Saturday, April 28, 2012

என் முதல் சமையல் அனுபவம் : குண்டுபல்பு



ஒலக வரலாற்றில் முதல் முறையாக சூப்பர் மார்கெட்டுக்கு வந்து சில மாதங்களே ஆன மேகியை வாங்கிட்டு ரூமுக்கு வந்தேன்.. ஒரு வாரம் மேக்கி அப்டியே வச்சுட்டேன் .மேக்கியோட மைன்ட் வாய்ச நல்லாஆஆவே புரிஞ்சிக்கிட்டேன் கொய்யாலே நான் பாட்டு சூப்பர் மார்கெட்ல சைட் அடிச்சிகிட்டு சூப்பரா இருந்தேன் என்ன வாங்கி அப்டியே வச்சுருக்கானே நீயெல்லாம் நல்லா வருவேடா நல்லா வருவேடான்னு பொலம்பிகிட்டு இருந்துச்சு .. எனக்கு சமைக்க தெரியாதுன்னு அதுக்கு எப்டி தெரியும்.. பாவம் அது என்ன இன்ஜினியரிங் படிச்சிருக்கா இல்லை எம்பி எம்பி எம்.பி.பி.எஸ் படிச்சிருக்கா. .. சரி சம்பவத்துக்கு வரேன்

மனதை ஒரு முகம் படுத்திட்டு. டே குண்டுபல்பு நீ சாதிக்க பொறந்தவன்டா .. த்ரிஷா உனக்கு தாண்டான்னு மனசை தேத்திக்கிட்டு மேக்கி மற்றும் அவ்வோ சொந்த காரங்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கிச்சனுக்கு போனேன்.. அங்கே குக்கர் விசிலடிச்சு என்ன பார்த்து கிகிகிகிகின்னு சிரிச்சிச்சு ... மச்சி இங்கே பாரேன் இங்கே பாரேன்னு கலாய்ச்சிச்சு .... மூஞ்சியே அப்டியே வெரப்பா வச்சுக்கிட்டு சமைக்க தயாரானேன் ..

தண்ணி எவ்வளவு ஊத்தனும்ன்னு டவுட்டு வந்துடுச்சு .. நாலு கிளாஸ் ஊத்தனும்ன்னு சொன்னாரு என் ரூம்மேட் ..சரி கிச்சென்ல தேடுனேன் தேடுனேன் கிச்சென் எல்லை வரை தேடுனேன்.. கிளாஸ காணோம் கடல்ல்லயே இல்லையாம் .. வேற வழி இல்லை .. தேவையான அளவுன்னு நானா ஒரு முடிவு எடுத்து ஊத்திட்டேன் ..

மேக்கி எல்லாத்தையும் ஒடச்சி , மசாலா எல்லாத்தையும் போட்டு நிரப்பிட்டேன் பாத்திரத்தில் .. அப்புறம் தான் தெரிஞ்சுச்சு நான் அதிகமா தண்ணி ஊத்திருக்கேன்னு .. மேக்கி அண்ட் கோ எல்லாரும் தண்ணில ஸ்விம்மிங் போயிகிட்டு இருந்துச்சு .. மறுபடியும் குக்கர் விசிலடிச்சு கலாய்ச்சிச்சு ,, கரண்டி கிகிகிகி ன்னு சிரிச்சுச்சு.. மறுபடியும் மனசை ஒருமுகம் படுத்தினேன்.. நீ சாத்திக்க பொறந்தவன்டா .. உன்னால முடியாதது உலகத்துல எவனாலயும் முடியாது.. எவனாலயும் முடியாதது உன்னால முடியும்டா த்ரிஷா உனக்கு தான் டான்னு மனசை தாறுமாறா தேத்தினேன்..

கரண்டி ஒரு ப்ளேட் ரெண்டு ஆயுதத்தையும் எடுத்தேன் .. பாத்திரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா தண்ணியை எடுத்து எடுத்து ப்ளேட்ல ஊத்தினேன்.. நீச்சல் அடிச்சிக்கிட்ட இருந்த மேக்கி அண்ட கோ என் கட்டுப்பாட்டுக்கு வந்துக்கிட்டு இருந்துச்சு .. எல்லா தண்ணியையும் ப்ளேட்டுக்கு ஸ்பூன்டூத் மூலமா ட்ரேன்ஸ்பர் பண்ணிக்கிட்டு இருந்தேன் .. தண்ணி சென்டிங் சக்சஸ்ஃபுல்லி ன்னு வந்துச்சு .. மேக்கியும் ரெடி ஆயிடுச்சு .. சமைக்கும் போது போர் அடிக்கவே இல்லை ...

