Wednesday, April 4, 2012

கவிதைப் பாயாசம் காய்ச்சுவது எப்படி.?

சுமார் நான்குபேர் ரசிக்குமளவுக்கு காதல் கவிதைப்பாயாசம் காய்ச்ச தேவையான வஸ்துக்கள்:
1.பொண்டாட்டி பக்கத்துவூட்டுக்காரனுடன் ஓடிப்போனது போன்ற வெறுமையான மனோநிலை -சுமார் ஏழரைமணி நேரத்துக்கு

2.இளையராசா காதல்தோல்வி/சோக பாடல்கள் சி.டி -வகைக்கு இரண்டு

3.சுத்தமான வெள்ளைப் பேப்பர்- காய்ச்சுபவர்களின் அனுபவத்திற்கேற்ப ரெண்டு குயர் முதல் நாலு குயர் வரை

4.நல்ல கண்டிஷனில் எழுதக்கூடிய கருப்புமசி பேனா -இரண்டு (ஏன் கருப்பு.? -எல்லாம் ஒரு பின்நவீனத்துவ குறிப்புணர்த்துத்துதலுக்காகத்
தான்; எழுதப்போவது காதல் கவிதை இல்லையா.?)

5.தபு ஷங்கர் எழுதிய இன்ஸ்டன்ட் கவிதைப்பாயசம் மிக்ஸ் -அத்தனையும்

6.மழை, ரோஜா, மல்லிகை, நிலவு, தேய்பிறை, தனிமை, நிழல், நினைவுகள்... போன்ற கேட்டவுடனேயே ஃபீலிங்க்சை பொங்கவைக்கும் வார்த்தைகள்-தேவையான அளவு

7.மானே..,தேனே..,பொன்மானே.. -தேவையான அளவு

8.கொடுங்கடலிலே தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாக மிதக்கக்கூடிய மனத்திராணியும், உடல்திராணியும் ஒருங்கே படைத்த நபர் -ஒன்று

9.டபிள் எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் குப்பைதொட்டி -ஒன்று

செய்முறை விளக்கம்:
*முதலில் பொ.ப.ஓ.போ போன்ற வெறுமையான மனோநிலையை, இளையராசா காதல்தோல்வி/சோக பாடல்களை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டு இன்னும் வெறியாக்கிக்கொள்ளவும்.

*அடுத்து தபூ சங்கரானந்தாவை மனதில் வேண்டிக்கொண்டு வெள்ளத்தாளை எடுத்து ஹார்டின் சுழி போட்டுக்கொண்டு மோட்டுவளையை வெறிக்கவும் .(மோட்டுவளையை வெறிக்கும் போது பேனாவை வாயில் கடித்துக்கொண்டே வெறிப்பது இன்னும் செயற்கரிய பலனைத்தரும்.)

*இப்போது மேற்ச்சொன்ன ஃபீலிங்ஸ் வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றை தலைப்பாக்கி, மற்ற வார்த்தைகளை அங்கங்கே ஒன்றன்கீழ் ஒன்றாக பிச்சுப்போட்டு வாக்கியமாக அமைக்க முயற்ச்சிக்கவும்.

*முயற்சி பேப்பர்கூடவில்லை எனில் எழுதிய பேப்பரை கசக்கி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வேறு ஃபிரெஷான பேப்பரை எடுத்து, மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கவும். (இந்த இடத்துல ஒரு தொழில் ரகசியம் என்னன்னா- சினிமாவில் வருவதுபோல, கசக்கிய பேப்பரை ஒருபோதும் அறையெங்கிலும் சிதறவிடக்கூடாது. சினிமாவில் காட்சி அழகியலுக்காக அதுபோல காட்டுவார்கள். நீங்களும் அதேபோல செய்தால் பின்னர் அறை முழுதும் சிதறிக்கிடக்கும் கசங்கிய கவிதைகளை பார்க்கும்போது மனம் தளர்ந்து கவிதை முயற்சியை கைவிடும் வாய்ப்பிருக்கிறது)
(இந்த இடத்துல இன்னொரு தொழில் ரகசியம் என்னன்னா- கவிதைத்தோல்வி பேப்பர்களை கசக்கி குப்பைத்தொட்டியில் போடாமல், கசக்காமல் பழைய பேப்பர்க்காரனுக்கு போட்டால் மாசக்கடைசியில் குவாட்டர்-கட்டிங் தேற்றலாம்)

