ஒரு படைப்பை எந்த எல்லைவரை விமர்சிக்கலாம்.? என்னளவில்- படைப்பாளியின் படைப்பு சுதந்திரத்தில் தலையிடாமல் எந்த எல்லைவரை வேண்டுமானாலும். இந்த முதல் பாயிண்டிலேயே அடிவாங்கி விடுகிறது இந்த விமர்சனத் தொகுப்பு. மணியின் படங்களை விமர்சனம் என்கிற பெயரில் சகட்டுமேனிக்கு குதறி வைத்து, குடலாப்பரேஷன் செய்தவரைக்கும் கூட ஓகேதான் . ஆனால் மணியின் இடத்தில் நானாக இருந்திருந்தால் மலையை புரட்டியிருப்பேன்..கடலைக் குடித்திருப்பேன் என்கிற ரேஞ்சுக்கு இவர் முன்வைக்கும் மாற்று திரைக்கதைதான் அதீத எரிச்சலூட்டுகிறது.
ஒரு படம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என விமர்சிப்பது ஓகே. இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதுகூட ஓகே ஓகே.. ஆனால் இயக்குனரின் இடத்தில் நான் இருந்திருந்தால் இப்படியெல்லாம் எடுத்திருப்பேன் என்றெல்லாம் விமர்சிப்பது என்ன மாதிரியான மனோநிலை.? ஒருவரின் கற்பனை இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறுக்க எவருக்கும் உரிமையில்லை. அதிலும் கற்பனை காண்பவர் இடத்தில் நான் இருந்திருந்தால் இப்படியெல்லாம் கற்பனை செய்திருப்பேன் என்றெல்லாம் எழுதிக்கொண்டே போவது, நீலப்படம் பார்க்கும் ஒருவன் நடிப்பவன் இடத்தில் நான் இருந்திருந்தால் எவ்வாறெல்லாம் புணர்ந்திருப்பேன் என வெற்றுத்தாளில் பக்கம் பக்கமாக எழுதி புத்தகமாக அச்சடித்து பெட்டியில் வைத்து பூட்டிக் கொள்வதற்கு ஒப்பானது.
உண்மையில் இவர் மாற்றாக வைக்கும் திரைக்கதையில் சில சம்பவக் கோர்வைகள் அசலை விட நன்றாகவே இருந்தாலும், அடுத்தவரின் கற்பனையில் உதித்த கருவில் புகுந்து இவர் கண்டமேனிக்கு கருத்து சொல்லி, கருந்தேள் கண்ணாயிரத்தனமாய் விமர்சிப்பதை என்னால் துளியளவும் ஒப்புக்கொள்ளவே இயலவில்லை. போக, ஒரு திரைக்கதையை நன்றாக எழுதுவதால் மட்டுமே அது சிறந்த திரைக்கதையாகி விடாது; பல இடையீடுகளை கடந்து திரையிலும் சிறப்பாக காட்சிப்படுத்தினால் மட்டுமே எழுதியவரின் மேதமைத்தனத்தை ஒப்புக்கொள்ள முடியும்.
மணியில் லாஜிக் சொதப்பல்களை நூத்தினாலு பக்கத்துக்கு விவரித்துவிட்டு அதற்கு மாற்றாக இவர் முன்வைக்கும் மாற்று திரைக்கதையிலும், சம்பவக் கோர்வைகளிலும் இருக்கும் லாஜிக் ஓட்டைகளை எழுதினால் இதே சைஸில் இன்னுமிரண்டு புத்தகம் தேறும். மணியின் வியாபார தந்திரங்கள் பற்றி பேப்பர் கிழிய எழுதித் தள்ளியிருக்கும் இவருக்கு, புத்தகத்தின் முன்னட்டையில் பெரிய சைஸ் மணிரத்னத்தின் புகைப்படத்தை போட்டு வெளியிட்டிருப்பது அப்பட்டமான, மணியின் பெயரை வைத்து புத்தகத்தை விற்க நினைக்கும் கீழ்த்தரமான வியாபார உத்தி என்பது தெரியாமல் போனதா.? புத்தகத்தலைப்பைக் கூட கன்னத்தில் முத்தமிட்டால் பட டைட்டில் டிசைனை ஞாபகப்படுத்தும் ஃபான்ட் ஸ்டைலிலேயே அச்சடித்திருக்கிறார்கள். என்ன சொல்ல.??
கடைசியாய், ஒரேயொரு கேள்வி மட்டும் புத்தகாசிரியரிடம்- "உங்க படம் எப்போ சார் வருது.?" ( ஒரு படைப்பை விமர்சிப்பனிடம், "முடிந்தால் இதுபோல் உன்னால் உருவாக்க முடியுமா.?" என்கிற ரீதியிலான மொன்னைத்தனமான வாதங்களில் எனக்கு சிறிதளவும் உடன்பாடு இல்லையெனினும், இதில் ஆசிரியரே அசலுக்கான மாற்றையும் சொல்லத்தொடங்கும்போதே இம்மாதிரியான கேள்விகளுக்கான அனுமதியை அவரே வழங்கிவிடுகிறார். இந்தப் புத்தகத்தை பொருத்தவரையிலும் இது மிக அவசியமான கேள்வியுங்கூட)
டிஸ்கி-1 :இப்பதிவை வாசிக்கும்போது நான் மணிரத்னத்தின் பரம தொண்டன் என்கிற தோற்றம் எனக்கே வருகிறது. வெல்...எனக்கு மணி பிடித்தாலும் ஒரு ரசிகனாக அவர் மீது சில விமர்சனங்களும் உள்ளன. ஆனால் இதுபோன்ற கண்மூடித்தனமான, தன் மேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் நோக்கிலான விமர்சனங்கள் அல்ல.
