Monday, June 18, 2012

அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -1)

முஸ்கி: இது ஆர்குட்'ல "தமிழ் குடும்பம்" குழுமத்துல அடிவாங்குறதை பத்தின பேச்சு வந்தப்போ அங்க ஒரு இழைல நான் எழுதின அடி'களார் புராணம்.. மாதா, பிதா, குரு இவங்ககிட்டல்லாம் வாங்கிக்கட்டின அனுபவத்தை வரிசையா எழுதினேன்.. அதையே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து உங்களின் பார்வைக்காக இங்கேயும்..





நான் முதன்முதலா யார்கிட்ட அடிவாங்குனேன்னு இப்போ ஞாபகம் இல்லேன்னாலும், அந்த வரலாற்று சிறப்புமிக்க வைபவத்த பிள்ளையார் சுழி போட்டு மங்களகரமா தொடங்கி வெச்சது என் அம்மாவாதான் இருக்கனுங்கறது என்னோட அவதானிப்பு.

அம்மா.. இவங்க எப்ப அடிப்பாங்க.. எப்படி அடிப்பாங்கன்னே தெரியாது.. ஆனா அடிக்க வேண்டாத நேரத்துல கரெக்டா அடிச்சுடுவாங்க ;-(((
சரியா சாப்டறது இல்ல..சொல்ற வேலையை செய்யறதில்ல.. கடைக்கு போயிட்டு லேட்டா வர்றது .. தம்பிக்கிட்டே சண்டை போடறது.. போன்ற அத்யாவசிய காரணங்கள் தொடங்கி, ஒழுங்கா படிக்கறதில்ல.. பரிட்சையில மார்க் கம்மியா வாங்கறது.. பொறுப்பில்லாம ஊர் சுத்தறது..போன்ற அச்சுபிச்சு காரணங்கள் வரை ஐயா ஆல்-ஏரியாவுலயும் ச்சும்மா கில்லி மாதிரி அடி வாங்கியிருக்கேன்..
 

அடிக்கறதுக்கான காரணங்கள் டிசைன் டிசைனா இருக்கறது மாதிரி, அடிக்கிறதுக்கான ஆயுதங்களும் டிசைன் டிசைனா இருக்கும்..
கரண்டி,தோசைக்கரண்டி, தயிர் கடையும் மத்து போன்ற பேரழிவு ஆயுதங்கள்..
குச்சி, மாடு கட்டும் தாம்புக்கயிறு போன்ற சிற்றழிவு ஆயுதங்கள் ..
இதுபோக அப்பப்போ டைம்-பாஸ் ஆவதற்காக தலையில் குட்டுவது..கிள்ளி வைப்பது..புறங்கையால் அடிப்பது போன்ற ஸ்பெஷல் அயிட்டங்களும் உண்டு..

பொதுவா எல்லா ஏரியாவுலயும் எக்கச்சமா, ஏகபோகமா அடி வாங்கியிருந்தாலும் இப்போ நெனச்சிப் பாத்தா ஒரு சம்பவம்கூட ஞாபகம் வர மாட்டேங்குது. (எப்பவாச்சும் வாங்குனா ஞாபகம் இருக்கும்.. எப்பவுமே வாங்கிக்கட்டிக்கிடா எத்தனைன்னு ஞாபகம் வெச்சிக்கறது.?)
இருந்தாலும் ஞாபக அடுக்குகள்ல கூகிள் சர்ச் பண்ணி ரெண்டு சம்பவங்களை மட்டும் சொல்றேன்..

துன்பியல் சம்பவம்-1:
நான் அஞ்சாவது வரைக்கும் சேலத்துல எங்க பாட்டி வீட்ல இருந்துதான் படிச்சேன். அப்பப்போ அப்பா, அம்மா வந்து பாத்துட்டு போவாங்க.. 


அப்போ நான் நாலாப்போ..இல்ல அஞ்சாப்போ படிச்சிட்டுருந்த சமயம். ஒருநாள் பை நிறைய கடலைக்கா, பனங்கிழங்கு, நவ்வாப்பழம் இதெல்லாம் எடுத்துக்கிட்டு அம்மா மட்டும் என்னை பாக்க வந்திருந்தாங்க. போக, பெட்-பாக்கெட் ப்ரூட்டி வேற.. அப்போ டிவி விளம்பரத்துல வர்ற ப்ரூட்டி ரொம்ப ஃபேமஸ்.. நானும் மொதோ மொதலா டிவி விளம்பரத்துல வர்ற வஸ்துவை குடிக்குறோம்'ங்குற குதூகலத்தோட அதை குடிச்சிட்டுருக்க, பேச்சுவாக்குல அப்போ முடிஞ்ச காலாண்டுதேர்வோ, அரையாண்டுத்தேர்வோ.. அந்த எழவுல என்ன மார்க்குன்னு அம்மா கேட்டாங்க. நம்ம மதிப்பெண்கள் அவ்வளவா மதிக்கும்படி இல்லாட்டாலும், காறித்துப்பற வகையில் இருந்துச்சி.. 
ஒக்கே ஒக்க அறை. அவங்க எய்ம் பண்ணது என்னவோ கன்னத்தை நோக்கித்தான். ஆனா நான் சின்னாத்தாளைக் கண்ட புதூ டுவீட்டர் கணக்கா பம்மி பீதியாகி, எசகுபிசகா மூஞ்சியைத் திருப்ப, எய்ம் மிஸ்ஸாகி ஒதட்டுல எறங்கிடுச்சி. லேசா..லேசா ஒதடு கிழிஞ்சி கொஞ்சமே கொஞ்சம் ரத்தம். 

