Friday, April 5, 2013

வங்கி சேவை - சில தகவல்கள் !



நண்பர்களே,
               ட்விட்டரில் இருக்கும் நண்பர்கள் பலர் வங்கி சேவை சம்மந்தமாக பல கேள்விகளை என்னிடம் கேட்டுள்ளனர். அவர்கள் பதில் அளிக்கும் போது எனக்கு உண்டான சில ஐயங்கள்....பலர் நல்ல துறைகளில் வேலை பார்த்தாலும் அடிப்படையான வங்கி கொள்கைகளை பற்றி தெரிந்துகொள்ளாமல் இருப்பது தான். வங்கியில் பொதுவாக ஏற்படும் பிரச்சினைகளையும் வங்கிசேவை பற்றியும் எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன்.
  
  வங்கி கணக்குகள் இருவகை
1)           சேமிப்பு கணக்கு (Savings account)
2)           வியாபார கணக்கு(current Account)

     சேமிப்பு கணக்கு என்பது  தனிநபர் பெயரில் தொடங்கும் கணக்கு. இதை தனிநபரகாவும் உங்கள் குடும்ப உறுப்பினருடன் கூட்டு கணக்ககாவும்(Joint Accout) பயன்படுத்தலாம். குடும்ப உறுப்பினர் மட்டுமே இதில் இணைக்க முடியும். மாற்றாக கோவில் டிரஸ்ட் மற்றும் கோவில் விழாக்கள் குழு போன்ற ஓரு விஷயத்திற்கு மட்டும் வேறு நபர்களை இணைக்க முடியும் (அதற்காக தனியாக சில படிவங்களில் கையெழுத்து வாங்கப்படும்)
கூட்டு கணக்கு ஆரம்பிக்க அதிக பட்சமாக மூன்று நபர்கள் மட்டுமே அனுமதிக்கபடும் அதில் மூன்று வகை உள்ளது.

1)      E or S (Either or survivor)
கூட்டு கணக்கில் உள்ள எவரேனும் ஒருவர் நினைத்தாலும் தனியாக பணம் எடுக்க முடியும் (இதற்கு ATM கார்டு வசதி உண்டு)

2)      Jointy by All
இரண்டு பேர் சேர்ந்து கையெழுத்து இட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும் (இதற்கு ATM கார்டு வசதி இல்லை)

3)      Any Two
மூன்று பேர் சேர்ந்து கணக்கு தொடங்கினால் யாராவது இருவர் கையெழுத்து இட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும் (இதற்கு ATM கார்டு வசதி இல்லை)

இந்த வகை சேமிப்பு கணக்குகளில் இருக்கும் உங்கள் பணத்திற்கு தினமும் 4% வட்டி வழங்கபடும் என்பது RBI உத்தரவு.

  வியாபார கணக்கு என்பது கடைகளின் பெயரில் வர்த்தக நிறுவங்களின் பெயரில் தொடங்கப்படும் கணக்கு உதாரணமாக கருப்பையா ஹார்டுவேர்ஸ்” என தொடங்கபடுவது. இந்த வகை கணக்குகளில் பாட்னர்ஷிப் தொடங்கப்படும். ஒருவர் மட்டுமே ஓனர் எனில் ATM கார்டு வசதி கொடுக்கப்படும். இந்த வகை கணக்குகளில் லட்ச ருபாய் இருந்தாலும் அதற்கு என எந்தவித வட்டியும் அளிக்கப்படாது.

