விரைவில் திருமணம்
ஆகவிருக்கும் பேச்சிலர்களுக்கு அறிவுரையாக இதை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது
எனக்கும் என் நண்பர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்களின் பகிர்தலாக இதை எடுத்துக்
கொண்டாலும் சரி.
இன்றைய மொபைல்
மற்றும் இணைய உலகில் திருமணம் நிச்சயக்கப்பட்ட அல்லது அதற்கு முன்பிருந்தேகூட
உட்பீ என அழைக்கப்படும் மணப்பெண்ணிடம் கடலை வறுக்க ஆரம்பித்துவிடுகின்றனர் இன்றைய இளைஞர்கள்.
இன்னமும் இங்கு பெண்களுடன் பழகுவது ஆச்சர்யமாகவும், வரமாகவும், கிடைத்தற்கரிய ஒன்றாகவும்
இருப்பதால் ஏதோ ஒரு லைசன்ஸ் கிடைத்துவிட்டது போலவே நினைத்து அவரப்படுகிறார்கள். நாசூக்காக
அணுகாமல் உழுது புரண்டு அவசரப்படுவது அசிங்கமாய் வெளியே தெரிவதைப் பற்றியெல்லாம்கூட
கவலை படாமல் கடலைகள் வறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படியெல்லாம் செய்துவிட்டு
திருமணத்திற்கு பின் அந்த மோகம் முடிந்த பின் அப்பெண்ணின் மனதில் தொடரும்
ஏக்கங்களை பற்றி புரிந்து கொள்ளாமல் காயப்படுத்தி விடுகிறார்கள்.!
சரி விஷயத்திற்கு
வருகிறேன்.
திருமணம் நிச்சயமான
ஆண்கள் என்னவெல்லாம் செய்யலாம். முக்கியமாக என்னவெல்லாம் செய்யக் கூடாது. இது
இறுதியான விதியல்ல. பல விஷயங்களை கருத்தில் கொண்டு மாறலாம். பின்விளைவுகளுக்கு
கம்பெனி பொறுப்பல்ல...
*எடுத்த உடனேயே அதிகம்
பேசாதீர்கள். எடுத்த உடன் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்துவிடாதீர்கள். மொபைலில்
அழைத்து பேசுவதாய் இருந்தாலும் சரி அல்லது நேரில் சென்று பார்ப்பதாய் இருந்தாலும்
சரி தொடர்ந்து நீங்களே ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுக்காதீங்க. இருமுறை நீங்கள் அழைத்தால்
ஒருமுறை அவர் அழைக்கும் வரை பொறுத்திருங்கள். எப்போது பார்த்தாலும் அவரே அழைக்க
வேண்டும் என்றும் எதிர்பார்க்காதீர்கள்.
*எப்போது
வேண்டுமானாலும் பேசலாம் என்ற பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். பேசுவதற்கு என
குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். அவசர விஷயமாக இருந்தால் இடையில் அழைக்கட்டும். வழக்கமான
கடலைகளுக்கு அலுவலக நேரங்களை தவிர்த்திடுங்கள். நாளை திருமணத்திற்கு பின்
எதேச்சையாக அலுவலக நேரத்தில் நீங்கள் அவரது ஃபோன்காலை தவிர்க்க நேர்ந்தால் அது
பிரச்சனையாகும். ஆகவே ஆரம்பம் முதலே அலுவலக நேரத்தில் போன் கால்களை
கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவும்.
*உங்களை
பற்றி
சொல்லும் முன்னர் முதலில் பெண்ணை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளுங்கள்.
அவரது
சமூகசூழலை நன்கு அறிந்து அந்த அளவிற்கு உங்களை வைத்து பேசுங்கள்.வாயை
வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் மாடர்ன் தாட்ஸ் இருப்பது போல காட்டிக்
கொள்ள உங்களின்
அலப்பறைகளை அவிழ்த்து விடாதீர்கள். உதாரணத்திற்கு, "நான் இன்னிக்கி
ஃப்ரெண்ட்ஸொட சேர்ந்து
தண்ணியடிச்சேன்.." , "என் கேர்ள் ஃப்ரெண்டுடன் சினிமாவிற்கு போனேன்..."