ஆகவே நீங்க மேக்கி சமைக்கும் போது அதிகமா தண்ணி ஊத்துங்க.. போர் அடிக்கவே செய்யாது ... சாப்டு முடிச்சிட்டு இந்த ஸ்டேடஸும் போட்டாச்சு

MORAL: எந்த சாப்பாட்டையும் குறை சொல்லக்கூடாதுன்னு நல்லாஆஆஆவே தெரிஞ்சுக்கிட்டேன் . ;))

சமையல் செய்முறை  - கத்தாரிலிருந்து குண்டுபல்பு
ட்விட்டர் ஐடி: @gundubulb

Saturday, April 21, 2012

இனப்படுகொலை - துரோகமும்.. அழுகையும்.. - 2


குறிப்பு :இளகிய மனமுடையவர்கள் இந்த பதிவில் உள்ள புகை படங்களை காண வேண்டாம்!!!!
 
   






பள்ளியிலிருந்து வருகையில் அப்பாவின் வண்டி நிற்கிறதா? என வீட்டு முற்றத்தை கண்கள் மேய்ந்து கொண்டன...


வண்டி நின்றிருந்தால் மனம் செல்வது அவர் கொண்டுவந்திருக்கும் பையின் மீதே. 

ஒன்றுமில்லாவிடின் ஏமாற்றமும் இருப்பின் பெருமகிழ்ச்சியும் ஏனோ தானாய் ஒட்டிக்கொண்டன. சில சமயங்களில் ஏமாற்றத்தின் விளைவாய் விழியில் சில நேரம் தூறி ஓய்ந்து விடும் மழை போல நீர்க்கசிவுகளும், அதையொட்டிய சமாதானமும்.

மெதுவாய் சத்தமின்றி முதுகில் இருக்கும் சுமையினை இறக்கவும், அம்மா புத்தகங்களை கொண்டுவருமாறு குரல் கொடுக்கவும், கால்கள் மெதுவாக அவள் திசை தேடி நகரவும் என நிகழ்ச்சி நிரல் நிரம்பிய பருவம் அது . 


அம்மாவைக் கண்டதும் புத்தகங்கள் முதலில் இங்கிருந்து அங்கும் பின் பாடங்கள் அங்கிருந்து இங்கும் அழகாய் இடம் மாறின. தேர்வு மதிப்பெண்கள் வரும் சமயங்களில் சில பல அடிகள் இடம் மாறுவதும் மறுக்க முடியாதது. பாடங்கள் முடிகையில் பெரிய முள் பன்னிரெண்டிலும் சிறிய முள் ஆறிலும் நின்றிருக்கும். மெதுவாய் வீட்டின் கதவுகள் மூடப்படும், கொஞ்ச நேரம் விளையாடலாம் என்ற ஆசையும் கூடவே. “ஏன்?” என்ற கேள்விக்கு புரியாத விடை ஒன்றே வாடிக்கையாய் கிடைத்துக் கொண்டிருந்தது பல நாட்களாய்.
    பல நாட்கள் பள்ளி விரைவில் முடித்துக் கொள்ளப்படுவதும் வீட்டிற்கு வந்ததும் அம்மா குழியில் பதுங்கிக் கொள்ளச் செய்வதிலும் உள்ள பின்புலங்களை அறிய முடிந்திருக்கவில்லை அச்சிறு அறிவால். ஞாயிறு ஆனதும் குடும்பமாய்க் கோவிலுக்குச் செல்வதும், பின்னர் வீட்டிற்கு வந்ததும் அக்காவுடன் சண்டையிட்டு பின் தாயை அழைத்து நியாயம் கேட்பதும், அப்பாவிடம் அடம்பிடித்து அவருடன் வண்டியில் வயலுக்கு செல்வதும், அறியாமலே பசுமையிடம் காதல் கொள்வதும் என அழகான பல தருணங்கள் சில கசப்புகளை மறைத்தன.
   வானிலிருந்து பெரிய சிவப்பு பூக்கள் விழுகின்றன என்று அம்மாவிடம் சொல்ல, சில நிமிடங்களில் அனைவரும் கொஞ்ச உடைகளுடனும் கையில் கிடைத்த சில பொருள்களுடனும் அவ்விடம் நீங்கியது நினைவு , அதுவே அங்கு கழியும் இறுதிக் கணங்கள் என மனம் அறியாமலே. எத்துனை “விடை கொடு எங்கள் நாடே” பாடல்களினாலும் வெளிக்கொணர முடியாத வலியுடனே நகர்ந்திருப்பார்கள் பெரியவர்கள். பின் தூரத்திலே வாழும் உறவினர் வீட்டில் சில நாள் தஞ்சம், அதில் பல நாள் அழுதே கழிந்தன கா’ரணம்’ புரியாமலே.
  காண வந்த உறவினர் “எங்களை மறந்துவிடாதே” என்று ஏன் கூறுகிறார்கள் என கேட்டுக்கொண்டே இருக்கையில் அம்மா தயாராகச் சொல்லி ஒரு பெரிய கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லவும் பின்னர் ஓர் இருக்கையில் என்னை இருக்கச் சொல்லி ஒரு பெல்ட்டை போட்டு விடவும், நான் தூங்கவும் சரியாக இருந்தது.

