கொள்கிறோம்.. சிலர், ஈழ தமிழர்களுக்கு உதவிகளை செய்கிறோம்...

அவ்ளோதானா?

பிரச்சனை முடிந்துவிடுமா? 

எப்போது நமக்கு விடியும்?

அழுகையை தவிர வேறந்த பதிலும் நம்மிடம் இல்லை........


-- தல தளபதி

Tuesday, March 13, 2012

பிரபல டிவிட்டர் VS அப்பாவி டிவிட்டர்

           கட்ட்தொரயின் ”கொலவெறி சிச்சுவெஷன் காமெடி” ப்ரொமொ (சன்பிக்சர்ஸ் மட்டும் தான் ப்ரொமொ சீன் போடனுமா..நாங்க எல்லாம் சீன் போடக்கூடாதா..!?)
சிச்சுவேஷன் இதுதான்..(முதல்வன் இண்டர்வெல் இண்டர்வியுதான் கான்செப்ட்)..

ஒரு அப்பாவி ட்விட்டர்(அர்ஜீன்),
 ட்விட்டர பத்தி ஆஹா ஒஹொன்றானுங்களே..வலைபாயுதேல எல்லாம் வூடுகட்டி அடிக்கிறாங்களெ..அப்டிங்கற ஒரு தன்னார்வத்துல, நம்ம்ம்ம்பி ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி உள்ள வரான். 


வந்து பிரபலமான ட்விட்டர் அக்கவுண்ட எல்லாம் ஃபாலொ பண்ணி டைம்லைன ஆர்வத்தொட உத்து பாக்குறான். 
டைம்லைன்னா ஏதொ டிவிநியுஸ்ல ஓடுற மாதிரி ஸ்க்ரொல் பார்னு நினைச்சுகிட்டு வந்த அப்பாவிக்கு, இங்க கீச்சு எல்லாம் தெறிச்சு கீழ் நோக்கி ஓடுறத பாத்து வெறிச்சு போய் உட்காந்து இருக்கான். 

ஒரு எழவும் புரியாம, சில பேருக்கு மென்ஷன் போடுறான். 

ஹிம்ம்...ஒரு பயல் கண்டுக்கனுமெ..இவன மாதிரியெ உள்ள வந்து பேய் முழி முழிக்கிற ஒரு நாலு பேரு இவன ஃபாலொ பன்றாங்க. அந்த நாலு பேருக்கு ஒரு ஹலொ சொல்ல..அந்த பயபுள்ளைகளுக்கு அதுக்கு எப்படி ரிப்ளை பன்றதுன்னு கூட தெரியலை..வாழ்க்கை வெறுத்து, பிரபலமான சில ட்விட்டருக்கு எல்லாம் மென்ஷன் போட்றான்..என்னையும் ஆட்டத்துல சேத்துக்குகங்கன்னு..ஹிம்.அவனுக்கு கிடைச்சதொ அவமானம் மட்டும் தான்.

மூணு மாசமா வெறும் 15 பேர் ஃபாலொயரட போராடுறான். 
அவன் சிந்திச்சு போடுற கீச்ச எல்லாம் ஒரு பயலும் கண்டுக்கலை. தத்துவத்தை எல்லாம் அவனெ போட்டு அவனெ படிச்சுக்குறான். இப்படி ஒரு ஆன்லைன் அனாதையா திரியறவனுக்கு, டைம்லைன்ல வர பொண்ணுங்களுக்கு எப்படி கடலை போடனும்னு கூட தெரியலை..அவ்ளொ அப்பாவியா இருக்கான். 

ஒரு நாள் மெரினா பக்கம் ஒரு பெரிய ட்விட்டப்பு இருக்குன்னு கேள்வி பட்டு, வேலை முடிச்ச கையொட, பெரிய புள்ளிகளையெல்லாம் பாக்க ஆசை பட்டு அங்க போறான். அங்கயொ..பெரும் புள்ளிங்க எல்லாம், வெளிய போ..உன்ன எங்களுக்கு யாருன்னெ தெரியாதுன்னு அவமான படுத்துறாங்க. சரி..தொலையறான்ன்னு.

இவன் ஆஃபிஸ்லெருந்து டை எல்லாம் கட்டிகிட்டு வந்துருக்கறதால, ட்விட்டப்பு இண்டர்வியு ஒன்னு எடுன்னு, ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய..பிரபல ட்விட்டர் (ரகுவரன்) கிட்ட கொண்டு போறாங்க. அவருக்க்கோ XXXX மேல ஃபாலொயர், பாத்ரூம் போக கூட டைம் இல்ல அவருக்கு.அவ்ளொ பிசி..ட்விட்டர்ல. 

அந்த பிரபல ட்விட்டருக்கு பல தடவை மென்ஷன் போட்டு..என்னையும் ஃபாலொ பண்னுங்க சார்னு கெஞ்சினவந்தான் இந்த அப்பாவி ட்விட்டர் (அர்ஜீன்). அவரொ..இவன ஒரு மனுஷனாவெ மதிக்கலை..

இனி...

