இந்த முட்டுச்சந்து விசித்திரம் நிறைந்த பல கீச்சுகளை சந்திந்து இருக்கிறது, பல வில்லங்கமான ஹேண்டில்களை சந்தித்து இருக்கிறது.
ஆகவே, இந்த ஒரு நாள் தடை ஒன்றும் விசித்திரமானதல்ல.சந்தின் போக்கினிலே சர்வ சாதரணமாக கடலை போட்டு கொண்டு போகும் கட்ட்தொரைதான் நான்.
சந்திலெ குழப்பம் விளைவித்தேன், பெண்களிடம் கடலை போட்டேன், சங்க பயமக்கள் மென்ஷனுக்கு ரிப்ளை தவிர்த்தேன், இப்படி எல்லாம் நான் குற்றம் சாட்டபட்டிருக்கிறேன்.
இதை எல்லாம் நான் ங்கொப்புரான இல்லை என்று மறுக்கப்போவது இல்லை நிச்சயமாக இல்லை.
சந்திலே குழப்பம் விளைவித்தேன்,
ஏன் சந்து நாசமாய் போகவா? இல்லை சந்தில் சாபமாய் திகழும் சில ஃபேக் ஐடிகளை கண்டுகொள்வதற்காக.
பெண்களிடம் கடலை போட்டேன், ஏன் கடலை போட்டு ஃபாலொயர் சேர்க்கவா, அல்ல பெண்களின் சைக்காலஜி புரிந்து அவர்களை சங்கத்தில் சேர்க்க.
ஆள் பிடிக்க சந்தின் பல மூலைக்கும் சென்று கடலை போட்டேன்..ஏன்.. கட்ட்தொரையின் புகழ் பரப்பவா, இல்லை சங்கத்தின் புகழ் பரப்ப..!
லண்டன் தங்கையிடம் குடும்ப பாடல் பாடினேன், ஏன் எனக்கு பாட தெரியும் என காட்டவா, இல்லை, யூகே டூர் போகும் போது அங்கு ஓசியில் தங்க..!
ஜென்னிடம் பல டவுட்டுகள் கேட்டேன், ஏன்..ஜென்னு ஒரு டீகடை பன்னு , என்பதற்காகவா..இல்லை கணிபொறி சந்தேகங்களை தீர்த்து கொள்வதற்காக.
ஷேக்கிடம் மென்ஷன் போட்டேன், ஏன்..ஆண்ட்ராய்டு அடியாளாய் மாறவா, நிச்சயம் இல்லை..28,000ரு வாங்கின ஆண்ட்ராய்டு உபயோகிக்க தெரியாமல்..!
ஐயர் மாமியிடம் ஐடியா கேட்டேன், ஏன்...சுக்லாம்பரதரம் கற்கவா, இல்லை புதினா துவையலும், பருப்பு துவையலும் செய்ய கற்பதற்க்கா.
சில காலெஜ் ஃபிகர்களிடம் கடலை போட்டேன், ஏன்..கட்ட்தொர கட்டுகுலையாமல் இருக்கிறார் என காட்டவா..நிச்சயம் இல்லை..புதிய தலைமுறை எண்ணங்களை படிக்க.
அவ்ளவு ஏன் சில காலேஜ் லெக்ட்ரகளிடமும் டாக்டர்களிடம் கடலை போட்டேன்...ஏன் கட்ட்தொர படிப்பாளி என காட்டவா, நிச்சயம் இல்லை, சந்தில் இருக்கும் சில விஷமிகளை பற்றி விழிப்புணர்வு கொண்டுவர.
கார்க்கியிடம் கடலை போட்டேன், ஏன் அவரின் ஃபாலொயரை கவரவா, நிச்சயம் இல்லை..அவரிடம் இருந்து அவர் மொக்கையை சுட்டு வபாவில் வருவதற்காக.
கிளு கிளுப்பான சில போட்டோக்களை நடு இரவில் உலவ விட்டேன்..ஏன் அதுதான் பொழப்பு என்பதற்கா, இல்லை, யாருக்கும் தூக்கம் வரகூடாது என்பதற்காக..
பல்டாக்டரிடம் பல மொக்கைகள் வாங்கினேன், போலி டாக்டரிடமும் பல என்கவுண்ட்டர் வாங்கினேன். இன்று சங்கத்து ஆட்களாலெயெ குற்றம் சாட்டபட்டு குற்றவாளி கூண்டில் நிற்கிறேன்...!
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள்.......சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்சூண்டு பேக்குல பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள தர்ம அடிகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். தட்டிகொடுக்கும் குட்டுகள் இல்லை என் பாதையில், அடிவையிற்றில் கும்மாங்குத்துக்கள் விழுந்துருக்கின்றன.
குட்டு ஃபிகர்களோடு டேட்டிங் போனதில்லை. ஆனால் அட்டு ஃபிகர்களோடு சாட்டிங் செய்திருக்கிறேன். கேளுங்கள் என் கதையை..!
கேளுங்கள் என் கதையை! சந்து பெரியோர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே தமிழின தலீவர் பிறந்த ஊரில் பிறந்தவன் நான். (காலகிரகம் அதானலே எனக்கும் படிப்பு ஏறவில்லை) , பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? அபுதாபி..! எண்னைவயல்கள் நிறைந்த நாடு..! அது வயிறை வளர்த்தது. என்னை கட்ட்தொரை ஆக்கியது.