முழிக்கையில் ஒரு புது வீட்டில், அம்மாவும் அப்பாவும் இங்கு தான் இருக்கப் போகிறோம் இனி எனச் சொல்லவும், சில நாட்களில் பள்ளிக்குச் செல்கையில், அதாவது அந்த வருடத்தின் ஐந்தாவது புதிய பள்ளிக்குக் செல்கையில் அனைவரும் புது விதமான தமிழ் கதைத்துக்கொண்டிருக்க ஒன்றும் விளங்கவில்லை, 


எல்லாம் புரியத் தொடங்கவும் வருடங்கள் உருளவும் சரியாக இருந்திருக்கிறது. தாய்த் தமிழகம் என்னை வாரி அணைத்துக் கொண்டிருந்தது. அன்று அறியாப் பருவத்தில் எழுந்த பல கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்த போதும் இன்று எம்மக்கள் பலரது வாழ்க்கையோ முட்கம்பி வேலிகளுக்குள். 

எனது புரிதலுக்கு காரணமாய் இருந்த மின்னஞ்சலில் இருந்த படங்களையும், அவற்றால் மனதில் தோன்றிய கதறல்களையும் உங்களுடன் பகிரவே இந்தப் பதிவு. 

சில கொடூரங்களை கொடூரம் என பார்வையில் இருந்து நாம் நீக்கியதால் அதை பயன்படுத்தி அவர்கள் இன்னும் பல ரணங்களை சேர்த்து அரங்கேற்றி விட்டார்கள். இருப்பினும் நீதி தேடும் பயணத்திலாவது அவை பயன்படட்டும்...  
        
                

                    





உன்னைத் தழுவ முயன்ற போது – நம்மிருவர்
உயிரையும் சேர்த்தே தழுவியது மரணம்

உடலமாயும் அணைக்க கை நீட்டி
மனதை இறுக்குகிறது இப்பிஞ்சு...





அன்னை முகம் பார்த்திருப்பானோ தெரியவில்லை -இப்பாலகன்
அன்னை இவன் முகம் பார்க்கமல் செய்து விட்டார்கள்



மொழியறியா வயதில் மொழிக்காய் தலை
துறந்த இக்குழந்தை செய்த பாவம் தான் என்னவோ?







ஓர் இனம் அழிந்தெரிகையில் – அவ்வெக்கையில்
குளிர் காய்ந்திருக்கிறது மற்றொரு இனம்
மனிதமும் சேர்த்தே எரிந்திருக்கிறது

காட்சிகளைக் காண்கையில்
எரிந்தழுகிறது மனமும் ...






எமனும் அழுதிருப்பான் – இவ்வுயிர்
சிதைவதைக் கண்டு

முளைக்கும் முன் கிள்ளப்பட்டு – உடல்
தளைக்கு முன் கொல்லப் பட்டுள்ளான்..





நான் அறியேன்,
அவன் அறியான்.
எவன் அறிவான்??  - அத்தாயின்
வயிற்றில் இருந்த சிசு என்ன தவறிழைத்தது என்று
இருவரது உடலும் இருக்கிறது
உயிர் தான் இல்லை – பறித்துப் பிரித்து விட்டார்கள்








பள்ளியில் கழிய வேண்டிய தருணங்கள்
குழிகளில் தொலைகின்றன
எங்கள் எதிர்காலத்துடன் சேர்ந்தே


பல நாளாய் நிலவிய இருளை அகற்ற
சிறு ஒளியாய் – ஐ.நா தீர்மானம்
தொலை தூர பேருந்து பயணத்தின்
முதல் நிறுத்தம்
கடக்க வேண்டிய தூரத்திற்காய்
நம்பிக்கை எனும் பொன்னாயுதம்
கொண்டு அமைதிப் போரில் வெல்வோம்!!


KillingFields குறிச்சொல்லில் கீச்சிய போது தோன்றிய எண்ணமே இந்தப் பதிவு. தமிழுணர்வை அதிகப் படுத்தியதில் என்னைத் தொடரும்/ நான் தொடரும் / தொடரா தமிழ் கீச்சர்களின் பங்கு அதிகம். அவர்களுக்கு நன்றி கூறி அந்நியப்படுத்த விரும்பவில்லை, கூறினும் வார்த்தையாகவே மடிந்துவிடும்.



-----வர்ஷன்



ட்விட்டர் ஹாண்டில்  ---- @guruparann

  

Sunday, April 15, 2012

காதலெனும் Fuzzy Logic :Eposode-2


3 -மூணு
பொதுவாக பெண்களுக்கு பிடித்த டாப் த்ரீ விஷயங்கள் :

1) பசங்களுக்கு அட்வைஸ் செய்வது
2) அந்த அட்வைஸ் படி அவன் நடக்கிறானா என்று உன்னிப்பாக கவனிப்பது .
3) ஒருவேளை அவன் சொல்படி நடந்தால் "சிக்கிட்டாண்டா நமக்கு ஒரு அடிமை " என்று குதுகலத்தில் மேலும் அவனுக்கு அட்வைஸ் செய்து அவனை டாச்சர் செய்வது. அட்வைசை கேட்க்காத பையனை அப்படியே கத்தரித்துவிட்டு வேற ஒரு அடிமையை தேடுவது.