*இடையில் பேனாவில் மசி தீர்ந்து போனாலோ, நாலு குயர் பேப்பரும் தீர்ந்து போனாலோ சற்றும் மனம் தளரக்கூடாது. நாளைக் கிடைக்கப்போகும் நானூற்றி சொச்ச RT -க்களை மனத்திலிருத்தி வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைக்குப்போய் தேவையான வஸ்துகளை வாங்கிவரவும்.

*இவ்வளவு பிரம்மா, சிவா, விஷ்ணு பிரயத்தனம் செய்தும் க.வி.தை.யானது க-அளவுக்குக்கூட வளரவில்லை எனில் தபு ஷங்கரின் இன்ஸ்டன்ட் கவிதை மிக்ஸை புத்தகங்களை நாடுவதுதான் ஒரே வலி..ச்சே வழி.

*எல்லா இன்ஸ்டன்ட் மிக்ஸ் புத்தகங்களிலும் வகைக்கு ஒரு கவிதையாக ரேண்டமாக செலெக்ட் செய்துகொள்ளவும். செலக்ட் செய்த கவிதைகளை பத்துபத்து முறை இம்போசிசன் போல வாசிக்கவும்.

*இப்போது மீண்டும் வெள்ளைத்தாளை எடுத்துக்கொண்டு, இன்ஸ்டன்ட் மிக்ஸ் புத்தகத்தில் இம்போசிசன் வாசித்த வார்த்தைகளில் ஞாபகம் உள்ளவற்றை வரிசைக்கருமமாக(!) எழுதவும்.

*இவ்வாறு எழுதும்போது ஹார்டின் சிம்பளுக்கு கீழே, எழுதப்போகும் வார்த்தைகளுக்கு மேலே சுமார் ஐந்து செண்டிமீட்டருக்கு மிகாமல் ஒரு இடைவெளி இருத்தல் அவசியம்.

*வார்த்தைகளை எழுதிய பின் ஏற்கனவே தயாராய் உள்ள மானே..தேனே..பொன்மானே..போன்ற வார்த்தைகளை ஆங்காங்கே தூவவும்.

*அடுத்து ஏற்கனவே நாம் எடுத்து வைத்துள்ள ஃபீலிங் வார்த்தைகளில் கண்ணை மூடிக்கொண்டு பீச்சாங்கை ஆட்காட்டி விரலால் ஏதேனும் ஒரு வார்த்தையை தொடவும். எந்த வார்த்தையில் உங்கள் விரல் உள்ளதோ அதை எடுத்து ஏற்கனவே நாம் தயாரித்து வைத்திருக்கும் ஹார்டின் சிம்பளுக்கு கீழே, கவிதைக்கு மேலேயான இடைவெளியில் இட்டு நிரப்பவும் சற்று பெரிய ஃபாண்டில்.(தலைப்பாமாம்.)

*இப்பொது சுவையான கவிதைப்பாயாசம் தயார். ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் காய்ச்சியது உங்களுக்குத்தான் பாயாசம். அதுவே எதிர்தரப்பினருக்கு பாய்சனாகவோ, பாலிடாயலாகவோ இருக்கலாம் என்பதை இமைப்பொழுதும் மறவாதீர்கள். மறந்தும் இருந்துவிடாதீர்கள்..இருந்தும் மறந்துவிடாதீர்கள்.. ச்சை..