டிஸ்கி-2 : இந்த புத்தகத்தின் பதிப்பாளர் உரையை தயவுசெய்து தவறவிட்டு விடாதீர்கள்.மாற்று விமர்சனக்கலையில் இப்புத்தகம் உலகினுக்கே முன்மாதிரி; திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவரும் இதை தங்கள் பூஜையறையில் வைத்து போற்ற வேண்டும் என்கிற ரீதியில் யாரோ ஒரு புண்ணியவான் பதிப்பாளர் எழுதியிருக்கும் முன்னுரையானது சிரிப்பொலி, ஆதித்யா'க்களின் அச்சுவடிவம்.
ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))
மச்சி.. .செம!
ReplyDeleteநானும் கூட இவருடைய தேவர்மகன், குருதிபுனல் விமர்சனங்களைப் படித்துவிட்டு இவரின் மேதமையை (கவனிப்பை) வியந்திருக்கிறேன்.. ஆனால் என் திரைக்கதை என்ற பெயரில் அவர் சொல்லியிருந்த கதையிலும், காட்சியமைப்பிலும் எனக்கு உடன்பாடில்லை. ஒரு படம் வெளிவந்து பலவருடங்கள் கடந்த பின்னான இவரின் யூகக் கதையமைப்பு எக்காலதிலும் சரியானதாய் இருக்கமுடியாது. லாஜிக் ஓட்டைகள் இல்லாமல் படமே எடுக்க முடியாது. இது ''பதேர் பாஞ்சாலி'க்கும் பொருந்தும்.
திரைக்கதையை பிரித்து மேய்வதென்பது அடிப்படை திரைக்கதை பயிற்சி எடுத்த மாணவனால் கூட செய்துவிட முடியும். அவ்வாறிருக்கையில் எந்த ஒரு படமும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் (அனுபவசாலி)இயக்குனருக்கு இது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. சில நேரங்களில் சமரசங்கள் செய்துகொள்ளத்தான் வேண்டும். அது படமெடுக்கப்பட்ட/அன்றையச் சூழ்நிலை சார்ந்தது. போரின்போது முதுகில் காயம்பட்டவனிடம் 'ஏன் புறமுதுகிட்டாயா?' எனக யார் வேண்டுமானாலும் கேள்விகேட்டுவிடலாம். ஆனால், காயம் ஏன் ஏற்பட்டது என அவ்வீரனுக்கு மட்டுமே தெரியும். நான் மாடியிலிருந்து கீழே குத்தித்தால், தரையில் அழகாக கைகளை ஊன்றி காயமேற்படாமல் தப்பித்துவிவேன் என்பவர்கள் யாருமே, வீழ்ந்து அனுபவமற்றவர்களாகதான் இருப்பார்கள்! இவருக்கும் இது பொருந்தும்.
நிற்க,
தொடர் காட்சிப்படுத்துதலில் கவனிக்காமல் விட்ட/கவனிக்கக் கூடிய சிற்சில விஷயங்களை இவர் முன்வைப்பார் என்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு உண்டு! அவ்வகையில் இவர் வித்யாசப்படுகிறார்!
நன்றீஸ் மச்சி :-)))
Delete///நான் மாடியிலிருந்து கீழே குத்தித்தால், தரையில் அழகாக கைகளை ஊன்றி காயமேற்படாமல் தப்பித்துவிவேன் என்பவர்கள் யாருமே, வீழ்ந்து அனுபவமற்றவர்களாகதான் இருப்பார்கள்!////
Deleteசெம..நச்...
சிறப்பான விமர்சனக் கட்டுரை குணா... புத்தகம் இப்படித்தான் இருக்கும் என அவரின் இணையப் பதிவுகளின் மூலம் கணிக்க முடிந்தாலும்... உங்கள் வரிகளில் மிகையில்லாமல் வாசிக்க முடிந்தது சந்தோஷம்.
ReplyDeleteநன்றீஸ் ஜில் மச்சி :-)))
Deleteஒ.....விமர்சனத்துக்கே விமர்சனம் எழுதுற ரேஞ்சுக்கு போயாச்சா ஹும்ம்ம்ம் :)))
ReplyDeleteஅவ்வ்வ்.. எல்லாம் பெரியவங்க ஆசீர்வாதம் தான் ;-)))
ReplyDeleteஉங்க விமர்சனத்துக்கு யாரும் விமர்சனம் எழுதிட போறாங்க... பாத்துக்குங்க...
ReplyDeleteஓட்டுப் பட்டை எல்லாம் சேர்க்குறது இல்லையா ? வந்ததுக்கு ஒட்டாவது போடலாமேன்னு பார்த்தேன்...
நன்றீஸ் சகோ..
Deleteஅப்புறம்..இந்த அரசியல் எல்லாம் நமக்கு ஆவுரதில்லைங்க..அதான் ஒட்டுப்பட்டை வெக்கலை ;D
ஒரு படம் வெற்றியோ தோல்வியோ. பெரிய பேனரோ சின்ன பேனரோ, பழயவரோ புதியவரோ அதை எடுப்பதற்குள், எவ்வளவு மெனக்கெடல், மனவுளச்சல் பணசெலவு அடைந்திருப்பார்கள் என்று விமர்சனம் எழுதுமுன் சிந்தித்தால், "நான் இப்படத்தை எடுத்திருந்தால்" என்ற கேள்வி கேலிக்குரியதே. அடுத்தவரின் புகழை மட்டம்தட்டினால்தான், தான் திறமைசாலி என்பது தெரியவரும் என்று நினைப்பது மடத்தனம். நன்றி குணா. அருமையாக எழுதி கவர்ந்துள்ளீர்கள். வாழ்க வளர்க
ReplyDeleteநன்றிகள்ஸ் தல :-)))
Delete