பிரபல டிவிட்டர் VS அப்பாவி டிவிட்டர். முதல்வன் - இண்டர்வியு




ஐயா...இங்க புதுசா ட்விட்டருக்கு வர ஒவ்வொருத்தருக்கும் இருக்குற கனவு நிறைய ஃபாலொயர் கிடைச்சு கடலை போட்டு குஷியா இருக்கனும் அப்டின்றதுதான். ஆனா நிஜவாழ்க்கையில அப்டி இல்லிங்களெ..ஏன் ஐயா.? 

என்ன சொல்றீங்க தம்பி. நம்ம புது ட்விட்டர்ஸ் எல்லாம் நிறைய வராங்க. தத்துவம் போடுறாங்க. புது புதுசா வந்து சேர்ற ஃபிகர்கிட்ட கடலை போடுறாங்க. ட்விட்டர்லெயெ படுத்து தூங்குறாங்க.இவ்வளவு ஏன் டி.எம்ல மெசெஜ் குடுத்து கடன் கூட வாங்குறாங்க..!

ஐயா நீங்க சொல்ற மாதிரி எந்த புது ட்விட்டரும் வந்தொன்ன யாரும் கட்டிபுடிச்சு வரவேற்கிறது இல்ல.பிரபல ட்விட்டரொட ஃப்ரெண்டா இருந்தாதான் டக்னு ஃபாலொயரு கிடைக்குறாங்க.
இது என் வாழ்க்கையிலெ இருக்குது.


குற்றம் சொல்றவன் சொல்லிகிட்டு தான்யா இருப்பான். நான் பிரபல ட்விட்டர் ஆனபிறகு, தமிழ்ல கடலை போடறவன், இப்பொ உலகத்துல 7வது எடத்துல இருக்கான்.

ஐயா, எப்டியிருந்தாலும் இங்க்லீஸ்ல கீச்சுறவன் தான முதலிடம். வெங்கல பதக்க விட ,தங்க பதக்கம் தான ஐயா மதிப்பு அதிகம். 

நான் பிரபல ட்விட்டர ஆனப்புறம் ஒரு நாளைய கீச்சு 3 லடச்த்துலெருந்து 7 லட்சம் ஆயிருக்கு. ஃபாலொ பன்றவங்களோட மொத்தம் ஆவரெஜ் 325% கூடியிருக்கு தம்பி.


ஐயா..ஆனா நம்ம புது ட்விட்டரொட ஆவரெஜ் ஃபாலொயர் வெறும் முப்பது தான ஐயா.

தம்பி, புள்ளி விவரம் சரியா தெரிஞ்சாதான் பேசனும்.


ஒகெ ஐயா...(டாக்குமெண்ட்ட எடுத்து அடுக்குறார்) இது அலெக்ஸா ரிப்பொர்ட், இதுவரைக்கும் உள்ள 10 ஃபாலொயரு கூட இல்லாத பயபுள்ளைகளொட எண்ணிக்கை மட்டும் 3 கோடி பேரு..இது நீல்சன் சர்வெ ரிப்போர்ட், பிரபல ட்விட்டர் மென்ஷன் போடாததால கூவத்துல வுழுந்து செத்த ட்விட்டர் மட்டும் 2லட்சத்து அறுபதுனாயிரம் பேரு. நம்ம தமிழ் ட்விட்டர்ஸ் தான் உலகத்துலெயெ ஜெர்க்கு பார்ட்டிங்கன்னு, பிபிசி ரிப்பொர்ட் சொல்லுது. 

தம்பி , அது உனக்கு தெரியாது. நம்ம தமிழ் ட்விட்டர கவுக்க சதி நடக்குது. இது சம்பந்தமா எனக்கெ ட்விட்டர் கிட்டெருந்து மெயில் வந்த்து. இப்படி யெல்லாம் நடந்துக்க கூடாதுன்னு..1000 பக்கத்துக்கு கண்டிஷன் போடுறாங்க.



ஐயா..அது என்னா கண்டிஷன் ஐயா.?

அது உன்கிட்ட சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. நான் ட்விட்டப்புல சொல்லிக்கிறென்.

ட்விட்டர்ஸ் தான் ட்விட்டப்பு வந்துருக்காங்களெ..ஐயா..சொல்லுங்க.

தம்பி அது 600 பக்க மெயிலு, அ, ஆவான்னானு 7 சாப்டர்ல கண்ணா பின்னான்னு கெட்ட வார்த்தையெல்லாம் திட்டி எழுதிருக்காங்க. மெயில் அனுப்புரென். படிச்சு பாத்துக்கொ.


ஐயா..இது ஞாபகம் இருக்கா.?

பாத்த மாதிரி இருக்கு. 

நீங்க முதல் முதல்லா பிரபல ட்விட்டரானப்பொ குடுத்த இண்டர்வியு இது. 

எப்படி மறக்க முடியும். இண்டர்வியு குடுத்த்தெ நான் தானெ.

புது ஃபாலொயர் எல்லாம் என் நண்பர்கள்.....

புது ஃபாலொயர் எல்லாம் என் நண்பர்கள்.....
அவர்களுக்கு உதவுவதெ என் கடமை. அவர்களை உடனெ ஃபாலொ செய்வது என் உரிமை. ப்ரிண்ட்ல உரிமைக்கு பதிலா எருமைன்னு வந்துருக்கு..நான் அதுக்கு பொருப்புல தம்பி..!