என்பன போன்ற
விஷயங்கள் திருமணத்திற்கு பின்னரோ ஏன் சில சமயங்களில் திருமணத்திற்கு
முன்னரேகூட
தன் சனீஸ்வர வேலைகளை காண்பிக்க ஆரம்பிக்கும். எதையெல்லாம் பேச வேண்டும்.
எந்த அளவு
பேச வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
*உங்கள் எதிர்கால மனைவியின்
உறவினர்கள் தோழிகள் பற்றி கமெண்டுவதை தவிர்ப்பதே சாலச்சிறந்தது. ஹாஸ்யம் என
நினைத்து அவரது அப்பா, அம்மா, தம்பி, தங்கை பற்றி நீங்கள் இப்போது செய்யும்
விமர்சனங்கள், முக்கியமாக அவர்களது உருவம் பற்றி செய்யும் கிண்டல்கள்
பின்நாட்களில் வானவேடிக்கைகளாக வெடிக்கும் அபாயம் இருக்கிறது.
உங்களின் எதிர்கால மனைவி எத்தனைதான் ஓபன் டைப்பாக இருந்தாலும், எக்காரணம் கொண்டும் அவரது அழகை
யாருடனும் ஒப்பிடாதீர்கள். முக்கியமாக அவரது தோழிகள், உங்களது தோழிகள், உங்கள்
வீட்டில் உள்ளவர்களுடன் ஒப்பிடாதீர்கள். பிற பெண்களின் குணங்களை பற்றி உயர்த்தி
அடிக்கடி அவரிடம் பேசாதீர்கள்.
*மிக முக்கியமான்
விஷயம். உங்கள் நண்பர்களை பற்றி பேசாமல் இருப்பது நல்லது. அப்படியே பேசித்தான்
ஆகவேண்டுமெனில் நல்ல விஷயங்களை பற்றி மட்டும் சொல்லுங்கள். உண்மையாக இருக்கிறேன்
என நண்பர்களை பற்றிய உண்மைகளையெல்லாம் சொல்லிவிட்டு பின்னர் அவர் உங்கள் மனைவியான
பின்னர் உங்கள் நண்பர்களை மதிக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.
*இது மட்டுமில்லாமல்
அதிக செலவாளி என பெயர் வாங்கிவிடாதீர்கள். உங்களை பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமில்லாமல்
உண்மை நிலவரங்களை ஓரளவு இலைமறை காயாகவாவது தெரிவியுங்கள். உங்கள் குடும்பத்தில்
இருப்பவர்களை பற்றி தவறாகவோ அவர்கள்மேல் உங்களுக்கு இருக்கும் வெறுப்புகளையும்
கண்டிப்பாக கூறாதீர்கள். உங்களுடைய அந்தரங்கங்கள் எல்லாவற்றையும் உடனேயே
ஒப்புவிக்க வேண்டும் என்று அவசியமில்லை.
*மெதுவாக, நிதானமாக ஒரு
புரிதலை ஆரம்பியுங்கள். செக்ஸ் பற்றியெல்லாம் பேசவும் அனுபவிக்கவும் நிறைய காலம்
இருக்கு திருமணத்திற்கு பின்னர். ஏற்கெனவே முடிவு செய்த விஷயமென்றாலும் அதில்
மெல்ல மெல்ல காதல் பூக்கச்செய்ய கிடைத்த கால அவகாசம்தான் நிச்சயத்திற்கும்
திருமணத்திற்குமான இடைவெளி.
