Thursday, May 24, 2012

பெருநகர லொம்பலங்கள்



      மெட்ரோபொலிட்டன் சிட்டில வேலை கிடச்சு வந்துட்டா இங்க என்னமோ நாங்க ரெக்க கட்டிப் பறந்துகிட்டு இருக்கிறமாதிரி நம்பும் அப்பாவி அம்மாக்களே, அப்பாக்களே, இன்ஜினியரிங், ஆர்ட்ஸ் மற்றும் இதர படிப்புகள் படித்துக் கொண்டிருக்கும், படிக்காமல் ஏதோ பண்ணிக் கொண்டிருக்கும் உடன்பிறப்புக்களே உங்களுக்காக ஒரு பெருநகர அடிமையின் உண்மை வாக்குமூலம்.  
     
எதையோ படிக்கிறோம்...படிச்ச படிப்புக்கு வேலை தேடுறோமே தவிர பிடிச்ச வேலைய தேடிக்கிறதில்ல. சொல்லப்போனா எந்த திக்கு திசையும் தெரியாம அக்கரைக்கு இக்கரை பச்சையா (அட இங்க பச்சப் பெயிண்ட் அடிச்சா சுவருதாங்க இருக்கு) இருக்குன்னு அடுத்த பஸ் ஏறி பெங்களூரோ, சென்னைக்கோ வந்துர்றோம். இங்க நாங்க லொம்பலப்படுவது கடவுளுக்குத்தான் வெளிச்சம். இந்த அடிமை குப்ப கொட்டுமிடம் பெங்களூரு. 

சில அனுபவ பகிர்வுகள்.. இதையும் கொஞ்சம் கேட்டுட்டுப் போங்க...
   
1.   இங்க பேச்சிலர்ன்னா தெருநாய் கூட மதிக்காது. ஹவுஸ் ஓனர் மட்டும் மதிப்பானா.? வீடு கிடைக்காது..அப்டியே கிடைச்சாலும் ஹவுஸ் ஒனர்ஸ் பண்ற அலும்பு இருக்கே.. சொல்லி மாளாது.

2.   ஊர்ல ஒடுற தண்ணில குளிச்சவன் இங்க குடிக்கிற தண்ணிக்கு காசு குடுத்து கேன்ல அடைச்சி வாங்கணும்.

3.   நீங்க குளிக்கும் போது பாதில தண்ணி நின்னு போகலாம். துண்டக் கட்டிட்டு ஹவுஸ்ஒனர்ட்ட, காவேரி தண்ணிய கர்நாடகாவுட்டருந்து வாங்குற தமிழகம் மாதிரி கெஞ்சிக் கூத்தாடி வாங்கி மீதிக் குளியலப் போடணும்.

4.   வீட்லருந்து நாலு பேரு நம்மளப் பாக்க வந்தா ஹவுஸ் ஒனர்ட்ட ரெஸ்பெக்டெட் ஸார்ன்னு ஆரம்பிச்சு ஒரு பெர்மிஸன் லெட்டர் வாங்கணும். இல்லேன்னா பொசுக்குன்னு வீட்லருந்து வந்தவைங்களோட சேர்ந்து நம்மளையும் வீட்டக் காலி பண்ண சொல்லிருவாய்ங்க.

5.   மொழி - பெங்களூர் வந்துட்டா “திரைகடல் ஓடித் திரவியம் தேடித்தான் ஆகணும்.” இல்லைன்னா பல இடங்களில் நீங்க ஏமாற வேண்டியிருக்கும்.

6.   ட்ராஃபிக்- நம்ம ஊர்ல பீக் ஹவர்ஸ்லதான் ட்ராஃபிக். இங்க நடு ராத்திரி மட்டும்தான் டிராபிக் இருக்காது.

7.   யாராச்சும் தெரிஞ்சவங்க பெங்களூர்ல இருக்காங்கன்னு தெரிஞ்சா அவிங்கள சொந்த ஊர்ல, திருவிழால, கெடாவெட்டு, காதுகுத்துன்னு வந்தா பாத்துக்கணும். பெங்களூர் ட்ராஃபிக்ல ஒரு இடத்திலருந்து இன்னொரு இடம் போயி வர்றது கண்டம் விட்டு கண்டம் தாண்டுற மாதிரி.

8.   பல பேரு என்னப் போல தூங்கா நகரத்துலருந்து வந்துருப்பாய்ங்க... இங்க இவ்ளோ பெரிய பெங்களூரு நைட்டு 8மணிக்குத் தூங்கிரும், காலேல 6மணிக்குத்தான் எந்திரிக்கும்.

