Saturday, June 23, 2012

அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -3)

மிரட்டல் அடி பார்ட் ஒன்னு, ரெண்டெல்லாம் முடிஞ்சி மூனாவதா வாத்திமார்கள் கதை..
 

இதுல என்னோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, பொதுவா ஒரு பள்ளிக்கூடத்துல ரொம்பவே சாதுப்பிராணிகளா சில வாத்தியார்கள் இருப்பாங்க இல்லையா.. அவங்களையே ஸ்கூல் கொள்ளாத அளவுக்கு மிரள வைத்து வாங்கிக் கட்டிக்கொள்வது என்னோட ஸ்டைல்.

வாத்திமார் கதை-1:


இது நான் ஏழாப்பு படிச்சிட்டு இருந்தப்போ நடந்த, நீதிபோதனை + வரலாறு வாத்தியார்கிட்ட வாங்குனதப் பத்தின வரலாற்று நிகழ்வு.
இவரப்பத்தி சொல்லனும்ன்னா, ஒரு கொசு அவரக் கடிச்சாக்கூட அத அடிக்காம தொரத்திதான் விடுவாரு.. அந்தளவுக்கு ஜீவகாருண்யரு..
அந்தநாள்..அதுவொரு அடித்து விளையாடுவதற்கு மிகவும் சாதகமான கிளியர் சன்னி டே..அந்தநாளின் கடைசி பீரியட் அது.

நம்ம சார் திபெத் பீடபூமியைப் பத்தி ஆத்து ஆத்துன்னு ஆத்திட்டுருந்தார் சொற்பொழிவ.. பாடத்தோட பாடமா "திபெத் பீடபூமிதான் உலகத்துலேயே பெரிய பீடபூமி.." அப்படின்னு ஒரு பொது அறிவுத்தகவலை அவரு சொல்லவும் "சார்..திபெத் பீடபூமி எங்க சார் இருக்கு..?" அப்படின்னு கூட்டத்திலிருந்து ஒரு இனிமையான கானக்குரல்..
ஆமாங்க.. யூ ஆர் அப்சலூட்லி கரெக்ட்..என்னோட குரல்தான்..
நான் என்னமோ தெரிஞ்சுக்கனுங்கற ஆர்வத்துலதான் கேட்டேன்..
ஆனா நான் கேட்ட டோன் பசங்களுக்கு எப்படி இருந்துச்சோ தெரியல..
ஹோல் கிளாசும் ஹோல்சேலா சிரிச்சுடுச்சி..

அதப்பாத்துட்டு அம்பி வாத்திக்குள்ள இருந்த அந்நியன் முழிச்சிக்கிட்டான்.. நம்மாளு என்னை தொவதொவன்னு தொவச்சி, காய வெச்சி, அயர்ன் பண்ற அளவுக்கெல்லாம் போயிட்டார்..
நல்லவேள, அந்த நேரம் பாத்து எவனோ ஒரு புண்ணியவான் கடைசி பெல்-ல அடிச்சான்..இல்லேன்னா, அன்னிக்கே அவரு என் வாழ்க்கைக்கு கடைசி பெல் அடிச்சிருப்பாரு..

இந்த கும்பிபாக கும்பாபிஷேகம் முடிஞ்சதும் பசங்ககிட்டே "எதுக்குடா அப்படி சிரிச்சீங்க.?"-ன்னு கேட்டா, "பின்ன.. நீயெல்லாம் டவுட்டு கேட்டா சிரிக்காம என்ன செய்யறதாம்.?"-ன்னு சிரிக்காம காமெடி பண்ணுனானுங்க.. சரி விட்ரா..விட்ரா சூனா பானா.. நீ சந்தேகம் கேட்டு, பிற்காலத்துல கலெக்ட்டரா வர்றது எவனுக்கும் புடிக்கலை போல'ன்னு எனக்கு நானே தாறுமாறா ஆறுதல் சொல்லிக்கிட்டு, புண்பட நெஞ்சை பண்படுத்தும் விதமா செட்டுக்காரண்ணன் கடைல நாலு தட்டுவடை செட்டு வாங்கி சாப்ட்டுக்கிட்டே வீட்டுக்கு போயிட்டேன்..