இதெல்லாம் நடந்துருக்குன்னு சொல்றீங்களா.?

நடக்கலைன்றியா..?


அவர்களுக்கு உதவுவது கடமைன்னு சொல்றீங்க..ஆனா அவங்க ஹேண்டில வச்சி மொக்க போட்டு அவமான படுத்துறீங்க. அவங்க ஒரு த்த்துவம் போட்டா கண்டுகாம, உங்க நண்பர்கள் கிட்ட, பல்லு வெளக்கினியா, பாத்ரூம் போனியான்றீங்க. இந்த கொடுமையெல்லாம் நாங்க படிக்கனும். ஆனா நீங்க எங்களை திரும்பி பார்க்க மாட்டீங்க. 

தம்பி, என்னை கோப்படுத்தி பாக்கனும்னெ, கேள்வி கேட்குறீங்க.



என் நோக்கம் அதில்லைங்க ஐயா..தமிழ் ட்விட்டர்ஸ்க்கு உண்மை தெரியனும். இங்க பாருங்கய்யா..இந்த ஸ்கிரின் ஷாட்ட..உங்களுக்கு ஒரு புது ஃபாலொயரு 60 மென்ஷன் போட்டுருக்காரு, அது மட்டும் இல்லாம யாருகிட்டயொ மெயில் ஐடி வாங்கி 3 மெயில் அனுப்பிருக்காரு..என்னையும் ஆட்ட்த்துல சேத்துக்குங்கய்யான்னு...நீங்க ஒரெ ஒரு மென்ஷன் குடுத்துருக்கீங்க. “போடா பொறம் போக்குன்னு” , அந்த அவமானம் தாங்காம புது ட்விட்டரு மூட்டை பூச்சி மருந்த குடுச்சுட்டு சாவ போய்ட்டான். அவன காப்பாத்த ஒரு வாரம் ஆச்சு..! இப்பொ சொல்லுங்கய்யா..உங்களுக்கு புது ஃபாலொயரொ..உங்கள ஃபாலொ பண்ற பயபுள்ளைங்க தான முக்கியம். 

நல்லா கிராபிக்ஸ் ஒர்க் பண்ணிருக்கீங்க. யாரையொ வச்சி பிரபல ட்விட்டரான என் பேர நாசம் பண்ண ட்ரை பண்ணிருகீங்க. 


ஐயா..அந்த மூட்டை பூச்சி மருந்து குடிச்சவனெ நாந்தான்யா..

ஓஒ..ஃபேஸ்புக் காரண் கிட்ட எவ்வளவு வாங்கின?

நீங்க ஃபேஸ்புக்ல இருந்தா எவ்வளவு குடுப்பீங்க..?

ஒரு டைய கட்டிகிட்டு ட்விட்டப்புக்கு வந்துட்டென்னா என்ன வேணா கேள்வி கேட்பியா நீ? 


ஐயா பதில் சொல்ல வேண்டியது உங்க கடமை.
அது மட்டும் இல்லாம புதுசு புதுசா டேக் போட்டு புரளிய கிளப்பீற்ங்க, போன வாரம் நீங்க போட்ட #kissme அப்டிங்க்கிற டேக்ல, எல்லாரும் முத்தம் போட்டு, இன்னிக்கு 25 குடும்பம் டைவர்ஸ் வரைக்கும் போயிருக்கு. பொம்பளை புள்ளைங்க ஃபாலொ பண்ணினா தெறிச்சு போய் ஃபாலொ பண்றீங்க. அது மட்டும் இல்லாம 13 ஃபேக் ஐடியிலெ நீங்க வலம் வர்றீங்கன்னு ஒரு ஜங்க் மெயில் சொல்லுது. 

தம்பி, உண்மைதான் #kissme னு ஒரு டேக் போட்டு பிரச்னை ஆனது உண்மைதான், ஆனா அதை அவங்க ஆளுங்களுக்கு குடுக்கதான் அப்டி போட்டென்.


சுலபமா வீட்ல குடுத்துக்க வேண்டிய பிரச்னைய இப்டி டேக் போட்டு, உங்க சுயநலத்துக்காக உபயோக படுத்திகிட்டீங்க..சரியா..?

ஒரு டேக் போடுறதுனா என்னான்னு தெரியுமாய்யா உனக்கு, நான் போன வாரம் போட்ட டேக் #tweetupdonation 
அப்டிங்கற டேக்ல வசூலனா காசுலதான்யா இன்னிக்கு ட்விட்டபே நடக்குது.


அதுல பாதி காச நீங்களெ சரக்கு வாங்கி சாப்டிங்களே ஐயா..!

சாக்ஸ் போடாம ஷீ போட்டா நாறும்னு சொல்றென்..உனக்கு புரியலை. நீ போட்டு பாரு அப்ப தெரியும்.


ஐயா..உங்க ஷீவ நான் எதுக்குயா போடனும்.

யோவ், கூமுட்டை..நீ ஒரு நாள்..ஒரு நாள் பிரபல ட்விட்டரா இருந்து பாரு..அப்ப தெரியும், எது முடியும் எது முடியாது..எத்தனை பஞ்சாயத்துக்கள், எத்தனை ப்ளாக்குகள்னு. இதுல எத்தனை சிக்கல்னு.