9.   மவனே பத்து மணிக்கு மேல மெஜெசிட்டிக் பஸ் ஸ்டாண்ட்ல மாட்டுன அம்புட்டுத்தான். பஸ்சே கிடைக்காது. கெடச்சாலும் கடைசி பஸ்ஸப் பிடிச்சுப் போறதுக்கு பஸ்ஸுக்கு 300பேர் வீதம் இருப்பாய்ங்க.

10. எங்க ஏரியாக்கு கடைசி பஸ்ஸ விட்டுட்டா தும்கூர் பஸ்ஸப் பிடிச்சு வழில இறங்கணும். அதெல்லாம் பெரிய காரியம். கண்டக்டர் மனசு வைக்கணும்.

11. அடுத்து ஆட்டோகாரய்ங்க. இதயம் பலவீனமானவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் யவரேனும் இருந்தால் ஆட்டோ பிடிக்கும் முன் மனதை திடப் படுத்திக்கொண்டு பேரம் பேச வேண்டும். ராத்திரி 11 மணிக்கு ஆட்டோக்காரய்ங்க கேக்குற விலையப் பாத்தா வீட்டுக்குப் போகத்தோணாது. ஐ‌சி‌சி‌யு.,க்குதான் போகணும். (மீட்டர் போட்டு கூட்டிச் செல்லும் மிகச் சில நல்லவர்களும் உண்டு.)

12. பெங்களூர் பெண்களூர்தான். பார்க்க, ரசிக்க. அவ்வளவே! பராமரிப்பு அதிகம்டோய். நமக்கு சொத்த வித்தாலும் அதுங்கள மேய்க்க முடியாது.

13. அம்மா வச்ச குழம்பு விளங்கலேன்னு சொல்லிட்டு வந்தவன இங்க ஹோட்டல் சாப்பாடெல்லாம், அம்மா விட்ட சாபமா வெப்பன் மாதிரி வந்து தாக்கும்.

14. நீங்க வேடிக்க மட்டுமே பாக்கணும்ன்னு கிளம்பினாலும் உங்க பர்ச வேட்டு வைக்க இங்க பல இடங்கள் இருக்கு.

15. இங்க வாங்குற சாலரி மட்டும் கேட்டுட்டு வாயப் பிளக்க வேண்டாம். செலவையும் சேர்த்து கேட்டுட்டுப் பேசுங்க.

16. ஒரு தரம் வீட்லருந்து அப்பா,அம்மா கிளம்பி வந்துட்டா நீங்க ஊர் சுத்தி காமிக்க பேங்க்ல லோன் அப்ளை பண்ண வேண்டிவரும். நம்மூர்ல சித்திரத் திருவிழா முழுசும் காமிச்சாலும் அம்புட்டு செலவு ஆகாது.

17. காச்சல், தலவலினா பாட்டி வைத்தியமோ, சித்த வைத்தியமோ, நாட்டுக்கட்ட வைத்தியமோ ஏதோ கைவசம் தெரிஞ்சு வச்சுக்கோங்க. நீங்க ஹாஸ்பிடல் போயி செலவழிச்சு வர்ற காசுக்கு ஊருக்குப் போயி நாலு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு திரும்ப வந்துறலாம்.

18. செல் - எப்போதும் கவனி. செல் திருடர்கள். என்னா ப்ரொஃபஷனலிசம்ப்பா. கண்டே புடிக்க முடியாது. நீங்க பெங்களூர்ல எங்க சுத்தினாலும் காஸ்ட்லியோ/சொத்தையோ செல் பேசி கவனம்.
(திங்கக்கிழமை அதிகமா செல்போன் திருட்டு போகும்.எதாச்சும் கொலசாமிக்கு வேண்டுதலான்னு தெரியல.. அன்னிக்கு மட்டும்  செல்போன் அடிச்சிட்டுபோக கும்பலா கட்டுச்சோறு கட்டிட்டு கெளம்பி வருவானுங்க..)

19. இங்க முக்குக்கு முக்கு கோவில் இருக்கோ இல்லையோ வைன் ஷாப் இருக்கு. ரேட் டாஸ்மாக்க விட அதிகம்தான்.

20. இங்க பைக் வாங்குறதுக்கு சைக்கிள் வாங்கிட்டுப் போயிறலாம், ட்ராஃபிக். அப்பிடியே பைக் வாங்கினாலும் நம்ம ஊரு ரிஜிஸ்டிரேசன் வண்டி ஒவ்வொரு சிக்னலுக்கும் ப்ரேக் அடிக்க வேண்டியிருக்கும். மைலேஜோட மணியும் குறையும்.