. கே . கம்மிங் பேக் டு டாபிக் !Smile

கல்லூரி காலத்தில் காதலில் "விழுவது " என்பது மிகவும் டேஞ்சரான விஷயம் ;
ஏனென்றால் , கல்லூரி நாட்களில் ஒரு மாணவனுக்கு , IPL , கிரிகட் வேர்ல்ட் கப் , புட்பால் வேர்ல்ட் கப், டென்னிஸ், தலைவர் /தல/தளபதி படம் ரிலீஸ்,
"மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் " ன்னு சனிக்கிழமை மட்டும் காட்சி தந்து ஓசியில் நம்மளை காலி பண்ணும் "நண்பன்" அப்படின்னு பல ஸீசனல் தொல்லைகள் இருக்கும் .ஆனாலும் இவை எல்லாம் சுகமான சுமைகள்; பசங்களும் அதை எப்படியோ தாண்டி இவற்றிற்கு இடையில் இருக்கும் கேப்பில் படித்து ரெகுலர் , அரியர் ன்னு படைஎடுத்து பாஸ் செய்து கேம்பஸ் இன்டர்வியு வரை வந்துடலாம் .
ஆனால், இந்த காதல் இருக்குதே, அது ஆல் ஸீசன் தொல்லை . இந்த தொல்லை வந்தால் மேலே குறிப்பிட்ட அனைத்து சுகமான சுமைகளும் காலி ஆகும்; ஆனால் பெர்மனன்ட் இந்த காதல் தொல்லை , கேப் இல்லாமல் சுத்தி சுத்தி அடிப்பதால் , பைய்யன்
சஞ்சய் ராமசாமி அல்லது சஞ்சய் சிங்கானியா மாதிரி உடம்புல பச்சை குத்தி வச்சி பிட் அடித்தாலும் பாஸ் செய்வது கடினம் !!!Sick smile

ஆகவே கல்லூரி நாட்களில் காதலில் விழாமல் இருப்பது முக்கியம் !!!
3
பசங்க , ராயபுரம் ராகர்ஸ் , சென்னை ஷார்க்ஸ் ன்னு பத்து பதினைந்து பேரா திரிவாய்ங்க ஆனால் ,பெண்கள் ஒரு குருப்பாக திரிந்தாலும், அவர்கள் மூன்று பேர் கொண்ட சிறிய குழுக்களாகத்தான் இருப்பார்கள் ; நம்ம தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி ;Open-mouth smile


அது ஏன் 3 பேர் ன்னு கேட்காதீங்க ! ஆராய்ச்சி கட்டுரை எழுதி யாராச்சும் கண்டு பிடித்திருந்தால் உண்டு ; நீங்களும் சற்று ப்ளாஷ் பாக் இல் யோசித்து பாருங்கள் ; இந்த மாஜிக் நம்பர் 3 உங்கள் கண்களுக்கு தென்படும் .இது கல்லூரி நாட்களிலிருந்து பார்த்திருக்கிறேன் ;

இந்த மூன்று பேர் கொண்ட பெண்கள் அணியில் நிச்சயம் உங்க "மனசை ரத்தம் வர்ற அளவுக்கு பிராண்டிய பெண் இருந்தால்; நீங்கள் நிச்சயம் காதலில் விழாமல் தப்பிக்கலாம் .
தொடரும்...

Anubdan,
அ. இ

Saturday, April 14, 2012

காதலெனும் Fuzzy Logic




சட்ட பூர்வ எச்சரிக்கைகள் Cum Teaser:

1) இந்த கட்டுரை/புலம்பல்/ கர்த்தூ ஸ் எல்லாம் சொந்த மற்றும் பக்கத்துலகிறவன் அனுபவங்களைக் கொண்டு எழுதப் பட்டவை.

2)இவற்றை படிப்பதாலோ அல்லது பின்பற்றுவதாலோ , காதலிலிருந்து எஸ் ஆவதோ அல்லது காதல் எனும் பிராண சங்கடத்தை எபக்ட்டிவா ஆக மேனேஜ் செய்ய முடியும் என்று உறுதியாக கூற முடியாது .