ஐயா இது சரியான பதில் இல்லிங்களெ..! நான் எப்படி உங்க இட்த்துல, பிரபல ட்விட்டரா..?

முடியும்யா..சின்னதான் ஒரு ட்விட்டு போடுறென்..என் 6000 ஃபாலொயரும் ஒரு நாள் என்னை அன்ஃபாலொ பண்ணிட்டு உன்னை ஃபாலொ பண்ண சொல்றென். இருந்து பாத்துட்டு..நீ இந்த உலகத்துக்கு எடுத்துச்சொல்லு, பிரபல ட்விட்டர் பதவி எவ்வளவு கஷ்டமுனு.


இல்லிங்கய்யா..அது என்னால முடியாது.

பாருய்யா..ஒரு பதவி குடுத்தொடனெ உட்டுடு ஓடுறியெ..!
இண்டர்வியு முடிச்சுகலாமா..?

சரிங்கய்யா...இது சாத்தியம்னா நான் ஒரு நாள் உங்க பதவில பிரபலடிவிட்டரா இருந்து பாக்குறென்.


டண்டண்டண்டண்.......!



அடுத்த காமெடி சுச்சுவேஷனில் சந்திப்பொம்..



கொலவெறி கட்டதொர...........

Friday, March 9, 2012

பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் குறித்த ஆலோசனைகள்





சச்சின், ரகுமான், ரஜினிகாந்த் ஆகியோரை பத்து வருடங்களுக்கு முன்னர் எத்தகைய வியப்புடன் பார்த்தோமோ இப்போதும் அதே வியப்புடன் பார்க்கின்றோம் நாம். அதேபோல் பெரியவர்களும் (சில சிறியவர்களும்) ஒரு விசயத்தை இன்னும் வியப்புடன்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அதுதான் "இன்ஜினியரிங்". ஏனெனில் நான் பத்து வருடம் கஷ்டப்பட்டு பெறுகின்ற மாதசம்பளத்தை என் மகன்/மகள் ஒரே மாதத்தில் பெற்றுவிடுவான் என்று பல பெற்றோர்கள் நினைப்பதால்தான் இத்தகைய வியப்பு. இப்பதிவில், பொறியியல் படிப்பிற்கான சில ஆலோசனைகளையும், ('ஆலோசனைகள்' என்பதைவிட 'நெறிமுறைகள்' என்னும் சொல் தகும்) 'பொறியியற் கவுன்சிலிங்' பங்கேற்கும்போது எதிர்நோக்கவேண்டிய சில முடிவுகளையும் என்னால் இயன்ற அளவுக்கு பகிர்ந்து கொள்கிறேன். நான் இத்தகைய விசயங்களை சொல்வதற்கு எந்தவித சிறப்பு படிப்புகளையோ, பட்டறிவோ பெற்றிருக்கவில்லை. இந்த ஆண்டுடன் என் பொறியியற் படிப்பை முடித்தும், ஆங்காங்கே பட்ட அறிவுகளை கொண்டே பின்வருபவற்றை சொல்லப்போகிறேன்.

பிளஸ் 2 முடிவுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் (மே 22) வந்துவிடும். உடனே பெற்றோர்களும் பிள்ளைகளும் எந்த விசயத்திற்கெல்லாம் கவலைப்படுவது என்றே கவலைப்பட ஆரம்பித்துவிடுவர். கல்லூரி படிப்பு என்றாலே ஒருசிலர் மருத்துவப் படிப்பை பயில விரும்புவர். வேறுசிலர் பட்டயக்கல்வி, அறிவியல் மற்றும் கலைசார்ந்த படிப்புகளை விரும்பி ஏற்பர். பலருக்கும் மருத்துவம் பயில ஆசைதான், இருந்தும் அதிக மதிப்பெண்கள் அல்லது அதிக பணமில்லாத காரணத்தால் அது எட்டாக்கனியாகவே பார்க்கப்படுகிறது. கலை, அறிவியல் படிப்புகள் ஒருவித தயக்கத்தோடு பார்க்கப்படுவதால் பெரும்பான்மையானோரின் பார்வை பொறியியற் படிப்புகளுக்கே திரும்புகிறது. ஒரு இடத்தில் பெரும்பான்மையானோர் சேரச்சேர அவர்கள் அறிவு சிறுமைப்பட்டு  போய்விடும் என்பது உண்மை.


