Tuesday, June 4, 2013

வெயிலோடு விளையாடு..



வெயில்காலம் ஆரம்பிச்சா போதும்..நம்மாளுங்க அதை வெச்சி ஆடுற காமெடி கதகளிக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்டுருக்கு.. ஆளாளுக்கு நடமாடும் ரமணனா அவதாரம் எடுத்து கொதிக்கக் கொதிக்க வானிலை அறிக்கையை வாளீல மொண்டு ஊத்த ஆரம்பிச்சிடுவாங்க..

இனி இவர்கள் எவ்வாறெல்லாம் வெயிலுடன் வீம்பாக விளையாடுகிறார்கள் என்பதற்கான காரணங்கள் பின்வருமாறு: (அவ்வ்வ்வ்வ்.. இஸ்கோல் ஞாபகம்..)

* எப்படா ஜனவரி முடிஞ்சி பிப்ரவரி ஆரம்பிக்கும்.. இந்த டயலாக்கை சொல்லலாம்'னுட்டே ஊருக்குள்ள ரொம்ப பயலுக சுத்தீட்டுருப்பானுங்க
"ஸ்ஸ்ஸ்..ஸப்பா.. இப்பவே வெய்யில் இந்த கொளுத்து கொளுத்துதே.. இன்னும் ஏப்ரல்..மே'லயல்லாம் வெளீல நடமாட முடியாது போலருக்கே?!" 
 (ஊட்டுக்குள்ளயே ஒக்காந்துக்க.. நாங்களா வேணாமின்னோம்?!)

*ஏப்ரல்..மே முடிஞ்சும் இவனுங்க அடங்குவானுங்களான்னு பாத்தா..அதான் இல்ல.. அடுத்த டயலாக்கை ரெடியா வெச்சிருப்பானுங்க-
"யே..யப்பா.. மே மாசம் முடிஞ்சும் வெய்யிலு இந்தப் போடு போடுது?!"
 (இந்த மாரி ஆளுங்ககிட்ட  மாட்டும்போது, அவசரமா கக்கா போறாப்ல மூஞ்சிய வச்சிக்கிட்டு சட்டுன்னு எடத்த காலி பண்ணிடனும்..)

* மேற்படி ரெண்டு டயலாக்கையும் கரெக்ட்டா அக்னி நட்சத்திரத்துக்கு முன்னயும், பின்னயும் தப்பாம சொல்ற பிரகஸ்பதிகளும் இருக்காங்க.. 
(இப்படித்தான் "இந்த தடவ அக்கினி நட்சத்திரம் ரொம்ப கொடுமையா இருக்கே?!"ன்னு சொன்ன ஒரு பெரிசுகிட்ட "ஏங்க..அது நல்லபடம் தானே?! மணிரத்னம் அட்டகாசமா எடுத்திருப்பாப்ல"ன்னேன்!   கெட்ட வார்த்தைல திட்டிருச்சி!அவ்வ்வ்வ்!!)

*அடுத்து.. இந்த உலகத்துல சூரியன் எப்போ உதிச்சிச்சோ அப்போத்திலேர்ந்து தவறாம நாம கேக்கற ஒரு தேஞ்சு போன திருட்டு சிடி டயலாக்- 
"போன வருசத்தோட இந்த வருசம் வெயில் கொஞ்சம் அதிகம்'ல்ல?! (டொமேட்டோ...எல்லா வருசமும் இதையேத்தாண்டா சொல்றீங்க..)
 
*அப்புறம்.. நம்மாளுங்களோட அல்டிமேட் வாக்கியம் - 
"எவ்ளோ மழையடிச்சாலும் தாங்கிக்கலாம்.. இந்த வெய்யிலை மட்டும் தாங்க முடியறதில்ல.."
 (இதையே மழை/குளிர் காலத்துல அப்படியே மாத்தி சொல்லுவானுங்க பாருங்க..அப்போ வர்றதுதான் ரியல் கொலவெறி..)

*இந்த வெய்யிலுக்கு மோர், எளனின்னு குடிக்கறதுதான் ஒடம்புக்கு ரொம்ப நல்லது"  -இப்படி அறிவுரை சொல்றது தப்பில்ல.. ஆனா அதே அட்வைஸ் அய்யாச்சாமிங்கதான் மட்டமத்தியான கத்தரி வெயில்'ல "மாஸ்ட்டர்.. சூஊஊஊடா ஒரு டீ"ன்னு சேட்டன் போட்டுத்தர்ற வெந்நீரை குடிச்சி வெறியேத்தீட்டுருப்பானுங்க..
 (அட மல்டிபிள் பர்சனாலிட்டி மண்டையனுங்களா..)