*இப்போது நம்ம க.தூ.போ.க.ம.மி-கூடிய திராணி படைத்த நபரை கூப்பிட்டு பாயாசத்தை சுவைக்கக் கொடுக்கவும். (இந்த இடத்துல மீண்டுமொரு தொழில் ரகசியம் என்னன்னா- நம்மாளுகிட்டே "எனது இந்த முடிவு யாருடைய வற்புறுத்தலுமின்றி, முழு சுயநினைவுடன் எடுக்கப்பட்ட முடிவு " என இருபது ரூபாய் பாண்டு பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொள்வது பின்னாளில் கொலை/கொலைமுயற்சி வழக்கிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள உதவும்)
(இதே இடத்துல மறுபடியுமொரு தொழில் ரகசியம் என்னன்னா- பாயாசம் காய்ச்ச தொடங்கியதுமே 108 -க்கு கால் பண்ணி, தகவலறிவித்து விட்டால் பெரிதாக அசம்பாவீதம் நிகழ்வதை தவிர்க்கலாம்.)

*சரி இப்போ பாயாசத்துக்கு வருவோம்.. பாயாசத்தை குடிச்சிட்டு நம்ம திராணி நபர் உண்மையிலேயே நல்லாருக்கு என்றால், அதை விகடன் சொல்வனம், உயிர்மை, காலச்சுவடு போன்ற பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைக்கவும்.

*கவிதைப்படிப்பு பேட்டா + பெட்ரோல் கன்வேயன்ஸ் வாங்கின நன்றிக்காக "ஹி..ஹி.. நல்லாருக்கு.." என வெளக்கெண்ணையை வேப்பெண்ணையில் மிக்ஸ் பண்ணி குடித்தமாதிரி முகத்தை வைத்துக்கொண்டு சொன்னால், தினத்தந்தி குடும்பமலருக்கு அனுப்பிவிடவும். ஐந்து ரூபாய் சன்மானம் கிடைக்கும்.

*சிறிதும் பாரபட்சமே பார்க்காமல், டுவிட்டருலக தமிழ்சினிமா விமர்சகர்கள் மாதிரி காறி மூஞ்சியிலேயே துப்பி விட்டால், சட்டென முகத்தை துடைத்துக்கொண்டு சுற்றும்முற்றும் நோக்கவும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க அவமானத்தை யாரேனும் நோக்கியிருந்தால், வாஸ்துபடி எட்டுக்கு எட்டில் ஏழரைஅடி ஆழ குழி தோண்டி அதில் கவிதை போட்டு புதைத்து விட்டு, குழியை மூன்று சுற்றி சுற்றிவிட்டு திரும்பிப்பார்க்காமல் வீட்டுக்கு வந்து தலைமுழுகவும்.

*உங்களின் முன்னோர் செய்த புண்ணியத்தாலோ அல்லது எங்களின் முன்னோர் செய்த பாவத்தாலோ காறித்துப்பியதை எவனும் நோக்கவில்லை எனில், சற்றும் யோசிக்காமல் உடனடியாக அதை டுவிட்டரில் போஸ்ட் செய்யவும். இனிமேல் நீங்களும் ஒலக ஃபேமஸ் காதல்கவிஞர் என பேருக்கு முன்னால் பட்டம் போட்டுக்கொள்ளலாம்.

டிஸ்கி-1 : இந்த செய்முறை விளக்கத்தில் வரும் விளக்கங்கள் எந்த ஒரு தனிநபரையோ,தனி பிராணியையோ குறிப்பான அல்ல.அதையும் மீறி இவையனைத்தும்உங்களைத்தான் சுட்டுகிறது என கருதினால் நீங்கள் கவிதையோஃபோபியோ வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள். வியாதிமேலும் வளர உடனடியாக அடுத்த பஸ்ஸை பிடித்துக்கொண்டு வந்து தபூ சங்கரிடம் லச்சத்தியோராவது அசிஸ்டெண்டாக சேர்ந்து கொள்ளவும்.