*மொபல் போன் இல்லாத
காலகட்டத்தில் என் நண்பர் ஒருவர் STD பூத்தில் அக்கவுண்ட் வைத்து மாச சம்பளம் வந்ததும் 3000-4000 வரை செட்டில் செய்தார் அந்த நான்கு மாதமும்.
*அழைக்கும் போதெல்லாம்
பேசிவிட்டு இப்போது வேலை இருக்கு அப்புறம் அழைக்கிறேன் என சொல்லும் நாளெல்லாம்
வாங்கி கட்டிக்கொள்கிறேன் நான்.
*அவன் நல்லவனாக,
ஹீரோவாக மாற எங்களை பற்றிய குறைகளை விளையாட்டாய் சொல்லி, திருமணத்திற்கு பின்
ஏதேனும் உதவி என்றால்கூட எங்களை அழைக்க முடியாமல் தனியாகிவிட்ட நண்பன் ஒருவனும்
இருக்கிறான்.
இப்படியாக பல
இருக்கிறது. இது ஒரு டெஸ்டிங் பீரியட். இதை ஜாக்கிரதையாக கடக்க வேண்டும்.
இனிய திருமண
வாழ்க்கைக்கு வாழ்த்துகள் நண்பர்களே....
அன்புடன்,
செந்தில் நாதன் @senthilchn
அட்வைஸே புடிக்காது! அதிலும் காஞ்சமாட்டுக்கு கம்மங்கொள்ளைய காமிச்சிட்டு அஞ்ஞானி மாதிரி இருக்கச்சொன்னா எப்புடி?
ReplyDeleteநம்ம பெயக அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாய்ங்கய்யா!
அவ்வ்வ்வ்..ஒவ்வொரு பாயிண்டுமே எனக்குன்னு யோசிச்சி, ஒக்காந்து எழுதுனா மாதிரியே இருக்கு தல..
ReplyDeleteஅதுவும் அலுவலக நேரத்துல ஃபோன் பேசுறதை பத்தி சொல்லியிருக்கறது 101% உண்மை..
இதுக்கு கமெண்ட் போடுற அளவுக்கு நான் வளரல, ஆவ்வ்வ்வ் #ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது இது குணாவுக்குன்னே எழுதினது குணாவுக்கு மட்டும் தான் :-))
ReplyDeleteதல சூப்பரு. நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடைபட்ட காலத்தில் அளவோடு பேசுதல் நன்மையே. எல்லாம் முடிச்சதுக்கு அப்பறம் cc to குணா மாப்பினு போட்ருக்கலாம் :-))
ReplyDeleteசிறந்த அனுபவ பகிர்வு ...எல்லாமே உண்மை...வாழ்த்துகள் நல்லதொரு பதிவுக்கு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஐயோ தல இது காதலர்களுக்கும்னு சேர்த்திருந்திருக்கலாம் //எனக்கு மிகவும் பிடித்தது இந்த பதிவு //..சூப்பர்
ReplyDeleteஇன்றைய இளைஞர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள். மிக்க நன்றி @senthilchn தல..
ReplyDeleteஹி ஹி ஹி. மொத்தத்தையும் கல்யாணம் முன்னாடியே பண்ணிட்டா கல்யாணத்துக்குப் பின்னாடி மூலைக்கு ஒருத்தரா உக்காந்துக்க வேண்டியதான்.
ReplyDeleteஆல் பாயிண்ட்ஸ் ஆர் குட். பட் டிஃப்பிகல்ட் டூ ஃபாலோ அண்ணே.
யாரும் கேக்காட்டாய்ங்க. :)
Super naanum intha advice ah kandippa follow pannuven thanks for sharing
ReplyDeleteஆமா தல, சீசன் ஒன்னு நல்லா இருந்து, பிறகு சீசன் டூ நம்ம நடவடிக்கை மாறுச்சுன்னா செம காண்டாகுறாங்க.
ReplyDeleteச.திருநாவுக்கரசு.