3) இதை எழுதும் நான் என் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே அறியாத பருவத்தில் லவ் லெட்டர் (லெட்டர் ன்னு சொல்ல முடியாது ; அது ஒரு கிரீட்டிங் கார்டு - காதலை சொல்லும் கிரிட்டிங் கார்டு )-கொடுத்திருக்கிறேன். ஆகையால் இந்த கட்டுரையை எழுதும் நான் ஊரு பூரா பொண்ணுங்களுக்கு காதல் கடுதாசி கொடுத்து , அதுல சிலர் என்னை லவ் பண்ணியது மாறி "கற்பனை கூட செய்யாதீங்க (இது Face Bookல் இருக்கும் "சொந்தத்துக்கு " சொல்லிகிறேன்Open-mouth smile )

4) ஓரளவுக்கு சமாளிக்க இவை உதவலாம் ; ஆனால், சிச்சுவேஷன் னை சம்பந்தப் பட்டவர்தான் சமயோசிதமா சமாளிக்கணும் .உங்களால முடியும்; எவ்வளவோ பண்ணியாச்சு; இதை பண்ணமாட்டோமான்னு நினையுங்கள் ; நிச்சயம் பிரச்சனை எல்லாம் சும்மா .. சும்மா.

5) ஒரு பொண்ணுகிட்ட்ட ஒரு விஷயத்தை பற்றி சொல்லி அவரின் பிப்பிராயம் கேட்க்குறீங்க :

பைய்யன் : இது ஒ.கே தானே ? உனக்கு பிடிச்சிருக்கா ?

பெண் . பிடிக்கலை

உடனே, அந்த பெண் பிடிச்சிருக்கு ன்னு சொன்னால் பிடிச்சிருக்கு ன்னு முடிவுக்கு வராதீங்க ; Open-mouth smile

ஒரு பெண்ணுக்கு நீங்க சொன்ன விஷயம் / சஜஷன் பிடித்திருந்தால் அவரது பதில் நிச்சயம் இப்படித்தான் இருக்கும்

(இதையே நான் சொன்னால் , நீ கேட்கவா போறே ? உனக்கா தோணுதான்னு பார்த்தேன் )

இது ஒரு சின்ன உதாரணம்

ஆகவே பாய்ஸ் !!!
தளர்வடையாதீர்கள் !!!


எவ்வளவோ பண்ணியாச்சு; இதை பண்ணமாட்டோமா
Hot smileHot smile
... to be continued
Episode No. 1 : " 3 " (Three)
(பயப்படாதீங்க; ஐஸ்வரியா தனுஷ் தமிழ் சினிமா ரசிகர்கள் மேல் நடத்திய "கொலை வெறி" தாக்குதல் படமான "3" இல்லை .
மூன்று - இந்த எண் பற்றியது !!! இந்த எண்ணிற்கும் நீங்கள் உங்களை எப்படி காதலில் சிக்காமல் காப்பாற்றிக் கொள்ளாமல் இருபதற்கும் உள்ள இணைப்பு பற்றியது ... )

Stay Connected with "Renigunta Boys"
Anubdan,
அ. இ

கட்டுரையாளர் பற்றி:
அ.இ. என்கிற அப்பாவி இந்தியன் என்கிற மோகன் ஏகாம்பரம் எனக்கு ஆர்க்குட்/முகநூலில் நண்பர். கலாய்ப்பதில் வாய்'தேர்ந்தவர்..
ஆர்க்குட்டில் ஆக்டிவாக இருந்தவர்களுக்கு/இருக்கிறவர்களுக்கு இவரின் கலாய்ப்புகளை/ரசிக்கும்படியான வாதங்களை கண்டிப்பாக தெரிந்திராமல் இருக்க வாய்ப்பில்லை..
அவர் சமீப காலமாக நமது ரேணிகுண்டா பாய்ஸின் அட்ராசிட்டிகளை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி, நமக்கு எழுதித்தந்த தொடர்பதிவு இது..
இடையாறாத அலுவலக அழுவல்களுக்கு மத்தியிலும் நமக்கு நேரம் ஒதுக்கி இந்தப்பதிவை தந்த அப்பாவியாருக்கு ரேணிகுண்டா பாய்ஸின் சார்பில் நன்றிகள் கோடி.!!

ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))


Wednesday, April 4, 2012

கவிதைப் பாயாசம் காய்ச்சுவது எப்படி.?

சுமார் நான்குபேர் ரசிக்குமளவுக்கு காதல் கவிதைப்பாயாசம் காய்ச்ச தேவையான வஸ்துக்கள்:
1.பொண்டாட்டி பக்கத்துவூட்டுக்காரனுடன் ஓடிப்போனது போன்ற வெறுமையான மனோநிலை -சுமார் ஏழரைமணி நேரத்துக்கு

2.இளையராசா காதல்தோல்வி/சோக பாடல்கள் சி.டி -வகைக்கு இரண்டு

3.சுத்தமான வெள்ளைப் பேப்பர்- காய்ச்சுபவர்களின் அனுபவத்திற்கேற்ப ரெண்டு குயர் முதல் நாலு குயர் வரை

4.நல்ல கண்டிஷனில் எழுதக்கூடிய கருப்புமசி பேனா -இரண்டு (ஏன் கருப்பு.? -எல்லாம் ஒரு பின்நவீனத்துவ குறிப்புணர்த்துத்துதலுக்காகத்
தான்; எழுதப்போவது காதல் கவிதை இல்லையா.?)