டிஸ்கி-2 :முழுநிலா தென்படும் பவுர்ணமி நாட்களில் வியாதியின் தாக்கம் உக்கிரமாக இருக்குமென கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் செய்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்துள்ளது. அந்த உக்கிரத்தை பத்திரமாக பயன்படுத்திக்கொண்டால் கவிதைகளை அமோகமாக அறுவடை செய்யலாம்.

டிஸ்கி-3 :எங்காவது வெளியிருக்கும்போது வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தராவுமாக(!) மாறினால் உடனடியாக அவரவர் வசதிக்கேற்ப கால்-டாக்ஸி, ஆட்டோ,ஷேர்-ஆட்டோ, டூ வீலர்காரனிடம் லிப்ட்டு என ஏதாவது ஒன்றை பிடித்து வீடுபோய் சேர்ந்து, பாயாசம் காய்ச்சுவதற்கான ஆயதங்களை செய்யவும். ஏனெனில் மழை வந்தால் மண்வாசனை கிளம்புகிறதோ இல்லையோ கவிதை பீறிட்டுக்கிளம்புமேன்பது தொன்றுதொட்டு வழங்கிவரும் ஐதீகம்.கி.பி இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மகான் கூட இதைப்பற்றி அழகாக டுவிட்டர் சுவடியிலே சொல்லியிருக்கிறார்- "மரத்தைக்கண்டா நாய் காலைத் தூக்குறதும், மழையை கண்டா கவிஞர்கள் பேனா தூக்குறதும் ஜகஜந்தனே மானிடா.." என்று..

ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))

54 comments:

  1. கொஞ்சம் உண்மை, கொஞ்சம் நக்கல், ஆக மொத்தத்தில் சூடான் கவிதை ரெடி... :-)

    ReplyDelete
  2. ஹாஹா..ஜுப்பரப்பு :-))) மாமு..இத வாசிக்கும் போது எனக்கு எந்தவித உறுத்தலுமே இல்ல! அப்ப இது எனக்கு இல்லேதானே?! கருப்பு.. நீ எங்கடா இருக்கே.., எங்கேயிருந்தாலும் உடனே வந்து பதிலளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ;-)))) -சிவா

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்.. "நாமளும் கவிதை எழுதறோம்..ஆனா நமக்கெல்லாம் உறுத்தலுமே இல்லே"-ங்கறது கூட வியாதிக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிதான் மாப்பி.. கருப்ஸ்-க்கு முத்திடுச்சி.. ஒனக்கு இப்போத்தான் பிஞ்சு வெச்சிருக்கு.. சீக்கிரம் முத்திடும் ;-)))

      Delete
    2. மச்சி, நான் இங்கதான் இருக்கேன். இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடியுமா? ஹி ஹி

      Delete
  3. மாம்ஸ் கலக்கிடடா காப்பி:-)

    ReplyDelete
  4. மாம்ஸ் கலக்கிடடா காப்பி:-)

    ReplyDelete
  5. அருமையான நேரத்தில் அற்புதமான பதிவு மாம்ஸ்!!

    கவிதை [போர்] களத்தில் நிராயுதபாணியாக இருக்கும் என்னை போன்ற கோடி கணக்காருக்கு பிரம்மாஸ்திரமாக இது உதவும் என்பதில் இருவேறு கருத்தில்லை !

    வாடா கருப்பு ! உன் கவுஜக்கும் என் கவுஜக்கும் இனிமேல் ஜோடி போட்டுக்கலாம் ஜோடி :-))

    ReplyDelete
  6. மாம்ஸு! ஜுப்பரப்பூ! என்ன மாதிரி ஆளுங்களுக்கு உதவியா இருக்கு இந்த பதிவு! :-D

    ReplyDelete
    Replies
    1. ஒன்னமாதிரி ஆளுங்க.? ரைட்டுடா ;-)))

      Delete
  7. புத்தகப்புழுApril 4, 2012 at 11:41 AM

    அட்டகாசம்ணே.இதேமாதிரி தத்துவப்பித்துக்களுக்கும் ஒண்ணு ட்ரை பண்ணலாம் நீங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றீஸ் தம்பு.. அடுத்து "தத்துவ ரசம் வைப்பது எப்படி.?-க்கும் மேட்டர் கைவசம் இருக்கு..
      இப்பவே போட்டா போரடிச்சிடும்.. கொஞ்சநாள் போகட்டும்.. சிறப்பா செஞ்சிடுவோம் ;-)))