பொறியியற் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்க தொடங்கின முதல்நாள் அதிகாலை நான்கு மணிக்கே கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிட்டது என்கிறது செய்தித்தாள்கள். இதிலிருந்தே புரிகிறது பெற்றோர்களின் இன்ஜினியரிங் மோகம். "கண் தெரியாத ஊரில் ஒற்றைக்கண்ணனே ராஜா" என்பது போல் எந்தெந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்? எதற்கு எதிர்காலம், வேலைவாய்ப்பு அதிகமென்று நாளிதழ்களும், டிவி சேனல்களும் போட்டிபோட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ஒருவிதத்தில் காசும், பப்ளிசிட்டியும் தேடிக்கொண்டு, ஏற்கனவே மாணவர்களின் குழம்பியக் குட்டையில் மீன் பிடித்து இன்னும் குழப்பிவிட்டே செல்கின்றனர்! இதற்குதாரணமாக நான் பொறியியற் கல்லூரியில் சேர்ந்த நேரத்தில் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் 'ஜெயப்ரகாஷ் காந்தி' என்பவர் மாணவர்கள் எடுக்கும் 'கோர்ஸ்'களின் ட்ரெண்டையே மாற்றியமைத்தார்! அவர் சொன்னார், “சாஃப்ட்வேர் துறை வீழ்ச்சியில் சென்றுக்கொண்டிருக்கிறது! எனவே யாரும் இனிமேல் கம்ப்யூட்டர் படிப்புகளை தேர்ந்தெடுக்காதீர்கள்! அனைவரும் மெக்கானிக்கல் படிப்பை நோக்கி ஓடுங்கள்!" என்று சொன்னார். இறுதியில் அதற்கு முந்தைய ஆண்டுகளில் முதலில் ECE, Computer Science, IT, Mech என்று கல்லூரிகளில் நிரம்பிக்கொண்டிருந்த 'சீட்'கள், அந்தாண்டிலிருந்து ECE, Mech, Computer Science என்று நிரம்ப ஆரம்பித்தது. நான்கு வருடம் கழித்து அதன்பலன் அனைவருக்கும் புரிந்தது வேலைவாய்ப்புகளில். மெக்கானிக்கல், சிவில் போன்ற CORE படிப்புகள் படித்தவர்கள் கூட சாப்ட்வேர் கம்பெனிகளான TCS, CTS, Wipro, Infy போன்றவற்றிலேயே பணிக்கு அமர்ந்தனர். "வேற்றுமையில் ஒற்றுமை" என்பதை நாம் நமது நாட்டிற்கு குறிப்பிடுவோம். ஆனால் இனிமேல் அதை இதுபோன்ற சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு குறிப்பிடுவது சாலச்சிறந்தது. ஏனெனில், பொறியியலில் நீங்கள் எந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும் கடைசியில் இத்தகைய கம்பெனிகளில்தான் தஞ்சம் புக வேண்டும் என்ற நிலைப்பாடே காரணம்.

இதற்கு காரணம் ஒரு தனிப்பட்ட நபர் என்று நான் குறை கூறவில்லை, அவர் கூறியது DOTE-1 கல்லூரிகளுக்கு வேண்டுமென்றால் பொருந்தலாம். ஆனால் மற்ற கல்லூரிகளின் நிலை? சில கல்லூரிகளுக்கு ஓரிரு கம்பெனிகளைத் தவிர வேறெதுவும் வராது. அத்தகைய கல்லூரிகளில் விருப்பமான துறையில் பயின்று விருப்பமான/படிப்பிற்கேற்ற வேலை என்பது 'கல்லூரி பிளேஸ்மெண்ட்'களில் இயலாத காரியம்! எனவே ' பிளேஸ்மெண்ட்' வருமா? என்று கேட்பதையும் சேர்த்து எந்தெந்த கம்பெனிகள் ' பிளேஸ்மெண்ட்'க்கு வரும்? என்பதையும் தெளிவுறக் கேட்டுக்கொள்ளுதல் அவசியம். பலர் தங்களது கவுன்சிலிங்கில் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுக்கும் விதம் "Name of the College, Location, Placement, Course" அல்லது "Course, Placement, Name of the College, Location". எனது விருப்பம் எதுவென்றால் "Name of the College, Placement, Course, Location" இதுவே எதிர்காலத்திற்கு சிறப்பாக அமையும்! அதன் காரணத்தை பின்வருமாறு குறிப்பிடுகிறேன்.


கல்லூரியின் சிறப்பு (Name of the College) :
என்னுடைய விருப்பப் படிநிலைகளில் பிடித்த 'துறை'க்கு (Course) முக்கியத்துவம் தராமல் கொடுத்திருப்பது போல் நீங்கள் உணரலாம். ஆனால் உண்மையில் அப்படியில்லை. என்னை பொறுத்தவரை முதலாவது சிறப்பான கல்லூரிக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்! சிறப்பான கல்லூரிகளே சிறந்த பொறியாளர்களை உருவாக்குகிறது! சிறப்பான கல்லூரியை விட்டுவிட்டு பிடித்த துறைக்காக கொஞ்சம் சுமாரான கல்லூரியை தேர்ந்தெடுப்பது சிறிது முட்டாள்தனமே. ஏனெனில் எந்த துறையாக இருந்தாலும் மூன்றாமாண்டு நான்காமாண்டே உங்களுக்கு அத்துறையைப் பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள முடியும். அப்பொழுது தெரிந்துக்கொள்வீர்கள் ECE படித்து முடித்ததுமே செயற்கைக்கோள் அனுப்பிவிட முடியாது, Aeronautics படித்தவுடனே விமானத்தை இயக்கிவிடமுடியாது,  Mechatronics என்றதுமே வசீகரனை போல் "எந்திரன்" தயாரித்துவிட முடியாது என்று விளங்கும். இதை நான் உங்களை மட்டுப்படுத்துவதற்காக கூறவில்லை, வாழ்வின் நிதர்சனத்தையே கூறுகிறேன். இதற்கு வருடாவருடம் படிப்பை முடித்து வருகின்ற லட்சக்கணக்கான பொறியாளர்கள் சாட்சி! இன்னொரு முக்கியமான விசயம். எக்காரணத்தை கொண்டும் அரசு கல்லூரிகளை விட்டுவிடாதீர்கள்! (உங்களுக்கு பிடிக்காத இடங்களைத் தவிர) ஏனெனில் அங்கே கல்லூரி கட்டணங்கள் குறைவு மற்றும் பலதரப்பட்ட அரசு சலுகைகள் கிடைக்கும் உதாரணமாக : ஸ்காலர்ஷிப், அரசின் இலவச திட்டங்கள்!.