21. வீடெல்லாம் காலி பண்ணினா நீங்க குடுத்திருந்த அட்வான்ஸ் வரும்ம்.. ஆனா வராது.

22. பக்கத்து வீட்டுக்காரன் செத்தாதான் அப்பிடி ஒருத்தன் இருந்தான்னே நமக்குத் தெரிய வரும்.

23. எதுத்த வீட்டுல கல்யாண விருந்துன்னாலும் கூட கூப்ட மாட்டாய்ங்க.

24. நீங்க கல்யாணமும் பண்ணி உங்க குழந்தைய ஸ்கூல் சேக்கணும்ன்னா. . . ஹய்யோ..ஹய்யோ ஒரே குய்யோ முய்யோதான்.

இதெல்லாம் சாம்பிள்தான். மெயின் பிக்சர் இங்க வந்தாத்தான் தெரியும். வாங்கடி வாங்க. யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெருக. பெருநகரமாம் பெங்களூரு அன்புடன் வரவேற்கிறது.

அம்மாதான் ஆடு, மாடு தருதே. முடிஞ்சா நீங்க ஊர்லயே இருந்து மேயிங்க. இல்ல என்னட்டக் குடுங்க நான் வந்து மேக்கிறேன்.
இங்க ஒன்னும் முடியல சாமியோவ்...

கடோசியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லி முடிச்சிக்குறேன்- நாய்க்குத் தெரியாது பேயோட பாடு... பேய்க்கு விளங்காது நாயோட பாடு... அதனதன் கஷ்டம் அதனதனுக்கு.!!

தங்களன்புள்ள,

ஜெகன் ஜீவா @

22 comments:

  1. முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் மச்சி..நல்லாருக்கு..தொடர்ந்து எழுதிட்டே இருக்கணும்..
    இந்த போஸ்ட்ல எனக்கு ரொம்ப புடிச்சது வெள்ளந்தியான மதுரை பாஷையிலான நடை..குறிப்பா "லொம்பலங்கள்" போன்ற வார்த்தை..
    ஊர்பக்கம் பேசி கேக்குற மாதிரியே இருக்கு.. வாழ்த்துக்கள் மீண்டும்.!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா. . . இங்க வந்து நிறைய வார்த்தைகள மறந்து போயிட்டேன். என் மதுரைத் தமிழ் மறக்குது. :( நன்றி கேங்க் லீ. :)

      Delete
  2. அருமையான பதிவு :)) உண்மைகளை நகைச்சுவை சேர்த்து எழுதியுள்ளமை சிறப்பு :)) மேன் மேலும் நல்ல பல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. குமுறிக் கொட்டிருக்கியேப்பா!

    ReplyDelete
    Replies
    1. அம்புட்டு அடி வாங்கிருக்கேன் அண்ணே :)

      Delete
  4. பேச்சிலர் கொடுமையின் முகவரியே... :)))

    ReplyDelete
    Replies
    1. தக்காளி எவனும் இந்தப் பக்கம் தல வச்சுக் கூடப் படுத்துறாதீங்க :)

      Delete
  5. மச்சி அருமையான பதிவு... பெங்களூர் பெருநகர பேச்சிலர் வாழ்க்கையின் அவலங்களை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளது உன் பதிவு..தொடர்ந்து இதே போல் எழுத வாழ்த்துக்கள் நண்பா...கீப் இட் அப்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா. . . நன்றி பாஸ் :)

      Delete
  6. நல்லா இருக்குயா!

    ReplyDelete
  7. அருமை... ஒவ்வொரு பாயிண்டும் நச்.. தொடர்ந்து எழுதவும்..

    ReplyDelete
  8. சூப்பரப்பு.எல்லாத்தையும் கவர் பண்ணிடீங்க.வாழ்த்துக்கள் 'பெண்கலூரை' பற்றி இன்னும் விரிவாக எழுதி இருக்கலாமோ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விருப்பம் என்ன? அவ்வாரே எழுதுகிறேன் :)

      Delete
  9. அப்போ பெங்களூர் கு உங்கள மாதிரி ஆள நம்பி வரகூடாதுன்னு சொல்லறிங்க ..?

    ReplyDelete
  10. நீங்கள் இங்கே சொன்ன விஷயங்கள், நான் ஐந்து ஆண்டுகளாக அனுபவிக்கும் உண்மைகள்.தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
    Replies
    1. சேம் பிளட். :) தேங்க்ஸ் பாஸ்

      Delete
  11. சூப்பரு .. தொடர்ந்து எழுதுவும்

    ReplyDelete