      Delete
  8. புத்தகப்புழுApril 4, 2012 at 11:43 AM

    //ஏன் கருப்பு.? -எல்லாம் ஒரு பின்நவீனத்துவ குறிப்புணர்த்துத்துதலுக்காகத்
    தான்// இன்று முதல் நீவிர் இலக்கிய சாம்ராட் என அன்போடு அழைக்கப்படுவீராக :-)

    ReplyDelete
    Replies
    1. ///இன்று முதல் நீவிர் இலக்கிய சாம்ராட் என அன்போடு அழைக்கப்படுவீராக :-)////

      காமராஜர் அரங்கு புக் பண்ணிடலாமா.? ;-)))

      Delete
  9. ஆகா அருமை .. இவ்வளவு நீளமா இருக்கே படிச்சு முடிச்சிருவனான்னு சந்தேகப்பட்டேன் .. ச்சும்மா கில்லி மாறி ஸ்க்ரீன் ப்ளே மச்சி .. தொழில் ரகசியம் ஒவ்வொன்னும் செம .. அடுத்த கட்டதொர ரெடி

    ReplyDelete
    Replies
    1. ///அடுத்த கட்டதொர ரெடி///

      என்ன மாப்பி கட்டதொர'ய இப்புடி அசிங்கப்படுத்திட்ட.?
      அந்தாளுக்கு தெரிஞ்சா எலி பாஷாணம் வாங்கி குடிச்சிட போறாருய்யா ;-)))

      Delete
  10. சிறிதும் பாரபட்சமே பார்க்காமல், டுவிட்டருலக தமிழ்சினிமா விமர்சகர்கள் மாதிரி காறி மூஞ்சியிலேயே துப்பி விட்டால், சட்டென முகத்தை துடைத்துக்கொண்டு சுற்றும்முற்றும் நோக்கவும்..................................................................................................................................ஆஹா....ஆஹா.............இந்தவாட்டி அடி பலமோ?

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்..நமக்கு கவுஜ சொல்ற கெட்ட பழக்கமெல்லாம் இல்லைங்க.. நான் நல்ல குடும்பத்து பைய்யன் ;-)))

      Delete
  11. மாப்பி நீ எப்ப பாயாசம் காச்ச போற??? _santhu

    ReplyDelete
    Replies
    1. கவிதையா. நானா..? காமெடி பண்றியா மாப்ஸ்.?
      ட்விட்டர்'குள்ள வரும்போதே கவுஜையெல்லாம் சொல்ல மாட்டேன்னு எங்க அப்புச்சிக்கிட்டே துண்டை போட்டுதாண்டி சத்தியம் பண்ணிட்டுத்தான் அக்கவுண்டையே ஆரம்பிச்சேன் ;-)))

      Delete
    2. நீ துண்ட போட்டு தாண்டுனியோ துணிய போட்டு தாண்டுனியோ, பாயம் காச சொல்லி தந்ததுக்கு காச்சிகாமி ஒரு வாட்டியாவது

      Delete
    3. அவ்வ்வ்..அடம் புடிக்கறானே இவன்.. நானென்ன வெச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றேன்.?

      Delete
  12. செம்ம மாம்ஸ். அருமையான பதிவு. கருப்புமசி காரணம் இப்ப தெரிஞ்சு போச்சு. :-))

    ReplyDelete
    Replies
    1. ///கருப்புமசி காரணம் இப்ப தெரிஞ்சு போச்சு. :-))////
      கருப்பு'ன்னதும் எல்லோரும் உன்னைய நினைச்சிட்டாங்க..
      கருப்பு'ங்கறது துக்கத்துக்கு அடையாளமா சொல்வாங்கல்ல.. அந்த மீனிங்'ல போட்டேன் நான்..

