Wednesday, June 20, 2012

அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -2)

முதல் பாகத்துல அம்மாக்கிட்ட வாங்கிக்கட்டிக்கிட்டதை படிச்சி சந்தோஷமா இருந்திருப்பீங்க.. அடுத்து அப்பா.  எதுக்குமே கோவப்பட மாட்டார்; பெரிசா அலட்டிக்க மாட்டார்.. கிட்டத்தட்ட என் காரக்டரும் அதான். நான் கொயந்தயா இருக்கறச்சே.. வுட்வர்ஸ் க்ரைப் வாட்டர்..ச்சை. பழக்க தோஷம்.. நான் கொயந்தயா இருக்கறச்சே ஒருநாள் எங்கப்பா என்னை கொஞ்சுறேன் பேர்வழி'ன்னு எக்குத்தப்பா தூக்கினதுல என் ஒரு கைய்யே ஒடஞ்சு போச்சாம்.. அந்தளவுக்கு டெர்ரரான பாசக்காரரு.. ஆனா, அவர்கிட்டையும் தொரத்தி தொரத்தி அடி வாங்கியிருக்கேன்னா, என்னோட புஜபல பராக்கிரமத்தை நீங்க புரிஞ்சிக்கணும்..   எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு முறைதான் இவர்ட்ட அடி வாங்கிருக்கேன்..ஆனா ரெண்டு சம்பவத்தின்போதும் சும்மா பின்னு பின்னுன்னு பின்னி, ஜடை போட்டு, பூ,பொட்டெல்லாம் வெக்கற ரேஞ்சுக்கு போய்ட்டார்...




கொசுவத்திசுருள்-1:


அப்போ நான் எட்டாவதும், என் தம்பி ஆறாவதும் படிசிட்டுருந்தோம்..
ஒருநாள் நாங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுப்பக்கத்துல இருந்த ஒரு பேர் தெரியாத மரத்துமேல (அது ஒரு நன்றிமறந்த கருங்காலி மரம்'ன்னு அப்புறமாதான் தெரிய வந்திச்சி) ஏறி ஒக்காந்துகிட்டு, அவங்கவங்க கிளாஸ்-ல யாரெல்லாம் சூப்பர் பிகர்..யாரெல்லாம் மொக்கை பிகர்-ன்னு ரொம்ப தீவிரமா ஃபிகராயணம் பத்தி டிஸ்கஸ் செய்துட்டு இருந்தோம்..
அப்போ அந்த பக்கமா வந்த எங்கப்பா,எங்களோட "அழகு"ப்பேச்சுவார்த்தையை முழுசும் ஒட்டுக் கேட்டுட்டார் போல..
மரத்துலேர்ந்து எறங்கச்சொல்லி மொதல்ல எனக்கு விட்டார் பாருங்க ஒருஅறை.. ஆககா..என்னா அடி.???
காதுல ச்சும்மா ங்ங்கொய்ய்ய்யுன்னு மணியடிக்குது..
கண்ணுல ச்சும்மா ஞ்ஞ்ஜொய்ய்யுன்னு பூச்சி பறக்குது..
 நாட்டாமை கவுண்டர் கணக்கா என் காதுக்குள்ள குருவி கத்துற சவுண்டெல்லாம் கேக்குது..
  அத்தோட விட்டாரா..? "மொளச்சி மூணு எலை விடல.. அதுக்குள்ளே பெரியமனுசத்தனம் வந்துருச்சா ஒங்களுக்கு.?" -அப்படின்னு சொல்லிக்கிட்டே, நாங்க உக்காந்திருந்த மரத்துலேர்ந்தே ஒரு குச்சிய ஒடச்சு (தட்ஸ் வொய் ஐ கால்டு தட் மரம் யேஸ் கருங்காலி மரம்..அவ்வ்வ்வ்.. :-/ ) அடிக்க ஆரம்பிச்சவர்தான்..
அந்த இடத்துலருந்து எங்க வீடு வரைக்கும் சுமார் ஒரு அரை கிலோமீட்டர் தூரம் நாங்க ஓட..அவர் துரத்த.. அவர் துரத்த..நாங்க ஓட..நாங்க ஓட..அவர் துரத்த..... -இந்த மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை ஜபித்து முடிப்பதற்குள் ஒருவழியா வீடு வந்துடுச்சி..ஹப்பாடா..

இந்த ரணகளத்துளேயும் ஒரு கிளுகிளுப்பு என்னன்னா, எங்கள அவரு தொரத்தி தொரத்தி அடிச்சத பாத்த எங்க தாத்தா, பாட்டி, பக்கத்து வீட்டுக்காரங்க எல்லோரும் "ஏம்பா இந்த பச்சமண்ணுங்கள(!) போட்டு இந்த அடி அடிக்குற"ன்னு கேட்டும் அவரு ஒன்னும் சொல்லாம, எங்க இமேஜ் மேற்கொண்டு டேமேஜ் ஆகாம காப்பாத்திட்டார்.
எங்கம்மாட்ட கூட அடுத்தநாள் தான் சொன்னாரு.. ஸ்வீட் டாடி.. 
 