ஒதட்டு ஓரத்துல ரத்தத்தை பாத்த ஒடனே எம்ஜியாருக்கு வீரம் பொங்குறா மாதிரி, எங்கம்மாக்கு பாசம் பொங்கிடுச்சி. அதுக்கப்புறம் பைய்யனை கொஞ்சோ கொஞ்சுன்னு ஒரே கொஞ்சல்ஸ்.. அப்புறமா, அறுகோண வடிவிலாலான இருபது பைசா காசு- நாலு காசுங்களை என் கைல வெச்சி அழுத்தி, எதுனா வாங்கி சாப்ட்டுக்கோ'ன்னு சொன்னாங்க. (அப்பல்லாம் அது பெரிய தொகை- ஆஹா இதுக்காவே அப்பப்போ ரத்தக்காவு கொடுக்கலாம் போலருக்கே-ன்னு நெனச்சிக்கிட்டேன்.. அவ்வ்வ்.. காரியத்துல கண்ணா இருக்கோணும் கொமாரு :P). அதுக்கப்புறம் அந்தக் காசுல என்ன வாங்கி சாப்டேன்'ன்னு ஞாபகம் இல்லேன்னாலும், இப்பவும் எங்காவது இருபது பைசா காசைப் பாத்தா எங்கம்மாவோட ரத்தப்(!)பாசம் மனசுக்குள்ள வந்து குறுக்காலயும், நெடுக்காலயும் வாக்கிங் போகும்.


  துன்பியல் சம்பவம்-2

அடியேன் வெற்றிக்கரமா அஞ்சாப்பு முடிச்சதும், ஆறாவது எங்க ஊர்லையே கொண்டுவந்து சேத்துட்டாங்க. நானும் காலை எழுந்தவுடன் கோலி, பின் மாலை முழுவதும் பட்டம், விடுமுறை தினங்களில் பம்பரம் கில்லி-தாண்டில், கிரிக்கெட் என தீராத விளையாட்டுப் பிள்ளையா சுத்தீட்டு இருந்தேன். அதுபோக, அப்பப்போ தங்கச்சி, தம்பியுடன் சண்டை..  சமாதானம், அப்புறம் மீண்டும் சண்டை.. திரும்ப சமாதானம் என அவ்வளவு அழகோ அழகான நாட்கள். 

நான் சந்தோஷமா இருந்தாத்தான் நம்ம விதி பகவானுக்குப் பிடிக்காதே.? குழந்தைகளின் சந்தோஷத்தை கெடுக்க ஆண்டவன் அருளிய அற்புதம்- பரீட்சைகள். இன்னொரு எழவு காலாண்டுத்தேர்வு வந்தது. வழக்கம்போலவே என்னோட மதிப்பெண்கள் சிலாகிக்கும்படி இல்லாம சில்லரைத்தனமா இருந்துச்சி. (நெஜமாவே சில்லரைத்தனந்தான்- ரெண்டு சப்ஜெக்ட்டுல சிங்கிள் டிஜிட்). என்னோட மார்க்கை நானே என் வாயால சொல்ல முடியாத நாக்கறு நிலைக்குத் தள்ளப்பட்டேன். போக, இப்போ மாதிரியே அப்போவும் எனக்கு தற்புகழ்ச்சி துளியும் பிடிக்காத காரணத்தால், என் பெருமையை நானே எப்படி என் வாயால சொல்றதுன்னும் தெரியல. 

அதனால நான் என்ன பண்ணேன்- சிங்கிள் டிஜிட் சப்ஜெக்ட் பேப்பர்களை மட்டும் நீள வாக்குல மடிச்சி, பேக்'லயும் நீள வாக்குலயே வெச்சிக்கிட்டேன். அதாவது, பேகை பார்த்த ஒடனே, அவங்களே கண்டுபுடிச்சி, பேப்பரை எடுத்து பாக்கணும். இதான் ப்ளான். (வாட் அன் ஐடியா ஷிர்ஜி!?!!!) என் ஐடியா நல்லாவே வொர்க்-அவுட் ஆச்சி. (ஆககா.. ராஜதந்திரங்களை கரைத்துக் குடித்திருக்கிராயடா நீ..) அம்மா எடுத்துப் பாத்துட்டாங்க..  அதற்க்கப்புறம் நடந்ததெல்லாம் வரலாற்றின் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய சம்பவங்கள். தங்கம் இப்போ விக்குற வெலைக்கு பொன்னெழுத்தில் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் வெண்கல எழுத்திலாவது பொறிக்கப்பட வேண்டும்.. அவ்வ்வ்.. என்னா அடி.?
 