        மினிமம் பேலன்ஸ் மற்றும் அவேரேஜ் பேலன்ஸ் (1000 ரூபாய் பேலன்ஸ் அக்கௌன்ட் என வைத்துக்கொள்ளுங்கள்).ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு மாதிரியான பேலன்ஸ் Schemeகள் உள்ளன. மினிமம் பேலன்ஸ் என்பது 1000ரூ ஓரு ருபாய் குறைந்து 999ரூ வந்தாலும் அந்த மாதத்திற்க்கான Non Maintance Balnce சார்ஜ் எடுக்கப்படும். ஓரு மாதத்திற்க்கு ஒருமுறை மட்டுமே எடுக்கப்படும். ஓரு தடவை எடுத்த விட்டால் மீண்டும் அந்த மாதத்தில் எத்தனை முறை 1000க்கு கீழ்வந்தாலும் பணம் எடுக்கப் பட மாட்டது. மீறி எடுத்தால் தைரியம்மாக சண்டை போடலாம்( பலர் இதை கவனிக்காமல் விட்டுவிடுவதால் வங்கிகளுக்கே லாபம்)

    அவேரேஜ் பேலன்ஸ் என்பது உங்கள் கணக்கில் இருந்த பணத்தில் சராசரி 1000 ரூ வந்தால் போதும். இது பலருக்கு சரியாக புரியாது தெளிவாக விளக்குகிறேன். நீங்கள் வைத்திருக்கும் அக்கௌன்டில் அவேரேஜ் பேலன்ஸ் 1000ரூ எனில் வங்கியின் கணக்குப்படி ஒவ்வொரு இரவும் 12 மணிக்கு உங்கள் அக்கௌன்டில் இருக்கும் பணத்தை கணக்கிடுவார்கள். இப்படி மாதத்தில் உள்ள 30 நாட்களும் கணக்கிடப்படும் அதன் சராசரி 1000 இருந்தால் உங்களுக்கு எந்த வித சார்ஜும் எடுக்கப் படாது இல்லையெனில் சார்ஜ் எடுக்கபடும்.

Example :

April 1 your Account Balance is    -   30000 (Night 12’0clock)
April 2 you withdraw all money    -         0     (        ‘’                 )
.
.(பணம் எதுவும் போடவேஇல்லை )
.
.
Till april 30 its                                  -         0
  
இப்பொழுது உங்கள் அக்கௌண்டில் மொத்த பண அளவு 30000ரூ மாதத்தின் நாட்கள் 30  சராசரி 30000/30 =1000 ரூ (No Charge)

இதுவே மார்ச் மாதம் என எடுத்து கொண்டால் 31 நாட்கள் ஆகிவிடும் அப்பொழுது 30000/31=967.11 (கண்டிப்பாக சார்ஜ் எடுக்கப்படும்) இவ்ளோ தாங்க அவேரேஜ் பெலேன்ஸ் கான்செப்ட்.

Salary Account வைத்து இருபவர்களுக்கு எந்த வித பேலன்சும் தேவையில்லை.



ATM CARD-

1)      நீங்கள் அக்கௌன்ட் வைத்திருக்கும் வங்கியின் ATM-இல் உங்கள் கார்டை மாததிற்கு எத்தனை முறை வேணாலும் உபயோகிக்கலாம், மற்ற வங்கியின் ATM-இல் மாதத்திற்கு 5 முறை மட்டுமே உபயோகிக்க முடியும். அதன் பின் சார்ஜ் செய்யப்படும்.

2)      நீங்கள் பணம் எடுக்கும் போது பணம் வராமல் உங்கள் அக்கௌன்ட்டில் இருந்து பணம் டெபிட் செய்யபட்டால் கவலைபட வேண்டாம் உங்கள் பணம் கண்டிப்பாக வெளியே வராது. சரியாக 24 மணி நேரத்தில் மீண்டும் உங்கள் கணக்குக்கே வந்து சேரும். அப்படியும் வரவில்லை எனில் நீங்கள் உங்கள் வங்கியை மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டும் மாற்றாக பணம் எடுத்த ATMக்கு சொந்தமான வங்கியில் கேட்க வேண்டாம்.