5.தபு ஷங்கர் எழுதிய இன்ஸ்டன்ட் கவிதைப்பாயசம் மிக்ஸ் -அத்தனையும்

6.மழை, ரோஜா, மல்லிகை, நிலவு, தேய்பிறை, தனிமை, நிழல், நினைவுகள்... போன்ற கேட்டவுடனேயே ஃபீலிங்க்சை பொங்கவைக்கும் வார்த்தைகள்-தேவையான அளவு

7.மானே..,தேனே..,பொன்மானே.. -தேவையான அளவு

8.கொடுங்கடலிலே தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாக மிதக்கக்கூடிய மனத்திராணியும், உடல்திராணியும் ஒருங்கே படைத்த நபர் -ஒன்று

9.டபிள் எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் குப்பைதொட்டி -ஒன்று

செய்முறை விளக்கம்:
*முதலில் பொ.ப.ஓ.போ போன்ற வெறுமையான மனோநிலையை, இளையராசா காதல்தோல்வி/சோக பாடல்களை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டு இன்னும் வெறியாக்கிக்கொள்ளவும்.

*அடுத்து தபூ சங்கரானந்தாவை மனதில் வேண்டிக்கொண்டு வெள்ளத்தாளை எடுத்து ஹார்டின் சுழி போட்டுக்கொண்டு மோட்டுவளையை வெறிக்கவும் .(மோட்டுவளையை வெறிக்கும் போது பேனாவை வாயில் கடித்துக்கொண்டே வெறிப்பது இன்னும் செயற்கரிய பலனைத்தரும்.)

*இப்போது மேற்ச்சொன்ன ஃபீலிங்ஸ் வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றை தலைப்பாக்கி, மற்ற வார்த்தைகளை அங்கங்கே ஒன்றன்கீழ் ஒன்றாக பிச்சுப்போட்டு வாக்கியமாக அமைக்க முயற்ச்சிக்கவும்.

*முயற்சி பேப்பர்கூடவில்லை எனில் எழுதிய பேப்பரை கசக்கி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வேறு ஃபிரெஷான பேப்பரை எடுத்து, மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கவும். (இந்த இடத்துல ஒரு தொழில் ரகசியம் என்னன்னா- சினிமாவில் வருவதுபோல, கசக்கிய பேப்பரை ஒருபோதும் அறையெங்கிலும் சிதறவிடக்கூடாது. சினிமாவில் காட்சி அழகியலுக்காக அதுபோல காட்டுவார்கள். நீங்களும் அதேபோல செய்தால் பின்னர் அறை முழுதும் சிதறிக்கிடக்கும் கசங்கிய கவிதைகளை பார்க்கும்போது மனம் தளர்ந்து கவிதை முயற்சியை கைவிடும் வாய்ப்பிருக்கிறது)
(இந்த இடத்துல இன்னொரு தொழில் ரகசியம் என்னன்னா- கவிதைத்தோல்வி பேப்பர்களை கசக்கி குப்பைத்தொட்டியில் போடாமல், கசக்காமல் பழைய பேப்பர்க்காரனுக்கு போட்டால் மாசக்கடைசியில் குவாட்டர்-கட்டிங் தேற்றலாம்)

*இடையில் பேனாவில் மசி தீர்ந்து போனாலோ, நாலு குயர் பேப்பரும் தீர்ந்து போனாலோ சற்றும் மனம் தளரக்கூடாது. நாளைக் கிடைக்கப்போகும் நானூற்றி சொச்ச RT -க்களை மனத்திலிருத்தி வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைக்குப்போய் தேவையான வஸ்துகளை வாங்கிவரவும்.

*இவ்வளவு பிரம்மா, சிவா, விஷ்ணு பிரயத்தனம் செய்தும் க.வி.தை.யானது க-அளவுக்குக்கூட வளரவில்லை எனில் தபு ஷங்கரின் இன்ஸ்டன்ட் கவிதை மிக்ஸை புத்தகங்களை நாடுவதுதான் ஒரே வலி..ச்சே வழி.

*எல்லா இன்ஸ்டன்ட் மிக்ஸ் புத்தகங்களிலும் வகைக்கு ஒரு கவிதையாக ரேண்டமாக செலெக்ட் செய்துகொள்ளவும். செலக்ட் செய்த கவிதைகளை பத்துபத்து முறை இம்போசிசன் போல வாசிக்கவும்.

*இப்போது மீண்டும் வெள்ளைத்தாளை எடுத்துக்கொண்டு, இன்ஸ்டன்ட் மிக்ஸ் புத்தகத்தில் இம்போசிசன் வாசித்த வார்த்தைகளில் ஞாபகம் உள்ளவற்றை வரிசைக்கருமமாக(!) எழுதவும்.