வேலைவாய்ப்புகள் (Placements) :
நல்ல கல்லூரி என்றாலே தானாகவே வேலைவாய்ப்புகள் மிகுந்துதான் இருக்கும்! அப்படி சிறந்த கல்லூரி கிடைக்காதவர்கள் கவலைப்படாமல் எந்த கல்லூரிகளில் எந்தெந்த கம்பெனிகள் வந்துகொண்டிருக்கின்றது என்று விசாரிக்கவேண்டும். நான் சொல்வது சாப்ட்வேர் கம்பெனிகளான TCS. CTS, Wipro, Infy போன்றவை நீங்கலாக, அதாவது துறைசார்ந்த கம்பெனிகள். இதை விசாரிக்க அக்கல்லூரியின் Prospectus- நம்பக்கூடாது. ஏனெனில் அதில் தனது கல்லூரி வாட்ச்மேன் கூட "பிளேஸ்ட்" என்றே போட்டிருக்கும்! எனவே தெரிந்த சீனியர்களிடம் விசாரிப்பது நன்று.
துறைசார்ந்த கம்பெனிகள் என்றால் என்ன என்று இன்னும் குழப்பத்திலிருப்பவர்களுக்கு உதாரணத்திற்கு,

Electronics, Electricals Engineering-  Honeywell, Bosch etc.,
Mechanical Engineering- TVS, TAFE, Caterpillar, Mahindra, Ashok Leyland etc.,
Civil Engineering- Larsen & Turbo, Builders etc.,
Computer Science, IT Engineering- Microsoft, Yahoo, Amazon etc.,

இதுபோன்று துறைசார்ந்த வேலைவாய்ப்புகள் ஏராளம் உண்டு! எனவே சாப்ட்வேர் என்னும் வட்டத்திற்குள் அடைபட்டுக்கொள்ளாமல் யோசித்து கல்லூரிகளை தேர்வுச் செய்யவேண்டும்! 
துறைகள் (Courses/Departments) :
மேற்சொன்ன முதலிரண்டு படிநிலைகளில் தெளிவாக இருந்தால் துறைகளை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்படாது, மற்றும் கல்லூரி, வேலைவாய்ப்பு, துறை போன்ற பல்வேறு அளவுருக்கள் (parameters) ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாது! எனவே தெளிந்த மனதோடு துறைகளை தேர்ந்தெடுக்க விவேகம் வேண்டும். "எனக்கு கல்லூரி, வேலைவாய்ப்புகள் பற்றி கவலையில்லை! எனக்கு கணினியை பற்றி அக்குவேராய் ஆணிவேராய் தெரியும்! எனவே நான் கணினி துறையை தான் தேர்ந்தெடுப்பேன்!" என்று சொல்கிறவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், "யோசிக்காமல் தேர்ந்தெடுங்கள்! வாழ்த்துகள்!!". இதுபோன்றல்லாது சந்தேகத்துடன் இருப்பவர்கள் மேற்சொன்னப்படி செய்வதே சாலச்சிறந்தது.

இடம் (Location) :
இதுவும் நாம் கருத்தில் கொள்வதற்கான ஒரு முக்கியமான விசயம். வீட்டில் செல்லப்பிள்ளையாய் வளர்ந்தவர்கள், வெளியே தங்கி பழகாதவர்கள், பலவீனமானவர்கள், குறிப்பாக அதில் பெண்கள், இப்படி யாராவது இருந்தால் அவர்கள் தங்களது வீட்டின் அருகாமையிலிருக்கும் கல்லூரியையே தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் தற்போதைய காலகட்டங்களில் தற்கொலைகள் பெருகிக்கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மனஅழுத்தம். வீட்டிலிருந்தபடியே சென்றுவந்தால் மனவழுத்தத்தை வெகுவாகக் குறைக்கலாம்!
உங்கள் கருத்துகளை நிச்சயம் பதிவு செய்யுங்கள். இப்பதிவு பிடித்திருப்பின் உங்கள் நண்பர்களிடமோ அல்லது கவுன்சிலிங் எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களிடமோ கொண்டுபோய்சேருங்கள்! குறைகளிருப்பின் கருத்திலிடவும்! அல்லது manojreuben@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்!