3)      ஓரு சில வங்கியின் ATM களில் ATM கார்டு உள்ளே சென்று தங்களின் தேவைகள் முடிந்த பின் தான் வெளியே வரும். சில சமயங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டு வராமல் இருக்கும், அந்த மாதிரி நேரங்களில் அந்த ATMக்கு சொந்தமான வங்கியில் சென்று நீங்கள் முறையிடலாம். அவர்கள் தர மறுத்தால் உடனே ஓரு பேப்பரில் தர முடியாது என எழுதி தர சொல்லுங்கள். அவரே வந்து எடுத்து தருவார்.

4)      ATM பாஸ்வேர்ட் தவறாக மூன்று முறை உபயோகித்தால் உங்கள் ATM லாக் செய்ய படும் மீண்டும் முயற்சிக்காமல் 24 மணி நேரம் கழித்து உபயோகிக்கவும், அப்படியும் வரவில்லை என்றால் ஓரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் Idendity Proff உடன் உங்கள் வாங்கியை நாடி INSTA PIN பெற்றுக் கொள்ளவும்.

5)      ATM கார்டு கவரில் பாஸ்வேர்ட் எழுதி வைப்பதை தவிர்க்கவும்

CHEQUE :

1)      உங்களுக்கு ஒருவர் உங்கள் பெயரில் செக் கொடுத்து இருக்கிறார் எனில் முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது அது அக்கௌன்ட் பே செக்கா இல்லை Direct withdraw செக்கா என்பது தான் செக்கின் மேலே இடதுபக்கம் இரண்டு கோடுகள் (//) கீச்சி இருந்தால் அது அக்கௌன்ட் பே செக். இந்த மாதிரி செக்கை நீங்கள் உங்களுக்கு சொந்தமான அக்கௌன்ட் உள்ள வங்கியில் Collection போட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும். இதற்கு ஓர் நாள் கால அவகாசம் எடுக்கும். ஒருவேளை செக் தந்தவரின் அக்கௌன்ட் உள்ள  வங்கியிலே உங்களுக்கு அக்கௌன்ட் இருந்தால் ஓரு சில நிமிடகளில் பணம் எடுத்து கொள்ளலாம்.

2)      Direct withdraw என்பது உங்களுக்கு அக்கௌன்ட் எதுவும் தேவை இல்லை செக் கொடுத்தவரின் வங்கிக்கு நேரடியாக சென்று நீங்களே பணம் எடுத்துக் கொள்ளலாம் இல்லையெனில் முன்பு சொன்னது போல் உங்கள் அக்கௌண்டில் collection செய்து கொள்ளலாம். உங்களால் செல்ல முடியவில்லை எனில் உங்கள் நண்பரிடமும் கொடுத்து விடலாம். (செக்கில் “BERAER” என்ற வார்த்தை இருக்கும் அப்படி இருந்தால் யார் பெயரில் இருந்தாலும் யார் வேணாலும் எடுத்துக் கொள்ளலாம்).

3)      Direct Withdraw செக்கை நீங்கள் தவறவிட்டால் அதை யார் வேணாலும் வங்கியில் சென்று பணம் எடுக்கலாம். அதற்கு வங்கி பொறுப்பாகாது. இந்நேரங்களில் உடனே வங்கியை தொடர்புக் கொண்டு “STOP PAYMENT” என்னும் சேவையில் செக்கை ரத்து செய்ய வேண்டும்(அக்கௌன்ட் உரிமையாளர் மட்டும் ரத்து செய்ய முடியும்).

4)      வரும் ஏப்ரல்1 முதல் CTS என்னும் புதிய செக்குகள் மட்டும் பயன் படுத்த இயலும் உங்களிடம் இருக்கும் செக் CTS என்பதை அறிந்து கொள்ள செக்கின் இடது பக்கம் பக்கவாட்டில் CTS என டைப் செய்ய பட்டு இருக்கும்.

