ஈழம்- புரிதலும் தேவையும் (மாணவர் போராட்டத்துக்கு பின்)
தமிழகத்தில் ஒரு சிறிய பிரளயம் நடந்து தணிந்து உள்ளது. மாணவர் போராட்டம் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய அளவில் ஒரு கவனத்தை ஈர்த்து இந்த போராட்டம் ஏன் இவ்வளவு காலம் மக்கள் மத்தியில் உயிரோடு இருக்கிறது என்ற தேவையையும் காட்டி உள்ளது.
இன்னிலையில், தமிழர்கள் இந்த போராட்டத்தை எவ்வாறு அணுகுகின்றனர் என்பதை பார்த்தால், ஒரு விடயம் புலப்படும். தமிழர்கள் இரண்டாக பிரிந்து உள்ளனர். ஈழம் தேவை என்ற பார்வை உடையவர்கள். வேண்டாம் என தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமானவர்கள் (மிக குறைவே எனிலும்). இன்னொன்று ஈழம் தேவை என்பவர் மத்தியிலும் இரு உட்பிரிவு உள்ளனர். ஒன்று, பிரபாகரனையும் விடுதலை புலிகளையும் ஆதர்சமாக கருதுவோர். இன்னொன்று விடுதலை புலிகளை எதிர்ப்போர். தமிழக அரசியல் 1983-முதல் இதை சுற்றியே பின்னப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இதில் ஏதேனும் பிரிவை கொள்கைரீதியாக பின்பற்றுபவர்களே.
1991-ல் ராஜீவ்காந்தி படுகொலைக்குப்பின் இந்த சூழல் மாறியது. ஈழம் தேவை என சொன்னவர்கள் கூட விடுதலை புலிகளை எதிராக கருதினர். அவர்களும் தங்களுக்கு உட்பட்ட பகுதியில் போல்பாட் அரசாங்கம் போல, பாசிச அணுகுமுறையோடு நடந்துகொண்டு முஸ்லிம், வெள்ளாளர்கள் ஆகியோரை வெளியேற்றினர். இந்த அணுகுமுறை தான் இன்று தெற்காசிய முஸ்லிம் நாடுகளை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பி உள்ளது எனக் கூட கருதலாம்.
2002-க்கு பின் உலகமே தீவிரவாத அமைப்புகளை முடக்கும் நோக்கோடு செயல்பட்டு, அதில் விடுதலை புலிகளும் [போராளி அமைப்பனாலும்] சிக்கி கொண்டது. அதன் பிறகு அரசியல் ராஜாங்க ரீதியில் தவறான கொள்கையால் எந்த சூழலில் சிக்கி கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே.
இப்பொழுது விடுதலை புலிகள் முற்றிலுமாக இல்லை. அவர்கள் இருந்தவரை அவர்கள் கொண்டதே ஈழம் குறித்த வரைமுறையாக இருந்தது. இப்பொழுது பல்வேறு மாற்று கருத்துகளும் வருவதால் அந்த கருத்தை மீள்வரைமுறை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு நாம் அங்கு மக்களுக்கு என்ன தேவை உள்ளது என புரிந்து கொள்ள வேண்டும்.
2009 போர் முடிந்து நான்கு
ஆண்டுகள் ஆனப் பின் இன்னமும் எந்த மீட்பு பணியும் முழுவீச்சில் நடைபெறவில்லை,
போதாக்குறைக்கு ராணுவ ஆதிக்கம் வேறு. அதை முதலில் படிப்படியாக குறைத்து
அவர்களுக்கு வாழ்வுரிமை வழங்குவதே நம் முதல் கோரிக்கையாக இருக்கவேண்டும். அதுவே
நாம் செய்ய வேண்டிய “முதல் உதவி”. பின்னர் பொதுவாக்கெடுப்பு, தனிநாடு கோரிக்கையை
வைக்கலாம்.தமிழகத்தில் ஒரு சிறிய பிரளயம் நடந்து தணிந்து உள்ளது. மாணவர் போராட்டம் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய அளவில் ஒரு கவனத்தை ஈர்த்து இந்த போராட்டம் ஏன் இவ்வளவு காலம் மக்கள் மத்தியில் உயிரோடு இருக்கிறது என்ற தேவையையும் காட்டி உள்ளது.
இன்னிலையில், தமிழர்கள் இந்த போராட்டத்தை எவ்வாறு அணுகுகின்றனர் என்பதை பார்த்தால், ஒரு விடயம் புலப்படும். தமிழர்கள் இரண்டாக பிரிந்து உள்ளனர். ஈழம் தேவை என்ற பார்வை உடையவர்கள். வேண்டாம் என தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமானவர்கள் (மிக குறைவே எனிலும்). இன்னொன்று ஈழம் தேவை என்பவர் மத்தியிலும் இரு உட்பிரிவு உள்ளனர். ஒன்று, பிரபாகரனையும் விடுதலை புலிகளையும் ஆதர்சமாக கருதுவோர். இன்னொன்று விடுதலை புலிகளை எதிர்ப்போர். தமிழக அரசியல் 1983-முதல் இதை சுற்றியே பின்னப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இதில் ஏதேனும் பிரிவை கொள்கைரீதியாக பின்பற்றுபவர்களே.
1991-ல் ராஜீவ்காந்தி படுகொலைக்குப்பின் இந்த சூழல் மாறியது. ஈழம் தேவை என சொன்னவர்கள் கூட விடுதலை புலிகளை எதிராக கருதினர். அவர்களும் தங்களுக்கு உட்பட்ட பகுதியில் போல்பாட் அரசாங்கம் போல, பாசிச அணுகுமுறையோடு நடந்துகொண்டு முஸ்லிம், வெள்ளாளர்கள் ஆகியோரை வெளியேற்றினர். இந்த அணுகுமுறை தான் இன்று தெற்காசிய முஸ்லிம் நாடுகளை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பி உள்ளது எனக் கூட கருதலாம்.