*இவ்வாறு எழுதும்போது ஹார்டின் சிம்பளுக்கு கீழே, எழுதப்போகும் வார்த்தைகளுக்கு மேலே சுமார் ஐந்து செண்டிமீட்டருக்கு மிகாமல் ஒரு இடைவெளி இருத்தல் அவசியம்.

*வார்த்தைகளை எழுதிய பின் ஏற்கனவே தயாராய் உள்ள மானே..தேனே..பொன்மானே..போன்ற வார்த்தைகளை ஆங்காங்கே தூவவும்.

*அடுத்து ஏற்கனவே நாம் எடுத்து வைத்துள்ள ஃபீலிங் வார்த்தைகளில் கண்ணை மூடிக்கொண்டு பீச்சாங்கை ஆட்காட்டி விரலால் ஏதேனும் ஒரு வார்த்தையை தொடவும். எந்த வார்த்தையில் உங்கள் விரல் உள்ளதோ அதை எடுத்து ஏற்கனவே நாம் தயாரித்து வைத்திருக்கும் ஹார்டின் சிம்பளுக்கு கீழே, கவிதைக்கு மேலேயான இடைவெளியில் இட்டு நிரப்பவும் சற்று பெரிய ஃபாண்டில்.(தலைப்பாமாம்.)

*இப்பொது சுவையான கவிதைப்பாயாசம் தயார். ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் காய்ச்சியது உங்களுக்குத்தான் பாயாசம். அதுவே எதிர்தரப்பினருக்கு பாய்சனாகவோ, பாலிடாயலாகவோ இருக்கலாம் என்பதை இமைப்பொழுதும் மறவாதீர்கள். மறந்தும் இருந்துவிடாதீர்கள்..இருந்தும் மறந்துவிடாதீர்கள்.. ச்சை..

*இப்போது நம்ம க.தூ.போ.க.ம.மி-கூடிய திராணி படைத்த நபரை கூப்பிட்டு பாயாசத்தை சுவைக்கக் கொடுக்கவும். (இந்த இடத்துல மீண்டுமொரு தொழில் ரகசியம் என்னன்னா- நம்மாளுகிட்டே "எனது இந்த முடிவு யாருடைய வற்புறுத்தலுமின்றி, முழு சுயநினைவுடன் எடுக்கப்பட்ட முடிவு " என இருபது ரூபாய் பாண்டு பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொள்வது பின்னாளில் கொலை/கொலைமுயற்சி வழக்கிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள உதவும்)
(இதே இடத்துல மறுபடியுமொரு தொழில் ரகசியம் என்னன்னா- பாயாசம் காய்ச்ச தொடங்கியதுமே 108 -க்கு கால் பண்ணி, தகவலறிவித்து விட்டால் பெரிதாக அசம்பாவீதம் நிகழ்வதை தவிர்க்கலாம்.)

*சரி இப்போ பாயாசத்துக்கு வருவோம்.. பாயாசத்தை குடிச்சிட்டு நம்ம திராணி நபர் உண்மையிலேயே நல்லாருக்கு என்றால், அதை விகடன் சொல்வனம், உயிர்மை, காலச்சுவடு போன்ற பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைக்கவும்.

*கவிதைப்படிப்பு பேட்டா + பெட்ரோல் கன்வேயன்ஸ் வாங்கின நன்றிக்காக "ஹி..ஹி.. நல்லாருக்கு.." என வெளக்கெண்ணையை வேப்பெண்ணையில் மிக்ஸ் பண்ணி குடித்தமாதிரி முகத்தை வைத்துக்கொண்டு சொன்னால், தினத்தந்தி குடும்பமலருக்கு அனுப்பிவிடவும். ஐந்து ரூபாய் சன்மானம் கிடைக்கும்.

*சிறிதும் பாரபட்சமே பார்க்காமல், டுவிட்டருலக தமிழ்சினிமா விமர்சகர்கள் மாதிரி காறி மூஞ்சியிலேயே துப்பி விட்டால், சட்டென முகத்தை துடைத்துக்கொண்டு சுற்றும்முற்றும் நோக்கவும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க அவமானத்தை யாரேனும் நோக்கியிருந்தால், வாஸ்துபடி எட்டுக்கு எட்டில் ஏழரைஅடி ஆழ குழி தோண்டி அதில் கவிதை போட்டு புதைத்து விட்டு, குழியை மூன்று சுற்றி சுற்றிவிட்டு திரும்பிப்பார்க்காமல் வீட்டுக்கு வந்து தலைமுழுகவும்.

*உங்களின் முன்னோர் செய்த புண்ணியத்தாலோ அல்லது எங்களின் முன்னோர் செய்த பாவத்தாலோ காறித்துப்பியதை எவனும் நோக்கவில்லை எனில், சற்றும் யோசிக்காமல் உடனடியாக அதை டுவிட்டரில் போஸ்ட் செய்யவும். இனிமேல் நீங்களும் ஒலக ஃபேமஸ் காதல்கவிஞர் என பேருக்கு முன்னால் பட்டம் போட்டுக்கொள்ளலாம்.