வாத்திமார் கதை-2:
நான் எட்டாவது படிச்சிட்டு இருந்தப்போ நடந்த வைபவம் இது..
இந்தமுறை கதையின் நாயகன் எங்க தமிழாசிரியர் பரமேஸ்வரன் ஐயா..
எல்லாப் பசங்களுக்கும் பிடித்த ஆசிரியர்..எனக்கும்..ரொம்ப..
மிக அருமையாக,நகைச்சுவை கலந்து தமிழ் சொல்லித்தருவார்.
மற்ற பாடவேளைகள் எப்படா முடியும் என நினைக்கும் நாங்கள், இவர் பாடவேளை மட்டும் எப்படா வரும் என காத்திருப்போம்..
அந்த காலத்திலேயே பொதிகை தொலைக்கட்சியில் பட்டிமன்றமெல்லாம் பேசியிருக்கிறார்.
இன்று வரைக்கும் நான் மதிக்கும் ஆசிரியர்களில் முதன்மையானவர்.
ஆனா..
நம்மோட ஜெகத்தலபிரதாபத்தை பார்த்து அசந்துபோய் இவரும் நமக்கு பரிசில் வழங்கியிருக்கிறார்.

இனி, over to சம்பவம்.

அது ஒரு காலாண்டுத்தேர்வோ..இல்ல..அரையாண்டுத்தேர்வோ நடந்துட்டு இருந்த சமயம்.எங்க ஸ்கூல்-ல எப்படின்னா, முழு பரீட்சை தவிர மற்ற தேர்வுகளுக்கு, ஒரு நீள டெஸ்க்கில் மூன்று பேர் வீதம் அமர வைத்து தேர்வு நடக்கும். அதாவது டெஸ்கின் இரண்டு பக்கமும் ஒரே வகுப்பை சேர்ந்த மாணவர்கள்.நடுவில் வேறு ஒரு வகுப்பை சேர்ந்த மாணவன்.

சம்பவதன்னிக்கு, எனக்கு இரண்டு பக்கமும் +2 படிக்கும் அண்ணன்கள்.
நடுவில் நான். ஹால் சூப்பெர்வைசர் நம்ம கதை நாயகன்.
+2 பசங்க ரெண்டு பேரும் அவங்க கொஸ்டின் பேப்பேர்ல ஒன் வோர்ட் ஆன்சரெல்லாம் டிக் பண்ணி நடுவுல இருந்த என் மூலமா பாஸ் செஞ்சிட்டு இருந்தாங்க. எங்க ஸ்கூல்-ல இது மாதிரி வழக்கமா நடக்கறது தான்..
சின்ன கிளாஸ் படிக்கற பசங்க பெரிய கிளாஸ் அண்ணன்களுக்கு பயந்துட்டு இதை செய்வாங்க. நான் அப்போல்லாம் கொஞ்சம் பயந்த சுபாவன்.(இப்போ எப்படினெல்லாம் கேக்க கூடாது...)