நன்றி,
மனோஜ் ரூபன்
Twitter ID : @vandavaalam

Wednesday, March 7, 2012

கட்டதொரையின் கண்ணீர் விளக்கம் - பராசக்தி பார்ட் 2


இந்த முட்டுச்சந்து விசித்திரம் நிறைந்த பல கீச்சுகளை சந்திந்து இருக்கிறது, பல வில்லங்கமான ஹேண்டில்களை சந்தித்து இருக்கிறது.
ஆகவே, இந்த ஒரு நாள் தடை ஒன்றும் விசித்திரமானதல்ல.சந்தின் போக்கினிலே சர்வ சாதரணமாக கடலை போட்டு கொண்டு போகும் கட்ட்தொரைதான் நான்.
சந்திலெ குழப்பம் விளைவித்தேன், பெண்களிடம் கடலை போட்டேன், சங்க பயமக்கள் மென்ஷனுக்கு ரிப்ளை தவிர்த்தேன், இப்படி எல்லாம் நான் குற்றம் சாட்டபட்டிருக்கிறேன்.
இதை எல்லாம் நான் ங்கொப்புரான இல்லை என்று மறுக்கப்போவது இல்லை நிச்சயமாக இல்லை.
சந்திலே குழப்பம் விளைவித்தேன்,
ஏன் சந்து நாசமாய் போகவா? இல்லை சந்தில் சாபமாய் திகழும் சில ஃபேக் ஐடிகளை கண்டுகொள்வதற்காக.
பெண்களிடம் கடலை போட்டேன், ஏன் கடலை போட்டு ஃபாலொயர் சேர்க்கவா, அல்ல பெண்களின் சைக்காலஜி புரிந்து அவர்களை சங்கத்தில் சேர்க்க.
ஆள் பிடிக்க சந்தின் பல மூலைக்கும் சென்று கடலை போட்டேன்..ஏன்.. கட்ட்தொரையின் புகழ் பரப்பவா, இல்லை சங்கத்தின் புகழ் பரப்ப..!
லண்டன் தங்கையிடம் குடும்ப பாடல் பாடினேன், ஏன் எனக்கு பாட தெரியும் என காட்டவா, இல்லை, யூகே டூர் போகும் போது அங்கு ஓசியில் தங்க..!
ஜென்னிடம் பல டவுட்டுகள் கேட்டேன், ஏன்..ஜென்னு ஒரு டீகடை பன்னு , என்பதற்காகவா..இல்லை கணிபொறி சந்தேகங்களை தீர்த்து கொள்வதற்காக.
ஷேக்கிடம் மென்ஷன் போட்டேன், ஏன்..ஆண்ட்ராய்டு அடியாளாய் மாறவா, நிச்சயம் இல்லை..28,000ரு வாங்கின ஆண்ட்ராய்டு உபயோகிக்க தெரியாமல்..!
ஐயர் மாமியிடம் ஐடியா கேட்டேன், ஏன்...சுக்லாம்பரதரம் கற்கவா, இல்லை புதினா துவையலும், பருப்பு துவையலும் செய்ய கற்பதற்க்கா.
சில காலெஜ் ஃபிகர்களிடம் கடலை போட்டேன், ஏன்..கட்ட்தொர கட்டுகுலையாமல் இருக்கிறார் என காட்டவா..நிச்சயம் இல்லை..புதிய தலைமுறை எண்ணங்களை படிக்க.
அவ்ளவு ஏன் சில காலேஜ் லெக்ட்ரகளிடமும் டாக்டர்களிடம் கடலை போட்டேன்...ஏன் கட்ட்தொர படிப்பாளி என காட்டவா, நிச்சயம் இல்லை, சந்தில் இருக்கும் சில விஷமிகளை பற்றி விழிப்புணர்வு கொண்டுவர.
கார்க்கியிடம் கடலை போட்டேன், ஏன் அவரின் ஃபாலொயரை கவரவா, நிச்சயம் இல்லை..அவரிடம் இருந்து அவர் மொக்கையை சுட்டு வபாவில் வருவதற்காக.
கிளு கிளுப்பான சில போட்டோக்களை நடு இரவில் உலவ விட்டேன்..ஏன் அதுதான் பொழப்பு என்பதற்கா, இல்லை, யாருக்கும் தூக்கம் வரகூடாது என்பதற்காக..
பல்டாக்டரிடம் பல மொக்கைகள் வாங்கினேன், போலி டாக்டரிடமும் பல என்கவுண்ட்டர் வாங்கினேன். இன்று சங்கத்து ஆட்களாலெயெ குற்றம் சாட்டபட்டு குற்றவாளி கூண்டில் நிற்கிறேன்...!
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள்.......சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்சூண்டு பேக்குல பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள தர்ம அடிகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். தட்டிகொடுக்கும் குட்டுகள் இல்லை என் பாதையில், அடிவையிற்றில் கும்மாங்குத்துக்கள் விழுந்துருக்கின்றன.
குட்டு ஃபிகர்களோடு டேட்டிங் போனதில்லை. ஆனால் அட்டு ஃபிகர்களோடு சாட்டிங் செய்திருக்கிறேன். கேளுங்கள் என் கதையை..!
கேளுங்கள் என் கதையை! சந்து பெரியோர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே தமிழின தலீவர் பிறந்த ஊரில் பிறந்தவன் நான். (காலகிரகம் அதானலே எனக்கும் படிப்பு ஏறவில்லை) , பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? அபுதாபி..! எண்னைவயல்கள் நிறைந்த நாடு..! அது வயிறை வளர்த்தது. என்னை கட்ட்தொரை ஆக்கியது.
ஃபேஸ்புக்கில் (படிக்கவும் பராசக்தி பார்ட்-1) படுகாயமுற்று..ட்விட்டருக்கு தவழ்ந்து வந்து சேர்ந்தென்..!
வாய் உடைந்து வாழ்விழந்த வந்த என்னை வா என்றது ரேணிகுண்டா கேங்..! கேங்க்லி பெயரோ..சிவா..மங்களகரமான பெயர்..ஆனால் கண்ணத்தில் குழி விழுந்த அளவுக்கு க்கூட கண்களில் கருணை இல்லை. வாயில் கர்சிப் பொத்தி தூக்கி போய் சந்தில் போட்டனர்.
சங்க குல வழக்க படி என்னை ரெண்டு நாள் வைத்து அடித்தனர். குளத்தில் துணிதுவைக்கும் படிகட்டு போல அசையாமல் அடி வாங்கியதால், மேலும் நாலு நாள் மு.சந்தில் வைத்து அடித்தனர். கைகுறையவே..வெளியில் இருந்து ஆட்கள் கொண்டு வந்து மொத்தினர். ஒரு சத்தம்..ஹிம்..ப்வர்ஸ்டார் பாடியை கொண்ட நான் அனைத்து அடியும் அமைதியாய் வாங்கினென்..ஏழாவது நாள், அது ஒரு மாலை நேர மழைக்காலம்..இவ்ளோ அடிக்கிறீங்களே..உங்களுக்க்கு கை வலிக்கலியா..பாவம்..எனகேட்டேன்....யுதத்தை கீழெ போட்டு என்னை கட்டி கொண்டார் லீடர் சிவா..எத்தனையோ ரப்பர் பாடி பாத்துருக்கேன்..உன்ன மாதிரி ப்ளாடினம் பாடிய இப்போதான் பார்க்கிறேன்..என் சூர்யா..நீ..என் தளபதிடா நீ..என்னை கேங்கில் சேர்த்தார்..! ஒரு வருஷம் அடி வாங்கி கிடைக்க கூடிய லீடருக்கு தலைமை அடியாள் பதவி எனக்கு கிடைத்த்து..!