* "இப்பலாம் ஹாட் சாப்டறத விட்டுட்டேன் மச்சி! சம்மர் முடியற வரைக்கும் பீர்தான்!!"

-வெரி கப்பி ஃபெல்லோஸ்.. இவனுங்க குடி எஸ்டீடி'யை கொஞ்சம் ஆராஞ்சி பாத்தா வாரம் ஒருக்கா  ஒரு கோட்டர் மட்டும் சாப்ட்டுட்டுருந்தவன் வெயிலை சாக்கா வெச்சி டெயிலி ரெண்டு பீர் சாத்திட்டுருப்பான்.
(இவனுங்க மேலயெல்லாம் மருத்துவர் மாலடிமை ஐயாவை ஏவி விட்டாத்தான் என்ன?!)

*"அடிக்குற வெயிலுக்கு டெயிலி ரெண்டு டைம் குளிச்சாத்தான் சார் கொஞ்சமாச்சும் சமாளிக்க முடியுது.." 
 -அப்டியே சீனை கட் பண்ணி சாரோட வீட்ல ஒப்பன் பண்ணா, 
"என் வீட்டுக்காரரு ரொம்ப சிக்கனம்! வெய்ய காலத்துல தண்ணிப் பஞ்சம் வேறயா?! ரெண்டு நாளைக்கு ஒரு தபாதான் குளிப்பாருங்க.."

*கடைசியா நம்ம வெயில் கவுஞ்சர்கள்... மழையை வெச்சி இவனுங்க எழுதற கவிதை   டார்ச்சர் தாங்காமத்தான் இப்பல்லாம் மழையே வர்றதில்ல.. ஆனாலும் அடங்குறாய்ங்களா?! அதான் இல்ல.. வெயில் குடித்த ரௌத்திரம்..ரெக்கை முளைத்த வெக்கை'ன்னு புதுசு புதுசா கெளம்பி வந்து சலம்புவாய்ங்க நம்ம சீசனல் கவுஞ்சர்கள்! (நீங்கல்லாம் செத்தா ஸ்ட்ரெயிட்டா கொதிக்குற எண்ணெய் சட்டிதான் மக்கா)
 
டிஸ்க்கி: சரி இதையல்லாம் ஏண்டா வெயில் காலம் முடிஞ்சி வந்து சொல்றேன்னு கேக்குறீங்களா?!  அடிக்குற வெயிலுல மக்கழே'வுக்கு இருக்க கடுப்பை நமீதா இடுப்பளவுக்கு இரட்டிப்பாக்க வேணாங்குற ஒரு நல்லெண்ணெய்தான்!!
 
ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன்
:-)))

8 comments:

  1. ரோப்பல்ஸ் மச்சி :-)

    ReplyDelete
  2. ரோப்பல்ஸ் மச்சி :-)

    ReplyDelete
  3. ஹாஹஹா. ஒவ்வொரு பாய்ண்டும் அருமை . சரியான எழுத்து பிரயோகம் நகைச்சுவையை அள்ளி தெளிக்கிறது. "மல்டிபிள் பர்சனாலிட்டி மண்டையனுங்களா" "மருத்துவர் மாலடிமை ஐயாவை ஏவி விட்டாத்தான் " " செத்தா ஸ்ட்ரெயிட்டா கொதிக்குற எண்ணெய் சட்டிதான் மக்கா" :) வாழ்க வளர்க

    ReplyDelete
    Replies
    1. தொடர்ச்சியான ஊக்குவித்தல்களுக்கு நன்றிகள் சார் :=)))

      Delete
  4. நல்லா வந்திருக்கு குணா..அல்மோஸ்ட் எல்லா பாய்ண்டுமே உண்மை + காமெடி..

    ReplyDelete
  5. இப்பலாம் ஹாட் சாப்டறத விட்டுட்டேன் மச்சி! சம்மர் முடியற வரைக்கும் பீர்தான்!!"ல்

    எத்தனைபேர் கிட்டே இந்த வாய் பிறப்பை கேட்டுருக்கேன் தெரியுமா ? சிலபேர் இருக்கான் ரெண்டையும் கலந்து குடுச்சி நம்மளை கலவரப்படுத்துவானுங்க.

    ReplyDelete