      Delete
    2. அதத்தான் நானும் சொன்னேன். நான் கவுஜ போட்டாலே அது துக்கம்தானே. :-))

      Delete
    3. அவ்வ்வ்.. என்னைய்யா இப்டி பொசுக்குன்னு உண்மையை ஒத்துக்கிட்டே.?

      Delete
  13. ROFL :)) excellant . Best wishes . this comment i am thru Internet Explorer Browser. Let me see whether it is appearing or not.

    ReplyDelete
  14. My comment was published. But I can not use Tamil Font. But then why this Blog is not accepting my Google Account in the Google Browser? God alone knows

    ReplyDelete
  15. "வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைக்குப்போய் தேவையான வஸ்துகளை வாங்கிவரவும்."

    சூப்பர்!!!

    LOLLLL
    ஆமா டிஸ்கி'னா என்ன?

    ReplyDelete
    Replies
    1. நன்றீஸ் மச்சி..

      ///ஆமா டிஸ்கி'னா என்ன?/// disclaimar-ரின் சுருக்கம்..

      Delete
  16. இதை படித்தவுடன் உடனே செயல்படுத்திட என் மனம் துடிக்கிறது..
    பின்பு நான் எழுதி, கருப்புவுக்கு வரும் கன்னியர்களின் கோரிக்கைகள் குறைய(!) நேரிடும் என்று எண்ணுகையில் பிஞ்சு நெஞ்சு வெடிக்கிறது..
    ஆ.. ஆஆ..
    @catchvp

    ReplyDelete
    Replies
    1. Thanx Machi..
      //பின்பு நான் எழுதி, கருப்புவுக்கு வரும் கன்னியர்களின் கோரிக்கைகள் குறைய(!) நேரிடும் என்று எண்ணுகையில் பிஞ்சு நெஞ்சு வெடிக்கிறது..//
      ROFL MAx ;-)))

      Delete
  17. கலக்கிட்டடா..குணா. இத படிச்சாதான் தெரியுது.. கருப்பு எவ்ளோ மன உளைச்சலுக்கு ஆளாயி ஒரு கவிஞரா மாறியிருக்கான்னு..!

    வாழ்த்துக்கள்..மச்சி..! தொடர்ந்து கேப் விட்டு கலக்கு..!!

    கட்டதொர..!

    ReplyDelete
    Replies
    1. நன்றீஸ் மாமு.. எல்லாம் உம்ம ஆசீர்வாதம் தான்...

      Delete
    2. அவ்வ்... ஆமா மாம்ஸ். :-)

      Delete
  18. வெயிட்டு காட்டியிருக்க மாமு...#பேத்துட்ட.. @arunrajN

    ReplyDelete
  19. புத்தகப்புழுApril 5, 2012 at 12:31 AM

    காமராஜர்தானே.ஓகே.ஆனா மேடையில வாலன்டியரா மோதிரம் போட சின்***தா வருமா?

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்.. எனக்கு மன்னன் பட ஆ..செயினு, ஆ..மோதிரம் காமெடி ஞாபகம் வருது.. #ஓ..இதுல டான்ஸ் வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ் ;-)))

      Delete
  20. குணா மாம்ஸ் கலக்கிட்டிங்க ஒவ்வொரு தொழில் ரகசியம்மும் அருமை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. செம செம!!! அருமை

    ReplyDelete
  22. சிக்கிமுக்கிApril 12, 2012 at 3:48 PM

    கவித எழுத வரலைனா இப்படிதான் பொலம்பத்தோணும்.ஆனாலும் சலம்பாம பொலம்பினது கொஞ்சம் பெட்டரா ராவாத் தான் இருக்கு வாழ்துகள் .கலாய்ப்பவர்கள் எப்படினு புச்சா’ கலாய்யிக்கும் களவாணிகள்(காவாளிகள்)”அப்டிக்கா ஒரு கட்டுர எழுதுவிங்களா??

    ReplyDelete