கேங்கின் குடிதாங்கியா, சந்தின் அடிதாங்கியாய் மாறிபோனேன்..அடுத்த மொழிக்காரனிடமும் வம்பு இழுத்து அடிவாங்கும் என் தனி திறமையினால் , சங்கத்து ஆள் பிடிக்கும் வேலை எனக்கு கிடைத்த்து. சந்து முழுக்க சுற்றினேன். நைட்டு கண்ணு முழித்து சுற்றினேன். ஸ்டைலிஷ், முர்ரவுசா, சாந்து போன்ற பர்சானலிட்டி ஆடுகளை சுற்றி வளைத்தேன்..! கேங்லி ரொமான்சா மாறி போனதால் நாலு முறை கெடா வெட்டு தள்ளி போனது..! நான் என் கடமையை செய்தேன்..ஆனால் சங்கம் தன் கடமையை செய்ய மறந்த்து..
கவுரவ தலைவர் செந்தில்லுகு டிஎம் அனுப்பி சோப்பு போட்டு தன் கேங்லி பதவியை காத்து கொண்டார் லீடர்.
சந்தில் ஆள் பிடிப்பதால் குற்றவாளி ஆக்க பட்டேன்..விரட்ட பட்டேன்..ஓடினென்..ஓடினேன்..என் அக்கவுண்டை டிஆக்டிவேட் செய்ய
ஜாக்கு வீட்டுக்கு ஓடினேன்..அவர் வீட்டு செக்யுரிட்டி அலவ பன்னாததால் திரும்பி வந்துவிட்டேன்.
கட்டழகு கட்ட்தொரயை அடியாளாய் மாற்றியது யார் குற்றம். விதியின் குற்றமா..இல்லை வில்லங்கமாய் டி எம் குடுத்து என்னை வலையில் மாட்டி விட்ட வீணர்களின் குற்றமா?
கட்ட்தொர கடலை மட்டுமே போடுவார் , அவர் பெயரை கடலை தொர என மாற்றவேண்டும் என கொடி பிடித்து என் மானத்தை வாங்கியது யார் குற்றம். இந்த கட்ட்தொரையின் குற்றமா..இல்லை சங்க கயவாளிகளின் குற்றமா.?
நடு நிசியில் வரவைத்து நநிகியாக போட்டு அதை என் தலையில் போட்டு சந்தை பரங்கி மலை ஜோதியாக மாற்றியது யார் குற்றம். இந்த கட்ட்தொரையின் குற்றமா..இல்லை..இல்லை காலெஜ் கட் அடித்து அட்டு படம் பார்க்கும் வீணர்களின் குற்றமா..!!?
சங்க பெரியொரெ..முக்கியமாக இளம் பெண் கீச்சர்களே..எனக்கு ஒரு நியாயம் பெற்று தாருங்கள். திரும்பி போனால் ஃபேஸ்புக்கிலும் ஆட்டத்திற்க்கு சேர்த்து கொள்ள மாட்டார்கள். கூகிள் ப்ளஸ் ஒரு எழவும் புரியவில்லை.
நீதி வேண்டி நடு சந்தில் சந்தி சிரிக்கும் , கட்ட்தொர..!