மேலும் அடுத்தவங்களுக்கு உதவி செய்யனுங்கற நல்லெண்ணெய் ச்சை.. நல்லெண்ணம் அந்த சின்ன வயசுலேயே எனக்கு மேலோங்கி இருந்ததால அவங்க ரெண்டு பேருக்கும் என்னாலான சிறு உதவியை செஞ்சிட்டு இருந்தேன். அதுல பாருங்க.. என்னோட இந்த உதவி செய்யற குணம் நம்ம கதாநாயகனுக்குப் புடிக்கலை போல..
இதை நோட் பண்ணிட்டு என்கிட்ட வந்த அவர்,
டெஸ்குல இருந்து என்னை வெளியே இழுத்து மொதல்ல கன்னத்துல ரெண்டு அப்பு அப்பினார். அப்புறம் கொஞ்ச நேரம் முடியை புடிச்சு ஆட்டினார்.
அப்புறம் குனிய வைத்து முதுகுல ரெண்டு சாத்து சாத்தினார்.
அப்புறம் நிமிர வைத்து திரும்பவும் கன்னத்துல ரெண்டு அப்பு அப்பினார். அப்புறம்..
---
---
---
சரி விடுங்க.. என் சோகம் என்னோட போகட்டும்...

ஒரு பத்து நிமிஷம் ஆக்ஷன் பிளாக்குக்கு ஒதுக்கிட்டு அடுத்த காட்சிக்குப் போவோம்.அடுத்த காட்சி என்னன்னா, நம்மாளு இன்னும் கோபம் அடங்காம, "வெளிய போய் நின்னுட்டே எழுதுடா..அப்போதான் உனக்கு புத்தி வரும்.." அப்படின்னு வெளியே அனுப்பிட்டார்.
நானும் "இனிமே வீட்டுப்பாடம், பால் கணக்கு, லவ் லெட்டர் இப்படி எதா இருந்தாலும் வீட்டுக்கு வெளியே தான் நின்னு எழுதணும்..அப்போதான் நெறையா புத்தி வரும்..." -ன்னு மனசுல நெனைச்சிட்டே வெளியே போய் நின்னுட்டு எழுதறேன்..
புத்தியும் வரல..புண்ணாக்கும் வரல..
எழுத்துதான் கோணல் கோணலா வந்தது...

அதுக்கு அடுத்து வந்தது செண்டிமெண்ட் பிளாக்.
நான் பாவமா நின்னுட்டே எழுதறத பார்த்த நம்ம கதாநாயகன், என் பக்கத்துல வந்து, என்னோட கலைஞ்ச தலையெல்லாம் சரியா ஒதுக்கி விட்டுட்டு "இனிமே இப்படியெல்லாம் பண்ணக்கூடாது..சரியா..?"அப்படின்னு சொல்லி உள்ள போய் உக்கார்ந்து எழுத சொல்லிட்டார்.
குற்றம் செஞ்ச என்னை விட, குற்றம் செய்ய தூண்டுன அந்த +2 பசங்களை அவர் ஒண்ணுமே சொல்லலைன்னு ஒரு சிறு வருத்தம் இருந்தாலும், நான் மதிக்கும் அவரிடம் கெட்டபேர் வாங்கினது இன்னிக்கு வரைக்கும் என்னோட மனசை உறுத்திட்டே இருக்கற ஒரு விஷயம். 

இதன் கடைசி பாகமான வாத்திமார் கதை-3 இன்னும் சில தினங்களில்...

முந்தைய பாகங்கள்:
அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -1)
அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -2)


ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))


 தொடரும்...



 

22 comments:

  1. /////"எதுக்குடா அப்படி சிரிச்சீங்க.?"-ன்னு கேட்டா, "பின்ன.. நீயெல்லாம் டவுட்டு கேட்டா சிரிக்காம என்ன செய்யறதாம்.?"///// உங்களுக்கு தன்னடக்கம் தாறுமாறா இருக்குண்ணே! :) செம அடிதடி ரகள.

    ReplyDelete
  2. // அப்புறம் குனிய வைத்து முதுகுல ரெண்டு சாத்து சாத்தினார். 
    அப்புறம் நிமிர வைத்து திரும்பவும் கன்னத்துல ரெண்டு அப்பு அப்பினார். அப்புறம்..
    ---
    ---
    ---
    சரி விடுங்க.. என் சோகம் என்னோட போகட்டும்...// அய்யோ ,. தல . விழுந்து விழுந்து சிரிச்சேன்.