2002-க்கு பின் உலகமே தீவிரவாத அமைப்புகளை முடக்கும் நோக்கோடு செயல்பட்டு, அதில் விடுதலை புலிகளும் [போராளி அமைப்பனாலும்] சிக்கி கொண்டது. அதன் பிறகு அரசியல் ராஜாங்க ரீதியில் தவறான கொள்கையால் எந்த சூழலில் சிக்கி கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே.
இப்பொழுது விடுதலை புலிகள் முற்றிலுமாக இல்லை. அவர்கள் இருந்தவரை அவர்கள் கொண்டதே ஈழம் குறித்த வரைமுறையாக இருந்தது. இப்பொழுது பல்வேறு மாற்று கருத்துகளும் வருவதால் அந்த கருத்தை மீள்வரைமுறை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு நாம் அங்கு மக்களுக்கு என்ன தேவை உள்ளது என புரிந்து கொள்ள வேண்டும்.
தோழர் தியாகு சொன்னது போல நம் கோரிக்கையானது.
இராசபட்சேவின் சிங்கள அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு இழைத்த இனக் கொலை குறித்து தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு (Independent International Investigation) தேவை.
- ஈழ மக்கள் மீது தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் இனக்கொலையைத் தடுத்து நிறுத்தப் பன்னாட்டுப் பாதுகாப்புப் பொறியமைவு (International Protective Mechanism) தேவை.
- தமிழீழத்தின் இறைமையை (sovereignty) மீட்டெடுக்கும் வகையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வரும் ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு தேவை.
இந்நிலையில் இலங்கை தூதர் கரியவாசம் மிக சாதுர்யமாக தமிழ்நாட்டை இந்தியாவை விட்டுத் தனிமைபடுத்தும் கருத்தை வெளியிட்டுள்ளார். இது ஏற்கனவே நம்மை ஏதோ வேண்டாதவர்கள் போலக் கருதும் வட இந்தியர்களுக்கு அவல் போல கிடைத்துள்ளது. எந்த கருத்தையும் பொது புத்தியில் அறைவதைப் போல சொன்னால் எளிதில் உரைக்கும்.அந்த உத்திதான் இது.
நம் விதி எல்லாவற்றுக்கும் போரடவேண்டியதை போல் அமைந்துள்ளது. மலையாளிகளை, சிங்களவனை போல ராஜதந்திரதால் நாம் எதையும் அடையாத பொழுது நாம் எல்லாவற்றுக்கும் போராடத்தான் வேண்டும்.அதற்கு 2011-ல் நடைபெற்ற முல்லைபெரியாறு விவகாரம் அடிகோலினால், இந்த போராட்டமானது முழு வடிவத்தை காட்டி உள்ளது. இது தற்காலிக எழுச்சி ஆக இல்லாமல் நீண்ட கால செயல்திட்டதோடு செயல்பட்டால் இங்கும் ஒரு “மல்லிகை புரட்சி” நடைபெற்று ருவாண்டா, கொசோவா போல தனிநாடுபிறக்கும். இல்லையேல் காஷ்மீர், காவேரி போல “சிந்துபாத்” கதையாக நீளும்.
இரோம் ஷர்மிளா சொன்னது போல"ஒரு பெரிய போராட்டத்துக்கான
“சே குவேரா சொன்னது போல “போராட்டமானது மரத்தில் தானாக பழுத்து விழும் பழமல்ல.......அதை நாமாகத்தான் பறிக்க வேண்டும்”
மாற்றம் நம்மில்லிருந்து ஆரம்பமகட்டும்.
படித்துவிட்டு தங்கள் மேலான பின்னூட்டங்களைப் பகிரவும்
-வி.தினேஷ் குமார் @dinesh_anat
என்னுடைய எழுத்துக்கும் மதிப்பளித்து பிரசுரம் செய்தமைக்கு மிக்க நன்றி,,,,
ReplyDeleteதிரு. குணசேகரன் அவர்களுக்கு
-வி.தினேஷ் குமார்
வாழ்த்துகள் தினேஷ் .
ReplyDeleteதொடர்ந்து எழுத வேண்டும்.
பாலாஜி.
சொன்னதெல்லாம் உண்மை.காஷ்மீர்,காவிரி, தெலிங்கானா போன்று ஆகிவிடக்கூடாது. போராட்டங்கள் பல வகைகளில் தொடரவேண்டும்.நம் கோரிக்கைக்கு செவி சாய்க்காத எந்த அமைப்பையும் கடுமையாக ஒதிக்கி தள்ளவேண்டும்.அவைகள் அரசியல்வாதிகள், கட்சிகள், சினிமா, விளையாட்டு போட்டிகள் எல்லாவற்றையும் நாம் தியாகம் செய்து இன்னும் வலிமையாக போராட வேண்டும். இன்றில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் நம் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்கும்.வடமாநிலத்தவரையும், உலக மக்களையும் நாம் புரிய வைக்கணும். நன்றி
ReplyDeleteதங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி....
Delete1. Completely agree with the first aid part.
ReplyDelete2. The most important factor to consider here is that we are requesting a seaparate Tamil Eelam in a FOREIGN country. This is most ridiculous IMHO. We can propose this solution but cannot urge the same.
3. Even if a separate Tamil Eelam is formed, what is the chance that "Tamil Eelam Genocide - Part II" wont happen? What if another Prabakaran be formed?
4. Past is past. Nothing will happen to Rajapakse until & unless the opposition comes to power and may prosecute against Rajapakse
5. India should be amicable to Sri Lanka and aid them in monetary terms. Make sure the funds reach the needed.