 பக்கத்தில் கிடந்ததொரு பருத்திக்குச்சி. அதை எடுத்து செம்ம மாத்து. அடிக்கும் போது ஊடால தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்குற மாதிரி ஒரு வாக்கியம் சொன்னாங்க பாருங்க- "பெரிய நூத்துக்கு நூறு மார்க்கு வாங்குனவனாட்டம் பேப்பரை திமிரா மடிச்சி வெச்சிருக்க.. அவ்ளோ தெனாவெட்டா ஒனக்கு.?" அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது, நான் மார்க் கம்மியா வாங்குனதை விட, பேப்பரை அப்டி வெச்சிக்கிட்டு வந்ததுதான் அவங்க கோவத்தை ஹெவியா கெளறி விட்ருக்குன்னு.  (அவ்வ்வ்வ்.. என் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய் போய்விட்டனவே.? )
 


 இவ்ளோ அடி அடிச்சாலும் அவங்ககிட்ட இருக்க ஒரு நல்ல பழக்கம், கை..கால், முதுகு..போன்ற எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ஏரியாவுல மட்டுந்தான் அடிப்பாங்க..நான் அந்த வயசுலேயே நெம்ம்ம்ப பெர்சனாலிட்டியா(!) இருந்ததால, அதுக்கு குந்தகம் விளைவிக்கற வகையில் மூஞ்சியில மட்டும் அடிக்கவே மாட்டாங்க..
 

டிஸ்கி-1: ஒரு ஒன்னுந்தெரியாத அப்பாவிப்பைய்யனை போட்டு இந்த அடி அடிச்சதுனால, சிஎம் மம்மி மாதிரி எங்க மம்மியையும் லேடி ஹிட்லர் அப்படின்னு நெனைச்சுடாதீங்க மக்களே..
மை அம்மா இஸ் பெஸ்ட் அம்மா இன் திஸ் வேர்ல்ட்..
அவங்களப்பத்தி சொல்லனும்னா புதுசா
ஒரு ட்விட்லாங்கர் போட்டு, அதுல ஆயிரத்தைநூறு பக்கத்துக்கு எழுதலாம்.. அவ்ளோ நல்ல விஷயமிருக்கு..
 

டிஸ்கி-2: இந்த போஸ்ட்டுக்கு "எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே.. இவன் ரொம்ப நல்லவன்டா..", "ஆயிரம் அடி வாங்கிய அபூர்வ சிகாமணி.." போன்ற கமெண்ட்டுகள் வரவேற்க்கப்படுகின்றன.!!

மாதா-வைத் தொடர்ந்து அடுத்த
போஸ்ட்டில் பிதாவின் வீரப்பிரதாபங்கள்..

 ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))
 

தொடரும்..

15 comments:

  1. தல எதிர்காலத்தை யோசித்து தான் தொடரும்.. என்று போட்டிருக்க :))) பொண்டாட்டி கையால வாங்க போற அடியும் சேர்த்துக்கலாம் :))

    ReplyDelete
  2. உடம்பு இறுகி இறுகி சும்மா கின்னுன்னு வளந்திருப்பீங்க போல. . .
    எங்கம்மா யூஸ் பண்ணின ஒரு மூங்கில் கம்பு இன்னும் எங்க வீட்ல பத்திரமா இருக்கு. அவ்வ் :)

    சூப்பரப்பு :)

    ReplyDelete
  3. //"பெரிய நூத்துக்கு நூறு மார்க்கு வாங்குனவனாட்டம் பேப்பரை திமிரா மடிச்சி வெச்சிருக்க.. அவ்ளோ தெனாவெட்டா ஒனக்கு.?" // ROLF :D செமயா இருந்துச்சு

    ReplyDelete
  4. செம சூப்பர் மச்சி... விழுந்து புரண்டு சிரிச்சிங் :D

    ReplyDelete
  5. வாவ் லவ்லி உடம்பு மேல எவ்வளோ அடி.. ;-))))) #செம செம

    ReplyDelete
  6. (எப்பவாச்சும் வாங்குனா ஞாபகம் இருக்கும்.. எப்பவுமே வாங்கிக்கட்டிக்கிடா எத்தனைன்னு ஞாபகம் வெச்சிக்கறது.?) வார்த்தை பிரயோகம், நகைச்சுவை அபாரம். பின்னிட்டீங்க

    ReplyDelete
  7. என்னா அடி....... சூப்பர் பாஸ்....

    ReplyDelete
  8. அவ்வ்வ்.. நன்றீஸ் சகா :-)))

    ReplyDelete