Tuesday, January 29, 2013

'விஸ்வரூப' சிக்கல்கள்

தமிழக மக்கள் இடையே கடந்த சில நாட்களாக விஸ்வரூப ரிலீஸ் பேச்சுகள் தான். ஆரம்பம் முதலே படம் தொடர்பாக ஏகபட்ட சர்ச்சைகள், செல்வராகவன் விலகல், படத்தை இணைந்து தயாரித்த பிவிபி சினிமாஸ் விலகல், டிடிஎச் ரிலீஸ் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களுடன் மோதல் என கமல் தரப்புக்கு ஏகபட்ட சிக்கல்கள். இப்போது இஸ்லாமிய இயக்கங்கள் தடைகேட்க, தமிழக அரசு தடை விதிக்க, பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துருக்கிறது.



இந்த தமிழக அரசின் தடை உத்தரவுக்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டினாலும், இதற்கு பின்னால் தொலைக்காட்சி சாட்டிலைட் உரிமத்துக்கான நிழல் யுத்தம்தான் இது என சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் செய்திகள் பகிரப்படுகின்றன. அதில் 'முதலில் ஜெயா டிவி அதிக விலை கொடுத்து இப்படத்தை வாங்கியது எனவும், பிறகு சற்று அதிக லாபம்  கிடைக்க  கமல் தரப்பு விஜய் டிவிக்கு கைமாற்றியது எனவும் கூறப்படுகிறது'.

'இந்த விவகாரதில் அப்செட் ஆனதால் தான் ஆளும் தரப்பு இப்படத்தின் தடை விவகாரங்களில் இவ்வளவு வேகம் காட்டுகிறது' என கூறப்படுகிறது. இவ்வளவு களேபரங்களுக்கு நடுவிலும் படம் தமிழகம் தவிர மற்ற இடங்களில் வெளியாகி  பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான வசூலை பெற்றுள்ளதாம். ( www.screen4screen.com/viswaroopam-us-collection/  ).



இவ்வளவு நாட்களாக திரைமறைவில் நடந்து வந்த சேனல் யுத்தங்கள் இந்த பிரச்சனை மூலம் விஸ்வரூம் எடுத்துள்ளதே உண்மை. கமல் போன்ற சினிமாவே வாழ்வென நினைக்கும் கலைஞன் இவ்வளவு பிரச்சினைகளைச் சந்திப்பது வருத்தமே. தடைகளை வென்றே சரித்திரம் படைக்க உலக நாயகனை வாழ்த்துவோமாக!

- ஜீனோ

No comments:

Post a Comment