ஃபேஸ்புக்கில் (படிக்கவும் பராசக்தி பார்ட்-1) படுகாயமுற்று..ட்விட்டருக்கு தவழ்ந்து வந்து சேர்ந்தென்..!
வாய் உடைந்து வாழ்விழந்த வந்த என்னை வா என்றது ரேணிகுண்டா கேங்..! கேங்க்லி பெயரோ..சிவா..மங்களகரமான பெயர்..ஆனால் கண்ணத்தில் குழி விழுந்த அளவுக்கு க்கூட கண்களில் கருணை இல்லை. வாயில் கர்சிப் பொத்தி தூக்கி போய் சந்தில் போட்டனர்.
சங்க குல வழக்க படி என்னை ரெண்டு நாள் வைத்து அடித்தனர். குளத்தில் துணிதுவைக்கும் படிகட்டு போல அசையாமல் அடி வாங்கியதால், மேலும் நாலு நாள் மு.சந்தில் வைத்து அடித்தனர். கைகுறையவே..வெளியில் இருந்து ஆட்கள் கொண்டு வந்து மொத்தினர். ஒரு சத்தம்..ஹிம்..ப்வர்ஸ்டார் பாடியை கொண்ட நான் அனைத்து அடியும் அமைதியாய் வாங்கினென்..ஏழாவது நாள், அது ஒரு மாலை நேர மழைக்காலம்..இவ்ளோ அடிக்கிறீங்களே..உங்களுக்க்கு கை வலிக்கலியா..பாவம்..எனகேட்டேன்....ஆயுதத்தை கீழெ போட்டு என்னை கட்டி கொண்டார் லீடர் சிவா..எத்தனையோ ரப்பர் பாடி பாத்துருக்கேன்..உன்ன மாதிரி ப்ளாடினம் பாடிய இப்போதான் பார்க்கிறேன்..என் சூர்யா..நீ..என் தளபதிடா நீ..என்னை கேங்கில் சேர்த்தார்..! ஒரு வருஷம் அடி வாங்கி கிடைக்க கூடிய லீடருக்கு தலைமை அடியாள் பதவி எனக்கு கிடைத்த்து..!
கேங்கின் குடிதாங்கியா, சந்தின் அடிதாங்கியாய் மாறிபோனேன்..அடுத்த மொழிக்காரனிடமும் வம்பு இழுத்து அடிவாங்கும் என் தனி திறமையினால் , சங்கத்து ஆள் பிடிக்கும் வேலை எனக்கு கிடைத்த்து. சந்து முழுக்க சுற்றினேன். நைட்டு கண்ணு முழித்து சுற்றினேன். ஸ்டைலிஷ், முர்ரவுசா, சாந்து போன்ற பர்சானலிட்டி ஆடுகளை சுற்றி வளைத்தேன்..! கேங்லி ரொமான்சா மாறி போனதால் நாலு முறை கெடா வெட்டு தள்ளி போனது..! நான் என் கடமையை செய்தேன்..ஆனால் சங்கம் தன் கடமையை செய்ய மறந்த்து..
கவுரவ தலைவர் செந்தில்லுகு டிஎம் அனுப்பி சோப்பு போட்டு தன் கேங்லி பதவியை காத்து கொண்டார் லீடர்.
சந்தில் ஆள் பிடிப்பதால் குற்றவாளி ஆக்க பட்டேன்..விரட்ட பட்டேன்..ஓடினென்..ஓடினேன்..என் அக்கவுண்டை டிஆக்டிவேட் செய்ய
ஜாக்கு வீட்டுக்கு ஓடினேன்..அவர் வீட்டு செக்யுரிட்டி அலவ பன்னாததால் திரும்பி வந்துவிட்டேன்.
கட்டழகு கட்ட்தொரயை அடியாளாய் மாற்றியது யார் குற்றம். விதியின் குற்றமா..இல்லை வில்லங்கமாய் டி எம் குடுத்து என்னை வலையில் மாட்டி விட்ட வீணர்களின் குற்றமா?
கட்ட்தொர கடலை மட்டுமே போடுவார் , அவர் பெயரை கடலை தொர என மாற்றவேண்டும் என கொடி பிடித்து என் மானத்தை வாங்கியது யார் குற்றம். இந்த கட்ட்தொரையின் குற்றமா..இல்லை சங்க கயவாளிகளின் குற்றமா.?
நடு நிசியில் வரவைத்து நநிகியாக போட்டு அதை என் தலையில் போட்டு சந்தை பரங்கி மலை ஜோதியாக மாற்றியது யார் குற்றம். இந்த கட்ட்தொரையின் குற்றமா..இல்லை..இல்லை காலெஜ் கட் அடித்து அட்டு படம் பார்க்கும் வீணர்களின் குற்றமா..!!?
சங்க பெரியொரெ..முக்கியமாக இளம் பெண் கீச்சர்களே..எனக்கு ஒரு நியாயம் பெற்று தாருங்கள். திரும்பி போனால் ஃபேஸ்புக்கிலும் ஆட்டத்திற்க்கு சேர்த்து கொள்ள மாட்டார்கள். கூகிள் ப்ளஸ் ஒரு எழவும் புரியவில்லை.
நீதி வேண்டி நடு சந்தில் சந்தி சிரிக்கும் , கட்ட்தொர..!