டிஸ்கி-1 : இந்த செய்முறை விளக்கத்தில் வரும் விளக்கங்கள் எந்த ஒரு தனிநபரையோ,தனி பிராணியையோ குறிப்பான அல்ல.அதையும் மீறி இவையனைத்தும்உங்களைத்தான் சுட்டுகிறது என கருதினால் நீங்கள் கவிதையோஃபோபியோ வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள். வியாதிமேலும் வளர உடனடியாக அடுத்த பஸ்ஸை பிடித்துக்கொண்டு வந்து தபூ சங்கரிடம் லச்சத்தியோராவது அசிஸ்டெண்டாக சேர்ந்து கொள்ளவும்.

டிஸ்கி-2 :முழுநிலா தென்படும் பவுர்ணமி நாட்களில் வியாதியின் தாக்கம் உக்கிரமாக இருக்குமென கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் செய்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்துள்ளது. அந்த உக்கிரத்தை பத்திரமாக பயன்படுத்திக்கொண்டால் கவிதைகளை அமோகமாக அறுவடை செய்யலாம்.

டிஸ்கி-3 :எங்காவது வெளியிருக்கும்போது வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தராவுமாக(!) மாறினால் உடனடியாக அவரவர் வசதிக்கேற்ப கால்-டாக்ஸி, ஆட்டோ,ஷேர்-ஆட்டோ, டூ வீலர்காரனிடம் லிப்ட்டு என ஏதாவது ஒன்றை பிடித்து வீடுபோய் சேர்ந்து, பாயாசம் காய்ச்சுவதற்கான ஆயதங்களை செய்யவும். ஏனெனில் மழை வந்தால் மண்வாசனை கிளம்புகிறதோ இல்லையோ கவிதை பீறிட்டுக்கிளம்புமேன்பது தொன்றுதொட்டு வழங்கிவரும் ஐதீகம்.கி.பி இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மகான் கூட இதைப்பற்றி அழகாக டுவிட்டர் சுவடியிலே சொல்லியிருக்கிறார்- "மரத்தைக்கண்டா நாய் காலைத் தூக்குறதும், மழையை கண்டா கவிஞர்கள் பேனா தூக்குறதும் ஜகஜந்தனே மானிடா.." என்று..

ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))

Monday, April 2, 2012

அம்பிகாபதி

முதலாம் குலோதுங்கனின் ஆணைக்கினங்க உறையூரில் கொலைகளம் கண்ட கணம் அம்பிகாபதியின் மன ஓட்டம்:








கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடுமாம்,
கவிசக்ரவத்தியிடம் கவி படித்தாலும் நான்
கவி பாட தொடங்கியது உன்னை கண்டுதான்...

அரசவை காணும் ஆவலில்
அரண்மனை வந்த நான்
அதிரூபசுந்தரி உன்னை கண்டேன்
அமரேசன் சபையிலிருந்து இறங்கியவளோ என
அதிசயித்து நிற்கையில்
அமராவதியென உன் பெயர் கூறிய தோழனை
அமரனாவாயென வாழ்த்தினேன்!

தங்க விதானத்தில் மன்னன்
தந்தையின் கவிகளை ரசித்து கொண்டிருக்கையில்
தனயன் உன்னழகை ரசித்தேன்!

ஓரக்கண்ணால்
ஓர் பார்வை பார்த்து 
ஓடி போனாய், உன் பின்னால்
ஓடி போனது என் மனது

உறையூர்
உறங்கிய பின்னும்
உறங்காமல்
உன் நினைவில்
உறைந்தேன்...

கலைமகள்
கருணையில்
கவியில்
கரை
கண்டேன்
கண்ணே,உன்னை
கண்ட
கணமே
கரம் பிடிக்க
கங்கணம் கொண்டேன்

காவிரியை
காதல் தூது அணுப்பினேன், நின்
காயம் பட்ட காற்றையும்
காபந்து செய்தேன்

அரைநொடி பார்வையில்
அனைவரையும்
அமரராக்கும் ரதியே,
அடி அமராவதியே...
அடியேனின் காதலை
அங்கீகரியென
அணுகணமும் தவம் கிடந்தேன்

பிரம்மனே படைத்து
பிரமித்துபோன நீ,
பித்தனின், உன் பக்தனின்
பிராத்தனை ஏற்று
பிரியம் கொண்டாய் என் மீது,
பிரியை,
பிரியா வரம் தந்தாய்!!

கபடமில்லா காதல் கொண்ட
கலைமளின்
கடை மகனின் வாழ்வில்,
கலைமகளுக்கு அந்தாதி புனைந்தவரால் 
கலகம்

(தொடரும்)

எழுதியவர் : S. சந்தோஷ்
ட்விட்டர் முகவரி : @_santhu