இந்த வருட கீச்சர்களின் சந்திப்பு மே 12 கோவை மாநகரில் நடந்தது. வழக்கம் போல நமக்கு எப்ப நிறைய வேலை இருக்கோ அன்னிக்கே வெச்சிருந்தாங்க. ( உனக்கு என்னடா வேலைங்குறிங்களா.. அவ்வ் ) . போவலாமா.. வேணாமானு கடைசி வரை குழப்பமாவே இருந்துச்சு. குப்புற படுத்து தலையணையை பிய்த்து கொண்டிருந்த சமயத்தில் போன் செய்த பிரபல டிவிட்டர் ஒருவர் " தல, உங்கள பாக்க தான் கோவையே வரோம், கண்டிப்பா வந்துருங்க" என்றார். எனக்கு அப்படியே நடுராத்திரி கொசு கடில படுத்துருக்கறப்போ திடீர்னு கரன்டு வந்த மாதிரி ஆகிருச்சு.உடனே மூட்டைய கட்டிகினு கெளம்பிட்டேன்.
மெகா டிவிட்டப்பில் - 1
சமீப கால தமிழ் பட ஹீரோக்களின் இன்ட்ரோ சீன் போல நைனா காறி துப்ப, மம்மி டாட்டா காட்ட கோவை நோக்கி ஆரம்பமானது என் பயணம்.நைனாவோட சாபத்துல ஒரு பஸ்சு கூட கிடைக்கல. கேட்டா 144 தடை உத்தரவாம்.மருத்துவரய்யாவ திட்டி நாலு ஸ்டேடஸ் போட்டுட்டு, ஒரு காய்கறி லாரிய புடிச்சு தஞ்சாவூரு வந்து சேர்ந்தேன். அங்கே உள்ள சக டிவிட்டர்களுடன் சேர்ந்து கோவை பஸ்சுல ஏறினேன்.
விடியற்காலை டிவிட்டப்பு நடக்கும் ஓட்டலுக்கு போய் சேர்ந்தோம். ரிசப்சனிஸ்ட் நல்லா கொறட்ட விட்டு தூங்கினு இருந்தான். பெரிய ஓட்டலாச்சே கொஞ்சம் கெத்து காமிப்போம்னு ' ஹே.. வேக் அப் யா" என்றேன். எந்திரிச்சு பேந்த பேந்த முழிச்சான் , அப்பவே நான் உசார் ஆகிருக்கனும்.
" ரூமு வேணும்யா.. "
" சார், ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐநூறு ஆவும் சார் "
" ஙே.. என் ரூமோட மூனு மாச வாடகைய்யா அது .... சரி.. கிறுகிறு வருது காப்பி சொல்லுயா "
"காபி ஐம்பது ரூவா சார் "
அடுத்து பத்து செகன்டில் பக்கத்து ஓட்டலின் ரிசப்சனில் இருந்தேன்.
ஒரு வழியா தூங்கி எந்திரிச்சு குளிச்சு முடிச்சு குடிச்சு ( டீ தான்யா ) மூணு மணி டிவிட்டப்புக்காக இரண்டு மணிக்கே போய் உக்கார்ந்தோம். காபி ,டீ எதுனா குடுப்பாங்களானு கேட்டதுக்கு பரிசலார் மேலயும் கீழயும் பாத்தாரு. சிரிச்சு வெச்சுட்டு திரும்பவும் சீட்ல போய் உக்காந்தேன்.கனலு மட்டும் கடசீல செல்போன மறச்சு வெச்சு டிவிட் பண்ணிட்டு இருந்தான், ஏன்னு தெர்ல. சென்னியார ரிசப்சனிஸ்ட பொண்ணு கிட்டேர்ந்து பிரிச்சு ஹாலுக்கு கொண்டு வர பதினொரு பேர் கொண்ட குழு முயற்சி செஞ்சுட்டு இருந்தாங்க.
ஒருவழியா டிவிட்டப்பு இனிதே ஆரம்பமாச்சு. பரிசல் தொகுத்து வழங்கினார். பரிசல், கார்க்கி டைமிங் ஜோக்குகளால் அரங்கம் அதிர்ந்தது. ராஜன் வழக்கம் போல செம கலாய், ஆனா கொஞ்சம் சீரியசாவும் பேசினார் சிறை அனுபவங்களை. இந்த தடவை கவிதை கருப்பையா கவுஜை வாசிக்கமாட்டார் என பரிசல் அறிவிக்க, மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.ஒரு வழியா காபி வந்து சேர்ந்துச்சு.அப்படி இப்படினு ஒரு எழு மணிக்கு டிவிட்டப்பு இனிதே முடிந்தது.
அடுத்து நான்கவது மாடியில் டின்னர் என பரிசல் அறிவிக்க, லிப்டுக்கு கூட வெயிட் செய்யாமல் படியில் ஏறி ஓடீனோம். நான் , காலி பிளவர், அப்புறம் கப்ல ஏதோ கொடுத்தாங்க. அத டேஸ்ட் பண்ணிட்டு "தயிர் சூப்பர்ணே" என்றேன் ஷேக்கிடம். 'அடேய், அது சூப்புடா " என வழக்கம் போல ஆயிரம் வால்ட் பல்பு வாங்கினேன். கடைசியா ஐஸ்கீரீம் தந்தார்கள். அதை ரெண்டு தடவை வாங்கி கையும் களவுமாக மாட்டினார் சைல்ட் சின்னா. சர்வரை டிவிட்லாங்கர் போட்டுவிடுவேன் என அவர் மிரட்ட, பதிலுக்கு சர்வர் துப்பியதை நான் இங்கு கூற விரும்பவில்லை.
மெகா டிவிட்டப்பில் - 2
எல்லாருக்கும் டாட்டா காட்டிகினு ஊருக்கு கெளம்பினோம். நெடுநாள் நண்பர்கள் ஷேக் மற்றும் ஜெகன் ஆகியோரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
அடுத்த டிவிட்டப்புக்காக காத்துக்கொண்டிருக்குறேன்..
- தலதளபதி - @Prabu_B .