5)      நீங்கள் Collection போட்ட செக்கில் பணம் இல்லை என திரும்ப வந்துவிட்டால் அதனுடன் ஓரு பேப்பர் வைத்து கொடுப்பார்கள். அதில் ரிஜெக்ட் செய்த காரணம் எழுதி இருக்கும் அதை வைத்து கொண்டு :Negotiable Instrument Act-ல் நீங்கள் அவர் மீது வழக்கு தொடரலாம்.

6)      செக்கில் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து சரியாக மூன்று மாதம் வரை மட்டுமே அந்த செக் செல்லுபடியாகும்.

7)      செக்கில் தவறாக எழுதி வெட்டி திருத்தி எழுதினால் அத பக்கத்தில் உரிமையாளரின் கையெழுத்து இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.

8)      செக்கில் பணமதிப்பு RS.200000 என எழுதிவிட்டு வார்த்தையில் “Two thousand only” என எழுதி இருந்தால் இருபது ஆயிரம் மட்டும் கொடுக்க இயலும்  .


NEFT-RTGS METHOD

1)      செக் உபயோகங்களை குறைக்க RBI கொண்டு வந்த முறை. இதன் மூலம் இந்தியா முழுவதும் எந்த வங்கியில் இருந்தும் எந்த வங்கிக்கும் பணம் அனுப்பிக் கொள்ளலாம்.

2)      NEFT-NATIONAL ELECTRONIC FUND TRANSFER இதன் மூலம் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு குறைவாக உள்ள  TRANSFER களை செய்யலாம்.

3)      RTGS-REAL TIME GROSS SETTLEMENT - இரண்டு லட்சத்திற்கு அதிகமானஉள்ள  TRANSFER களை செய்யலாம்.

4)      இந்த சேவையை செய்ய உங்களுக்கு அக்கௌன்ட் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

5)      உங்கள் நண்பர் அக்கௌன்ட்க்கு பணம் அனுப்ப வேண்டும் எனில் நண்பர்க்கு அக்கௌன்ட் உள்ள வங்கியில் வரிசையில் நின்று நேரத்தை செலவிட வேண்டாம். உங்களுக்கு அக்கௌன்ட் உள்ள வங்கியில் பணத்தை போட்டு NEFT OR RTGS செல்லான் வாங்கி அதில் எழுதி கொடுத்தால் போதும். இதற்கு உங்கள் செக் அவசியம் தேவைபடும். உங்கள் செக்கில் நண்பருக்கு செலுத்த வேண்டிய பண மதிப்பை எழுதி “NEFT OR RTGS to -----------------(நண்பரின் பெயர்) எழுதி கொடுத்தால் போதும்.

6)      இதற்கு தேவையானவைகள் உங்கள் நண்பரின் பெயர், அக்கௌன்ட் நம்பர், வங்கியின் பெயர், வங்கியின் கிளை இடம் மற்றும் அந்த கிளைக்கான “IFSC CODE”

7)      IFSC CODE என்பது ஒவ்வொரு வங்கிக்கும் RBI அளித்திருக்கும் கோடு. இந்த மாதிரி கோடுகள் எல்லாம் எல்லா வங்கியிலும் இருக்கும்.

8)      நீங்கள் உங்கள் நண்பரின் அக்கௌன்ட் நம்பரை தவறாக கொடுத்து விட்டால். நீங்கள் அனுப்பிய பணம் மீண்டும் உங்கள் அக்கௌன்ட்கே திரும்பி வந்துவிடும். வேறு எந்த அக்கௌன்ட்கும் போய் சேராது. எந்த வித அச்சமும் இல்லாமல் இந்த சேவையை உபயோகிக்கலாம்.

9)      ஓரு முறை Transfer செய்ய ஆகும் செலவு வெறும் ரூ 2.50 தான். இந்த சேவையை பயன்படுத்தி நேர செலவை குறைக்கலாம்.