    ReplyDelete
  3. நான் மதிக்கும் அவரிடம் கெட்டபேர் வாங்கினது இன்னிக்கு வரைக்கும் என்னோட மனசை உறுத்திட்டே இருக்கற ஒரு விஷயம். -- துடுக்குத்தனமிருந்தாலும் உங்களுக்குள்ளே ஒரு மன நெகிழ்ச்சி இருக்கு. நீங்க ரொம்ப நல்லவங்க. முதலில் மூன்று பகுதிகளையும் எப்பை படிக்கபோகிறோமோ என்ற தயக்கமிருன்தது உண்மை. ஆனால் படிக்க ஆரம்பித்ததும் அப்படியே மூழ்கிபோயிட்டேன் நேரம் போனதே தெரியவில்லை. அபாரம் . வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நேரம் ஒதுக்கியதற்கு மகிழ்ச்சிகளும், கமெண்டியதர்க்கு நன்றிகளும் தல.!!

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. குனிய வைத்து ரெண்டு, அப்புறம் நிமிர வைத்து திரும்பவும் ரெண்டு அப்புறம்.... #யோவ் அப்புறம் என்னய்யா, கதை முடிஞ்சிடுச்சு போங்கையா #கல்யாணத்துக்கு முன்ன இந்த விபரீத விளையாட்டு (உண்மை சம்பவம்) வேணாம் மச்சி :-)))

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்.. நன்றீஸ் மச்சி...

      Delete
    2. ///#கல்யாணத்துக்கு முன்ன இந்த விபரீத விளையாட்டு (உண்மை சம்பவம்) வேணாம் மச்சி :-)))///

      ஏன் கல்யானத்துக்கபுரம் நிறைய வாங்க வேண்டியிருக்கும்'ன்னு சொல்ல வர்றியா.??
      :P

      Delete
    3. ஆமா மச்சி! நான் சொல்லல அனுபவசாலிங்க (அடிவாங்கினவங்க) சொல்றாங்க :-))

      Delete
    4. கூடிய சீக்கிரம் நானும் சொல்றேன் ;-)))

      Delete
  6. //செண்டிமெண்ட் பிளாக்// அடிக்கிற கைதான் அணைக்கும்'னு சும்மாவா சொன்னாங்க :D

    கலக்கல் :D

    ReplyDelete
  7. பிரியாJune 24, 2012 at 9:01 PM

    செம குணா சின்ன சின்ன விஷயங்கள ரொம்ப அழகா இரசிக்கிற மாதிரி எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க :-)))
      முயற்சி பண்றேன் தொடர்ந்து எழுத..

      Delete
  8. LOL...ஏனுங் மிஸ்டர் கபாலி, என்ன விட அதிகமா அடிவாங்கியிருகிங்க போல..மொத்தம் எத்தன பார்ட்டு??

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஒரு பாகம் மீதமிருக்கு ;-)))

      Delete
  9. :-)))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  10. //"வெளிய போய் நின்னுட்டே எழுதுடா..அப்போதான் உனக்கு புத்தி வரும்.." அப்படின்னு வெளியே அனுப்பிட்டார்.
    நானும் "இனிமே வீட்டுப்பாடம், பால் கணக்கு, லவ் லெட்டர் இப்படி எதா இருந்தாலும் வீட்டுக்கு வெளியே தான் நின்னு எழுதணும்..அப்போதான் நெறையா புத்தி வரும்..." -ன்னு மனசுல நெனைச்சிட்டே வெளியே போய் நின்னுட்டு எழுதறேன்..//

    எப்படி பாஸ் உங்களால மட்டும் இப்படியெல்லாம்.....??? :) :) :)

    ReplyDelete
    Replies
    1. அது நெறையா அடி வாங்குனதுல.. மூளை குழம்பி முன்னை விட புத்திசாலி ஆகிட்டேன் போல..அவ்வ்வ்வ்...

      Delete