கொசுவத்திசுருள்-2:
ஒருநாள் சாயங்காலம் எங்கம்மா, சமையலுக்கு எண்ணெய் வாங்கிட்டுவர என்னையும், எங்க அண்ணனையும்(பெரியப்பா பையன்) பக்கத்துல இருக்க கடைக்கு அனுப்புனாங்க..
அந்த கடை எங்க வீட்டுலேர்ந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரமிருக்கும்.. அப்போல்லாம் எங்க வீட்டுல டி.வி இல்ல..
கடைக்கு போயிட்டு வர்ற வழியில, ஒரு வீட்டுல டி.வி.யும் வெச்சு, அதுல கேபிள் கனெக்சனும் கொடுத்து, அதை பொதுஜனங்கள் பார்வைக்கும் திறந்து விட்டுருந்தாங்க..
என்ன இருந்தாலும் நாங்களும் இரு பொதுஜனம்'ங்கற முறையில ரெண்டு பேரும் அந்த விழாவ இருந்து சிறப்பிக்க அங்க போய்ட்டோம்...
அதுல ஏதோ ஒரு சுவாரசியமான மொக்க நிகழ்ச்சி போய்டிருந்தது..
அதையே நாங்க உள்ள இருக்க குடலு, குந்தாணியெல்லாம் தெரியற அளவுக்கு வாயை பொளந்துட்டு  பாத்துட்டுருந்ததால டைம் போனதே தெரியல..
திடீர்னு எனக்கு வீட்டப்பத்தின ஞானோதயம் வந்து அவன கூப்பிட ஆரம்பிச்சேன்.. ஆனா அவன் டி.வி கடல்ல ஓவரா மூழ்கி முத்தெடுக்கவே ஆரம்பிச்சுட்டான் கடப்பார நீச்சல்கூட தெரியாத அந்த கடங்கார பயபுள்ள..
இதுல "நீ வேணும்னா போ..நா அப்புறமா வர்றேன்" அப்படின்னு தெனாவெட்டா வேற சொல்றான்.. நா சுத்தீலும் பாக்கறேன்.. இருட்டுவேற கட்டிடுச்சு.. எனக்கு தனியா போகவும் பயம்.. அவன கெஞ்சி கூத்தாடி கூட்டிட்டு போறதுக்குள்ள ஜஸ்ட் ஒரு மூனே மூணு மணிநேரம் லேட்டாயிடுச்சி.. வீட்ட நெருங்க நெருங்க அம்மாட்ட இன்னைக்கு நெறைஞ்ச மண்டலபூஜை உண்டுங்கற பயத்துல எனக்கு கண்கள் பனிக்கவும், இதயம் தாறுமாறா துடிக்கவும் ஆரம்பிச்சுடுச்சி...
ஆனா, வீட்டு வாசல்ல பாத்தா..
---
---
---
---
---

அங்கதான் திரைக்கதைலயே ஒரு ட்விஸ்ட்..
எங்கப்பா ஒரு பெரிய குச்சியோட வாசல்லையே நிக்கறார் எங்கள வரவேற்க..
"ஏன்டா.. இங்க இருக்க பாய் கடைக்கு போயிடு வரை இவ்ளோ நேரமா..?" அப்படின்னு அவர் கேக்க, நானும் அம்மாட்ட இருந்து தப்பிச்ச குதூகலத்தோட "சைக்கிள் பஞ்சர் ஆகிடிச்சுப்பா.." -ன்னு ஒரு மொக்க ரீசன் சொன்னேன் பாருங்க..
அடுத்த அரைமணி நேரத்துக்கு அங்க ஒரு அற்புதமான அடிமழை..
சும்மா அடைமழை மாதிரி பொழிஞ்சு தள்ளிட்டார்..
குச்சி ஓடிஞ்சும் கூட அவர் விடலியே.. இதுல கிளைமாக்ஸ் திருப்பமாக வேற குச்சியை அவர் தேட போனப்போ.."என்னது மறுபடியும் மொதல்லேர்ந்தா..?" அப்படின்னு எங்கம்மாவே ஜெர்க் ஆகி, அவங்களே எங்களுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுடாங்கன்னா பாத்துக்கோங்க..

பி.கு.: மேற்படி சம்பவத்த பத்தி ரொம்பநாளா எனக்கு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்துச்சு..
அது என்னன்னா.. எங்கப்பா ஒரு அரைமணி நேரத்துக்கு சாத்து சாத்துன்னு சாத்தியும் இவ்ளோ நேரமா ரெண்டு பேரும் எங்க போயிருந்திங்கன்னு ஒண்ணுமே கேக்கல.. ஆனா பிளாஷ்-பேக்குல என்ன நடந்ததுன்னு எனக்கு அப்புறமா தான் தெரியவந்தது..
டீ.வி. பாக்குற இடத்துல பொதுஜனத்தோட பொதுஜனமா எங்களோட நலம்விரும்பி ஒருத்தரும் அங்க இருந்திருப்பார் போல.. அவரு டீ.வி. பாத்து முடிச்சிட்டு வீட்டுக்கு போற வழியில, ஏதோ நல்லெண்ண தூதுவர் ரேஞ்சுக்கு அவரப்பத்தி அவரே கற்பனை பண்ணிக்கிட்டு, மெனக்கெட்டு எங்க வீட்டுக்குப்போய் மேற்படி விஷயத்த ரொம்ப சீரும் சிறப்புமா கொளுத்திப் போட்டுட்டு போய்ட்டாரு.. அதுக்கப்புறம்தான் எங்கப்பா எங்க கொளுத்திட்டார்...