பொதுவான விஷயங்கள்

1)      எந்த அக்கௌன்ட்டிலும் RS.50000 மேல் போட அக்கௌன்ட் உரிமையாளர் PAN நம்பர் அவசியம். (RBI RULE).

2)      அக்கௌன்ட் தொடங்கும் சமயத்தில் PAN நம்பர் கொடுத்து தொடங்கினால் அவசியம் இல்லை.

3)      வங்கியில் எந்த சேவை தொடங்கினாலும் கண்டிப்பாக “Nominee” பதிவு செய்து கொள்ளுங்கள்.

4)      மூன்று வருடங்களுக்கு ஓரு முறை உங்கள் அக்கௌண்டில் உங்கள் புகைபடம் புதுப்பித்து கொள்ளவும்.

5)      வீட்டின் விலாசம் மாற்றபட்டால் புதிய விலாசத்திற்கு உரிய ஆவணங்கள் தேவை.

6)      வங்கியில் எந்த தேவை ஏற்பட்டாலும் அதற்கான அடையாள அட்டையை வாங்கி கொள்ளுங்கள்( acknowledgement card).

7)      உங்கள் அக்கௌன்ட் மூன்று வருடங்களாக Operate செய்யவில்லை எனில் அக்கௌன்ட் DORMANT செய்யப்படும். மீண்டும் நீங்கள் உங்கள் புகைப்படம் மற்றும் புதிய ஆவணங்கள் சமர்ப்பித்த பின் தான் இயக்க இயலும்.





அக்கௌன்ட் தொடங்க தேவையான ஆவணங்கள்:

1)      Passport Size photo
2)      Identtiy Proff
3)      Address Proff

இந்த மூன்றும் இருந்தால் போதும் முன்பு போல் “Reference” எதுவும் தேவையில்லை.

Identtiy Proffs
1)      Passport
2)      Pan card
3)      Driving License
4)      Voters Id
5)      Employee Id card
6)      Degree Certificates With Photo
7)      Vehicle RC Copy with Photo
8)      Ration Card (only for photo person)
9)      Credit card with photo
10)   Other Bank Pass Books with photo and bank seal and sign
11)   All Government Issued proffs with photo
Address Proffs
1)      Passport
2)      Driving License
3)      Voters id (only for Rural Branches)
4)      Letter from employer
5)      Phone bill (latest 3 months copy)
6)      Electricity bill(latest 3 months copy)
7)      Gas Bill (latest 3 months copy)
8)      Life Insurance copy( Valid)
9)      Ration Card( Name required)
10)   Credit Card Statements
11)   All Bank Passbook with recent six months entry
12)   RC book



அடுத்த பதிவில் லோன் தொடர்பான மற்றும் FIXED DEPOSIT பற்றிய பதிவுகளை எழுதுகிறேன்.

நன்றி,

K.S.Vinoth Krishnan
Dhanlaxmi Bank
Nagercoil
Twitter ID @ROFLMAXX
Vinothkrishnan21@gmail.com

9 comments:

  1. Very Useful One...Thanks and Keep it UP...!!!

    ReplyDelete
  2. அருமை.மிகவும் பயனுள்ளது

    ReplyDelete
  3. //கருப்பையா ஹார்டுவேர்ஸ்// இத படிச்சுட்டு கருப்பு தான் எழுதினான்னு நெனச்சேன்....
    தகவலுக்கு நன்றி வினோத் :)

    ReplyDelete
  4. மிக பயனுள்ள பதிவு.. நன்றிகள் மச்சி...

    ReplyDelete
  5. மிக்க நன்றி நண்பரே..பயனுள்ள பதிவு..

    ReplyDelete
  6. அருமை.மிகவும் பயனுள்ளது

    ReplyDelete
  7. அருமை.மிகவும் பயனுள்ளது

    ReplyDelete
  8. அருமை.மிகவும் பயனுள்ளது

    ReplyDelete
  9. அருமை.மிகவும் பயனுள்ளது.

    ReplyDelete