மாதா, பிதா முடிஞ்சி குரு-வுக்கு போறதுக்கு முந்தி இடைச்செருகலா
என் உடன்பிறப்பு..


தம்பி- பொதுவா தம்பியுடையான் படைக்கு அஞ்சான்-ன்னு சொல்லுவாங்க.. இவன பொருத்த வரைக்கும் தம்பியுடையான் அடிக்கு அஞ்சான்-ன்னு சொல்லலாம்..
அந்தளவுக்கு எங்க ரெண்டு பேருக்கும் எக்கச்சக்க கொடுக்கல்-வாங்கல்  நடந்துருக்கு..
ஆனா..இவன்கிட்ட சண்டை போடுறது தெருவுல போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுறதுக்கு சமம்..
ரெண்டுபேருக்கும் சண்டை வரும்போது என்கிட்டே எந்தளவுக்கு வாங்குறனோ அதுக்கு சரிக்குசமமா திருப்பிக் கொடுத்ததோட மட்டுமில்லாம , வீட்ல அம்மாட்ட போய் அவனோட ஆக்ஷன் பிளாக்-க்க மட்டும் சென்சார் பண்ணிட்டு, என்னோட புஜபல பராக்கிரமங்களை  மட்டும் DTS எபக்டோட, எடிட்டிங் எல்லாம் பண்ணி பக்காவா பத்த வெச்சுடுவான் பாசக்கார பய..
அப்புறமென்ன... அடுத்து வருவது நெக்ஸ்ட்டு ரவுண்டு டண்.டணா..டண்..



அடுத்தடுத்த பாகங்களில் வாத்திமார்கள் கதை..

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் ஒரு எட்டு இதையும் படிச்சிட்டு வந்துருங்க:  அடிகள் ஓய்வதில்லை.. (பாகம் -1)


ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))



தொடரும்...



17 comments:

  1. ROFL...//தம்பி- பொதுவா தம்பியுடையான் படைக்கு அஞ்சான்-ன்னு சொல்லுவாங்க.. இவன பொருத்த வரைக்கும் தம்பியுடையான் அடிக்கு அஞ்சான்-ன்னு சொல்லலாம்..
    அந்தளவுக்கு எங்க ரெண்டு பேருக்கும் எக்கச்சக்க கொடுக்கல்-வாங்கல் நடந்துருக்கு..
    ஆனா..இவன்கிட்ட சண்டை போடுறது தெருவுல போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுறதுக்கு சமம்..
    ரெண்டுபேருக்கும் சண்டை வரும்போது என்கிட்டே எந்தளவுக்கு வாங்குறனோ அதுக்கு சரிக்குசமமா திருப்பிக் கொடுத்ததோட மட்டுமில்லாம , வீட்ல அம்மாட்ட போய் அவனோட ஆக்ஷன் பிளாக்-க்க மட்டும் சென்சார் பண்ணிட்டு, என்னோட புஜபல பராக்கிரமங்களை மட்டும் DTS எபக்டோட, எடிட்டிங் எல்லாம் பண்ணி பக்காவா பத்த வெச்சுடுவான் பாசக்கார பய..
    அப்புறமென்ன... அடுத்து வருவது நெக்ஸ்ட்டு ரவுண்டு டண்.டணா..டண்..//

    ReplyDelete
  2. ஆல் ஒவர் த வேல்ட் அப்பன்ஸ் அப்படி தான் இருப்பாங்க..சரி விடு..எம்டன் அளவுக்கு இல்லைல..
    -தல தளபதி :-)))

    ReplyDelete
  3. அந்த முதல் படம் செம்ம ..... உலகத்த நெனச்சேன் சிரிச்சேன் ஹா ஹா ஹா :)))))))

    ReplyDelete
  4. ////அவனோட ஆக்ஷன் பிளாக்-க்க மட்டும் சென்சார் பண்ணிட்டு, என்னோட புஜபல பராக்கிரமங்களை மட்டும் DTS எபக்டோட, எடிட்டிங் எல்லாம் பண்ணி பக்காவா பத்த வெச்சுடுவான் பாசக்கார பய..//// non stop laughing. . . :) Superuuu

    ReplyDelete
  5. சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணா போச்சு. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் நன்றாக கவனிச்சு அனுபவிச்சிருக்கீங்க. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. கமென்ட்டை அடுத்த பாகத்தில் சொல்லியிருக்கேன் படித்துக் கொள்ளவும் !!!

    ReplyDelete
  7. //இவன்கிட்ட சண்டை போடுறது தெருவுல போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுறதுக்கு சமம்//
    செம....செம.....
    ஹா ஹா ஹா....

    ReplyDelete